தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான இன்று( 08) 'வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து தடுப்பு தினம்' கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஜே.சிவசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டு தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு 'வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை இனங்காண்போம் அவற்றை தடுப்போம்' எனும் கருப்பொருளின் கீழ் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,அலுவலக உத்தியோகத்தர்கள் இனணந்து நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர் .
இதன்போது அங்கு விபத்துக்கள் இடம்பெற சாத்தியமுள்ள காரணிகளை இனங்கண்டு அதனை விபத்துக்கள் இடம்பெறா வண்ணம் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது பற்றிய அறிவுரையும் வழங்கப்பட்டது
உம்பான் புயலால் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் குறைந்தது 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இந்த புயல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உம்பான் புயலால் கடற்கரை பகுதியில் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மற்றும் அது தற்போது வலுவிழந்து பூட்டான் நோக்கி சென்றது.
கொல்கத்தாவில் பலத்த காற்று வீசியதில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சரிந்தன மேலும் மின் கம்ப இணைப்புகள் மற்றும் டெலிஃபோன் தொடர்புகளும் அறுந்து விழுந்தன. வீட்டின் கூரைகளும் அடித்துச் சென்றன.
கொல்கத்தாவின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. 14 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொல்கத்தாவில் மின்சாரம் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான வலுவான புயலாக இது உள்ளது.
படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போடப்பட்ட தடைகளால் அவசரகால பணிகளும், மீட்புப் பணிகளும் தடைப்பட்டுள்ளன. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்களை கும்பலாக அப்புறப்படுத்துவதும், முகாம்களில் கூட்டமாக தங்க வைப்பதும் கடினமாக உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகள், ஒடிஷா, வங்கதேசத்தின் தென் மேற்கு பகுதியில் மணிக்கு 185 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
வங்கதேசத்தில் 12 பேரும், மேற்கு வங்கத்தில் 72 பேரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேற்க வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கோவிட் 19 -ஐ காட்டிலும் இந்த புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
படத்தின் காப்புரிமைSHAKEEL ABDIN
"பல பகுதிகள் மோசமடைந்துள்ளன," என பிடிஐ செய்தி முகமையிடன் மம்தா தெரிவித்துள்ளார்.
மேலும்,"இன்று போர் போன்றதொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிபிசி பெங்காலி சேவையின் அமிதாபா பட்டாசலி, "கொல்கத்தா மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லை. புயல் மோசமாக தாக்கிய பகுதிகளில் அலைப்பேசி நெட்வொர்க்குகளும் செயல்படவில்லை," என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் மின்கம்பங்கள் வெடிப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்கு கம்பிகள் அடியோடு சரிந்து விழுவது போன்ற வீடியோக்கள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. மேலும் மரங்களுக்கு அடியில் பல வாகனங்கள் நொறுங்கியுள்ளன.
"மரங்கள் சரிந்தன, மின்சாரம் நின்றுவிட்டது, மின் கம்பங்கள் சரிந்தன, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, இணையதள சேவை நின்றுவிட்டது. குழந்தைகள் அலறினர்," என ஷமிக் பாக் என்பவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"எனது வீட்டின் அனைத்து கதவு மற்றும் ஜன்னல்கள் மூடியிருந்தாலும், காற்றின் வேகத்தால் ஜன்னல் கதவுகள் வீரல்விட்டன. 45 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது," என்கிறார் அவர்.
இந்த புயல் தாக்கியபோது பலர் தங்களின் வீடுகளில் இருந்தனர். மேலும் கொல்கத்தா உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
2007ஆம் ஆண்டு 3500 பேரை பலிகொண்ட மிக சக்திவாந்த புயலுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த புயல் இதுவாக இருக்கலாம் என வங்கதேச அதிகாரிகள் நம்புகின்றனர்.
அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை 3ம் பிரிவு தோட்டத்தில் 20வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் 09.05.2020 அன்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்டதீவிபத்தில் 7 வீடுகள் முற்றாக எரிந்துதீக்கிரையாகின.
இதனால் 89 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர்தீபரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்தனர்.
இதனையடுத்து பிரதேச மக்கள் இணைந்துதீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.
இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.
இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள்தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.
நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.
தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபபடவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
காலி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவிவருவதுடன், இதனால் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த, 12,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காலி மாவட்டத்தில், இம்முறை இருவர் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் வௌ்ளம் காரணமாக, 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, 773 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளதுடன், 172 வர்த்தக நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்தோனீஷியாவில் 1400க்கு மேலானோரை பலிவாங்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு, சென்றடைய முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ள சுலவேசியின் தொலைதூர பகுதிகளை சென்றடைய மீட்புதவி பணியாளர்கள் முயன்று வருகின்றனர்.
பெரும்பாலானோர் இறந்துள்ளதை உறுதி செய்துள்ள பாலு நகரை மையமாக கொண்டு மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன. இதனால், பிற இடங்களில் உதவிகள் கிடைக்கவில்லை என்று மக்கள் கோபம் கொண்டுள்ளனர்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு இதுவரை மீட்புதவிகள் சென்றடையாமல் உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.
நிலச்சரிவுகள், தகவல் தொடர்பு துண்டிப்பு, இடிந்த பாலங்கள் போன்ற சிக்கல்கள் மீட்புப் பணிகள் தொலைதூர இடங்களை சென்றடைவதை கடினமாக்கியுள்ளன.
புதிய பகுதிகளை மீட்புதவியாளர்கள் சென்றடையும்போது, இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
படத்தின் காப்புரிமைAFP
பேரழிவு ஏற்பட்டுள்ள பகுதியில் 14 லட்சம் பேர் வாழுகின்றனர். குறைந்தது 70 ஆயிரம் பேர் இந்த தீவிலுள்ள தளங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது. முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது.
முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளோடு தேடி வருகின்றனர்.
மக்களின் நிலை
சுனாமி காரணமாக மக்கள் உணவு, தண்ணீர், எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தேவாலய இடிபாடுகளிலிருந்து 34 இந்தோனீசிய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய இந்தோனீசிய செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.
இத்தனை பலிகள் ஏன்?
இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் மாலை 6.03க்கு 7.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் சுனாமியும் ஏற்பட்டது என அமெரிக்க கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுனாமிக்கு பின் இந்தோனீசியா - ஓர் கழுகு பார்வை
பாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயார் செய்து கொண்டிருந்த மக்கள் 3 மீட்டர் உயரத்துக்கு வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மக்கள் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.
படத்தின் காப்புரிமைAFP
உயிர்பிழைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
"நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம் இங்குள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.
உணவு, குடிநீர் மற்றும் சுத்தமான நீர் தேவைப்படுகிறது; அடுத்த வேளை சாப்பிடுவதற்கும் எங்களுக்கு உணவில்லை" என நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 39 வயது அன்சர் பாச்மிட் தெரிவித்தார்.
"எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு போதிய நேரம் இல்லை நான் சுவர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டேன்.. எனது மனைவியும், குழந்தையும் உதவிகேட்டு அழுது கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு என்வாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என நிலநடுக்கத்தில் சிக்கிய நபர் ஒருவர் செய்தி முகமை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
#Indonesiaquaketsunami #deathtoll1234
இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்துள்ளது.
முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது.
முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளோடு தேடி வருகின்றனர்.
மக்களின் நிலை
சுனாமி காரணமாக மக்கள் உணவு, தண்ணீர், எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தேவாலய இடிபாடுகளிலிருந்து 34 இந்தோனீசிய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய இந்தோனீசிய செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.
இத்தனை பலிகள் ஏன்?
இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் மாலை 6.03க்கு 7.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் சுனாமியும் ஏற்பட்டது என அமெரிக்க கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயார் செய்து கொண்டிருந்த மக்கள் 3 மீட்டர் உயரத்துக்கு வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மக்கள் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.
உயிர்பிழைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
"நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம் இங்குள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. உணவு, குடிநீர் மற்றும் சுத்தமான நீர் தேவைப்படுகிறது; அடுத்த வேளை சாப்பிடுவதற்கும் எங்களுக்கு உணவில்லை" என நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 39 வயது அன்சர் பாச்மிட் தெரிவித்தார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு போதிய நேரம் இல்லை நான் சுவர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டேன்..எனது மனைவியும், குழந்தையும் உதவிகேட்டு அழுது கொண்டிருந்தனர் அவர்களுக்கு என்வாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என நிலநடுக்கத்தில் சிக்கிய நபர் ஒருவர் செய்தி முகமை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் நேற்றைய தினம்,நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கியது.
இந்தோனீசிய நாட்டின் சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானது. ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோ ஒன்றில் சுனாமி அலைகளைப் பார்த்து மக்கள் கத்திக்கொண்டும், அச்சத்திலும் ஓடுவதும், சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் மசூதி ஒன்று இடிந்துவிழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தோனேசியாவை இன்று தாக்கிய சுனாமியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்ததும், அதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் சுமார் 9 ஆயிரம் பேர் பலியானதும் நினைவிருக்கலாம். #Indonesiaarthquake #TsunamiAttack
அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி இந்த சூறாவளி இப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
#ஃபுளோரன்ஸ் சூறாவளி அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வியாழன் இரவு முதல், வீடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தற்போது ஒரு லட்சத்துக்கும் மேலான வீடுகளில் மின் இணைப்பு சேதமடைந்து, துண்டாகியுள்ளது. நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை கூறியுள்ளது.
படத்தின் காப்புரிமைREUTERSImage captionஅட்லாண்டிக் கடலின் மேலே உருவாகியுள்ள ஃபுளோரன்ஸ் சூறாவளி
இந்நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினா மாகாணத்தில் ஏற்கனவே பலத்த காற்று மற்றும் மழையினால் அங்கு வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளது. கடலோரம் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகளில் கடல்நீர் புகுந்துள்ளது.
மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த இந்த சூறாவளி, உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை எட்டு மணிக்கு, தெற்கு கரோலினாவின் மைர்ட்டில் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமைAFP
ஆனால், இதன் வேகம் மணிக்கு 165 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளதால், இது இரண்டாம் வகைப் புயலாக வகைப்படுத்தப்பட்டது.
வேகம் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை
ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால் இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை என்று ப்ரோக் லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆறுகளின் வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், வெள்ளம் 13 அடி ஆழம் வரை உண்டாகலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
"வெள்ளம் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம். இது மிகவும் ஆபத்தான சூறாவளி, " என்று கூறியுள்ள லாங், "உங்களுக்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் வெளியேற மறுக்கிறீர்கள். கடல்மட்டம் அதிகரிக்கப்போகிறது," என்று வெளியேற மறுக்கும் மக்களைக் குறிப்பிட்டு அவர் தெரிவித்துள்ளார்.
கள நிலவரம் என்ன?
இந்த சூறாவளி வியாழன் இரவு முதல் சனிக்கிழமை வரை பெருமழையை உண்டாக்கி கிழக்குக் கடலோரப் பகுதிகளை வெள்ளத்தால் ஆக்கிரமிக்கும் என்று சமீபத்திய வானிலை ஆய்வுகள் கூறுகின்றன.
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil
கரோலினாவின் சில பகுதிகளில் 20 - 30 அங்குலம் அளவுக்கு மழை பொழியும் என்றும், தனித்து உள்ள பகுதிகளில் அது 40 அங்குலமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் முதல் 30 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார நிறுவனங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசலுக்கு அங்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.
உலக வெப்பமயமாதல் காரணமா?
பருவநிலை மாற்றம் மற்றும் சூறாவளி ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு மிகவும் சிக்கலானது.
கடலில் வெப்பம் அதிகமானால் அது சூறாவளிகளின் பலத்தை அதிகரிக்கும். ஆகவே, வரும் காலங்களில் கடல்நீரின் வெப்பம் அதிகரித்தால் சூறாவளிகளின் வீரியமும் அதிகரிக்கலாம்.
வளி மண்டலத்தின் வெப்பம் அதிகமாக இருக்கும்போது, சூறாவளியால் அதிக மழைப் பொழிவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
சூறாவளி ஏற்படுவது அரிதான நிகழ்வு என்பதால், இவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு பருவநிலை மாற்றதுக்கு உள்ள தொடர்புகளை அறிவது கடினமானது.