Showing posts with label Article. Show all posts


"அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம்" என்பது இந்த ஆண்டு உலக சிறுவர் தினத்திற்கான கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் எந்தப் பின்னணி அல்லது சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் "அனைத்து பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்து" எந்தவொரு பிள்ளையையும் விட்டுவிடாமல், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் உளவியல் நல்வாழ்வை உறுதி செய்து, பிள்ளைகளுக்கு உகந்த சூழலில் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவது எமது பொறுப்பாகும் என்கிறார் பிரதமர் 


ஒக்டோபர் 1 ஆம் திகதி இன்றுஅலரி மாளிகையில் நடைபெற்ற சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.


 




சிறுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, குறிப்பாக இலங்கையில் இது ஒரு முக்கிய தினமாகும். சிறுவர்களின் உரிமைகள், நலன் மற்றும் துஷ்பிரயோகங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இது 1954 இல் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது. 

சிறுவர் தினத்தின் முக்கியத்துவம்
  • சிறுவர் உரிமைகள்: 
    சிறுவர்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவும் இந்த நாள் உதவுகிறது. 
  • விழிப்புணர்வு: 
    சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • சர்வதேச புரிதல்: 
    சிறுவர்களிடையே புரிதலையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 
வரலாற்றுப் பின்னணி 
  • 1954: 
    ஐக்கிய நாடுகள் சபையால் சிறுவர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
  • 1990: 
    ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமை பிரகடனத்தை அமுல்படுத்தியது, இதில் இலங்கை கைச்சாத்திட்டது.
கொண்டாட்டங்கள்
  • தேசிய நிகழ்ச்சிகள்: 
    சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல தேசிய நிகழ்வுகளும், சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. 
  • இலங்கை: 
    இலங்கை சிறுவர் தினத்தை அக்டோபர் 1 அன்று கொண்டாடுகிறது, அத்துடன் சிறுவர் தின தேசிய வாரத்தையும் அனுசரிக்கிறது. 

 




உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி 1980 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது அதன்படி இன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் வாகன தரிப்பிட வளாகத்தில் பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்கிற்காக சிறப்பிக்கப்படும் சுற்றுலாத் துறையை கொண்டாடுவதற்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.


இதில் ஆரம்ப நிகழ்வாக விசேட அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து வரவேற்பு செய்து நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து நானுஓயா புகையிரத நிலையம் வரை பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு குழுவினரின் இசை வாத்தியங்கள் முழங்க இவ்விழா உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.


இவ்விழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.


குறித்த நிழ்வின்போது இன்றைய தினம் (27) நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து ரயிலில் பயணிக்க வருகை தந்த சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் நடனங்கள் அரங்கேற்றம் செய்து பின்னர் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட சிற்றுண்டியுடன் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டது.


நானுஓயா சுற்றுலா சாரதிகள் சங்கத்தினர் குறித்த நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


குறித்த நிகழ்வில் நானுஓயா புகையிரத நிலைய உயர் அதிகாரிகள், நுவரெலியா நகரின் இயங்கும் பிரசித்திப்பெற்ற சுற்றுலா விடுதி அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள், நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள், நானுஓயா நகர் அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


செ. திவாகரன்

 


ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான் பாலத்தீனம்.


அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் தூதரகங்கள் உள்ளன. ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாலத்தீன அணிகள் பங்கேற்கின்றன.


ஆனால், இஸ்ரேலுடனான நீண்டகால மோதலின் காரணமாக, பாலத்தீனத்துக்கு உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளும் இல்லை, தலைநகரமும் இல்லை, ராணுவமும் இல்லை.


மேற்குக் கரை இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால், 1990களில் அமைக்கப்பட்ட பாலத்தீன ஆட்சி தன் நிலம், தன் மக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. காஸா பகுதியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து, இப்போது பேரழிவு தரும் போரின் மத்தியில் சிக்கியுள்ளது.


பாலத்தீனத்தின் 'அரை-நாடு' (Quasi state) என்ற நிலைமையால், உலக நாடுகள் தரும் அங்கீகாரம் பெரும்பாலும் ஒரு குறியீடாகவே பார்க்கப்படுகிறது. இது தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தலாம். ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படுத்துவதில்லை.



