தரிசனம்


பாறுக் ஷிஹான்

இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் கடந்த செவ்வாய்க்கிழமை(16) நள்ளிரவு நிகழ்ந்துள்ளது.

பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு  தெரிவித்த நிலையில் நள்ளிரவு- 12.13 மணியளவில் சந்திரகிரகணம் ஆரம்பமாகி    அதிகாலை-05.47 மணி வரை சந்திரகிரகணம் இடம்பெற்றது.

மேற்படி சந்திரகிரகணத்தை அவுஸ்திரேலியாஇ ஆபிரிக்கா  தென் அமெரிக்கா  ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளில்  பலரும் கண்டு களித்துள்ளனர்.

இச் சந்திரகிரகணம் இந்த வருடத்திற்கான இறுதிச் சந்திரகிரகணம் என்பதுடன் 2021 ஆம் ஆண்டு மே மாதம்- 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படுமெனக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது.