🚨 திருகோணமலை நீதிமன்றத்தில் பரபரப்பு! சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தனக்குத்தானே காயம்!
திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) சந்தேகநபர் ஒருவர் கூர்மையான சிறிய ஆயுதத்தால் தனக்குத்தானே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, காயமடைந்த அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மேலும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரைத் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்திருந்தனர்.
அவர்களிடம் 48 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக இன்று திருகோணமலை நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்தியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்த சந்தேகநபரிடம் கூர்மையான ஆயுதம் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
📌 மேலதிக விபரங்கள் உள்ளே...
🔴 செங்கதிர் பேஸ்புக் பக்கத்தைப் பின் தொடருங்கள்!
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
🙏 Like us on Facebook 👉 https://www.facebook.com/share/19DkrR1VC3/
🙏 WhatsApp 👉 https://chat.whatsapp.com/GO7CbPBiuDs2AG5MnuTU5F
#திருகோணமலை #நீதிமன்றம் #பரபரப்பு #சந்தேகநபர் #பொலிஸார் #இலங்கைசெய்திகள் #திருகோணமலைசெய்திகள் #BreakingNews #Senkathir #SenkathirNews


Post a Comment
Post a Comment