ஆனால் அந்த குறியீட்டு அர்த்தம் (symbolism) மிக வலுவானது.


"இரு நாடுகள் தீர்வை ஆதரிக்க பிரிட்டனுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது"என ஜூலை மாதம் ஐ.நா.வில் உரையாற்றியபோது, முன்னாள் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி கூறினார்.


1917-ஆம் ஆண்டு வெளியான பால்ஃபோர் பிரகடனத்தை அவர் குறிப்பிட்டார்.


அப்போது வெளியுறவுச் செயலராக இருந்த ஆர்தர் பால்ஃபோர் அதில் கையெழுத்திட்டார். அந்தப் பிரகடனத்தில், "யூத மக்களுக்கு பாலத்தீனில் ஒரு தேசிய இல்லம் அமைப்பதற்கு" பிரிட்டன் ஆதரவு தரும் என முதன்முறையாக அறிவித்திருந்தது.


1948-ல்  பிரிட்டிஷ் படைகள் யூனியன் கொடியை கீழிறக்கினர்.பட மூலாதாரம்,Bettmann via Getty Images

படக்குறிப்பு,1948-ல் பாலத்தீனத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர, பிரிட்டிஷ் படைகள் யூனியன் கொடியை கீழிறக்கினர்.

முதல் உலகப் போருக்குப் பிறகு, 1922 முதல் 1948 வரை, 'லீக் ஆஃப் நேஷன்ஸ்' ஆணையின் கீழ் பாலத்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கொடுக்கப்பட்டது.


அந்த ஏற்பாட்டின் படி, போரில் தோற்ற ஜெர்மனி மற்றும் ஒட்டோமான் பேரரசுகளின் நிலங்களை மற்ற நாடுகள் நிர்வகிக்க சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டது.


பிரிட்டன் அப்போது ஒரு நுட்பமான சமநிலையை பேண முயன்றது. (இது சாத்தியமற்றது என சிலர் கருதினார்கள்) .


ஒருபுறம், யூத மக்களுக்கு பாலத்தீனத்தில் ஒரு "தேசிய இல்லம்" அமைக்க ஆதரவு தரும் என பிரிட்டன் வாக்குறுதி அளித்தது.


மறுபுறம், அங்கு வாழும் பெரும்பான்மையான அரேபியர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகவும் உறுதியளித்தது. இந்த இரு முரண்பட்ட வாக்குறுதிகளும், யூதர் மற்றும் அரபு சமூகங்களுக்கு இடையே அதிகரித்த பதற்றமும் சேர்ந்து, பல ஆண்டுகளாக அமைதியின்மையை ஏற்படுத்தின.


1948-ல் பிரிட்டன் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியது.


அதன் பிறகு, இஸ்ரேல் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டதும், போர் வெடித்து, பல பாலத்தீனர்கள் தங்கள் நிலத்தை விட்டு இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.


பல வரலாற்றாசிரியர்கள், பிரிட்டன் அந்த காலத்தில் எடுத்த நடவடிக்கைகளே இன்றைய இஸ்ரேல்–பாலத்தீன் மோதலுக்கான அடிப்படையாக அமைந்தது என்றும், பாலத்தீன பிரதேசத்தின் தீர்வு இன்னும் முடியாத சர்வதேச பிரச்னையாகவே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.


ஆனால் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள், 1917-ல் வெளியான பால்ஃபோர் பிரகடனத்தில் பாலத்தீனர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை, அவர்களின் தேசிய உரிமைகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என வாதிடுகிறார்கள்.


லாமி கூறியது போல, இப்போது "இரு நாடுகள் தீர்வு" என்ற வார்த்தையை அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.


'இரு நாடுகள் தீர்வு' என்பது, 1967 அரபு–இஸ்ரேல் போருக்கு முன்பிருந்த நிலையை அடிப்படையாகக் கொண்டு, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளைச் சேர்த்து ஒரு பாலத்தீன நாடு உருவாக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதில், கிழக்கு ஜெருசலேம் தலைநகரமாக இருக்க வேண்டும் என்பதும் அந்தக் கருத்தின் ஒரு பகுதியாகும்.


