நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான 7 வாகனங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவால் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2 கோடி ரூபா பெறுமதியான குறித்த வாகனங்களில், 4 வாகனங்கள் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் என்றும் அவை எவற்றுக்கும் பதிவுப் புத்தகங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
ஏனைய மூன்று வாகனங்களில் ஒரு வாகனம் போலிப் பதிவு காரணமாகவும், இரண்டு வாகனங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட வாகனங்கள் என்பதாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Post a Comment
Post a Comment