Showing posts with label Eastren. Show all posts

 


பாறுக் ஷிஹான்


சாய்ந்தமருது போலீஸ் நிலையத்திற்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கணனி பொறியினை அன்பளிப்பு செய்துள்ளார்

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின்  நிலையப் பொருப்பதிகாரி ஜனாப் எஸ்.எல் சம்சுதீனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கணிணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பான நிகழ்வு நேற்று   கல்முனை மாநகர முன்னால் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்றது.

இதன் போது சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜனாப் எஸ். எல்.சம்சுதீன் அவர்களிடம்  கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபினால் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்

 


மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயில் கடந்த 4 வருடங்களாக வாழ்ந்து வந்த (மனநலம் குன்றிய நிலையில் ) பாலா என்ற நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஒரு முன்னாள் போராளியாவார்.


 வி.சுகிர்தகுமார் 0777113659 


  அவள் தேசத்தின் பெருமைக்குரியவள் எனும் தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வுகளில் பல்வேறு ;கலை நிகழ்வுகளும் பெண்களுக்கான சமூக நல வைத்திய ஆலோசனைகளும் கருத்துரைகளாக வழங்கப்பட்டன.
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பீறா ஒருங்கிணைப்பில்; பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின்; சமூக நல வைத்தியர் ஆமிலா ஜமால்டீன் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வஸ்டர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.றிஸ்மியா ஜஹான் உளவளத்துணை உத்தியோகத்தர் சிலோஜினி மனோகுமார் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.ரூபினா பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சியாமினி சசிகலா முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் ஆலையடிவேம்பு பிரதேச மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமமட்ட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்;கப்பட்டதுடன் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரின் வரவேற்புரை மற்றும் பிரதேச செயலாளாரின் தலைமையும ;இடம்பெற்றது. துலைமை உரையில் பெண்கள் உரிமை தொடர்பில் மேடைகளில் நாம் பேசிக்கொண்டிருப்பதை விட அதனை வீடுகளில் செயற்படுத்தி காட்டுவதே சிறப்பானது என பிரதேச செயலாளர் வி.பபாகரன் கூறினார்.
இதன் பின்னராக மாணவிகளின் நடனங்களும் மகளிர் தொடர்பான விழிப்புணர்வு கவிதைகளும் பாடல்களும் அரங்கேற்றப்பட்டன.
நிகழ்வில் விசேட அம்சமாக சமூக நலன் வைத்தியர் ஆமிலா ஜமால்டீனால் பெண்கள் வாழ்க்கை முறைமை மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கம் உடற்பயிற்சி போன்ற விடயங்களை உள்ளடக்கியதான கருத்துரையினை சிறப்பாக வழங்கியதுடன் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
நிகழ்வின் இறுதிக்கட்டமாக கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது கிராமமட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பீறா மற்றும் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659


  நிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றது. வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர இனி வேறு வழியில்லை என்கின்றனர் அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகிகிராமம் கவாடப்பிட்டி புளியம்பத்தை மகாசக்தி உள்ளிட்ட கிராமங்களில் வாழும் மக்கள்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறித்த கிராமங்;களில் யானையின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து  இன்று வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர்; ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு கூறினர்.
கோளாவில் பிரதேசத்தில் இருந்து பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்திவாறு ஊர்வலமாக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஒன்று திரண்டு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் அரச உயர் அதிகாரிகளுக்கும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்டவர்களுக்கும் கையளிக்கும் வகையிலான மகஜர்களை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் ஒப்படைத்து தங்களுக்குரிய தீர்வினை விரைவில் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். மகஜர்களை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதேநேரம் கண்ணகிகிராமத்தில் நாளாந்தம் யானையின் தாக்குதல் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று அதிகாலையும் (09) விவேகானந்தன் ஜெகதீஸ் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு இரு தினங்களுக்கு முன்னர் கண்ணகிகிராமத்திலும் தனது அட்டகாசத்தினை காட்டிய யானை அங்குள்ள குடியிருப்புக்களையும் பயிரிடப்பட்ட  பயிரினங்களையும் உடமைகளையும் துவம்சம் செய்துள்ளது.
இதேநேரம் அன்மைக்காலமாக கவடாப்பிட்டி புளியம்பத்தை மகாசக்திபுரம் கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருவதானால் அங்கு வாழும் மக்கள் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் அலைவதுடன் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
இது இவ்வாறிருக்க சில மாதங்களுக்கு முன்னர் கண்ணகிகிராமத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளான பெண்ணொருவர் பலியானதுடன் வயல் பிரதேசத்தில் தாக்கப்பட்ட ஆண் ஒருவரும்  தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
மேலும் யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அரசாங்கமோ எந்த அரசியல்வாதிகளோ இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்தும் யானையின் அச்சுறுத்தல் இடம்பெற்று வருவதுடன்; ஒற்றைக்கண் யானை ஒன்றே இவ்வாறு தொடர் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும் கூறுகின்றனர்.
ஆகவே குறித்த யானையினை வெளியேற்ற அரசாங்கமும் அரச அதிகாரிகளும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இல்லாத பட்சத்தில் தாங்கள் தொடர்ந்தும் வீதிமறியல் போராடத்தில் ஈடுபட வேண்டிய நிலைவரும் எனவும் தெரிவித்தனர். 


