தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தம்பலவத்தை பொது நூலகத்தில் மாணவர்களுக்குப் போட்டி நிகழ்வுகள்!
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று
தேசிய வாசிப்பு மாதம் 2026ஐ முன்னிட்டு, “வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் தம்பலவத்தை பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
கடந்த ?29.10.2026)ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில், மட்/பட் தம்பலவத்தை கணேஷா வித்தியாலயம், மட்/பட் மண்டூர் 14 சக்தி வித்தியாலயம் மற்றும் மட்/பட் பாலமுனை பாலமுருகன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, தரப்பட்ட பந்தியைப் பொருள் விளங்க வாசித்தல், சிங்கள மொழி மூலமான வாசிப்புப் போட்டி மற்றும் “வாழ்வின் உயர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தலைப்பிலான பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளுக்கான நடுவர்களாக மட்/பட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் சோமசுந்தரம் இளந்திரையன், ஓய்வுபெற்ற ஆசிரியர் தர்மலிங்கம் சாந்தகுமார், மட்/பட் மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய ஆசிரியை திருமதி பாஸ்கரன் றாகினி மற்றும் வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய ஆசிரியை செல்வி M. தேவதர்சி ஆகியோர் கலந்துகொண்டு தமது நடுவர் பணிகளை முன்னெடுத்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர் வட்ட நிர்வாகத்தினர் மற்றும் நூலக உதவியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், மொழித்திறன், பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#porativupattunews #vellavelinews #Thampalavattainews #Pradeshiya #Sabha #Library #TamilNews #Todaysnews #kaluwanchikudynews #jaffnanews #trincomaleenews #AmparaNews #batticoalonews #sammanthurainews #kokkaddichcholainews #kirankulamnews #kalmunainews #SriLankaNews #


Post a Comment
Post a Comment