அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஸஹ்ரா குறுக்கு வீதி, கொங்கிறீட் வீதியாகின்றது
தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட இன்று (28) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று (27) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
( வி.ரி.சகாதேவராஜா)
( வி.ரி.சகாதேவராஜா)
பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலே நேரடியாக இருக்கும், ஏனெனில் அதன் தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கம் வெளிப்படையானது. இன்று (31) நண்பகல் 12.10 மணியளவில் பத்தலங்குண்டுவ, மதவாச்சி, ஹொரவப்பொட்டான மற்றும் கிண்ணியா ஆகிய இடங்களுக்கு மேல் சூரியன் உச்சம் தரும் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும்
கனகராசா சரவணன்
இனிய பாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று (29) மாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஐடியினர் கைது செய்துள்ளனர்.
ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு.சந்திவெளி பகுதிகளில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்த இனிய பாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான இன்று மாலை 4.00 மணியளவில் சி.ஐ.டியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஐடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனிய பாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சி.ஐ.டியினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு இனிய பாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது .
கனகராசா சரவணன்
நூருல் ஹுதா உமர்
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்ட செய்தி வெளியான பிறகு, 94 வயதான மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் பெயர் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற, மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பு முக்கியம் ஆகும்.
ஜூலை 14 திங்கட்கிழமையன்று கேரளாவின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதத் தலைவரான அபுபக்கர் முஸ்லியார், நிமிஷா பிரியா வழக்கு குறித்து 'ஏமனின் சில ஷேக்குகளுடன்' பேசினார் என நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுவதற்காக பிரசாரம் செய்து வரும் சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில், செவ்வாயன்று கூறியது
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் இந்த கவுன்சிலின் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா பிபிசியிடம் பேசியபோது, "சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சிலின் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியைச் சந்தித்துப் பேசினார்கள். அதன் பிறகு அவர், அங்குள்ள (ஏமன்) சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினார்" என்று கூறினார்.
விளம்பரம்
"இறந்தவரின் உறவினர்கள் உட்பட செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று சந்திரா கூறினார்.
மௌலவி முஸ்லியார், சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்
நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைக்க உதவிய இஸ்லாமிய மதகுரு யார்?
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது.
புனித நீரூற்றை பாதுகாக்க அதானி குழுமத்திற்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்
2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
End of அதிகம் படிக்கப்பட்டது
ஜூலை 16 அன்று நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு முஸ்லியாரின் தலையீடு உயிரிழந்த தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடனான பேச்சுவார்த்தைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ஒத்தி வைப்பு - கடைசி நேரத்தில் என்ன நடந்தது?
15 ஜூலை 2025
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பா? கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் பதில்
16 ஜூலை 2025
மௌலவி முஸ்லியார், சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்
முஸ்லியார் யார்?
'கிராண்ட் முஃப்தி' என்று இந்தியாவில் முஸ்லியார் அறியப்பட்டாலும், அவருக்கு இந்தப் பட்டம் முறைசாரா முறையில் வழங்கப்பட்டதாகும்.
சுன்னி சூஃபிசம் மற்றும் கல்விக்கான பங்களிப்புக்காக அவர் அறியப்பட்டாலும், பெண்கள் குறித்த அவரது கூற்றுகள் பல முறை கண்டனங்களை எதிர்கொண்டுள்ளன.
கேரள பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர் அஷ்ரஃப் கடக்கல் பிபிசியிடம் கூறுகையில், "அவர் தனது சீடர்களுக்கு தீர்க்கதரிசியைப் போன்றவர். அவருக்கு மந்திர சக்திகள் இருப்பதாகவும் சிலர் நம்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.
"பரேல்வி பிரிவைச் சேர்ந்த முஸ்லியாரை சூஃபி மாநாடு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி சிறப்பித்துள்ளார். ஆனால் பெண்கள் மீதான அவரது அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது."
