அழைப்பும்,மறுப்பும்

பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (27) காலை குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி தொடர்பில் அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், உடல்நலக்குறைவு காரணமாக நாளைய தினம் பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாக முடியாது என, அறிவித்துள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.


--- Advertisment ---