#சஜித் முதலிடம், #அங்கஜன் 2ம் இடம்

8 கோடியே 87 லட்சம்ரூபாவை 2020 பொதுத் தேர்தல் ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக செலவழித்த வேட்பாளர்கள்: சஜித் முதலிடம் அங்கஜன் 2ம் இடம்


இம்முறை பொதுத்தேர்தல் பிரசாரங்கள் மற்றும் விளம்பரங்கள் கடந்த ஒகஸ்ட் 2ம்திகதியுடன் நிறைவிற்கு வந்தன. வேட்பாளர்களும் அவர்களைச் சார்ந்த கட்சிகளும் ஆதரவாளர்களும் அக்கறையுடைய தரப்புக்களும் பெரும்தொகையான பணத்தை விளம்பரங்கள் உட்பட தேர்தல் செலவுகளுக்காக செலவிட்டுள்ளனர். இதில் ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக உத்தியோகபூர்வமாக செலவிட்ட மொத்தத்தொகை பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் முதல் தேர்தல் பிரசாரங்கள் நிறைவிற்கு வந்த இறுதித்தினமான ஒகஸ்ட் 2ம் திகதிவரை 28,510 விளம்பரங்களுக்காக 478,545 அமெரிக்க டொலர்களை அதாவது (எட்டுக்கோடியே 87 லட்சத்து 83 ஆயிரத்து தொளாயிரத்து 39 ரூபா 47 சதம் ) 88,783,939.47 ரூபாவை செலவிட்டுள்ளனர்.. 

இ தன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ 111 ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக 20,081 அமெரிக்க டொலர்களை அதாவது 3,725,574.56 ரூபாவை கடந்த மேமாதம் தொடக்கம் தேர்தல் பிரசாரம் நிறைவிற்குவந்த 2ம்திகதிவரையான காலப்பகுதியில் செலவிட்டுள்ளார்.அவருக்கு அடுத்த நிலையில் அதிகமாக இந்தக்காலப்பகுதியில் செலவிட்டுள்ளவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்  வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் .இவர் செலவிட்டுள்ள மொத்த தொகை 14, 489 அமெரிக்க டொலர்களாகும் .அதாவது 2,688,204.33ரூபாவாகும்.

அங்கஜனுக்கு அடுத்து அதிகமாக செலவழித்தோர் பட்டியலில் முறையே 3ம் 4ம் 5ம் இடங்களைப் பெற்றுள்ளவர்களாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் புதல்வர் கனிஷ்க சேனாநாயக்க , சுனேத்திரா சமரக்கோன், வேர்னன் குணரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஐவரும் 10ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளனர். 
மாகாணங்கள்             தொகை
மேல் மாகாணம்
$250,964
மத்திய மாகாணம் 
$47,840
தென் மாகாணம்
$37,550
வடமாகாணம்
$36,528
வடமேல் மாகாணம்
$33,732
சப்ரகமுவ மாகாணம்
$27,774
கிழக்கு மாகாணம்
$16,448
ஊவா மாகாணம்$14,072
வடமத்திய மாகாணம்$13,186Advertisement

Post a Comment

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

[facebook][blogger]

FarhacoolWorks themes

Powered by Blogger.