"அவரை சக்திவாய்ந்த தலைவராக்குவது எது என்று நீங்கள் கேட்டீர்கள். இந்தியாவில் யாராவது சந்திராசாமியுடன் போட்டியிட முடிந்தால், அது முஸ்லியாராகத்தான் இருக்கும் என்பதே எனது பதில். அவரும் இவரைப் போன்றவரே. சந்திரசாமி, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் செல்வாக்குமிக்கவராகவும் இருந்தவர்" என்று பிபிசியிடம் கலாசார மற்றும் அரசியல் ஆய்வாளர் ஷாஜகான் மதாபத் கூறினார்.
நிமிஷா பிரியா விஷயத்தில் ஏபி அபூபக்கர் முஸ்லியார் தலையிட்ட போதிலும், பெண்கள் குறித்த அவரது கருத்துக்கள் குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. இருப்பினும், எழுத்தாளரும் சமூக சேவகருமான முனைவர் கதீஜா மும்தாஜ் அவரைப் பாராட்டுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தபோதும், நிமிஷாவுக்காக முஸ்லியாரால் ஏதேனும் செய்ய முடிந்தது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.
'தாயைப் பார்க்க ஏங்கும் மகள்' - நிமிஷா பிரியா பற்றி கணவர், சொந்த ஊர் மக்கள் கூறுவது என்ன?
16 ஜூலை 2025
'நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து வர மாட்டேன்' - கேரள செவிலியரின் தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி
14 ஜூலை 2025
சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்
படக்குறிப்பு,'சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்' உறுப்பினர்கள் மௌலவி முஸ்லியாரைத் தொடர்பு கொண்டனர்
முஸ்லியார் என்ன செய்தார்?
ஏமனில் உள்ள ஒரு சூஃபி பாரம்பரியத்தைச் சேர்ந்த 'பா அலவி தரீக்கா'வின் தலைவரான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸுடனான தனது நீண்டகால நட்பையும் பிற தொடர்புகளையும் பயன்படுத்தி முஸ்லியார், தலால் மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் வெற்றியடைந்தார்.
ஷேக் ஹபீப் உமர், ஏமனில் உள்ள 'தார் உல் முஸ்தபா' என்ற மத நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அங்கு கேரளா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் கல்வி கற்க வருகிறார்கள்.
ஷேக் ஹபீப் உமர், போரில் ஈடுபடும் குழுக்கள் உட்பட, ஏமனில் உள்ள அனைத்து பிரிவுகள் அல்லது குழுக்களுடன் இணக்கமான தொடர்புகளை கொண்டவர்.
"அவரது தலையீடு முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் இருந்தது. ஷரியா சட்டத்தில் ஒரு நபருக்கு ரத்தப் பணம் செலுத்துவதன் மூலம் மன்னிப்பு பெற முடியும் என்ற விதி உள்ளது என்று மட்டுமே அவர் அவர்களிடம் கூறினார். அவரது முயற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது" என்று முஸ்லியாரின் செய்தித் தொடர்பாளர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவரின் (தலால் அப்தோ மஹ்தி) குடும்பம் மன்னிப்பு அளித்தால், நிமிஷாவின் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த மன்னிப்பிற்கு ஈடாக 'ப்ளட் மணி' (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈடு (பெரும்பாலும் பணம்) வழங்கப்படும்.
முஸ்லியாரிடம் பிபிசியால் பேச முடியவில்லை. மலப்புரத்தில் உள்ள நாலேட்ஜ் சிட்டி நகரத்தில் முஸ்லியாரின் மகனால் அமைக்கப்பட்ட மசூதி மற்றும் மதீன் சாதத் அகாடமியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது ஷேக் ஹபீப் உமர் கேரளாவிற்கு வருகை தந்துள்ளார்.
ஏமனில் சில நாட்களில் மரண தண்டனை: நிமிஷா பிரியாவை இந்தியா நேரடியாக தலையிட்டு மீட்க முடியுமா?
