Showing posts with label A. Show all posts

 


ஒலுவில், பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை மரணித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், பர்வத் உமர் உஸ்மான் என்னும் ஆண் குழந்தை ஆகும்

 


ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை - லூல்கந்துர பகுதியில் நேற்று (07) பிற்பகல் மாலை பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரிந்து ஹகுரன்கெத்தவிலிருந்து தெல்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி மற்றும் இரண்டு பெண் பணியாளர்களும் காயமடைந்து தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றல் மற்றும் தோலில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறித்த நோய் நிலைமைக்கு சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 




தொழில் முறை தவறியதற்காக வழக்கறிஞர் ஒருவர் வழக்கறிஞராகப் பணியாற்றுவதை 8 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பிசிஓஐயின் நடைமுறை விதிகளுக்கு மாறாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (பிசிஓஐ) நடவடிக்கைகளின் ஒரு பகுதியை கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பதிவு செய்ய மௌலவிக்கு உதவியதற்காக இது.


நீதியரசர் புவனேக அலுவிஹாரே, எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், பிரதிவாதியான சட்டத்தரணி நிசாம் மொஹமட் ஷமீமை 8 மாதங்களுக்கு சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞரின் இடைநீக்கம் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.
 சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கலபொட அத்தே ஞானசார தேரர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

கையடக்கத் தொலைபேசியை வளாகத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில், சட்டத்தரணியிடம் கையடக்கத் தொலைபேசியை வைத்துக்கொள்ளுமாறு மௌலவி முல்லாஃபர் கோரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. வழக்கறிஞர்கள் மட்டுமே தங்கள் மொபைல் தொலைபேசிகளை வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



உச்ச நீதிமன்றத்தின் விதிகள் 60 மற்றும் 61 (வழக்கறிஞருக்கான நடத்தை மற்றும் ஆசாரம்) விதிகள் 1988ஐ மீறியதற்காக பிரதிவாதிக்கு எதிராக ஒரு விதி பிறப்பிக்கப்பட்டது.
 
ஃபைஸ் முஸ்தபா பிசி உடன் என்.எம்.ஷாஹெய்ட் பிசி மற்றும் எம்.ஏ.சைட் ஆகியோர் பிரதிவாதிக்காக ஆஜராகினர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்காக சதுரிகா எல்விட்டிகலவுடன் ரொஹான் சஹபந்து பிசி ஆஜரானார். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனக வாகிஷ்ட ஆராச்சி ஆஜரானார். (லக்மால் சூரியகொட)

 வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் 10 ஆவது ஆண்டு

நிறைவை முன்னிட்டு நடத்திய அமரர் திரு திருமதி அருளானந்தம் ஞாபகார்த்த கிண்ண முக்கோண சுற்றுப் போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக ஹொக்கி   அணிகள் பங்கேற்றது .

இந் நிகழ்வு  காரைதீவு விபுலானந்த மைதானத்தில் தலைவர்
தவராசா லவன் தலைமையில் நேற்று முன்தினம்(9) ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக ஆண் ,பெண் ஹொக்கி அணியினரும், காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணியினரும் மூன்று போட்டிகளில் மோதினர்.
 முதல் இரண்டு இரண்டு போட்டிகளில் காரைதீவு அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது. 

 பிரதமர் அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து சிறப்பித்தார்.

ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் வளர்ச்சி அதன் ஸ்தாபக தலைவர் த.லவனின் அதீதமான அயராத முயற்சி மற்றும் அதன் சாதனைகள் பற்றி சிறப்புரையாற்றினார்.

 கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை செயலாளர் ஏ. சுந்தரகுமார், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் அ.
மகேந்திரராஜா, அஸ்கோ அமைப்பின் தலைவர் ஏ. விவேகானந்தராஜா, செயலாளர் ச. நந்தகுமார், பொருளாளர் அ.சுந்தரராஜன், இணைப்பாளர் ரி.புவனேந்திரராஜா,  ஆசிரியர்  எஸ்.பாஸ்கரன், விளையாட்டு உத்தியோகத்தர் வி.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கிழக்கு பல்கலைக்கழக ஹொக்கி பயிற்றுவிப்பாளர் எஸ்.கிருஸ்ணபிரபு விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு வீரர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 


மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த  சிரேஷ்ட அரசியல் - தொழிற்சங்க வாதியான 'மனிதருள் மாணிக்கம்' என போற்றப்படும் அமரர். அப்துல் அஸீல் அவர்களின், மகனான  அஷ்ரப் அசீஸ் இன்று (16.06.2023) அதிகாலை காலமானார் .


அஷ்ரப் அசீசும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தவர். அசீஸ் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை நிறுவி, அதன் ஊடாக அரசியல், தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்தவர். 


உடல்நலக்குறைவால் சில வருடங்களாக அவர் செயற்பாட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை.  கொழும்பு, பம்பலப்பிட்டியவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை காலமானார்.

 

அவரின் ஜனாசா கொழும்பு,  தெமட்டகொடை, குப்பியாவத்த முஸ்லிம் மையவாடியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


மலையக வரலாறு குறித்து பேசும்போது அசீஸ் அவர்களின் குடும்பத்தை மறந்து - கடந்துபோக முடியாது.


1939 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானபோது ஆரம்பகால அங்கத்தவராக இடம்பிடித்தவர் அசீஸ். காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவியையும் அலங்கரித்தவர். தொண்டமான் அணியுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக காங்கிரஸ் இருந்து வெளியெறி

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார். ( அந்த தொழிற்சங்கம் தற்போது மனோ அணியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது)


மலையகத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் உலுக்கிய 1966 ஆம் ஆண்டில் சுமார் 45 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பஞ்சப்படி போராட்டத்துக்கு அசீஸே அறைகூவல் விடுத்திருந்தார். சம்பள நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 


மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர்தான் அசீஸ்.


தந்தைபோல் தீவிர நடவடிக்கையில்   அஷ்ரப் அசீஸ் ஈடுபடாதபோதிலும், அவரின் உடலில் இறுதி மூச்சு இருக்கும்வரை, மலையக மக்களுக்காக அவரின் குரல் ஒலித்துகொண்டே இருந்தது.


ஆத்தா இளைப்பாறட்டும்.


ஆர்.சனத்


#ஜனாஸா_அறிவித்தல்!
கௌரவ தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடைய சிறிய தந்தை #ARMசெய்புதீன் அவர்கள் இன்று (12) தாராபுரத்தில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...

மேலதிக தகவல்கள் விரைவில்.

 


கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சிவஞானவேல் நர்த்தவி 15 வயது பெண்கள் பிரிவிலும் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியில் விளையாட தகுதி Instructions!

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.