ஹரின் பெர்னாண்டோவிற்கு பி.சி.ஆர் சோதனை

 


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தனக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை தொடர்பான காணொளியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக பரிசோதனை மேற்கொள்வது நல்லது என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

பரிசோதனைகள் மேற்கொள்வதும் மேலும் தனக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்துவதும் அவசியம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.Advertisement