Showing posts with label Slider Sports. Show all posts



 இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத் திட்டத்தின் 'இதயத்தை' குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.


"இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார்.


ஏப்ரல் 2021 இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது.


"அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள" இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் "எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று எச்சரித்தார்.


விளம்பரம்


இஸ்ரேல் - இரான், நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters

புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது தாக்குதல் - இரானிய அரசு ஊடகம்

டெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

 ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து, குஜராத்

'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

ஆமதாபாத்: ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 204 பேர் பலி - என்ன நிலவரம்?

ஆமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலி - ஏர் இந்தியா நிறுவனம் கூறியது என்ன?

ஆமதாபாத் விபத்து, மேடே அழைப்பு, ஏர் இந்தியா, குஜராத்

மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?

End of அதிகம் படிக்கப்பட்டது

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரான் ஆயுதப்படைகளின் ஒரு கிளை மட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும்.


மேலும், டெஹ்ரானுக்கு அருகில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.


டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் தாக்கியதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


டெஹ்ரானில் உள்ள மக்களிடமிருந்தும் வெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இரானிய அரசு ஊடகங்களின்படி, தெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


டெஹ்ரானின் இமாம் காமனெயி சர்வதேச விமான நிலையம் இரானிய தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?

12 ஜூன் 2025

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் - இந்தியாவை உலுக்கிய மோசமான விமான விபத்துகள் பற்றி தெரியுமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான், நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபடவில்லை - மார்கோ ரூபியோ

இரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா பங்கெடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.


அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவிடமிருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.


"இன்றிரவு, இஸ்ரேல் இரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. இரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முதன்மையான முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும். இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது. அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆமதாபாத் விமான விபத்து பற்றி இதுவரை வெளியான தகவல்கள் - முழு விவரம்

56 நிமிடங்களுக்கு முன்னர்

'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"இஸ்ரேல் தாக்க தயாராக இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும்"

இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.


அமெரிக்கா சில அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கும், இராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததற்கும் இதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 


இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

இந்த நோய் ஒரு பாக்டீரியாவால், குறிப்பாக பாலூட்டிகளின் சிறுநீர் வழியாகப் பரவுகிறது. உண்மையில், இந்த பாக்டீரியா எலிகளின் சிறுநீர் அமைப்பில் வாழ்கிறது. எலிகள் தண்ணீர் குடிக்கும்போது, ​​அவற்றின் சிறுநீர் தண்ணீரிலோ அல்லது மண்ணிலோ கலக்கிறது. நாம் அந்த மண் அல்லது தண்ணீரை பயன்படுத்தும் போது, மக்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாவட்ட ரீதியாக இந்த நோயாளிகள் பெரும்பாலும் இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பற்றி நாம் பேசினால், நெல் விவசாயிகள், சில மாவட்டங்களில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கீரைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களை நாம் சுட்டிக்காட்டலாம். 

இதேவேளை, கொழும்பில் உள்ள லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன, இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பான நோய்கள் குறித்து ஊடக சந்திப்பின் போது பின்வருமாறு விளக்கினார். 

இந்த நாட்களில் குழந்தைகளிடையே கடுமையான காய்ச்சல் பரவி வருகிறது. இது புதிய விடயம் இல்லை. ஏனெனில் பருவமழையுடன் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. ஒவ்வொரு வருடமும் இதை நாங்கள் 'ஷவர் பீவர்' என்று சொல்றோம். இந்த முக்கிய பிரிவில் நமக்கு மிக முக்கியமானவை டெங்கு, எலிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சிக்குன்குனியா. அத்துடன் காய்ச்சலுடன் வரும் வயிற்றுப்போக்கு. நான் சொல்ல விரும்பும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், உங்கள் குழந்தைக்கு அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால், காத்திருக்க வேண்டாம். வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் .

இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அவர் 2025-06-09 அன்று  கடமைகளை பொறுப்பேற்றார், 
அச்சமயம் கல்வி பணியக உத்தியோகத்தர்களுடன் இரு பணிப்பாளர்களும் பரஸ்பரம் கலந்துரையாடினர்.

இந்நியமனமானது தற்போதைக்கு பதில் கடமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) பதவியையும் வகிப்பார்.

