யாழில் TIN இலக்கத்தைப் பெற,நீண்ட வரிசை



🌞 யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை!


உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று (02.11.2026) காலை முதல் பெருமளவான மக்கள் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்துள்ளனர்.


📌 சில முக்கியமான தேவைகள் மற்றும் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அதனைப் பெற்றுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


⚠️ இதனால் அலுவலகத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.


📍 யாழ்ப்பாணம் | 02.11.2026


#Jaffna #TINNumber #யாழ்ப்பாணம் #SriLanka #TaxpayerIdentificationNumber #BreakingNews