#பிள்ளையான், சிறையில் பூத்த சின்ன மலர்?


 

பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிறப்பு: ஓகஸ்ட் 18, 1975) இலங்கையின் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்[1] தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) கட்சியின் தலைவருமாவார். 

மட்டக்களப்பு மாவட்டம்வாழைச்சேனை, பேத்தாழையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிள்ளையான் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்திலும் பின்னர் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (சாதாரண தர) வகுப்பு (தரம் 11) வரை கல்வி பயின்றவர்.

1990 ஏப்ரல் 4 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 15வது வயதில் "பிள்ளையான்" என்ற இயக்கப் பெயரில் போராளியாக இணைந்தார். 1997 இல் முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதல், 2001 இல் ஆனையிறவு முகாம் தாக்குதல் ஆகியவற்றில் பங்கு பற்றினார்.

2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அணியுடன் சேர்ந்து விலகி அவ்வமைப்பில் பதில் தலைவரானார். கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவ்வமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவரானார். விடுதலைப் புலிகளுக்கெதிராகத் தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்ட இவர் பின்னர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டார். 2007 இல் கருணா அணியில் இடம்பெற்ற உள்ளக மோதல்களைத் தொடர்ந்து கருணா இலண்டனுக்குத் தப்பி ஓடியதை அடுத்து அவ்வமைப்பின் தலைவரானார்.

2007 ஏப்ரலில் தமவிபு கட்சியில் இடம்பெற்ற உள்ளக மோதலை அடுத்து, கருணா கட்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிள்ளையான் கட்சித் தலைவரானார். 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை முதலமைச்சரானார்.


பிள்ளையான் கறை படிந்த கரங்களைக் கொண்டிருந்தாலும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கிழக்கு மாகாண முதலமைச்சராக பல் வேறு பட்ட அபிவிருத்தித் ிட்டங்களை செய்துள்ளதுடன் சிலருக்கு தொழில் வாய்ப்புக்களையும் வழங்கியிருந்தார்.


கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசப் பரராஜசிங்கம்நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்திரகாந்தன் 2015 அக்டோபர் 14 அன்று கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்

பிள்ளையான் கறை படிந்த கரங்களைக் கொண்டிருந்தாலும்,தமிழ் மக்களின் போராட்டைத்தைக் காட்டிக் கொடுத்தவர், கூட்டிக் கொடுத்தவர், துரோகி என்றெல்லாம்  தமிழ் மக்களால் அழைக்கப்பட்டாலும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கிழக்கு மாகாண முதலமைச்சராக பல் வேறு பட்ட அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ளதுடன் சிலருக்கு தொழில் வாய்ப்புக்களையும் வழங்கியிருந்தார். அதற்கு நன்றிக் கடனுடையவர்களாக மக்கள் காணப்பட்டுள்ளனர். 


2020இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, .மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளாக 54,108 வாக்குகளைப் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.