இலவச வைத்திய முகாம்,கல்முனையில்

கல்முனை இளைஞர் சேனை  அமைப்பின் ஏற்பாட்டில்  அமரர் ரெட்ணம் ரெட்ணத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச வைத்திய முகாம் வெள்ளிக்கிழமை(19) காலை 9 மணி முதல் கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய பல் தேவை கட்டிடத்தில்  வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரனின்  வழிநடத்தலில் நடைபெற்றது.

பிரதேச மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கோடு நோய்க்காரணிகளை கண்டறியும் முகமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இந்த வைத்திய முகாம் இடம்பெற்று வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைத்திய முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகளையும் ஆலோசனையும் பெற்று வருவதாகத் ஏற்பாட்டாளர்கள் எமக்குத் தெரிவித்தனர்.