Showing posts with label Southern. Show all posts


4 வருடங்​களுக்கு ஒரு முறை நடை​பெறும் உலகக் கோப்பை கால்பந்து திரு​விழா வரும் 11ஆம் திகதி கோலாகல​மாக தொடங்​க​வுள்​ளது.


கால்பந்து விளை​யாட்​டில் மாபெரும் திரு​விழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்​பந்து சம்​மேளனம்) நடத்​தும் கால்​பந்து உலகக் கோப்பை வரும் 11ஆம் திகதி தொடங்கி ஜூலை 19ஆம் திகதி வரை மிக​வும் பிர​ம்மாண்​ட​மான முறை​யில் நடை​பெறவுள்​ளது. 


ஒலிம்​பிக் போட்​டிகளைப் போலவே மிக பிரம்மாண்ட​மான முறை​யில் நடை​பெறும் போட்​டிகளில் இது முக்கி​யத்​து​வம் வாய்ந்த போட்​டி​யாகக் கருதப்​படு​கிறது.


வழக்​கத்​துக்கு மாறாக இந்த முறை 32 அணி​களுக்​குப் பதிலாக மொத்​தம் 48 அணி​கள் பங்​கேற்​கும் இந்த உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழாவை அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்​துகின்​றன. 


3 நாடு​களில் மொத்​தம் 16 மைதானங்​களில் போட்டி நடை​பெறும். போட்​டிகள் இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 12.30 மணி, அதி​காலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்​களில் நடை​பெற உள்​ளன.


குழு சுற்​றின் முடி​வில், ஒவ்​வொரு குரூப்​பிலும் முதல் 2 இடங்​கள் பிடிக்​கும் அணி​கள் மற்​றும் குழுக்களுக்கிடையில் இடம்பெறும் 8 அணி​களும் அடுத்த சுற்​றுக்கு தகுதி பெறும். அதன்​பின்​னர் கால், அரை, இறு​திச் சுற்​றுப் போட்​டிகள் இடம்பெறும். 


104 போட்டிகள்


மொத்​தம் 104 ஆட்​டம், 16 நகரங்​களில் மிக பிர​மாண்​ட​மாக அமைந்​துள்ள மைதானங்​களில் விளை​யாடப்​பட​வுள்​ளன. இறு​திப் போட்​டி, ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள ‘மெட்​லைஃப் ஸ்டேடி​யத்​தில்’ நடை​பெறும். 


இத்​தொடர் 16 வெவ்​வேறு நகரங்​களில் அமைந்​துள்ள 16 மைதானங்​களில் நடை​பெறவுள்​ளது. 


அமெரிக்​கா​வில் அமைந்​துள்ள 11 மைதானங்​களில் ஒன்​றான, நியூ ஜெர்​சி​யின் ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள மெட்​லைஃப் மைதானம் 82,500 பார்​வை​யாளர்​கள் அமரும் திறன் கொண்​டது.


கலி​போர்​னி​யா​வின் இங்​கிள்​வுட்​டில் அமைந்​துள்ள சோஃபி மைதானத்​தில் 70,240 பேரும், டெக்​சாஸின் ஆர்​லிங்​டனில் உள்ள ஏடி அன்ட் டி மைதானத்​தில் 80,000 பேரும், டெக்​சாஸின் ஹூஸ்டனில் உள்ள என்​ஆர்ஜி மைதானத்​தில் 72,220 பேரும், மிசவுரி​யின் கன்​சாஸ் நகரில் உள்ள ஏரோஹெட் மைதானத்​தில் 76,416 பேரும், ஜோர்​ஜி​யா​வின் அட்​லாண்​டா​வில் உள்ள மெர்​சிடிஸ் பென்ஸ் மைதானத்​தில் 71,000 பேரும் ரசிக்கலாம்.


மேலும், ஃபுளோரி​டா​வின் மியாமி கார்டன்ஸில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்​தில் 64,767 பேரும், கலிபோர்​னி​யா​வின் சாண்டா கிளா​ரா​வில் உள்ள லெவிஸ் மைதானத்​தில் 68,500 பேரும் பென்​சில்​வேனி​யா​வின் பிலடெல்பியா​வில் உள்ள லிங்​கன் ஃபை​னான்​சி​யல் ஃபீல்ட் மைதானத்​தில் 69,796 பேரும் வாஷிங்​டனின் சியாட்​டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்​தில் 68,740 பேரும், மாசாசூசெட்​ஸின் ஃபாக்​ஸ்​பரோ​வில் உள்ள ஜில்​லெட் மைதானத்​தில் 65,878 பேரும் போட்​டியை ரசிக்​கலாம்.


கனடா நாட்​டில் 2 மைதானங்​களில் போட்​டிகள் நடை​பெறும். 


பிரிட்​டிஷ் கொலம்​பி​யா​வின் வான்​கூவரில் அமைந்​துள்ள பிசி பிளேஸ் மைதானத்​தில் 54,500 பேரும், டொராண்​டோ​வில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்​தில் 45,736 பேரும் அமர்ந்து போட்​டியைக் கண்​டு​களிக்​கலாம். 


