நூருல் ஹுதா உமர்
அத்தனகல்ல நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இப்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.
பாறுக் ஷிஹான்
#திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் குற்றவாளி ஒருவரை கைது செய்ய முயன்ற பொலிசாரை இளைஞர் குழு ஒன்று வீடொன்றுக்குள் இழுத்துச் சென்று பூட்டி அடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று (31) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று இரவு மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அந்தநேரத்தில் வீட்டில் மனைவி, பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் பிரேமாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் எரிந்துள்ளதாகவும் வேறு சேதங்கள் ஏற்படவில்லையெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-
(கனகராசா சரவணன்)
கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக 10 கிராம் ஜஸ்போதை பொருளை எடுத்துவந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரி ஒருவரை நேற்று திங்கட்கிழமை (31) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொழும்பில் இருந்து 10 கிராம் 33 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளை எடுத்து கொண்டு வந்த வியாபாரி ஒருவரை சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றல் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பாறுக் ஷிஹான்
இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை கைதுசெய்த பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
துப்பாக்கி ரவைகளை தனது பையில் மறைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றியவர் எனவும், கடந்த 20ஆம் திகதி விடுமுறையில் லுணுகம்வெஹரவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மீண்டும் கடமைக்காக திரும்பியபோது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள், ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் வைத்து குறித்த சிப்பாயின் பயணப் பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, பைக்குள் T-56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன்பு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
கொழும்பில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன்பு இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் யோஷித ராஜபக்ஷவுடன் வந்த குழுவினர் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 22 ஆம் திகதி இரவு நடந்ததாகவும், அதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளில் யோஷித ராஜபக்ஷ நேரடியாக இந்த மோதலில் ஈடுபடவில்லை என்று தெரியவந்தாலும், அவருடன் வந்த சிலருக்கு எதிராக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யோஷித மற்றும் அவரது மனைவி இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
மாத்தறை, தேவுந்தர, சிங்கசன வீதியில் நேற்று (21) இரவு இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிதாரி வந்ததாக கூறப்படும் வேன் ஒன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
Update -:
மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு 11:45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தெவுந்தர கபுகம்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, பின் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 துப்பாக்கிக்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நீதவான் விசாரணை, மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய இன்று (22) அதிகாலையில் நடத்தப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில்; வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங்கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மெகசின் சிறையில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது நடந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக சிறை அதிகாரிகள் இருவர் மற்றும் மேலும் இரண்டு கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 23ஆம் திகதி மஹரகம பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 54 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான ஹேவாதீர தொன் கெமுனுஜித் என்பவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கொழும்பு மெகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், கடந்த 26ஆம் திகதி இரண்டு சிறை அதிகாரிகள் அவரை சோதனை செய்ய முயற்சித்தனர்.
அப்போது, அவர் அந்த ஐஸ் போதைப்பொருளை விழுங்கியதை அடுத்து, அந்த இரண்டு அதிகாரிகள் மேலும் இரண்டு கைதிகளுடன் இணைந்து அவரை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்த கைதி, சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதி, கடந்த 16ஆம் திகதி பிற்பகல் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரள்ளை பொலிஸாரின் விசாரணைகளில், சிறையில் உள்ள மற்ற கைதிகளும், அந்த கைதி ஐஸ் போதைப்பொருளை விழுங்கிய பின்னர், இரண்டு சிறை அதிகாரிகள் மேலும் இரண்டு கைதிகளுடன் இணைந்து அவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி, வாந்தி எடுக்க வைப்பதற்காக உப்பு கலந்த நீர் போத்தல்கள் இரண்டை அருந்த வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த மெகசின் சிறைச்சாலை, கொழும்பு மேலதிக நீதவான் சம்பத் ஜயவர்தனவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது