டொக்டர் நௌபல் பிணையில்



(இர்சாத்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பல் வைத்தியராகக் கடமையாற்றும் டொக்டர் எம்.ஏ.எப். ஹனீனா என்பவர் மீது, அங்கு கடமையாற்றும் டொக்டர் எம்.ஜே. நௌபல் என்பவர் 
அண்மையில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்ட வழக்கு இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் கௌரவ நீதிபதி திரு. பீற்றர்போல் முன்னிலையில்  எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த பாதிக்கப்பட் பெண் பல் வைத்தியர் சார்பில், சட்டத்தரணி ஏ.எச் சமீம் ஆஜரானார். அதேவேளை, சந்தேக நபரான டொக்டர் எம்.ஜே. நௌபல் சார்பில் சட்த்தரணிகள் றசீட்,கே.சமீம் ஆகியோர் குறித்த சந்தேக நபருக்கு தமது பிணை வழங்கக் கோரி, தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

சட்டத்தரணிகள் செய்த சமர்ப்பணத்தை செவியேற்ற கௌரவ நீதிபதி சந்தேக நபரான டொக்டர் நௌபலினை ரூபா  50 000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துடன், சாட்சிகளுக்கு எந்த வித தலையீடுகளும் செய்ய வேண்டாமென எச்சரித்தா்., குறித்த  சம்பவம் இடம்பெற்ற தினத்தில் வைத்தியசாலையின் CCTV  ஒளிப்பதிவுகளை பெற்றுக் கொள்ளுமாறும், அக்கரைப்பற்றுப் பொலிசாரைப் பணித்தார்.

(முந்தைய செய்தி)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை, அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியர் ஒருவர் தாக்கியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பல் வைத்தியராகக் கடமையாற்றும் டொக்டர் எம்.ஏ.எப். ஹனீனா என்பவர் மீது, அங்கு கடமையாற்றும் டொக்டர் எம்.ஜே. நௌபல் என்பவர் கடந்த ஒக்டோபர் 30 செவ்வாய்கிழமை தாக்குதல் நடத்தியதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர்கள் இருவரும் கடமையில் இருந்த போது, வைத்தியசாலையில் வைத்தே, இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் பெண் வைத்தியர், நேற்று அதே வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், அவர் இன்றைய தினம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.