பண்டாரவளையில், நேற்று


இலங்கையிலுள்ள பல மரக்கறி வர்த்தகர்கள் பண்டாரவளை நகரில் ஒன்று திரண்டுள்ளதை அடுத்து, பண்டாரவளை நகரின் மரக்கறி வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மரக்கறி மொத்த விற்பனை நிலையங்களை திறந்து வைப்பதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பண்டாரவளை நகரிலுள்ள மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு பெருந்திரளானோர் ஒரே நேரத்தில் ஒன்று திரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதையடுத்து, குறித்த பகுதியில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாய நிலைமை தோன்றிய பின்னணியில், பண்டாரவளை மரக்கறி மொத்த விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை மொத்த வர்த்தக மீண்டும் திறப்பதற்கான திகதி மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானத்தை எட்டும் முக்கிய கலந்துரையாடடில் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
பண்;டாரவளை நகரிற்கு பெருந்திரளானோர் ஒரே நேரத்தில் வருகைத் தந்த நிலையிலேயே நகரை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையில், பண்டாரவளை மொத்த விற்பனை நிலையத்திலுள்ள வியாபாரிகள் பெருந்தொகையான நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.