இதேவேளை, திருகோணமலை கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளராகவிருந்த தினகரன் ரவி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை புதன்கிழமை பதவியேற்பார்.

 இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்1 அதிகாரியான செல்லத்துரை புவனேந்திரனுக்கான நியமனக்கடிதம்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.

காரைதீவைச்சேர்ந்த இவர் ,2009.09.09இல் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் ஆசிரிய நியமனம்பெற்றதுடன் கல்விச்சேவையில் இணைந்துகொண்டார்.

அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்புக்கு 2021.03.23 முதல் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் 2009 இல் இலங்கை கல்வி நிருவாக சேவையில் இணைந்து கல்முனை கல்வி வலயத்தில் கடமையாற்றிய பின்னர் ,2010 முதல் 2018 வரை சம்மாந்துறை கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தி திட்டமிடல்நிர்வாகம் போன்ற பிரிவுகளில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி, 2019 இல் மீண்டும் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று 2020.04.16 முதல் கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்தார் . 

இவர் ஆரம்பக்கல்வியை காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையிலும் ,இடைநிலைக்கல்வியை விபுலாநந்த மத்தியகல்லூரியிலும் ,கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியிலும் பயின்று, கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப்பட்டதாரியாகி ,பிரான்சில் தனது கல்வித்திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் முதுநிலைமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

 


அக்பைரைப்பற்று புத்தக திருவிழா இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு நிலைப் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கடந்த 5 வருடங்களாக இடம்பெறும் இப் புத்தகத் திருவிழாவின் ஏற்பாட்டாளர் Pages புத்தகசாலை செயல் இயக்குனர் சிராஜ் மசூர் என்பது குறிப்பிடத்தக்கது.



  


பாறுக் ஷிஹான்


சாய்ந்தமருது நகர சபை விடயத்தில்  தடுத்தவர் முன்னாள் எம்.பி ஹரீஸூம் ஒருவர்.அதுமட்டுமல்ல ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் எதிராகவே செயற்பட்டனர்.என்னை தவிர அனைவரும் இவ்விடயத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர் என  ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியாகான்  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் திங்கட்கிழை(9) இரவு  நடைபெற்ற விசேட  செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்


சாய்ந்தமருது நகர சபை விடயத்தில்  தடுத்தவர் முன்னாள் எம்.பி ஹரீஸூம் ஒருவர்.அதுமட்டுமல்ல ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் எதிராகவே செயற்பட்டனர்.என்னை தவிர அனைவரும் இவ்விடயத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.வெளியிடங்களில் பல்வேறு மாயைகளை காட்டிவிட்டு உள்ளக கலந்துரையாடல்கள் கூட்டங்களில் நகர சபையினை சாய்ந்தமருது மக்களிற்கு கொடுக்கக்கூடாது என்று கூறி வந்தார்கள்.அதாவது கொடுத்தால் பிரிந்துவிடும் கொடுக்க கூடாது அது போய்விடும் விற்கப்பட்டு விடும்.இவ்வாறு பல்வேறு கதைகளை கட்டிவிட்டார்கள்.

முன்னாள் எம்.பி ஹரீஸ் சாய்ந்தமருது நகர சபையினை பிரித்து கொடுத்தால் கல்முனை பறிபோய்விடும் என்று நினைத்தார்.அது பொய்யான விடயம்.இவருடன் இணைந்து பல உறுப்பினர்கள் இவ்விடயத்தில் எதிராகவே இருந்தார்கள்.இவ்விடயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பள்ளிவாசல் தலைவரது கையையும் தட்டிவிட்டு அவமானப்படுத்தினார்கள்.நான் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல் தலைவரை அழைத்து சம்பந்தப்பட்ட அவர்களுடன் சந்திப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றேன்.

அவர்கள் அச்சபையினை கொடுத்திருக்கலாம்.ஆனால் இவர்கள் திட்டமிட்டு தடுத்தார்கள்.எனவே தான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை தவிர  எவரும் சாய்ந்தமருது நகர சபை விடயத்தை   தடுக்கவில்லை என்பதை தெளிவாக என்னால் கூற முடியும். என்றார்.
 

