Showing posts with label Knowledge. Show all posts

#EDUCATIONMINISTRY
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மானிட வள ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (31.08.2018) கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. 

நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதன்போது இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக 113 தேசிய பாடசாலைகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

மீதமாகவுள்ள 241 பாடசாலைகளுக்கும் குறித்த பாடசாலைகள் செயற்திட்ட அறிக்கையை பெற்றுக் கொடுத்தபின்பு அவற்றுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. 

399 மாணவர்களுக்கு குறைவான தொகையை கொண்ட பாடசாலைகளுக்கு 20,000.00 ரூபாவும், 400 முதல் 2999 மாணவர்களை கொண்ட பாடசாலைக்கு 300,000.00 ரூபாவும், 3000 மாணவர்களுக்கு அதிக தொகையை கொண்ட பாடசாலைகளுக்கு 500,000.00 ரூபாவும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்திற்காய் போராடி உயிர்நீத்த மருதமுனையைச் சேர்ந்த அனீஸ் லெப்பையின் வரலாறு அடங்கிய நூல் கடந்த சனிக்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் அல் – ஹாஜ் சாஹுல் ஹமீது ஷாஜஹான் ஜே.பி. எழுதிய மேற்படி ‘மருதமுனை மகன் அனீஸ் லெப்பையின் வரலாறு’ என்ற இந்த நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நூலாசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, முன்னாள் உயர் கல்வி பிரதியைமமைச்சர் அல் -ஹாஜ் மையோன் முஸ்தபா சிறப்பதிதியாக கலந்து கொhண்டார். மேலும், மன்னார் உயர் நீதிமன்ற நீதிபதி மனாப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்திற்காக பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக போராடிய கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் ஏழு பேர் உள்ளிட்ட 189 பேரை தேசத்துரோகிகளாக 1804ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு பிரகடனப்படுத்தியிருந்தது. இந்த வர்த்தமானி பிரகடனத்தை நீக்க இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த காலங்களில் முன்னெடுத்த நடவடிக்கைகளை மையமாக வைத்து மேற்படி ‘மருதமுனை மகன் அனீஸ் லெப்பையின் வரலாறு’ என்ற நூல் எழுதப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

வடமாகாண ஆசிரியர் சேவை
பரீட்சை முடிவுகள் வெளியாகின.

Results Released : Examination of Sri Lanka Teachers’ Service Class 3-1(A) Grade for the Recruitment of Graduates to fill the vacancies.
👇👇Click

http://www.np.gov.lk/result/limited%20MA-%20August%202018/P.M.A's%20Limited%20Exam%20Result%20-%202018.pdf

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இதுவரை எந்த விண்கலனும் செல்லமுடியாத சூரியனின் கொரோனா என்னும் பகுதிக்கு நாசா தனது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
'பார்க்கர் சோலார் ப்ரோப்' என்னும் அந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து வானத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது.
முன்னதாக, நேற்று (சனிக்கிழமை) விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த விண்கலம், கடைசி நேரத்தில் ஏற்பட்ட வானிலை மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
சூரியனை பற்றி இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலன் வழங்கும் என்று நாசா கூறியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் விண்கலனை விண்ணில் செலுத்தியது நாசாபடத்தின் காப்புரிமைS R HABBAL AND M DRUCKMÜLLER

இந்த விண்கலம் என்ன செய்யப்போகிறது?
இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் ஆறாண்டுகளில், அதாவது 2024ஆம் ஆண்டு சென்றடைந்து, பூமியை தாக்கும் சூரியப் புயல் (Solar Wind) எப்படி உருவாகிறது என்பதை கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியப் புயல்கள் பூமியை தாக்கும்போது ஏற்படும் வெப்பக்காற்று ரேடியோ அலைகள் மற்றும் செயற்கைக்கோள்கள் செயற்பாட்டை பாதிக்கக்கூடும்.
பூமியிலிருந்து சுமார் 91 மில்லியன் மைல்கள் தொலைவிலுள்ள சூரியனின் வளிமண்டல மேலடுக்கை இந்த விண்கலம் படிப்படிப்பாக நெருங்கி 2024 ஆண்டுக்குள் சென்றடையும்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் அப்லைட் பிசிக்ஸ் லபோர்டோரியை சேர்ந்த விஞ்ஞானியான நிக்கி பாக்ஸ் பேசுகையில், "சூரியனின் கொரோனா பகுதியை சென்றடைந்தவுடன் சுமார் ஏழு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றிவரவுள்ள இந்த விண்கலம்தான், மனிதன் படைத்த விண்கலங்களிலேயே மிகவும் வேகமானது" என்றும் கூறினார்.