ஆனால், பல ஆண்டுகளாக நடந்த சர்வதேச முயற்சிகள் எந்தச் சிறப்பான முடிவையும் தரவில்லை. மேற்குக் கரையில் இஸ்ரேல் அமைத்த குடியேற்றங்கள், சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமானவையாக இருந்தாலும், 'இரு நாடுகள் தீர்வு' என்ற கருத்தை வெறும் கோஷமாகவே மாற்றி விட்டன.


பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது யார்?

ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் சுமார் 75% நாடுகள் தற்போது பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளன.


ஐ.நா.வில், பாலத்தீனத்திற்கு "நிரந்தர பார்வையாளர் நாடு" என்ற அந்தஸ்து உள்ளது. அதனால் பாலத்தீன் கூட்டங்களில் பங்கேற்கலாம், ஆனால் வாக்களிக்கும் உரிமை இல்லை.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற 4 நாடுகளும் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துவிட்டன.


சீனாவும் ரஷ்யாவும் 1988 இல் பாலத்தீனத்தை அங்கீகரித்தன.


இதனால், இஸ்ரேலின் மிக வலுவான கூட்டாளியான அமெரிக்கா மட்டும் தனியாக நிற்கும் நிலை உருவாகிறது.


அமெரிக்கா 1990களின் நடுப்பகுதியில், மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான (பாலத்தீன அதிகார சபை) அரசை அங்கீகரித்தது.


அதன் பிறகு வந்த சில அமெரிக்க அதிபர்கள், பாலத்தீன நாடு உருவாக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதற்கு எதிராக இருந்தார். அவரது ஆட்சிக் காலங்களில், அமெரிக்காவின் கொள்கை முழுமையாக இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் இருந்தது.


பிரிட்டனும் மற்ற நாடுகளும் இப்போது பாலத்தீனத்துக்கு ஆதரவளிப்பது ஏன்?

தொடர்ச்சியாக வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளன.


ஆனால், அந்த அங்கீகாரம் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகவும், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இணைந்து, "மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தருணத்தில்" மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது.


அதை வெறுமனே ஒரு குறியீடாகச் செய்வது தவறு என அரசுகள் நம்பின. அது மக்கள் மனதில் நல்லதொரு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் அங்கு உண்மையான மாற்றம் ஏற்படாது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் பல அரசாங்கங்களை செயலில் இறங்க வலியுறுத்தியுள்ளன.


காஸாவில் அதிகரித்து வரும் பட்டினி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கோபம், மற்றும் மக்களின் கருத்துகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் ஆகியவை இந்த நிலையை உருவாக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.


வடக்கு காஸா  பகுதியில் உள்ள பெய்ட் லாஹியாவில் பாலத்தீனியர்கள் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,காஸா பகுதியில் "பஞ்சத்தின் மிக மோசமான நிலைமை தற்போது உருவாகி வருகிறது" என்று ஐ.நா. ஆதரவு பெற்ற உலக உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ச்சியாக வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளன.


ஆனால், அந்த அங்கீகாரம் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாகவும், மேற்கத்திய கூட்டாளிகளுடன் இணைந்து, "மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தருணத்தில்" மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது.


அதை வெறுமனே ஒரு குறியீடாகச் செய்வது தவறு என அரசுகள் நம்பின. அது மக்கள் மனதில் நல்லதொரு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் அங்கு உண்மையான மாற்றம் ஏற்படாது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் பல அரசாங்கங்களை செயலில் இறங்க வலியுறுத்தியுள்ளன.


காஸாவில் அதிகரித்து வரும் பட்டினி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கோபம், மற்றும் மக்களின் கருத்துகளில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் ஆகியவை இந்த நிலையை உருவாக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.


சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் பாலத்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்க சில நாடுகள் முடிவு செய்துள்ளன.


உதாரணமாக, பாலத்தீனம், அதிகாரம் சீர்திருத்தம் செய்ய வேண்டும், 2026-இல் தேர்தல் நடத்த வேண்டும், மேலும் உருவாகும் பாலத்தீன நாடு ராணுவமற்றதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான் அங்கீகாரம் தரப்படும் என கனடா கூறியுள்ளது.