மெக்​ஸிகோ​வில், எஸ்​டாடியோ அஸ்​டெகா மைதானத்​தி​லும், (87,523 இருக்​கைகள்), குவாடலஜா​ரா​வில் உள்ள எஸ்​டாடியோ அக்​ரான் மைதானத்​தி​லும் (49,850 இருக்​கைகள்), மான்​டோரி​யில் உள்ள எஸ்டாடியா பிபி​விஏ மைதானத்​தி​லும் (53,500 இருக்​கைகள்​) போட்​டிகள்​ நடை​பெறும்​.


குழுவில் இடம்பெற்றுள்ள அணிகள் விவரம்


குழு ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு


குழு ‘பி‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கட்டார், சுவிட்சர்லாந்து


குழு‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்கொட்லாந்து


குழு ‘டி’: அமெரிக்கா, பராகுவே, அவுஸ்திரேலியா, துருக்கி


குழு ‘இ‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வாடோர்


குழு ‘எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா


குழு ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து


குழு ‘ஹெச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே


குழு ‘ஐ’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே


குழு ‘ஜே’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்


குழு ‘கே’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா


குழு ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா



ஹம்பாந்தோட்டை ஹூங்கம – களமெட்டிய கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று சிறுவர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடலில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இரு சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. 


வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


இதனால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


 


"ஐஆர்ஐஎஸ் தேனா" விலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட மொத்தம் 32 ஈரானியர்கள் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல்,  நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த கப்பலில் மீட்கப்பட்ட 30 பேரின் மோசமான உடல்நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கப்பலில் மொத்தமாக 180 பேர்வரை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



 தேசிய மக்கள் சக்தியின்  தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட தொடங்கொட பிரதேச சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் இன்று (13)  தோற்கடிக்கப்பட்டது.

 


வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் 13 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர், அதே நேரத்தில் 12 தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் முன்மொழிவை ஆதரித்தனர்.


 



ஜிந்தோட்டையில் ருஹுனு குமாரி ரயில் தடம் புரண்டதன் காரணமாக, கரையோரப் பாதையில் கொழும்பில் இருந்து பூஸ்ஸ மற்றும் காலி முதல் கஹாவ வரை பயணிக்கும் ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள பெண் பாடசாலை ஒன்றின் விடுதியின் ஒரு பகுதி தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.



மாத்தறை வெலிகம ஹப்ஸா மகளிர் அரபிக் கல்லூரியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விடுதியில் இருந்த சுமார் 150 மாணவர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


விடுதியின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள், மாணவர்களின் படுக்கைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.


இச்சம்பவத்தில் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

 


நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை பெருக்கெடுக்கும்  தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


 


நேற்றிரவு, காலியில் உள்ள சில்லறை ஜவுளிக் கடையொன்றின் உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


அதிகாரிகளின் கூற்றுப்படி, காலியில் உள்ள டிக்சன் வீதியில் காருக்குள் இருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 நூருல் ஹுதா உமர்


தீவிர மந்த போசணை உடைய சிறுவர்களுக்கான போஷனை கண்காட்சியும், விழிப்புணர்வும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் விளக்கமளிப்பும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். வாஜித் கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்திய தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். ரிஸ்பின் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான போஷனை தொடர்பிலும், உணவு விழிப்புணர்வு சம்பந்தமாகவும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் விளக்கமளித்தார்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை மாணவ மாணவிகள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர் 


“கல்முனை பிராந்திய மக்களின் அடிப்படை தேவைகளில் தன்னிறைவடைதல்” எனும் கல்முனையன்ஸ் போரமின் இலக்கினை அடையும் முகமாக பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் கல்முனையான்ஸ் போரமினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

அந்த வகையில் தேவையுடைய இணங்கானப்பட்ட 15 பயனாளிக்குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்புகள் அண்மையில் கையளிக்கப்பட்டிருக்கிறது. 

கல்முனையிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் இணைப்பினை கொண்டுசேர்க்கும் நோக்கில் கடந்த 2017ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இச்செயற்றிட்டத்தின் கீழ் இதுவரையிலும் சுமார் 135 பயனாளிக் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் முன்னெடுக்கப்பட்ட கல்முனைக்கான கல்வி, சமூக, பொருளாதார தனிநபர் தகவல் திரட்டின் மூலம் இணங்காணப்பட்ட குடும்பங்களே இச்செயற்றிட்டத்திற்கான பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பொது நிகழ்வு ஒன்றில் புகைக்குண்டு என்று கருதப்படும் ஒன்று வீசப்பட்டது. ஆனால், அவர் காயம் ஏதுமின்றி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டார்.

வாகாயாமா என்ற இடத்தில் அவர் ஒரு நிகழ்வில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

ஒரு ஆள் பிரதமர் மீது ஏதோ ஒன்றை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து அங்கே புகை கிளம்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். ஒரு பெரிய சத்தம் கேட்டதாக மற்றொரு நேரில் கண்ட சாட்சி கூறினார்.

சந்தேகிக்கப்படும் நபர் என்று தோன்றும் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடிப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த நபரை கைது செய்துவிட்டதாக கூறும் போலீஸ் மேற்கொண்டு எதையும் தெரிவிக்கவில்லை.

ஜப்பான் நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. வெளியிட்ட ஒரு காணொளியில் மக்கள் அந்த இடத்தை விட்டு கூட்டமாக ஓடுவது தெரிகிறது.


 மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலி (19 வயது) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (27) காலை தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாத்தறை, பிடபெத்தர, நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் காதலனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.