Showing posts with label Slider. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைவாக (12) திங்கட்கிழமை மாலை நுளம்பு கட்டுப்பாட்டு புகை விசிறல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றதுடன், டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்கும் வகையில் புகை விசிறல் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில், சுற்றுப்புறங்களை சுத்தமாக பேணுதல், நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 


இலங்கை பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற, வேலையில்லாத ஆயுர்வேத வைத்தியர் சங்கம் மற்றும் அரச வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் சித்த வைத்தியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்குமிடையிலான சந்திப்பு  நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது.



 


நூருல் ஹுதா உமர்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முதற்கட்ட வேலைத்திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட வாவிக்கரை பூங்கா மற்றும் அதனுடன் இணைந்த மிதக்கும் படகுகள் தொகுதி ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் நேற்று (12) நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்தோடு, குறித்த பூங்காவின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பாகவும், 2026 ஆம் ஆண்டுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்படவுள்ள நிதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்தகட்ட வேலைத்திட்டங்களுக்கான முன்னாய்வுகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படவுள்ளதுடன், வாவிக்கரை வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்புடைய அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம் ஜெஸீம், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானங்களுக்கு அமைவாக, அனர்த்தங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளையும் சீரமைத்து, அவற்றை தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை பொதுமக்களிடம் ஒப்படைத்து, அதனை மேற்பார்வை செய்யும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நடவடிக்கையை அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னெடுத்து வருகிறது.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று (13) செவ்வாய்க்கிழமை, பள்ளிக்குடியிருப்பு முதலாம் பிரிவில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு பின்னால் காணப்படும் வீதிகள், பொதுமக்களின் நேரடி பங்களிப்புடனும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தின் ஈடுபாட்டுடனும்  சீரமைக்கப்பட்டு வருகின்றன.

வரம்புக்குட்பட்ட வளங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருந்த போதிலும், தன்னால் முடிந்த அளவைத் தாண்டி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக அக்கரைப்பற்று பிரதேச சபை மேற்கொண்டு வரும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளதாகவும், சவால்களை இதய சுத்தியுடன் ஏற்றுக்கொண்டு, மக்கள் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக், உப தவிசாளர், உறுப்பினர்கள், சபை செயலாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அனைத்து ஊழியர்கள் மற்றும் இந்த நடவடிக்கைகளுக்கு தோள் கொடுத்து பங்களிக்கும் அனைவருக்கும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியிலிருந்து 7வருட ஆலிம் கற்கையை நிறைவு செய்து வெளியேறிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நான்கு உலமாக்கள் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து அறிமுகம் செய்து கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் நஜ்முதீன் நபீஸ், மர்ஹூம் றபாய்தீன் சப்னாஸ், முஹம்மத் நவாஸ் அஷ்பாக் அகமட் , ஹாரூன் முகம்மட் சப்ரி ஆகியோர் அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

நற்பிட்டிமுனை ஜாமிஉல் ஹிக்மா சார் பள்ளிவாசல்கள் கூட்டமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ. எல்.நாஸிர் கனி (ஹாமி) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசல், ஆஷுர் பஸார் பள்ளிவாசல் மற்றும் றாஜிஹி பள்ளிவாசல் ஆகியவற்றின் நிருவாகிகள், இமாம்கள், புதிய உலமாக்களின் உறவினர்கள் அடங்கலாக பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


 


இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.


இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் தெஹிவளையில் உள்ள கிராண்ட் மசூதி கல்லறையில் நடைபெறும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உடல் தெஹிவளை ஹில் ஸ்ட்ரீட், சிறிவர்தன சாலை, எண் 11 C/1 இல் காலை 9.00 மணி முதல் வைக்கப்படும்.

பல தசாப்தங்களாக நீடித்த பத்திரிகைத் துறையில், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டதற்காக இக்பால் அத்தாஸ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டார்.

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். 


மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். 

 

இந்த விபத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 32, 34, 46 வயதானவர்களே உயிரிழந்தனர்.

மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 

 

கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது.


ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 420 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.


ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், வத்திக்கான் சிட்டியில் பாப்பரசர் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.


அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார்.


இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களும் ஈரான் சூழல் பற்றி வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

 


இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது. 


தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. 


இதனால் போட்டியின் நாணய சுழற்சிக்கும் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், போட்டி ஆரம்பமாவதிலும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

நாகை - காங்கேசன் துறை கப்பல் சேவை வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.


தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது. இந்நிலையில் உருவான டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் காங்கேசன் துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 


இதையடுத்து நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் வரும் 18ஆம் திகதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த முறை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாளிகைக்காடு செய்தியாளர்


அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் கல்வி, இணைச் செயற்பாடு மற்றும் ஒழுக்கத் துறைகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் “லீடர் கிளாஸ்டர் ஹீரோஸ் – இரண்டாம் சீசன்” நிகழ்வு சனிக்கிழமை (10) சிறப்பாக நடைபெற்றது.