பிரிட்டன் தனது முடிவை அறிவிக்கும் போது, பொறுப்பை இஸ்ரேலின் மீது வைத்தது.


காஸாவில் உள்ள துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்தை ஏற்படுத்த, மேற்குக் கரையின் பகுதிகளை இணைப்பதை தவிர்க்க, மேலும் இரு நாடுகள் தீர்வை அடைவதற்கான சமாதான முயற்சிக்கு இஸ்ரேல் உறுதியளிக்காவிட்டால், ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பாலத்தீனம் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தது.


இந்த முடிவு சில குழப்பங்களை ஏற்படுத்தியது.


சில விமர்சகர்கள், குறிப்பாக இஸ்ரேலின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அங்கீகாரம் வழங்கப்படக் கூடாது என்றும், அங்கீகாரம் எந்த நிபந்தனையுடனும் இருக்கக் கூடாது என்றும் வாதிட்டனர்.


ஆனால் பிரிட்டன் குறிப்பிட்ட நான்கு முக்கிய நடவடிக்கைகளில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருந்ததால், அங்கீகாரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறியது.


பாலத்தீன் அரசை அங்கீகரிக்க முன்வரும் நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் அதன் பிறகு எப்படியான அரசியல் செயல்முறை இருக்க வேண்டும் என்பதற்கான சிந்தனையை ஊக்குவித்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றன.


சில நாடுகள் பாலத்தீனத்தை ஏன் இன்னும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை?

பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத நாடுகள், பெரும்பாலும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவுக்கு வராததால் அங்கீகாரம் தரவில்லை.


"பாலத்தீன அரசை உருவாக்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா வாய்மொழியாக ஏற்கிறது. ஆனால், அது இஸ்ரேலும் பாலத்தீனமும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனால், பாலத்தீன மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெறுவதில் மறுப்பு சொல்லும் அதிகாரம் இஸ்ரேலுக்கு கிடைக்கிறது" என்று லண்டன் பொருளாதார பள்ளியின் சர்வதேச உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு அரசியலில் நிபுணர் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் கூறுகிறார்.


1990-களில் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், பின்னர் 'இரு நாடுகள் தீர்வு' என்பதை இலக்காகக் கொண்டன.


அதாவது, இஸ்ரேலியரும் பாலத்தீனரும் தனித்தனி நாடுகளில் அருகருகே வாழ வேண்டும் என்பதே அந்தத் தீர்வு.


ஆனால் 2000-களின் முற்பகுதியிலிருந்தே, அமைதிக்கான அந்தச் செயல்முறை வீழ்ச்சியடையத் தொடங்கியது.


குறிப்பாக 2014-ல் வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, நிலைமை மேலும் மோசமானது.


எதிர்கால பாலத்தீன நாட்டின் எல்லைகள் எப்படி இருக்க வேண்டும்?

அந்த நாட்டின் தன்மை என்ன?

ஜெருசலேமின் நிலை என்ன?

1948–49 இல் இஸ்ரேல் உருவானபின் நடந்த போரின் காரணமாக இடம்பெயர்ந்த பாலத்தீன அகதிகளின் நிலைமை என்ன?

போன்ற கடினமான பிரச்னைகள் அனைத்தும் இன்னும் பதில் கிடைக்காதவையாகவே உள்ளன.


மேலும், ஐ.நாவில் உறுப்பினராக சேர பாலத்தீனம் எடுக்கும் முயற்சியை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது.


ஏப்ரல் 2024-ல், இஸ்ரேலின் ஐ.நா தூதர் கிலாட் எர்டன் கூறியதை ஏஎப்ஃபி (AFP) மேற்கோள் காட்டியது.


ஐ.நா.வில் பாலத்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நடப்பது கூட "இனப்படுகொலை பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி" என இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன் கூறியிருந்தார். மேலும், அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, அங்கீகாரம் வழங்கப்படுவது பயங்கரவாதத்திற்கு ஒரு வெகுமதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேண விரும்பும் நாடுகள், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது தங்கள் கூட்டாளியான இஸ்ரேலை கோபப்படுத்தும் என்பதை நன்றாகவே அறிந்துள்ளன.