திருகோணமலை ரோட்டரி கழகமும்அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “ Global Hand Charity” மற்றும்  Rotary Club of Mill Point யுடன் இணைந்து கண் கொடுக்கும் இலவச கண் சிகிச்சை முகாமை 06-03-23  கடடைபரிச்சன் விபுலானந்த வித்தியாலயத்திலும், 07-03-23  அன்று அலஸ் தோட்டம் ஸ்ரீ மாதுமை அம்பாள் வித்தியாலயத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

இரு தினங்களும் சராசரி 500  க்கு  மேற் பட்ட பயனாளிகள் கலந்து பயன் பெற்றார்கள். 100 க்கு  மேற்பட்ட கண்ணில் வெண்புரை உள்ள நோயாளிகள் அடையாளம் காணப் பட்டு மேலதிக சிகிச்சைக்கான உதவிகள் வழங்கப் பட இருக்கிறது200 க்கு மேட்பட்ட்டவர்களுக்கு கண்ணாடி வழங்கப் பட இருக்கிறது 

திருகோணமலை ரோட்டரி கழக அங்கதவுர்களும் மற்றும் உதவியாளர்களும் பங்கு பற்றினார்கள்  இது மாதிரியான இலவச கண் சிகிச்சை முகாம் சமீபத்தில் இப் பகுதியில் நடத்தப படவில்லை என பங்கு பற்றியவர்கள் கூறினார்கள் 

 


நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணியின் வேண்டுகோளின் பிரகாரம், நிந்தவூர் பிரதான வீதியிலும், அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியிலும் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியினை, வாரநாட்களில் காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை அகற்றுவதற்கு இராணுவத்தின் 24ம் படைப்பிரிவின் General Commanding Officer Major General விபுல சந்த்ரசிரி அனுமதி வழங்கியுள்ளார்.

இன்று (06) காலை மல்வத்தையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படைப்பிரிவின் இராணுவ முகாமில் நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பின் பொழுதே ஜி.சி.ஓ அவர்களினால் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
குறிப்பாக தற்போது இந்த பிரதான வீதியின் ஊடாக அதிகமான உத்தியோகத்தர்கள் காலை வேளையில் தாங்கள் கடமை புரியும் அலுவலகங்களுக்குச் செல்வதினால் பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்து வருவதுடன், இந்த சோதனைச் சாவடியில் தரித்து நிற்பதனால் சில நிமிடங்கள் தாமதமாக கைவிரல் அடையாளத்தின் மூலம் தங்கள் வரவினை பதிவு செய்ய வேண்டிய அசௌகரியமான நிலைமையும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் பற்றி நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணியின் செயற்பாட்டாளர்களான ஊடகவியலாளர் சுலைமான் றாபி மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஆயுர்வேத துறைக்கான இணைப்பாளருமான சுலைமான் நாசிறூன் ஆகியோர், இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிறி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் (அலுவலக நாட்களில்) காலை 6 மணி முதல் காலை 9 மணி வரைக்கும் குறித்த இராணுவ சோதனைச் சாவடியை அகற்றுவதற்கு GOC அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்.