அமெரிக்காவில் மெக்கானிக் ஒருவர், பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானத்தை திருடிச்சென்று, சாகசத்தில் ஈடுபட்டபோது விழுந்து நொறுங்கியது.

அமெரிக்காவின் சியாட்டில் டகோமா நகரில் ஹாரிசன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் #HorizonAir Q400 பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில், வேலை பார்த்து கொண்டிருந்த, 29 வயது மதிக்கத்தக்க மெக்கானிக் ஒருவர், விமானத்தை திருடி சென்றார்.

இதனையறிந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ராணுவ விமானங்களும், திருடப்பட்ட விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால், புக்கெட் பகுதியில் உள்ள சிறிய தீவு ஒன்றில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. 

இதில், மெக்கானிக் உயிரிழந்தார். விமானத்தை இயக்க தெரியாத மெக்கானிக் சாகசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதே விமான விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமான கடத்தல் சம்பவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு எந்த தொடர்புமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நொபெல் பரிசு வென்ற பிரபல நாவலாசிரியர் வி.எஸ். நைபோல் (V.S. Naipaul)
 தனது 85 ஆவது வயதில் இயற்கை எய்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1932ஆம் ஆண்டு ரினிடாட் (Trinidad) தீவகத்தில் பிறந்த நைபோல், 30க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவரின் தந்தை இந்தியாவை சேர்ந்தவராவார். இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபோல் லண்டனில் இறக்கும் போது,  அவருக்கு வயது 85.  இவரின் தந்தை இந்தியாவை சேர்ந்தவராவார்.


20 ஆம் நூற்றாண்டின் அரைப்பகுதியில் மிகவும் பிரபலமான நாவலாசிரியராக திகழ்ந்த நைபோல், 2001 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான
நோபல் பரிசை வென்றமை குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஐ.நா. பொதுச் சபை வெள்ளிக்கிழமை கூடிய போது இந்த நியமனம் அங்கீகரக்கப்பட்டுள்ளது. 

அவரது நியமனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக இருக்கும் செய்யித் ராத் அல் ஹுஸைன் தனது இந்த மாத இறுதியில் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அர்ஜென்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை, கருவுற்ற 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதாவை நிராகரித்துள்ளது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தொடர்ச்சியாக நடத்த விவாதத்துக்கு பிறகு நடந்த வாக்கெடுப்பில் 38 செனட் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். 31 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தத் தோல்வியால், அந்நாட்டுச் சட்டங்களின்படி இந்த மசோதாவை இன்னும் ஓராண்டுக்கு நாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது.
தற்போது பாலியல் வல்லுறவால் உண்டான கரு மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து ஆகிய இரு சூழல்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அர்ஜென்டினாவில் அனுமதிக்கப்படுகிறது.
வாக்கெடுப்பு நடந்தபோது இருதரப்புக்கும் ஆதரவானவர்கள், நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
abortionபடத்தின் காப்புரிமைAFP
Image captionமசோதா தோல்வி அடைந்ததால் நாடாளுமன்றத்திற்கு வெளியே பதற்றம் நிலவியது.
கருக்கலைப்புக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கள் ஆதரவைத் தெரிவிக்க பச்சை நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்த கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் மசோதா நிராகரிக்கப்பட்டதால் கண்ணீர் சிந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி தங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டனர்.
கருக்கலைப்பு மசோதாவின் பின்னணி என்ன?
ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்ஜென்டினாவில், கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் இந்தச் சட்ட மசோதா நிறைவேற வேண்டும் என பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
Argentina abortionபடத்தின் காப்புரிமைAFP
Image captionகருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
கருக்கலைப்பை எதிர்க்கும் அதிபர் மௌரீசியோ மாக்ரி நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததும் இந்த விவகாரம் சூடு பிடித்தது. நாடாளுமன்றத்தின் கீழவையான காங்கிரசில் இந்த மசோதா மிகச் சில வாக்குகள் வித்தியாசத்தில் சமீபத்தில் வெற்றி பெற்றது.
கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் இதை ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கிறார்கள். சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துகொண்ட 43 பெண்கள் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர்.
"இது சட்டப்பூர்வமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வார்கள்," என்று கருக்கலைப்பை ஆதரித்து பிரசாரம் செய்யும் வழக்கறிஞர் சாப்ரினா கிரோபா கூறுகிறார்.
Argentina abortionபடத்தின் காப்புரிமைREUTERS
Image captionகருக்கலைப்பை எதிர்ப்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், கருக்கலைப்பை எதிர்க்கும் கேமிலா டூரா என்பவர் கருக்கலைப்பை சட்டவிரோதமாக்குவதன் மூலம் அத்தகைய மரணங்களைத் தடுக்க முடியும் என்கிறார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருகுவே மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகள் மட்டுமே கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியுள்ளன.