 


நூருல் ஹுதா உமர் 


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் நகரத்தில் அமைந்துள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க் (Emmanuel Kreike) கடந்த 2025.06.03 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைகழகத்துக்கு விஜயம் செய்திருந்தார் 

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிரின் அழைப்பின்பேரில் பேரில் வருகைதந்திருந்த பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க், உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் அவர்களை சிநேகபூர்வ அடிப்படையில் சந்தித்து பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடினார்.

 


ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்

 


வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த நிலையிலே துப்பாக்கிகள், ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.



( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு களைகட்டி வருகிறது.

பகல் இரவு பூஜைகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இன்று (8) ஞாயிற்றுக்கிழமை பகல் பூஜை ஆயிரக்கணக்கான அடியார்களுடன் இறுதி நாள் பச்சை கட்டலுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நாளை திங்கட்கிழமை (9) மடிப்பிச்சை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆலயத்தில் நெல்குற்றி பொங்கலிடுவது வழமையாகும்.

நாளை மறுநாள் (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திருக்குளிர்த்தி பாடல் இடம்பெறும்.

 


உலக  சுற்றாடல் தினநிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில்  பிரதேச செயலாளர்  தலைமையில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது....


ஜே.கே.யதுர்ஷன்..


 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உலக  சுற்றாடல் தின  முன்னிட்டு   திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச  செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பலன் தரும்  மரக்கன்றுகள் நடுகை  நிகழ்வும் இடம்பெற்றது....


 இன் நிகழ்வில் பொலித்தின் பிளாஷ்ரிக் பாவனைகள் கட்டுப்படுத்தல்  பற்றி விழிப்புணர்வும்  சுற்றுச்சுழல் பாதுகாப்பு ,சுற்றாடல் தினம்  பற்றிய உரைகளும் இடம்பெற்றது....



 இவ் நிகழ்வில் திருங்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு   பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் மற்றும் கிராம  சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்  கிராம அபிவிருத்தியோத்தர்கள் திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோத்தர் மற்றும்  விளையாட்டுகழக உறுப்பினர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்....

 

பேராசிரியாக பதவி உயர்வு


தென்கிழக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடையாற்றிய அக்கரைப்பற்று கலாநிதி முனீப் எம் முஸ்தபா பேராசிரியாக (Professor in Bio systems Technology) பதவி உயர்வு பெற்றுள்ளளார்.

டொக்டர் முனீப் முஸ்தபா கலாநிதிப்பட் டத்தை மலேசியா மலாயா பல்கலைக்கழத்தில் நிறைவு செய்தவர்

இவர் மர்ஹூம் முஸ்தபா ஆசிரியரிர் ரஷீனா உம்மா ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது

 


நூருல் ஹுதா உமர் 


பாடசாலைகளுக்கிடையிலான 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட கரம் போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலய பெண்கள் அணி கலந்து கொண்டு வலயமட்டத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வெற்றிக்காக மாணவர்களுக்கு பயிற்சியளித்த இந்த பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.என்.எம். ஆபாக், பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர் எம்.எப்.எம்.ஆர் ஹாத்தீம் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இப்பாடசாலை கடந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டிகளில் பல வெற்றிகளை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலை இவ்வாண்டுக்கான கோட்டமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தமாக 48 வெற்றி இடங்களை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

டிரம்ப் கையெழுத்திட்ட பிரகடனம், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை பகுதியளவு கட்டுப்படுத்துகிறது.

டிரம்பின் இந்த பிரகடனம் ஜூன் 9-ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

 



ஐபிஎல் 2025 கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கௌரவிக்க அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

அப்போது மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் இறந்திருக்கலாம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்திக்கு தெரிவித்துள்ளார்.

மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படாமல் இருந்ததாகவும் சிறிய நுழைவாயில் வழியாக பலரும் உள்ளே நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

மற்றொரு அதிகாரி பிபிசியிடம் பேசும்போது, "ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மைதானத்தைச் சுற்றி திரண்டனர்" என்றார்.

End of அதிகம் படிக்கப்பட்டது

இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களைக் காணவிருந்த மக்கள் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்சிபியின் வெற்றி குறித்து பெருமைப்படுகிறோம், ஆனால் அது யாருடைய உயிரையும் விட பெரியதாக இருக்க முடியாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. காவல் ஆணையர் மற்றும் அனைவரிடமும் பேசியுள்ளேன். நான் சற்று நேரம் கழித்து மருத்துவமனைக்குச் செல்வேன். இப்போதைக்கு நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை." என்றார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "சரியான எண்ணிக்கையை இப்போது சொல்ல முடியாது. மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்." என்றார் துணை முதல்வர் டி.கே. சிவகுமார்.

