இலங்கை விமான பயணப் பாதையில் அதிரடி மாற்றம்

கொழும்பு - இலண்டனுக்கு இடையிலான விமான பயணப் பாதையை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவையால் பாதுகாப்பு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் வான் பரப்பில் விமானங்கள் பயணிப்பதை தடுக்கும் நோக்குடன் இவ்வாறு விமான பயணப் பாதையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement