Showing posts with label youtube. Show all posts

 


ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கூறியது என்ன?

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை அவரது அவாமி லீக் கட்சி விமர்சித்துள்ளது. நீதிமன்றத்தின் முடிவு "தீங்கிழைக்கும் மற்றும் பழிவாங்கும் நோக்கில் வந்தது" என்று அக்கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.


"வங்கதேச மக்கள், அவாமி லீக் மற்றும் அனைத்து விடுதலை ஆதரவு சக்திகளும் இந்த முடிவுக்கு எதிராக ஓர் இயக்கத்தைத் தொடங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவாமி லீக் கூறியுள்ளது.


இன்று (நவம்பர் 18) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை அவாமி லீக் அறிவித்துள்ளது. நவம்பர் 19 முதல் 21 வரை நாடு தழுவிய பல்வேறு போராட்டங்களுக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.


வங்தேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் தண்டனையை அறிவித்த தீர்ப்பாயம் குறித்தும் அவாமி லீக் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


"தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குப் பதிலாக, சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு விரோதமான, தேர்ந்தெடுக்கப்படாத பாசிச யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் நாட்டில் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அவர்கள் சர்வதேச கொள்கைகளை மீறி ஒரு சட்டவிரோத தீர்ப்பாயத்தை நிறுவியுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


"இந்த தீர்ப்பாயம் முற்றிலும் சட்டவிரோதமானது, தீங்கிழைக்கக் கூடியது, பழிவாங்கல் மற்றும் மோசமான எண்ணங்களால் தூண்டப்பட்டது, யூனுஸ் சட்டவிரோதமாக கைப்பற்றிய அதிகாரத்தைக் காப்பாற்ற ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்" என்று அவாமி லீக் விமர்சித்துள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா 

'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'- ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை

இந்தியா - பாகிஸ்தான், எல்லை தாண்டிய காதல், சரப்ஜித் கவுர் 

பாகிஸ்தான் சென்று மதம் மாறி காதலரை கரம் பிடித்த இந்திய பெண்ணை அந்நாட்டு காவல்துறை தேடுவது ஏன்?

ஏஐ, கூகுள், சுந்தர் பிச்சை

'செயற்கை நுண்ணறிவு குமிழி வெடித்தால் ஒரு நிறுவனம் கூட தப்பாது' - சுந்தர் பிச்சை கூறியது என்ன?

தமிழ்நாடு, வானிலை, கனமழை எச்சரிக்கை, காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு பருவமழை, வங்கக்கடல்

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

End of அதிகம் படிக்கப்பட்டது

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான விசாரணை 'ஒரு நாடகத்தைத் தவிர வேறில்லை' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியாபட மூலாதாரம்,Getty Images

முகமது யூனுஸ் என்ன சொன்னார்?

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேற்று (நவ.17) தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.


"வங்கதேச நீதிமன்றம் இன்று(நவ.17) வழங்கியுள்ள தெளிவான தீர்ப்பு நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் எதிரொலிக்கிறது" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


"குற்றச்சாட்டு மற்றும் தண்டனை ஒரு அடிப்படைக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது: யாரும், எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த முடிவு ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 எழுச்சியின் போது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கும், தங்கள் இழப்புகளால் இன்னும் போராடி வரும் குடும்பங்களுக்கும் நீதியை வழங்குகிறது." என்று அவர் கூறியுள்ளார்.


"பல ஆண்டுகளாக ஒடுக்குமுறையால் அழிக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 1400 பேர் உயிரிழந்தனர் என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற குடிமக்கள். நிராயுதபாணியான போராட்டக்காரர்களுக்கு எதிராக ஹெலிகாப்டர் உள்பட எவ்வளவு அதிக பலம் பயன்படுத்தப்பட்டது என்பதை பல மாத சாட்சியங்கள் விவரித்தன. நமது நீதி அமைப்பு குற்றவாளிகளை பொறுப்பேற்க வைக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது." என்று முகமது யூனுஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியாபட மூலாதாரம்,Getty Images

ஷேக் ஹசீனா கூறியது என்ன?

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


"அவாமி லீக்கை ஓர் அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, இந்த வழக்கு ஓர் 'கேலிக்கூத்து' என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.


மேலும், "சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார்.


ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்

கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் ​​தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், "கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்" என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.


ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


"ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, ​​கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை 'ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்' என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.


வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது.


ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியா


பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2014-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா அரசு அகற்றப்பட காரணமான போராட்டத்தின் ஒரு காட்சி

இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், "குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்." என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது.


ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 


டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 3000 கிலோகிராம் வெடிப்பொருளின் ஒரு தொகுதி பொலிஸ் நிலையத்துக்குள் வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இவ் வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் குறித்த வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த வேளை திடீரென அவை வெடித்ததால் தடயவியல் குழு, பொலிஸார் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 


இதில் காயமடைந்த 27 பேரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 




காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்கள் கிடைத்து வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் இறந்துகொண்டேயுள்ளனர்.

 

இன்று மட்டும் இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் உணவு மையங்களை நோக்கிச் சென்றவர்கள். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உணவின்றி இறந்துள்ளனர்.

 

இதேவேளை காஸாவுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க 20.1 மில்லியன் டொலர் வழங்குவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

 

மேலும் பல்வேறு நாடுகள் காஸாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


 தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், '2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக, மற்றொன்று திமுக.' என்றார்


'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது.


சுமார் 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றினர். அதற்கு முன்பு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில், விஜய் நடந்து சென்றபோது, தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் பலரும் அந்த பாதையிலேயே ஏறிவிட்டனர்.


மேடையில் அமந்திருந்த தனது தந்தை எஸ்.வி சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரை விஜய் கட்டியணைத்தார். தன்னை பார்த்தவுடன் எழுந்து நின்ற இருவரையும் அமரும்படி விஜய் வற்புறுத்தினார். பின்னர் தவெகவினர் உறுதிமொழி ஏற்றனர்.


விளம்பரம்


'234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்'பட மூலாதாரம்,TVK

'எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை'

தொடர்ந்து மாநாட்டில் பேசிய விஜய், ''ஒரு சிங்கம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது, சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டருக்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் உயிருடன் உள்ள, பெரிய விலங்குகளையே தாக்கும், ஜெயிக்கும். உயிருள்ளாததை, கெட்டுப் போனதை தொடாது. அப்படிப்பட்ட சிங்கம் எதையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கம் காட்டின் எல்லையை தானே வகுக்கும். கூட்டத்துடனும் இருக்கும், அஞ்சாமல் தனியே வரும். தனியாக இருந்தாலும் அது காட்டின் அரசாக இருக்கும். '' என்றார்


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

திருவண்ணாமலை, அருணாசலம்

தெலுங்கு மக்கள் திருவண்ணாமலைக்கு வருவது ஏன்? ஆன்மிக நாட்டம் எப்போது தொடங்கியது?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

தொண்டையில் மாத்திரை சிக்கியதால் உயிரிழந்த 4 வயது சிறுவன் - கவனமாக இருப்பது எப்படி?

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

சிறுநீரில் நுரை வருகிறதா? ஆபத்தை உணர்த்தும் 5 அறிகுறிகள்

இந்தியாவில் தெரு நாய்களே இல்லையென்றால் நகரங்கள் என்னவாகும்?

தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றினால் நகரங்கள் என்ன ஆகும்?

End of அதிகம் படிக்கப்பட்டது

''எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எம்ஜிஆரை மாதிரியே குணம் கொண்ட விஜயகாந்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரும் மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியாது.


1967, 1977ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று 2026ல் அப்படியொரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்வதற்கான மாநாடு இது.'' என்றார் விஜய்.


தவெக மாநாட்டில் விஜய் உரைபட மூலாதாரம்,TVK

'2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி'

உரையை தொடர்ந்த விஜய், ''ஷூட்டிங்கில் இருந்து வந்துவிட்டு எப்படி ஆட்சியைப் பிடிப்பார் என தற்போது கேட்கின்றனர். இந்த விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தில் மட்டும் இருக்கிறார் என நினைக்காதீர்கள். இது வெறும் ஓட்டாக அல்ல, மக்கள் விரோத ஆட்சிக்கு 'வேட்டாக' இருக்கும். என்னுடைய பிணைப்பு மக்களுடன் மட்டும்தான்.''


''எங்களின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை. ஒரே கொள்கை எதிரி பாஜக தான், அரசியல் எதிரி திமுக தான்.


ஒட்டுமொத்த மக்களின் சக்தி எங்களுடன் இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் உறவுகள் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜகவுடன் ஏன் மறைமுக கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்? நாங்கள் என்ன மகா ஊழல் கட்சியா?


2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று டிவிகே, மற்றொன்று திமுக.'' என்றார்


ஷார்ட் வீடியோ

Play video, "காணொளி: மாநாட்டு மேடையில் பெற்றோரை ஆரத்தழுவிய விஜய்", கால அளவு 0,24

00:24


காணொளிக் குறிப்பு,காணொளி: மாநாட்டு மேடையில் பெற்றோரை ஆரத்தழுவிய விஜய்

பாடல் பாடிய விஜய்

'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என்ற பாடலை பாடிய விஜய், "மக்கள் அரசியல்' எனும் சவுக்கை கையில் எடுக்கலாமா? பாசிச பாஜக, 'பாய்சன்' திமுகவுக்கு எதிராக கையில் எடுக்கலாமா?'' என்றார்.


''மோதி மூன்றாவது முறையாக ஆட்சியை கையில் வைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக நல்லது செய்ய வந்தீர்களா? அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா?


மக்களின் பிரதிநிதியாக உங்களிடம் (மோதி) சில கேள்விகள் கேட்க வேண்டும். தமிழக மீனவர்கள் 800 பேருக்கு மேல் தாக்கப்பட்டிருக்கின்றனர். இனியாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நடத்தப்படும் நீட் தேர்வால், பல அநியாயங்கள் நடக்கின்றன. அதை சொல்வதற்கே மனம் வலிக்கிறது. நீட் தேவையில்லை, என அறிவியுங்கள் போதும். இதைச் செய்வீர்களா?'' என்றார்


'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என்ற பாடலை  விஜய் பாடினர் பட மூலாதாரம்,TVK

படக்குறிப்பு,'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என்ற பாடலை விஜய் பாடினர்

''நேரடி பாசிச பாஜக அடிமை கூட்டணி ஒருபக்கம், மறுபுறம் மறைமுக பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணி. மக்கள் சக்தி இல்லாத ஊழல் கட்சிகளை அடிபணிய வைத்து 2029 வரைக்கும் சொகுசுப் பயணம் செல்லலாம் என திட்டம் வைத்துள்ளீர்களா?'' என சாடினார் விஜய்.


''நேரடி - மறைமுக கூட்டணி வைத்தாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? ஒரு எம்.பி. சீட் கூட தரவில்லையென்பதால் பாஜக ஓரவஞ்சனை செய்கிறது. கீழடி நாகரிகத்தை மறைத்து பாஜக 'உள்ளடி' வேலை செய்கிறது.'' என்றார்


ஷார்ட் வீடியோ

Play video, "தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர்", கால அளவு 2,05

02:05


காணொளிக் குறிப்பு,தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர் - மாநாடு பற்றி தவெக தொண்டர்கள் கூறுவது என்ன?

'டெல்லி சென்று ரகசிய கூட்டம்'

''எம்ஜிஆரின் மாஸ் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அவர் உயிருடன் இருக்கும்வரை ஒருவராலும் முதலமைச்சர் சீட் பற்றி கனவு கூட காணமுடியவில்லை. 'எப்படியாவது சி.எம். சீட்டை எனக்கு தாருங்கள், என் நண்பர் வந்தவுடன் திரும்பித் தருகிறேன்," என தன் எதிரியைக் கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர்.


ஆனால், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யார்? அப்பாவி தொண்டர்களே அதை சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர். அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு 2026ல் யாருக்கு ஓட்டு செலுத்த வேண்டும் என நன்றாகவே தெரியும். அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி.


திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது. ஒரு ரெய்டு நடந்தால், டெல்லி சென்று ரகசிய கூட்டம் நடத்துகின்றனர் திமுகவினர். அந்த சந்திப்புக்குப் பிறகு அந்த பிரச்னை அப்படியே காணாமல் போயிருக்கும்.'' என்றார் விஜய்


''இந்த ஆட்சியை பார்த்து நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? நீங்கள் (ஸ்டாலின்) நடத்தும் ஆட்சியில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா? தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து 'வாயே இல்லாத வயிறு கூட சிரிக்கிறது'. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? வெளியே செல்லும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என பெண்கள் கதறுகின்றனர். அந்த கதறல் உங்களுக்குக் கேட்கிறதா? ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.'' என்றார்


விஜய்

'234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்'

''தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர். உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர்தான் வேட்பாளராக நிற்பார்கள். அந்த வேட்பாளரும் நானும் வேறு வேறு இல்லை. நீங்கள் அவருக்கு வாக்கு செலுத்தினால், எனக்கு வாக்கு செலுத்தியது போன்று.


என்னையும் மக்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சினிமாவில் 'மார்க்கெட்' போனவுடன் நான் அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.'' என்றார் விஜய்


தவெக மாநாட்டில் விஜய் உரைபட மூலாதாரம்,TVK

'எல்லா சினிமாக்காரர்களும் கெட்டவர்கள் கிடையாது'

''என்னையும் மக்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சினிமாவில் 'மார்க்கெட்' போனவுடன் நான் அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன்'' என்றார் விஜய்


''எல்லாவற்றுக்கும் தயாராகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மக்கள் செலுத்திய அன்புக்காக ஆதரவுக்காக வந்திருக்கிறேன். எல்லா அரசியல்வாதியும் நல்லவர் கிடையாது, எல்லா சினிமாக்காரர்களும் கெட்டவர்கள் கிடையாது'' என்று கூறினார்


மயக்கமடைந்த தொண்டர்கள்

மாநாடு பகுதியில் வெயில் அதிகமாக இருந்ததால் தரைவிரிப்புகளை தொண்டர்கள் பந்தலாக மாற்றி பயன்படுத்தினர். வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள சிலர் வேப்பிலையையும் எடுத்து வந்ததை காண முடிந்தது.


வெயில் காரணமாக, சிலர் மயக்கம் அடைந்ததையும் காணொளிகள் வாயிலாக அறிய முடிந்தது. மேலும், குழந்தைகளை அழைத்து வந்த தொண்டர்கள் சிலரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்ததாக காணொளிகள் வெளியாகின.

 


சமீபத்திய மாதங்களில் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என்று கூறப்படும் 20 பேரை ஈரான் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றொரு அணு விஞ்ஞானி பற்றிய தகவல்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டதனடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கிரி கூறுகையில்,


கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களில் சிலருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


“சியோனிச ஆட்சியின் உளவாளிகள் மற்றும் முகவர்கள் மீது நீதித்துறை எந்த கருணையும் காட்டாது, மேலும் உறுதியான தீர்ப்புகளுடன், அவர்கள் அனைவரையும் ஒரு முன்மாதிரியாக மாற்றும்” என்று ஜஹாங்கிரி தெரிவித்துள்ளார்.


இதேவேளை விசாரணைகள் முடிந்ததும் முழு விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

 


திமுக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வான மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் உறுப்பினராக தமிழில் இன்று(ஜூலை 25) உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

 



கடந்த 9ம் திகதிவரை, 508,426 ஆப்கானியர்கள் அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்தது. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மக்களின் கட்டாய வெளியேற்றங்களில் இதுவே மிகப் பெரியது என ஐ.நா., குறிப்பிட்டுள்ளது.

 



புலம்பெயர்ந்த ஆப்கானியர்கள், ஈரானின் முக்கிய நகரங்களான தெஹ்ரான், இஸ்பஹான் ஆகிய இடங்களில் கூலி வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர்கள். அதில் சிலர் இஸ்ரேலிடம் பணம் பெற்று, உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.

 


இதனால், புலம்பெயர்ந்த ஆப்கானியர்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி அவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர். இதனால், குடும்பத்துடன் ஈரானில் வசித்த பெண்கள், குழந்தைகள் தற்போது வீடுகளை இழந்து, ஆப்கானிஸ்தானின் இஸ்லாம் காலா நகர முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.


 கடந்த மாதம் குஜராத்தின் ஆமதாபாத்
தில் இருந்து லண்டனுக்கு செல்ல வேண்டிய விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி விமானம் இயங்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே எரிபொருளை கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் 'கட்-ஆஃப்' நிலைக்கு சென்றுவிட்டது. இந்த இரண்டு சுவிட்சுகள் தான் என்ஜினை நிறுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.

 



காஸாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதால், காஸாவின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நீரும் பற்றாக்குறையாகக் காணப்படுகிறது. இந்நிலையில், காஸாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் உட்பட 10 லட்சம் மக்கள் போதுமான அளவு தண்ணீர் இன்றி இருப்பதாகவும், எரிபொருள் தீர்ந்துவிட்டால் நிலைமை மேலும் மோசமடையலாம் எனவும் யூனிசெஃப் கூறியுள்ளது.


 

இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகளில் மே 8 (வியாழக்கிழமை) இரவு பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.


நேற்றிரவு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், "ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன," என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


மே 8 இரவு, ஜம்மு நகரத்தில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு விமான நிலையத்திலும் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.


விளம்பரம்


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்

படக்குறிப்பு,ஜம்மு முழுவதும் மின்வெட்டு அமலில் இருப்பதாக பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா தெரிவித்தார்.

ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியது என்ன?

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின் தடை அமலில் இருப்பதாகக் கூறினார்.


அப்பகுதியில் இருந்து செய்திகளை வழங்கி வரும் திவ்யா ஆர்யா, "பூஞ்ச் நகரத்தில் மின் தடை அமலில் உள்ளது. தற்போது விமான தாக்குதலின் சைரன்களை கேட்டதாகவும், குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதோடு, அவர்கள் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்குள்ள எங்கள் குழுவினர் தெரிவித்தனர்," என்று கூறினார்.


மேலும், ஜம்மு நகரிலும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறிய அவர், இரவு 08:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.


"ஜம்மு நகரின் தெற்கு நோக்கிச் சென்றால், அங்குதான் எல்லாம் தொடங்கியது" என்கிறார் திவ்யா ஆர்யா. அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து வெடிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.


"ஜம்மு நகரில் சுமார் 10 வெடிப்புகள் கேட்டதாக ஜம்மு நகரின் ஒரு குடியிருப்பாளர் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு நகரத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. வழக்கமான தொலைபேசி இணைப்புகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் அழைப்புகள் மட்டுமே வேலை செய்கின்றன."


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்பட மூலாதாரம்,ANI

நேற்றிரவு முதல் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் திவ்யா ஆர்யா கூறினார்.


"ஜம்முவில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் கத்துவாவில் வாழும் மக்களிடமும் நான் பேசினேன். அங்கு குறைந்தது இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்."


இதற்கிடையே, ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சல்மர், பஞ்சாபின் குர்தாபூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இந்தியாவின் அரசு ஊடகமான டிடி நியூஸ், பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜம்முவில் அமைந்திருக்கும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்புப் பிரிவுகள் இடைமறித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகவும் டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்பட மூலாதாரம்,Getty Images

மூடப்பட்ட சிவில் விமான நிலையங்கள்

பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன.


நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.


அறிவுறுத்தல்களின்படி, அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளுக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் (SLPC) மேற்கொள்ளப்படும். மேலும், விமான நிலையங்களில் ஏர் மார்ஷல்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தை மேற்கோள் காட்டியுள்ள ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், உள்நாட்டுப் பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே வந்து சேர வேண்டும் எனவும், செக்-இன் கதவுகள் 75 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.