நேற்று ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 18 வருடங்களில் முதல்முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் அதை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விராட் கோலி உள்ளிட்ட பெங்களூர் அணியின் வீரர்கள் கோப்பையுடன் இன்று (ஜூன் 4) மதியம் பெங்களூர் வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்கள்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்கள்

அதைத் தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி விராட் கோலி பேருந்தில் முன்னே அமர்ந்திருக்க, பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக அரசு சார்பில் ஆர்சிபி அணியின் வீரர்களை கௌரவிக்க விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்

சம்பவ இடத்தில் இருந்து பேசிய ஆர்சிபி ரசிகை ஒருவர், "உள்ளே இருக்கைகள் எல்லாம் நிரம்பிவிட்டன, அதனால்தான் எங்களை உள்ளே விடவில்லை. நாங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறோம், ஆனால் நாங்கள் திரும்பிச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

வாயில்கள் மக்களால் நிரம்பி வழிகின்றன, காவல்துறை வாயில்களைத் திறந்தாலும், மக்கள் உள்ளே வரத் தொடங்குவார்கள். ஏற்கனவே நிறைய பேர் காயமடைந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியது தொடர்பான காணொளிகளை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

 


வி.சுகிர்தகுமார்                 


 உலக சுற்றாடல் தினம் வாரம் கடந்த 30ஆம் தொடக்கம் ,நாளை 05ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு கடற்கரை, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(04) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் கடற்கரைப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் தம்மரெத்தின சிங்கள பாடசாலை மாணவர்கள் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படைப்பிரிவினர் பிரதேச சபை ஊழியர்கள் பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவு, கரையோரம் பேணல் திணைக்களப் பிரிவு, பொருளாதார அபிவிருத்திப் பிரிவு, உத்தியோகத்தர்கள்;, பொது சமூக நலன் தன்னார்வலரகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கடற்கரைப் பிரதேசத்திற்கு வருகை தரும் பொது மக்களால் பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த  பொருட்கள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்கரை சுற்றாடலைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.



(வி.ரி.சகாதேவராஜா)

 " பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 - ஜூன் 5 வரை  பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 "கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் " எனும் தொனிப் பெரிய கல்லாறு தொடக்கம் குருக்கள்மடம் வரையான 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (2025.06.04) காலை 07.30 மணி முதல் இடம்பெற்றது.

பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரை கரையோர மற்றும்  சவுக்கு மர பிரதேசங்கள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.

 


வி.சுகிர்தகுமார்                  


 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அலுவலகம் இணைந்து முன்னெடுக்கவுள்ள சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வருடம் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக சர்வதேச யோகா தின நிகழ்வு ஒழுங்கமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (04) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ஒன்று கூடல் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் க.கமலமோனதாசன்  பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் அதிபர்கள் ஆலய தலைவர்கள் சமூக அமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சர்வதேச யோகா தின முக்கியத்துவம் தொடர்பாகவும் நிகழ்வுகளை 2000 ஆயிரம் மாணவர்களை உள்வாங்கி ஆலையடிவேம்பு பிரிவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும் பிரதேச செயலாளர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து யோகா தின ஒழுங்குகள் தொடர்பாகவும் பாடசாலைகள் ஆலயங்கள் சமூக அமைப்புக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு பங்களிப்பு தொடர்பிலும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெளிவு படுத்தினார்.
பாடசாலை மாணவர்களை ஒழுங்கமைத்தல் தொடர்பான விளக்கத்தினை கோட்டக்கல்வி பணிப்பாளர் க.கமலமோனதாசன் எடுத்துரைத்தார்.
மேலும் யோகா தினம் நடைபெறுகின்ற திகதி தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் 21ஆம் திகதி; நடத்துவது எனவும் இதற்கான பங்களிப்பை சகலரும் இணைந்து மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


Clean SriLanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை மற்றும்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தினால் சர்வதேச சுற்றாடல் தினம் வெற்றிகரமாக இன்று 2025.06.04 முன்னெடுக்கப்பட்டது.