 வி.சுகிர்தகுமார் 0777113659  


  அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கவடாப்பிட்டி மற்றும் கண்ணகிகிராமத்தில் யானையின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீதிக்கு இறங்கி போராடுவதற்கும் தயாராகிவருகின்றனர்.
நேற்றிரவு (05) கவடாப்பிட்டி கிராமத்தில் உள்நுழைந்த யானை இராசலெட்சுமி என்பவரது வீட்டை உடைத்து அங்கிருந்த நெல்மூடைகளையும் இழுத்துச் சென்றுள்ளது.  அத்தோடு இரு தினங்களுக்கு முன்னர் கண்ணகிகிராமத்திலும் தனது அட்டகாசத்தினை காட்டிய யானை அங்குள்ள குடியிருப்புக்களையும் பயிரிடப்பட்ட  பயிரினங்களையும் உடமைகளையும் துவம்சம் செய்துள்ளது.

இதேநேரம் அன்மைக்காலமாக கவடாப்பிட்டி மகாசக்திபுரம் கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருகின்றமையும் இதனால் அங்கு வாழும் மக்களும் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இது இவ்வாறிருக்க சில மாதங்களுக்கு முன்னர் கண்ணகிகிராமத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளான பெண்ணொருவர் பலியானதுடன் வயல் பிரதேசத்தில் தாக்கப்பட்ட ஆண் ஒருவரும்  தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் யானையின் தாக்குதலை கட்டுப்படுத்த இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களை இணைத்து குழுவாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் முடிவெடுக்கப்பட்டதுடன் குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசாங்கத்தின் உதவியினை பெறுவது எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனாலும் அரசாங்கமோ எந்த அரசியல்வாதிகளோ இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்தும் யானையின் அச்சுறுத்தல் இடம்பெற்று வருவதுடன்; ஒற்றைக்கண் யானை ஒன்றே இவ்வாறு தொடர் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும் அம்மக்கள் சார்பில் கண்ணகிகிராம சனசமூக நிலைய தலைவர் கண்ணனும் கூறுகின்றனர்.
ஆகவே குறித்த யானையினை வெளியேற்ற வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இல்லாத பட்சத்தில் தாங்கள் வீதிக்கி இறங்கி போராட வேண்டிய நிலைவரும் எனவும் தெரிவித்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


பிரித்தானியர்களிடமிருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த பொருளாதார நிலையிலிருந்து நாடு இன்றிருக்கும் பொருளாதார நிலைக்கு கொண்டுவரப்பட்டமைக்கு காரணம் நாட்டில் வாழும் மக்களாகிய நாம் இலங்கையர்களாக அன்றி இன ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் சிந்தித்தமையே. எமது நாட்டின் அரசியல் சித்தாந்தங்களினாலும், பிழையான இனவாத, மதவாத பிரச்சாரங்களினாலும் நாடு சமாதானமின்றி சீரழிந்து கொண்டிருக்கிறது என காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தெரிவித்தார்.

மாளிகைக்காடு கிழக்கு சகவாழ்வு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "இனங்களுக்கிடையில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவோம்" என்ற ஒன்று கூடலும், பரிசளிப்பு நிகழ்வும் மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயத்தில் சகவாழ்வு சங்கத்தின் செயலாளர் ஆர்.எம். தன்ஸீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது நாட்டில் அடையாள அட்டை ஏன் அறிமுகம் செய்யப்பட்டது என்ற வரலாற்றை ஆராய்ந்தாலே நாம் நமது நாடு ஏன் இந்த நிலைக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். செய்திகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் கூட விபத்தில் அல்லது அனர்த்தங்களில் மரணித்ததை மனித உயிர்களாக பார்க்காமல் இன அடையாளம் காட்டுவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

எமது மூதாதையர்கள் இனங்களுக்கிடையில் வைத்திருந்த ஒற்றுமையை இன்றைய சந்ததிகளும் கட்டியெழுப்ப வேண்டும். மதங்களுக்காக சண்டையிடுபவர்கள் மதங்கள் கூறும் விடயங்களை கேட்டு, வழிப்பட்டு நடப்பதில்லை. சகல மதங்களும் சமூக நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் வலியுறுத்துகின்றது என்றார். இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி ஏ.எம்.எம். மின்ஹாஜ், காரைதீவு அம்மன் ஆலய குரு ஜீவன் குல சுவாமிகள், வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான பயிற்சியாளர் ஐ.எல். காஸிம் ஆகியோர் சமூக நல்லிணக்கம், சகவாழ்வு, இன ஒற்றுமையின் தேவைப்பாடுகள், பல்லின சகோதரத்துவத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மேலும் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜெகத், மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல்.எம். நளீம், காரைதீவு மனித அபிவிருத்தி ஸ்தாபன உத்தியோகத்தர் எம்.எம்.ஜலீல், காரைதீவு பிரதேச செயலக சகவாழ்வு சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் தணிகை செல்வி, மாளிகைக்காடு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிழக்கு இளைஞர் அமைப்பு இளைஞர் கழக தலைவர் ஆர்.எம். தாணீஸ், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் ஏ.எல். இந்தியாஸ் உட்பட பல்லின பாடசாலைகளின் மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நல்லிணக்க சித்திர போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் இங்கு வழங்கிவைக்கப்பட்டது.
 

 


க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌ல்  விசார‌ணையை நீதியாக முன்னெடுக்க   க‌ல்முனை முதல்வர்  பிர‌தி முதல்வர் ப‌த‌வி விலக வேண்டும்  என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து.


க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌ல் தொடர்பில்   அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி  கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(5) இரவு  நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது 


ம‌ஹிந்த‌ கோட்டா ஆட்சியில் ஊழ‌ல் ந‌ட‌ந்த‌ போது ம‌ஹிந்த‌, கோட்டா பொறுப்ப‌ல்ல‌, நிர்வாக‌ உத்தியோக‌த்த‌ர்க‌ள்தான் பொறுப்பு என‌ யாரும் சொல்லவில்லை. மாறாக‌ அவ‌ரின் க‌ட்சி, அவ‌ரின் க‌ட்சிக்கு பாராளும‌ன்றில் ஆத‌ர‌வு கொடுத்த‌ க‌ட்சிக‌ள் என‌ அனைவ‌ரையும் ந‌ம் ச‌மூக‌மும் சேர்ந்து குற்ற‌ம் சும‌த்திய‌து.

 



நேற்றிரவு  மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த  புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை உள்ள உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் காணப்படுவதாக பயணிகளால் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

 

இதன்போது, சுகாதார பிரிவினரால் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை, சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.


இந்த நிலையில் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் காணப்படுவதாக சுகாதார பிரிவினரால் தெரிவிக்கப்பட்டன..


கண்டுபிடிக்கப்பட்ட நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது


 ஏறாவூரில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ பரவல்

ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள "Kids Land" எனும் வர்த்தக நிலையம் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இன்று (28) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மின்னொழுக்க காரணமாகவே இத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீயை அணைப்பதற்காக மட்டக்களப்பிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயினை அனைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 


Farook sihan



கல்குவாரியினால் உருவான நீர்தடாகத்தில் நீராடச்சென்று சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம்-1 கிராம சேவகர் பிரிவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை 5.30 மணியளவில்  குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

மூன்று சிறுவர்கள் சம்பவ இடமான கல்குவாரி பகுதியில் காணப்பட்ட நீர்தடாகத்தில்  ( குட்டை) நீர் காணப்பட்டதால் குளிப்பதற்காக தயாராகியுள்ளனர்.