இஸ்ரேலின் ஆதரவாளர்கள் சிலர், பாலத்தீனர்கள் தனி நாடு ஆவதற்கான அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வாதிடுகிறார்கள். 1933-ஆம் ஆண்டு மான்டிவீடியோ ஒப்பந்தம் கூறும் அந்த நிபந்தனைகள்:


நிரந்தர மக்கள்தொகை

தெளிவான எல்லைகள்

செயல்படும் அரசு

பிற நாடுகளுடன் தூதரக உறவை ஏற்படுத்தும் திறன்

ஆனால், சிலர் மிகவும் நெகிழ்வான வரையறையை ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது, மற்ற நாடுகள் தரும் அங்கீகாரமே ஒரு நாட்டின் நிலையை நிர்ணயிக்க போதுமானது என்பதே அவர்களின் வாதம்.


அமெரிக்கா என்ன சொல்கிறது?

டிரம்ப் நிர்வாகம், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஒருபோதும் மறைக்கவில்லை.


2025 செப்டம்பர் 18 அன்று, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமருடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில், "அந்த விஷயத்தில் [பிரிட்டிஷ்] பிரதமருடன் கருத்து வேறுபாடு உள்ளது" என்று அமெரிக்க அதிபர் கூறினார்.


உண்மையில், அமெரிக்காவின் நிலைப்பாடு தற்போது பாலத்தீன சுதந்திரம் என்ற கருத்துக்கே நேரடியான எதிர்ப்பாக மாறியுள்ளது.


"பாலத்தீனத்தை அங்கீகரிக்க உலக நாடுகள் முயற்சிப்பது ஹமாஸுக்கு மேலும் தைரியம் தரும்"என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.


அதே நேரத்தில், அங்கீகாரத்தை வலியுறுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ரூபியோ தெரிவித்துள்ளார். 'அது, மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள தூண்டிவிடக்கூடும்' என அவர் கூறினார்.


16 மே 2024, பாகிஸ்தானின் கராச்சியில், பாலத்தீனத்திற்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது, ​​இமாமியா மாணவர்கள் அமைப்பின் (ISO) ஆதரவாளர் பாலத்தீனக் கொடியை பிடித்துள்ளார்.பட மூலாதாரம்,SHAHZAIB AKBER/EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு,பல நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரிக்கின்றன

ஐ.நா.வில் பாலத்தீனத்தின் நிலை :

பாலத்தீனம் தற்போது, ஹோலி சீயைப் போலவே, ஐ.நா.வில் "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு" என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.


2011-ல், பாலத்தீனம் முழுமையான ஐ.நா உறுப்பினராக சேர விண்ணப்பித்தது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் போதுமான ஆதரவு இல்லாததால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. வாக்கெடுப்பிற்கே அது செல்லவில்லை.


அதற்குப் பிறகு, 2012-ல், ஐ.நா. பொதுச் சபை பாலத்தீனத்தின் அந்தஸ்தை உயர்த்தி, "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு" என அறிவித்தது.


இதனால், தீர்மானங்களில் வாக்களிக்க முடியாதபோதிலும், பொதுச் சபை விவாதங்களில் பங்கேற்கும் உரிமை பெற்றது.


மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இந்த முடிவு வரவேற்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதனை விமர்சித்தன.


இந்த அந்தஸ்து, பாலத்தீனத்திற்கு மற்ற சர்வதேச அமைப்புகளில் சேரும் வாய்ப்பையும் வழங்கியது. 2015-இல், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உட்பட பல அமைப்புகளில் இணைந்தனர்.


மே 2024-ல், ஐ.நா. பொதுச் சபை பாலத்தீனத்தின் உரிமைகளை மேம்படுத்தியது. சூடான விவாதத்துக்குப் பிறகு, பாலத்தீனத்தை உறுப்பினராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தியது.


அந்த தீர்மானத்தின் மூலம், பாலத்தீனம் முழுமையாக விவாதங்களில் பங்கேற்க, செயல்திட்டங்களை முன்மொழிய, மற்றும் குழுக்களில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டது.