1945 ஆகஸ்ட் இதே நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு.


ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

குண்டு வீசப்பட்ட தகவலை, அட்லாண்டிக் கடலில் இருந்த அமெரிக்க போர்க்கப்பலான அகஸ்டாவிலிருந்து அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் அறிவித்தார். இதற்கு முன்பாக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய குண்டைவிட, 2,000 மடங்கு பெரிய குண்டு இதுவென ட்ரூமன் கூறினார்.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைLIBRARY OF CONGRESS

ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டுக்கு "லிட்டில் பாய்" எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. முந்தைய அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறிக்கும்வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியை அந்த அணுகுண்டு கொண்டிருந்தது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை அந்த அணுகுண்டு நாசம் செய்தது.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைPA

உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B - 29 விமானத்திலிருந்து இந்த குண்டு வீசப்பட்டது.


Presentational grey line

குண்டு விழுந்த இடத்திலிருந்து ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் உடனடியாக ஆவியானார்கள்.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைUNIVERSAL HISTORY ARCHIVE/UIG?GETTY IMAGES

மாபெரும் புகை எழுந்ததையும் மிகப் பெரிய தீ சுவாலைகள் பரவியதையும் பார்த்ததாக விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டடங்கள் அழிந்துபோயின.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைALINARI VIA GETTY IMAGES

இந்த குண்டு வீச்சில் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைAFP

ஆனால், ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என பிந்தைய மதிப்பீடுகள் தெரிவித்தன. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்

இந்த நபர் குண்டுவீச்சின் போது அணிந்திருந்த கிமோனோ ஆடையில் அழுத்தமான வண்ணங்கள் என்ன பாணியில் இருந்ததோ, அதே பாணியில் தீக்காயம் ஏற்பட்டது.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்

ஜெர்மனியும் அணுகுண்டைத் தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த குண்டின் மூலம் அமெரிக்கா அந்தப் பந்தையத்தில் முந்தியதாகக் கருதப்பட்டது.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்

இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.


Presentational grey line
ஹிரோஷிமா: 13 புகைப்படமும், தகவல்களும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த அணுகுண்டு வீச்சின் காரணமாக, ஆசியாவில் உலகப் போர் சட்டென முடிவுக்கு வந்தது. ஆனால், குண்டை வீசுவதற்கு முன்பாகவே ஜப்பான் சரணடையும் நிலையில் இருந்தது என்கிறார்கள் விமர்சகர்கள். இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டதும், 1945 ஆக்ஸட் 8ஆம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பானுக்கு வேறு வழியில்லாமல் போனது. அதே மாதம் 14ஆம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்தது ஜப்பான்

இலங்கையில் இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவின் பிரதானி விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார். 

இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்காக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.