 மரணமான சிறுவன் மற்ற இரு நண்பர்களையும் குளிப்பதற்காக அழைத்துள்ளதுடன் அவர்கள் மறுத்த நிலையில்  குறித்த நீர்நிலையில் இருந்து சுமார் 11 அடி  உயரமான மலையில் ஏறி மரணமடைந்த  சிறுவன் முதலில் குறித்த நீர்நிலையில்   பாய்ந்துள்ளார். குட்டையின் ஆழத்தினை அறியாமல் பாய்ந்த அச் சிறுவனை காணவில்லை என  இருந்தஅவ்விடத்தில் நின்ற  இரு சிறுவர்களும் அபயக்குரல் இட்டுள்ளனர்.


பின்னர் இறந்த சிறுவனின் உறவினர்கள் குட்டையில் இறங்கி தேடுதல் மேற்கொண்டு   சகதியில் சிக்கிய நிலையில் சிறுவனை மீட்டு முதலுதவி வழங்கி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.

 
 இவ்வாறு   வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட சிறுவன் மரணமடைந்த நிலையில் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம் நௌபர்  ஆகியோரது பிரசன்னத்துடன்  மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் இன்று(27)மதியம்  கையளிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த கல்குவாரி குட்டை சுமார் 20 வருடங்களாக உபயோகிக்கப்படாமல்  காணப்படுவதாகவும் சுமார் கிட்டத்தட்ட 30 அடி ஆழமாக உள்ளதாகவும்  அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


( காரைதீவு  சகா))

கல்முனை ஆதார வைத்தியசாலை ஒருங்கிணைப்பில் காரைதீவு பிரதேசத்திலுள்ள நலிவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துமாப் பொதிகள்  (24) வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் (FOBH-UK) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் சத்துமா விநியோகம் இடம் பெற்றது.

காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி நடராஜா அருந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன், பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர்  சா.இராஜேந்திரன் சமுக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அவர்கள் 150 பயனாளிகளுக்கான 
சத்துமா பொதிகளையும் வழங்கி வைத்தனர்.

கல்முனை பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக 3000 பொதிகள் விநியோகித்து இரண்டாம் கட்ட விநியோகத்தை நிறைவு செய்துள்ளனர்.


 பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று இடம் பெற்றுள்ளது.

 


பாறுக் ஷிஹான்


 2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல், இக்கட்டான பொருளாதார நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய நோக்கங்களினை அடிப்படையாகக் கொண்டு 2022/2023 ம் ஆண்டிற்கான பெரும் போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம்  அதிமேதகு ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தீர்மானத்திற்கமைய நாடு பூராகவும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய   நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அரிசி ஆலைகளில் நெல் கொள்வனவுகளை மேற்கொள்ளும் செயற்திட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் மத்தியமுகாம் பகுதியில் இன்று  இடம்பெற்றது

இந் நிகழ்வுக்கு  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ கலீஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளீர் அபூபக்கர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


காரைதீவில் டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும்,  நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் !!


நூருல் ஹுதா உமர் 


தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும்,  நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலில் இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் இடம்பெற்றது. 


 காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைசால் முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள், சுகாதார ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 


காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய நிர்வாக பிரதேசங்களில் இடம்பெற்ற கள ஆய்வு விஜயத்தின் போது டெங்கு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டதுடன், காணி உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும், சிலருக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்ட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர், காலநிலை மாற்றம் காரணமாக மழைகாலம் ஆரம்பமாக உள்ளதனால் நுளம்பு பெருகுவதனை குறைக்கவும், எங்கள் பகுதியில் டெங்கு பரவுவதைத் தடுக்கவும், தினமும் காலை குறைந்தது 10 நிமிடங்கள் உங்கள் சுற்றுச்சூழலைப் நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். 


மேலும் பொதுமக்களாகிய அனைவரும் எமது பிரதேசத்திலிருந்து டெங்கை ஒழிக்க உதவுமாறும் தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை சகலரும் அறிவீர். பொதுமக்கள் தமது வீடு வளவுகளில் தினமும் நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றுங்கள் அல்லது நீர் தேங்கி நிற்காதவாறு கவனியுங்கள் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் கேட்டுக்கொண்டார்.


நூருள் ஹுதா உமர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை இன்று (24) மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் செயற்பாடுகளை கண்காணித்ததுடன் குறித்த வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள புனர்வாழ்வு மையம் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். 

