அம்பாறை நிருபர் - பாறுக் ஷிஹான்]
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், சாய்ந்தமருது முகத்துவார (Lagoon) அண்டிய பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் பாரிய திட்டத்திற்கான பணிகள் நாளை (26) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தீவிர முயற்சியினால் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தின் அழகியலையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதுடன், பொதுமக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு மற்றும் ஓய்விடமாகவும் அமையவுள்ளது.
திட்டத்தில் அடங்கியுள்ள முக்கிய சிறப்பம்சங்கள்:
நவீன நடைபாதை: இயற்கைச் சூழலை ரசித்தவாறு பொதுமக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான பிரத்யேக வசதிகள்.
நவீன மின்னொளி அமைப்பு: மாலை மற்றும் இரவு வேளைகளில் மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நேரத்தைக் கழிக்கும் வகையில் நவீன விளக்கொளி வசதிகள்.
பொழுதுபோக்கு பகுதி: குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றுகூடி மகிழக்கூடிய வகையில் அழகிய சூழலுடன் கூடிய பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுப் பகுதிகள்.
பாராளுமன்ற உறுப்பினர் இரவோடு இரவாக நேரடிக் கள ஆய்வு
இத்திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா நேற்று இரவு தனது குழுவினருடன் குறித்த முகத்துவாரப் பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு கள நிலவரங்களைப் பார்வையிட்டார்.
இதன்போது, அபிவிருத்திப் பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அவர் வழங்கினார்.
.jpg)

Post a Comment
Post a Comment