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.நூருல் ஹுதா உமர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் சாதனை மாணவர்கள் மேடையில் அழைக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமல்லாது, சமூக பொறுப்புணர்வு, தலைமைத்துவ திறன் மற்றும் ஒழுக்க வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் ஆலோசனை, வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகவும் சிம்ஸ் கெம்பஸ் தவிசாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா, பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். றியாசா, என். வரணியா, எம்.எல்.எம். முதரிஸ், ஏ.பி.எப். நஸ்மியா, எஸ். சுரேஷ், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எம்.எம். அன்சார், எம்.எம்.எம். றபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், கல்வி அதிகாரிகள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

எதிர்காலத் தலைமுறையை திறமையான, ஒழுக்கமுள்ள சமூகத் தலைவர்களாக உருவாக்கும் நோக்குடன், இத்தகைய ஊக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

 


🛑#கந்தளாய் வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கர வண்டிகள் சேதம்!


இன்று 11 காலை இடம்பெற்றுள்ளது.


திருகோணமலை கந்தளாய் தள வைத்தியசாலைக்கு முன்பாக நின்றிருந்த ஒரு பாரிய மரம் திடீரென முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.


வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் நோக்கில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளே இவ்வாறு மரத்தின் கீழ் சிக்கி நசுங்கியுள்ளன.


அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் பாரிய காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என

தகவல்கள் தெரிவிக்கின்றன


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் நடத்தி வருகின்றனர்

 


நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் பிரதேச சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மாகாண சபையால் அங்கீகரிக்கப்பட்ட  PSDG, CBG, AMP மற்றும் குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண  அபிவிருத்தி நிதி தொடர்பான நடைமுறைகளை கையாளுவதற்காக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையில் தவிசாளர்  முறையாக நியமிக்கப்படும் வரை அல்லது தொடர்புடைய எழுத்துப்பூர்வ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் நடைமுறை செயல்படுத்தப்படும் வரை, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு இதன் மூலம் அதிகாரம் அளிக்கிறேன்.

 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 171(b) மற்றும் 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (விளைவான ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 2 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 223 இன் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் டாக்டர். ஜயந்த லால் ரட்ணசேகர வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிந்தவூர் பிரதேச சபையின் நிதி நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் தொடர்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளை, அந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு அமுல்படுத்துவதற்கு இதன் மூலம் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் க்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் பதவி காலியாக உள்ளதால்; 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 66(G) இன் படி, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.
 
இருப்பினும், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில், தேவையான சபைக் கூட்ட கோரம் இல்லை, இதன் விளைவாக, மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் பிரிவு 66(d)(3) இன் படி, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்க முடியவில்லை.

இதற்கமைய, நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் பதவி தொடர்ந்து காலியாக இருந்ததால், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனது,  இதனால் நிந்தவூர் பிரதேச சபை 2026 ஆம் ஆண்டுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை


நியமிக்க வேண்டும்.

 
இருப்பினும், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில், தேவையான சபைக் கூட்ட கோரம் இல்லை, இதன் விளைவாக, மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் பிரிவு 66(d)(3) இன் படி, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்க முடியவில்லை.

இதற்கமைய, நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் பதவி தொடர்ந்து காலியாக இருந்ததால், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனது,  இதனால் நிந்தவூர் பிரதேச சபை 2026 ஆம் ஆண்டுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து நிந்தவூர் பிரதேச சபை சார்பாக, கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளை, நிந்தவூர் பிரதேச சபைக்கு தவிசாளர் முறையாக நியமிக்கப்படும் வரை அல்லது தொடர்புடைய எழுத்துப்பூர்வ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் நடைமுறை செயல்படுத்தப்படும் வரை, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு இதன் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர அறிவித்துள்ளார்.


கோரம் இல்லை, இதன் விளைவாக, மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் பிரிவு 66(d)(3) இன் படி, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்க முடியவில்லை.


இதற்கமைய, நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் பதவி தொடர்ந்து காலியாக இருந்ததால், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனது,  இதனால் நிந்தவூர் பிரதேச சபை 2026 ஆம் ஆண்டுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து நிந்தவூர் பிரதேச சபை சார்பாக, கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளை, நிந்தவூர் பிரதேச சபைக்கு தவிசாளர் முறையாக நியமிக்கப்படும் வரை அல்லது தொடர்புடைய எழுத்துப்பூர்வ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் நடைமுறை செயல்படுத்தப்படும் வரை, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு இதன் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர அறிவித்துள்ளார்.

 


( வீ.ரி.சகாதேவராஜா)


காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் "பீச் கிளீன் அப் கம்பெயின்" (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று  சுத்தப்படுத்தினார்கள் .


நடப்பு ஆண்டுக்குரிய கழகத்தலைவர் முன்னாள் தவிசாளர் வை .கோபிகாந்த் தலைமையில் இந்த சுத்தப்படுத்தும் சிரமதானம் சுயமாக முன்வந்த கழக வீரர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக கவனிப்பாரின்றி குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் குப்பைகளை இந்த இளைஞர்கள் அகற்றினார்கள்.


கிளின் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்  விளையாட்டு கழகத்தின் வருட ஆரம்ப செயற்பாடாகவும் இது இடம் பெற்றது என கழகச் செயலாளர் ரி.பிரகிலன்( ஆசிரியர் )தெரிவித்தார்.