குறித்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் பிரதிநிதியாக பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ வாஜித் அவர்கள் பங்கு கொண்டதுடன் குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் மற்றும் அவசியம் தேவையான வளங்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்

குறித்த நிகழ்வின் போது அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கௌரவ ஆளுநர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த விதம் என்பவற்றில் கௌரவ ஆளுநர் திருப்தி அடைந்து அதிதிகளுக்கான வரவுப்பதிவேட்டில் புறக்குறிப்பிட்டு வாழ்த்திச் சென்றமையும் விசேட அம்சமாகும்.

 


மாளிகைக்காடு நிருபர் நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கை அறுவடையை அண்மித்துள்ளதால் விவசாயிகள் தாம் அறுவடை செய்த நெல்லை உலறவிட போதிய இடமில்லாமல் திணறிக்கொண்டிருப்பதையும், வீதிகளில் நெல்லை காய வைத்திருப்பதையும் பரவலாக காணக்கூடியதாக உள்ளது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காலநிலை சீர்கேடு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற கஸ்டங்களுக்கு மத்தியில் விவசாயிகள் தமது அறுவடையினை மேற்கொண்டு கிடைத்த நெல்லினை வீதிகளிலும், பொது இடங்களிலும் காய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பொறுமை காத்து ஒத்துழைப்பு வழங்குமாறு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் பொதுமக்களை அறிவிப்பொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும், சம்மாந்துறையின் முக்கிய ஜீவனோபாய தொழிலான நெற்செய்கை தற்போது அறுவடைசெய்யப்படுகின்றது.  பொது மக்களும், வாகனம் செலுத்துவோரும் இரண்டு வாரங்களுக்கு பொறுமை காத்து விவசாயிகள் தமது நெற்களை வீதிகளில் உலர்த்துவதற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு  கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
 



 அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் இஸ்ஸதீன் நியமனம்!


அபு அலா - 


அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக பொத்துவிலைச் சேர்ந்த

வைத்தியர் அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் (MBBS) தனது கடமைகளை இன்று (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.


அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பதவி கடந்த பல மாதங்களாக வெற்றிடமாக

காணப்பட்டு வந்தது. இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவருக்கான இடமாற்றக் கடிதத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசல குணவர்தனவினால் வழங்கி வைக்கப்பட்டு இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் 1998 பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவராக வெளியேறிய இவர் 1998 - 2002 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிவந்த நிலையில், 2002–2004 நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு

மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


பின்னர் 2004 – 2008 பொத்துவில் மாவட்ட வைத்தியசாலைக்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு 2008 - 2010

கோமாரி CDMH வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், 2010–2012 பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், 2013–2017 பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும், 2018–2019 பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், 2019–2020 திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.


பின்னர் 2021-2022 பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த நிலையில், 2023.02.14 ஆம் திகதி அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.


வைத்தியர் அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் சமூக சேவைகள் அமைப்பு, லயன்ஸ் கிளப் தலைவர், பொத்துவில் அருகம்பை புனர்வாழ்வு அதிகாரி, MLYF அமைப்பின் ஆலோசகர் போன்ற பல பதவிகளில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


 (சர்ஜுன் லாபீர்)


கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Sun Gloaming 2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று(11) காலை 9.30  மணியளவில்  கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் மருதமுனை கலாசார மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்று சென்ற  மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்தோடு கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாருமான ஏ.எச்.அன்சார் கலந்து கொண்டு சிறப்பித்தார்

மேலும்  விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ்,அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எல் ஆதம்பாவா, நிந்தவூர் பிரதேச செயலாளரும் முன்னாள் அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளருமான சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆசீக்,இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் ரஷ்ஷான்(நளிமி), பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்
எஸ் சகுதுல்.நஜீம்,கல்முனை மாநகர பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அசீம், நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ஜெசான் ஆசீக்,,மகா ஓயா உதவி பிரதேச செயலாளர் ஐமா நிஹ்மத்துல்லாஹ், உட்பட இன்னும் பல உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.