ஆனால், வாக்களிக்கும் உரிமை இன்னும் வழங்கப்படவில்லை.


ஐ.நா.வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து பெற, பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் அவசியம்.


அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராக அமெரிக்கா, பாலத்தீனத்தை ஒரு நாடாக ஏற்கும் முயற்சியை "முன்கூட்டியது" என்று கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்தது.


பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றும் தீர்மானங்கள் சட்டப்படி கட்டாயமானவை. ஆனால் பொதுச் சபை நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு அந்த வலிமை இல்லை.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் 

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"ஐ.நா. முழு உறுப்பினராக மாறுவது, பாலத்தீனர்களுக்கு அதிக ராஜ்ஜீய செல்வாக்கை தரும். அதில் தீர்மானங்களை நேரடியாக முன்மொழிவது, பொது சபையில் வாக்களிப்பது (இப்போது 'உறுப்பினர் அல்லாத' நாடு என்பதால் வாக்களிக்க முடியவில்லை), பின்னர் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற/வாக்களிக்க கூட வாய்ப்பு உண்டு"என்று வாஷிங்டனில் உள்ள மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட் (Middle East Institute) அமைப்பில், பாலத்தீன மற்றும் இஸ்ரேல் தொடர்பான நிகழ்ச்சிகளின் இயக்குனர் கலீத் எல்கிண்டி கூறுகிறார்,


"ஆனால், இவை எதுவும் 'இரு நாடு தீர்வு'வைக் கொண்டு வராது. அது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.


லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (SOAS) நிறுவனத்தில் வளர்ச்சிக் கல்வி மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியரான கில்பர்ட் அச்சார், இதைப் பற்றி கூறுகையில், "ஐ.நாவில் முழு உரிமை கிடைத்தாலும், பாலத்தீன அதிகார சபை, அதனால் பெரிதாக ஒன்றும் சாதிக்காது" என்கிறார்.


"இது வெறும் அடையாள வெற்றியாக இருக்கும். 1967ல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் ஒரு சிறிய பகுதியிலும், இஸ்ரேலை முழுமையாகச் சார்ந்து இருக்கும், அதிகாரமற்ற 'பாலத்தீன அதிகார சபையின்' உண்மைக்கு எதிராக, கற்பனையான 'பாலத்தீன அரசு' அங்கீகாரம் மட்டுமே"என்று கூறும் அவர்,


மேலும், இது சுயாட்சி மற்றும் முழு உரிமை கொண்ட பாலத்தீன நாடு என்ற இலக்கிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது," என்றும் குறிப்பிட்டார்.


பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி குளோபல் ஜர்னலிசத்தின் செய்தி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.




 வரலாற்று மாற்றம் 🌍 | இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன - அவ்வாறு செய்த முதல் G7 நாடாக கனடா மாறியுள்ளது.

 


இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினரைச் சேர்ந்தவர் & தெற்கில் சிறுபான்மையினரின் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும் என்பதற்கான சிறந்த நிரூபணம் இது.
Sri Jeyawerdenaoura பல்கலை வைத்திய பீட மாணவி மஹிமா சுரேஷ் தேசிய MBBS தகுதிப் பட்டியலில் #1 இடத்தைப் பிடித்துள்ளார்🥇#lka #இலங்கை

15 சிறப்புகள். ஒவ்வொரு தேர்விலும் முதல் வகுப்பு. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே சாதிக்கும் பெண்👩‍⚕️✨
🧵 அவரது கதை உங்களை ஊக்கப்படுத்தும்.

 



இலங்கை,இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு அழகான காட்சியை நேற்று இரவு கண்டு ரசித்தனர்.

பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும்.

பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது.

சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும்.

 

மன்னாரில், அபிவிருத்தி உத்தியோத்தர்களாக  கடமை புரந்தவர்கள், கடந்த 5 வருடங்களாக ஆசிரியர்   சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் ஆசியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்கு  போட்டிப் பரீட்சை நடத்துதற்கு எதிராக, மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது.