(நூருல்  ஹுதா உமர்)


மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வும், முதலாம் கட்ட நேர்முகத் தேர்வும் சனிக்கிழமை (10) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மருதமுனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்களும், புதிய மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்வின் போது கல்லூரியின் கல்வி அணுகுமுறை, எதிர்கால கல்வி முன்னேற்றத் திட்டங்கள், நோக்கங்கள் மற்றும் ஒழுக்க அடிப்படையிலான கல்வி வழிமுறைகள் குறித்து கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்களும், உஸ்தாத்மார்களும் பெற்றோர்களுக்கு தெளிவாக விளக்கிக் கூறினர்.

மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட்டதோடு, அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி வழங்கும் ஹிப்ழ், ஷரீஆ உள்ளிட்ட கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல்களும் பகிரப்பட்டன.

இதனிடையே, புதிய மாணவர் அனுமதிக்கான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வும் விரைவில் நடைபெற உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு 075 524 7124 (அதிபர்), 077 335 5162 (உப அதிபர்) ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலதிசி கடுகதி ரயில் சேவை நேற்றிலிருந்து (09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வாரஇறுதியில் பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது நேற்று (09) நண்பகல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி சேவையை முன்னெடுத்திருந்தது.


மட்டக்களப்பில் இருந்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (11) நண்பகல் கொழும்புக்கான கடுகதி சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.


 கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


எதிர்காலத்தில் பொதுமக்கள், மாணவர்களின் நலன் கருதி இந்த சேவையானது மேலும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


(மட்டக்களப்பு செய்தியாளர்)


 



ஹட்டனில் சதொச கொள்கலன் ஊர்தி தாழிறக்கம்: வீதியை நோக்கி சாய்ந்து ஆபத்தான நிலையில்!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் மல்லியாப்பு சந்தியில் அமைந்துள்ள சதொச கிளைக்கு முன்னால், இன்று (10) காலை பொருட்கள் ஏற்றிய பாரிய கொள்கலன் (Container) ஊர்தியொன்று தாழிறங்கியதால் ஆபத்தான நிலையும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.


வீரவில பகுதியில் இருந்து பெருமளவிலான அரிசி மற்றும் வாசனைத் திரவியங்களை ஏற்றிக்கொண்டு ஹட்டன் சதொச கிளைக்கு வந்த இந்தக் கொள்கலன் ஊர்தி, இன்று காலை 9.00 மணியளவில் பொருட்களை இறக்குவதற்காக சதொச நிறுவனத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டது. இதன்போது, வீதியில் போடப்பட்டிருந்த கொன்கிரீட் தளம் ஊர்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் உடைந்ததில், அதன் சில்லொன்று நிலத்திற்குள் புதைந்து போயுள்ளது.


இந்தத் தாழிறக்கத்தினால் கொள்கலன் ஊர்தி பிரதான வீதியை நோக்கி சாய்ந்து காணப்படுவதுடன், அது வீதியில் கவிழ்ந்து விழக்கூடிய ஆபத்தான நிலை காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஊர்தியில் உள்ள அதிகப்படியான பாரம் காரணமாக, அதனை அந்த இடத்திலிருந்து அகற்றும் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், பிரதான வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டதால் ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


 தற்போது ஊர்தியிலுள்ள பொருட்களை வேறொரு வாகனத்திற்கு மாற்றி, கொள்கலன் ஊர்தியை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


( வி.ரி.சகாதேவராஜா)

பொத்துவிலை அடுத்துள்ள  கோமாரிப் பிரதேசத்தில் கடல்  சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்கள். குடிசைகள் கடலுக்குள் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இருந்த படகுகளை வீதி வரை இழுத்து பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள்.

இன்றும் கடலில் சீற்றமாக காணப்பட்டது. மீனவர்கள் கடற்றொழிலை இழந்து இருக்கிறார்கள் என பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பி.சுபோதரன் தெரிவித்தார்.


பசறையிலிருந்து மடுல்சீமை செல்கின்ற பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள  வீதி தாழிறக்கம் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறித்த இடத்தில் பேருந்துகள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

 

இரு பக்கங்களிலும் பயணிக்கின்ற பொது போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் நடை பயணமாக சென்று பேருந்துகளில் மாறி செல்லக்கூடிய நிலைமை காணப்படுகிறது. 


குறித்த வீதியில் மடுல்சீமை - பிட்டமாறுவ வீதியில் குருவிகல சந்திக்கு அருகில் மண்மேடு, கற்பாறைகள் சரிந்து விழும் அபாய நிலை காரணமாகவும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதிலே பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள வீதியை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 


#நிந்தவூர் #வைத்தியசாலை #ஆம்புலன்ஸ் #விபத்து 


மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பகுதியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது 


நிந்தவூரிலிருந்து மட்டக்களப்பு 

நோக்கிப் பயணித்த போது வீதியை விட்டு வாகனம் விலகி மின் கம்பத்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது  விபத்தின் போது ஆம்புலன்ஸ் வண்டி பலத்த சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் பயணித்த எவருக்கும் உயிர் ஆபத்துக்களோ அல்லது பாரிய காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.