வெளிவாரிக் கற்கை நெறிகள்




📌 இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத்தினால்,

*பொது கலைமானி (BA)
*வியாபார நிர்வாகமானி (BBA)

போன்ற வெளிவாரி பட்ட கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தகைமைகள் வருமாறு,

1. பழைய பாடத்திட்டத்திற்கமைவாக (பொது அறிவுப் பரீட்சை அல்லாமல் ) க.பொ.த. உயர்தர
பரீட்சைக்குத் தோற்றி 3 தடவைக்கு மேற்படாத வகையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில்
சித்தியடைந்திருப்பதோடு மொத்தப் புள்ளிகள் 180க்கு குறையாமல் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

2. பழைய பாடத்திட்டத்திற்கமைவாக (பொது அறிவுப் பரீட்சை உள்ளடங்கலாக)க.பொ.த. உயர்தரப்
பரீட்சைக்குத் தோற்றி 3 தடவைக்கு மேற்படாத வகையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில்
சித்தியடைந்திருப்பதோடு மொத்தப் புள்ளிகள் 135 இற்குக் குறையாமலும் பொது அறிவுப்
பரீட்சையில் 30 புள்ளிகளுக்குக் குறையாமலும் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

3. புதிய பாடத்திட்டத்திற்கமைவாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி 3 தடவைக்கு
மேற்படாத வகையில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதோடு, பல்கலைக்கழக
அனுமதிக்கு தேவையான ‘Z’ புள்ளிகளுடன், பொது அறிவுப் பரீட்சையில் 30 க்கு குறையாத
புள்ளிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.

📌 முழுமையான விபரங்களுக்கு - Pdn.ac.lk

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 31.12.2019

# விண்ணப்ப படிவங்களை ஓன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.

# ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை தரவிரக்கம் செய்து பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.