ஐந்து இலட்சம் ஆப்கானியர்களை வெளியேற்றிய ஈரான்
கடந்த 9ம் திகதிவரை, 508,426 ஆப்கானியர்கள் அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்தது. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மக்களின் கட்டாய வெளியேற்றங்களில் இதுவே மிகப் பெரியது என ஐ.நா., குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்த ஆப்கானியர்கள், ஈரானின் முக்கிய நகரங்களான தெஹ்ரான், இஸ்பஹான் ஆகிய இடங்களில் கூலி வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர்கள். அதில் சிலர் இஸ்ரேலிடம் பணம் பெற்று, உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.
இதனால், புலம்பெயர்ந்த ஆப்கானியர்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி அவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர். இதனால், குடும்பத்துடன் ஈரானில் வசித்த பெண்கள், குழந்தைகள் தற்போது வீடுகளை இழந்து, ஆப்கானிஸ்தானின் இஸ்லாம் காலா நகர முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.