 


#இலங்கையர்களுக்கு #இரத்த_நிலவை_காணும் #அரிய_வாய்ப்பு_இன்று.


07 Sep 2025 ஆவணி மாதம் 22 ஆம் தேதி 07/09/2025 இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணி முதல் இரவு 1:26 மணி வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் ராகு கிரகம் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.


‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது.


இன்று (07) மற்றும் நாளை மறுதினம் (08) கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும்.


கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இந்த தகவலைத் தெரிவித்தார்.


முழு சந்திர கிரகணம் நிகழும்போது, பூமி சரியாகச் சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையே வரும். இதனால், பூமியின் இருண்ட நிழல் (umbra) நிலவின் மீது முழுமையாகப் படர்ந்துவிடும்.


சூரிய கிரகணத்தைப் போல நிலவு முற்றிலும் இருண்டு போகாது. மாறாக, பூமியின் வளிமண்டலம் வழியாகச் சூரிய ஒளி வளைந்து செல்வதால், நிலவு சிவந்த நிறத்தில் ஒளிரும்.


இந்தச் சிவந்த நிறத்திற்குப் பின்னால் ‘ரேலே சிதறல்’ (Rayleigh scattering) என்ற அறிவியல் நிகழ்வு உள்ளது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமிக்கும்போதும் வானம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் தோன்றுவதற்கும் இதுவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.


அதிக நேரம் நிகழும் அரிய வகை 

சந்திர கிரகணம்!

இன்று செப்டம்பர் 7 ஆம் திகதி வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளது. 

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். 

குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% பேருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும். 


செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. 


இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 


பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். 


அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


*சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு,*

கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57 


முழுமையான கிரகணம் - இரவு 11:00 


அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:41 


கிரகணம் முடிவு - அதிகாலை 1:26

 


உலக அமைதிக் குறியீடு 2025 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 17 வது ஆண்டாக ஐஸ்லாந்து நாடு முதலிடம் பிடித்துள்ளது.

நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்க வேண்டும் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. 


இந்த உத்தரவு அனைத்து மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள் என அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 


மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 


உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும். மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

(Tamilan)


 புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் இன்று கடமைகளை பொறுப்பேற்பு....

160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறைக் கொண்ட பதிவாளர் நாயகத் துறையில் , இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை சசிதேவி பெறுகிறார்.


 9 வளைவு பாலம் என்பது இலங்கையில் தெமோதர மற்றும் எல்லாவிற்கு இடையில் உள்ள ஒரு புகழ்பெற்ற ரயில்வே பாலமாகும். இது 100 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்படுத்தப்படாமல் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு அதிசயமான பாலமாகும். இது ஒரு பிரம்மாண்டமான கட்டிடக்கலை அதிசயமாகும். 

மேலும் தகவல்கள்:
  • அமைவிடம்:
    இந்த பாலம் இலங்கையின் பதுளை மற்றும் தெமோதரைக்கு இடையிலான ரயில் பாதையில் அமைந்துள்ளது. 
  • கட்டுமானம்:
    இரும்பு எதுவும் பயன்படுத்தப்படாமல், கற்களினால் மட்டுமே கட்டப்பட்ட ஒரு அற்புதமான கட்டிடம் இது. 
  • சிறப்பு:
    இது இலங்கை மற்றும் பிரித்தானியப் பிரபலங்களின் கூட்டு முயற்சியால் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 
  • தற்போதைய நிலை:
    இது ஒரு தேசிய உரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கவர்ச்சியான இடமாக உள்ளது. 

எல்ல தெமோதரை  9-வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றும் வகையில் புதிய திட்டத்தைத் தொடங்க ரயில்வே திணைக்களமும் மத்திய கலாசார நிதியமும் இணைந்து திட்டமிட்டுள்ளன.

 

இந்த திட்டத்தின் நோக்கம், சுற்றுலாப் பயணிகள் இரவில் மின் விளக்குகளை ஒளிரச் செய்து இந்தப் பகுதியைப் பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர, ஆகஸ்ட் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

 

ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல் திட்டம் குறித்து ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தரவும் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.