உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154,142

உலகளவில் இதுவரை கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,242,868 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,557,493 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154,142 ஆக உள்ளது என ஜான் ஹோப்கின்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
இதுவரை கொரோனா பாதிப்பால் அதிகமான பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு மட்டும் 36,997 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்து ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,90,839 ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனிக்கு பிறகு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரிட்டன் உள்ளது.
ஜெர்மனியில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.


Advertisement