"நில மீட்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான தாங்கு திறன்" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட  உலக சுற்றாடல்  தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கமைய ஆற்றங்கரை சூழலை சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை பிரதேசத்தை சுத்தம் செய்து 150  வேப்ப மரக்கன்றுகள்  நடும் விசேட வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.ராபி, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஹ்பிகா மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் ஆகியோர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுற்றுச்சூழல் பாதுகாப்பு  உத்தியோகத்தர் திருமதி புஷ்ப ரஜினி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இளைஞர் விளையாட்டு கழக அமைப்புக்கள், மாணவர்கள், சுற்றாடல் முன்னோடி கழகம் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நடைபவனி ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர். இந்த நடைபவனி ஆனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களின் பொறுப்புணர்வை வளர்க்கவும் நோக்கமாகக் கொண்டது.



பாறுக் ஷிஹான்


மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டாம் வருட பயிலுனர் மாணவர்களினால் அழகு படுத்தும் புதிய வேலை திட்டம் செவ்வாய்க்கிழமை  (03) பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை சூழலை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு ஏற்ப அழகு படுத்தி சமூக ஒருமைப்பாட்டை உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் இந்த பாரிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வருகை தந்த அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.சி. ஜூனைட், உப பீடாதிபதி எம்.ஐ.ஜஃபர் (நிதி - நிர்வாகம்), உப பீடாதிபதி  ஏ.எஸ்.எம்.சதாத் (தொடருறு ஆசிரியர் பயிற்சி), விரிவுரையாளர் இணைப்பாளர் ஏ.எம்.நியாஸ், மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் அடங்கிய குழுவினரை பாடசாலையின் அதிபர் எம். எம். ஹிர்பகான் தலைமையிலான பிரதி அதிபர்களான எம்.பி.அஹமட் ராஜி ,ஏ. ஆர். என். மன்பூஸா, உதவி அதிபர்களான , எம். ஐ.சர்மலா,எம். எஸ்.எம்.சர்மூன், எம். ஏ.எஸ். நஹீதா, எம்.சி. எம். றக்ஸான் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் இன்முகத்தோடு மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதனை அடுத்து பாடசாலையில் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டிய சுமார் 15 க்கும் மேற்பட்ட வேலை திட்டங்கள் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு பல்வேறு வேலை திட்டங்களும் முறையாக முன்னெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் பாடசாலை சுற்றுப்புற சூழல் மற்றும் வகுப்பறைகள் அடங்கிய பாடசாலை வளாகத்தை துப்புரவு செய்தல், அவற்றை அழகுபடுத்துதல், வகுப்பறைகளை அழகுபடுத்துதல் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பொருத்தமான சூழல்களை உருவாக்குவது போன்ற பல்வேறு வேலை திட்டங்களையும் ஆசிரிய மாணவர்கள் குழுக்களாக இணைந்து செயல்படுத்தினர்.
 
தொடர்ந்து மூன்று தினங்களுக்கு பாடசாலையில் தங்கியிருந்து இந்த பாரிய வேலை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதன் போது, வீதி நாடகம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் கல்வியற் கல்லூரியின் பயிலுனர் மாணவர்களின் செயற்திட்டங்கள் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையை அழகுபடுத்தும் இந்த பாரிய வேலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு களையும் பங்களிப்புகளையும் முன்வந்து வழங்கிய நலன்விரும்பிகள் மற்றும் அனுசரணையாளர் களுக்கு  பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை நிருவாகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த வேலைத்திட்டம் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்திலும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகளில் "H -800க்கு  அமைய உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை" இன்று (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமையவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதனின் தலைமையிலும் இந்த  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டன.

இச் செயற்பாடுகளில் போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகள் பார்வையிடப்பட்டன, கடைகளில் சுகாதார நிலைமைகள், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு  பரிசீலனை செய்யப்பட்டது, கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத் வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது, தேவையான இடங்களில் எதிர்வரும் நாட்களில் மீள்பார்வை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மக்கள் நலனை நோக்கி முன்னெடுக்கப்பட்டன. கடைகளில் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்குடன் இவ்வாறான  செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது
சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.