11 ஜூலை 2025
ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு 6 நாட்களில் மரண தண்டனை - காப்பாற்ற ஒரே இறுதி வாய்ப்பு என்ன?
10 ஜூலை 2025
ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா
படக்குறிப்பு,நிமிஷா பிரியா 2017 ஆம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார், அவரது கணவர் மற்றும் மகள் கேரளாவில் வசிக்கின்றனர்
மௌலவி முஸ்லியார் பிரபலமானதன் பின்னணி
1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுன்னி அமைப்பான 'சமஸ்தா கேரள ஜமியதுல் உலமா' என்ற அமைப்பில் இருந்து பிரிந்து புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தபோது இஸ்லாமிய வட்டாரங்களில் முஸ்லியார் பிரபலமானார்.
இந்த அமைப்பு 1986 வரை ஒற்றுமையாக இருந்தது, ஆனால் பின்னர் சித்தாந்தத்தில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின.
"முஸ்லியார் தீவிர சல்ஃபி இயக்கத்தை எதிர்த்தார். ஆங்கிலம் 'நரகத்தின் மொழி' என்பதால் இஸ்லாமியர்கள் அதைக் கற்கக்கூடாது என்றும், மலையாளம் 'நாயர் சமூகத்தின் மொழி' என்பதால் அதைக் கற்கக்கூடாது என்று நம்பிய இயக்கம் அது. அவர் பெண் கல்விக்கும் எதிரானவர்" என்று பேராசிரியர் அஷ்ரஃப் விளக்குகிறார்.
வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளைப் பெற்று கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்தினார்.
"குறைந்தது 40 சதவீத சுன்னி இஸ்லாமியர்கள், முஸ்லியாருக்கு ஆதரவாக இருந்தனர். பாரம்பரியமாக சுன்னி அமைப்பு ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) உடன் இருந்தது.
ஆனால் முஸ்லியார் 'எதிரியின் எதிரி நண்பன்' என்ற கொள்கையை பின்பற்றி சி.பி.எம் கட்சியை ஆதரித்தார். இதன் காரணமாக மக்கள் அவரை 'அரிவாள் சுன்னி' என்று அழைக்கத் தொடங்கினார்கள், அரிவாள் சி.பி.எம் கட்சியின் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது."
"அவர் ஒரு சிறந்த அமைப்பாளர் என்பதால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகம், ஆனால் பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்த அவரது கருத்துக்கள் மிகவும் பழமையானவை. சல்ஃபி வட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வணக்கம் கூட சொல்லக்கூடாது என்று அவர் ஒருமுறை கூறினார்" என்று ஷாஜகான் கூறுகிறார்.
ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து
இஸ்லாமிய ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பது அவசியம் என்று கூறும் அவரது கூற்றை முனைவர் மும்தாஜ் கண்டிக்கிறார்.
"முதல் மனைவியின் மாதவிடாய் காலத்தில் ஆண்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரண்டாவது மனைவியைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார். பெண்கள் குறித்த இதுபோன்ற அவரது கருத்துக்கள் கவலையளிப்பவை. இதுபோன்ற அவரது கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று அவர் கூறுகிறார்.
இவை அனைத்தையும் மீறி, "நிமிஷா பிரியா இஸ்லாமியர் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி உதவியிருக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று மும்தாஜ் கூறுகிறார்.
மேலும், 26/11 மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கான மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்வதில் மௌலவி முஸ்லியார் தீவிர பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், "இஸ்லாத்தில் பயங்கரவாதம் தடைசெய்யப்பட்டுள்ளது" என்ற செய்தியை இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்குவதாகும்.
( பாறுக் ஷிஹான்)
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள 30% வீத பரஸ்பர வரிகளில் இருந்து மேலும் நிவாரணம் பெற ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்காவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.
பாறுக் ஷிஹான்
பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்று தொடரை சமன் செய்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்திருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷுப்மன் கில் சதமடிக்க (161 ரன்கள்) 427 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது இந்திய அணி.
25 நிமிடங்களில் திருப்புமுனை
ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக்
4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் இருந்தது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.
ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஏற்கெனவே ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களை தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் அலறவிட்ட நிலையில் அவர்களின் துல்லியமான லென்த்தில் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீ்ச்சு இன்று காலையும் தொடர்ந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
ஜெனரேட்டர் புகை, கார்பன் மோனாக்சைடு, சென்னை
சென்னையில் தந்தை, இரு மகன்களின் உயிரை பறித்த 'கண்ணுக்குத் தெரியாத கொலையாளி'
இந்தியா , இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
39 ஆண்டு சாதனையை சமன் செய்த ஆகாஷ் தீப் - இங்கிலாந்துக்கு எதிராக இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி
டெல்லி பழைய கார்களுக்கு தடை, தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கார் விற்பனை
டெல்லி பழைய கார்களை சொற்ப விலைக்கு தமிழகத்தில் வாங்க முடியுமா? என்ன நடைமுறை?
சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்
திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? - சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆட்டம் தொடங்கிய 25 நிமிடங்களுக்குள் ஆகாஷ் தீப் இரு அருமையான பந்துகளால் இரு விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணியை நெருக்கடிக்குள் தள்ளினார்.
முதலாவதாக ஆட்டம் தொடங்கி 4வது ஓவரில் ஆலி போப்பிற்கு இன் கட்டரில் பந்துவீசி க்ளீன் போல்டாக்கினார் ஆகாஷ் தீப். ஏற்கெனவே திணறிக்கொண்டிருந்த போப் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
போப் ஆட்டமிழந்த அடுத்த 2 ஓவர்களில் ஹேரி ப்ரூக் விக்கெட்டுக்கு ஆகாஷ் குறிவைத்தார். பேட்டர் ஆடமுடியாத வகையில் இன்ஸ்விங்கில் பந்தை வீசி ஹேரி ப்ரூக்கை நிலைகுலையச் செய்து கால்காப்பில் வாங்கவைத்தார் ஆகாஷ்.
ப்ரூக் கால்காப்பில் வாங்கியதும் ஆகாஷ் அப்பீல் செய்தவுடனே நடுவர் மறுபேச்சு இன்றி கையை உயர்த்தி அவுட் வழங்கினார். டிஆர்எஸ் முறையீட்டுக்கு வாய்ப்பின்றி துல்லியமான எல்பிடபிள்யு என்பதால், ப்ரூக்கும் முறையீடு செய்யாமல் வெளியேறினார்.
இந்த இரு விக்கெட்டுகளும், இங்கிலந்து அணி சேஸிங் கனவிலிருந்து சற்று பின்னோக்கி தள்ளச் செய்தது. சேஸ் செய்துவிடலாம் என எண்ணி களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் பின்னடைவைச் சந்தித்தனர். 4வது நாள் முடிவில் 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, இன்று காலை ஆட்டம் தொடங்கி, 19 ரன்களைச் சேர்பதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம் - இந்தியா ஒருமுறை கூட வெல்லாத ஆடுகளம் எப்படி உள்ளது? பும்ரா ஆடுவாரா?
2 ஜூலை 2025
மற்ற பவுலர்களிடம் இல்லாத, பேட்டர்களை கலங்கடிக்கும் பும்ராவின் தனித்துவம் என்ன?
24 ஜூன் 2025
தோனியை விஞ்சி பந்த் புதிய சாதனை: இந்திய அணியின் தவறுகளை சரியாக பயன்படுத்திய இங்கிலாந்து
22 ஜூன் 2025
ஸ்டோக்ஸ், ஸ்மித் நங்கூரம்
கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம் ஸ்மித் இருவரும் 7வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பந்து தேய்ந்து, மென்மையாக மாறிவிட்டதால், எதிர்பார்த்த ஸ்விங்கும், வேகமும் கிடைக்காததால் பேட்டர்கள் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்ததால், ரன்களை இங்கிலாந்து பேட்டர்கள் வேகமாகச் சேர்த்தனர்.மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது.
ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்ய சுந்தர், ஜடேஜாவை மாறி, மாறி கேப்டன் கில் பயன்படுத்தினார். இதில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் இருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை கில் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பிவிடுவார் என்பதால் இவருக்கு குறிவைத்து கில் செயல்பட்டு பந்துவீச்சை உணவு இடைவேளைக்குப்பின் மாற்றினார்.
வாஷிங்டன் திருப்புமுனை
பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்பட மூலாதாரம்,Stu Forster/Getty Images
படக்குறிப்பு,பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்
உணவு இடைவேளை முடிந்துவந்தபின், மீண்டும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் 33 ரன்கள் சேர்த்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டு ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு திரும்பியது. 7-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வோக்ஸ் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 பந்துகளில் அரைசதம் அடித்தபின் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.
பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுன்ஸராக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டபோது, அது சிராஜிடம் கேட்சானது. வோக்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்கமே ஆட்டம் மொத்தமும் இந்தியாவின் பக்கம் திரும்பியது.
இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித், கார்ஸ் களத்தில் இருந்தனர். ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஆகாஷ் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார்.
ஆகாஷ் சற்று ஸ்லோவர் பந்தாக ஆப்சைடு விலக்கி வீசினார். இதை கணிக்காத ஸ்மித் தூக்கிஅடிக்கவே, பேக்வார்ட் ஸ்குயரில் நின்றிருந்த சுந்தரிடம் கேட்ச் கொடுத்து 88 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 8வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
ஆகாஷ் தீப் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையாக இருந்தார்.
ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித்பட மூலாதாரம்,Stu Forster/Getty Image
படக்குறிப்பு,ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித்
சிராஜின் அற்புதமான கேட்ச்
இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. கார்ஸ், டங் இருவரும் களத்தில் இருந்தனர். பிரசித், ஜடேஜா மாறி, மாறி பந்துவீசியும் இருவரும் சளைக்காமல் ஆடினார்.
ஒரு கட்டத்தில்பேட்டர்களுக்கு நெருக்கடி தரும்வகையில் ஸ்லிப்பில், மிட்விக்கெட்டில் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தி ஜடேஜா பந்துவீசினார். ஜடேஜாவின் வியூகத்துக்கு பலன் கிடைத்து.
ஜடேஜாவீசிய பந்தை டங் தட்டிவிட, மிட்விக்கெட்டில் நின்றிருந்த சிராஜ், அற்புதமாக டைவ் செய்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது.
அடுத்ததாக பஷீர் களமிறங்கி, கார்ஸுடன் சேர்ந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்த ஆகாஷ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் பந்துவீச்சில் சற்று திணறிய கார்ஸ், திடீரென பெரிய ஷாட்டுக்கு முயன்று பந்தை தூக்கி அடித்தார். ஆனால் சிராஜ் பந்தை பிடிக்கும் முயற்சியில் தவறாக கணித்ததால் கேட்சை தவறவிட்டார்.
வெற்றிக்கான கேட்ச்
இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப்
ஜடேஜா அடுத்து பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா பந்துவீச்சில் பஷீர் கால்காப்பில் வாங்கிய பந்தை கேட்ச்பிடித்தபோது நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் டிஆர்எஸ் முறையீட்டில் பந்து பேட்டில் படவில்லை, கால்காப்பில் மட்டுமே பட்டது எனத் தெரியவந்ததால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.
அதன்பின்பும், ஜடேஜா, ஆகாஷ் இருவரும் மாறி மாறி பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக ஆகாஷ் தீப் வீசிய 64வது ஓவரில் அந்த வெற்றி விக்கெட் விழுந்தது. ஆகாஷ் வீசிய பந்தை கார்ஸ் தூக்கிஅடிக்க கேப்டன் கில் கேட்ச் பிடிக்கவே இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது.
வெற்றியின் நாயகர்கள்
இந்திய அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அரைசதம், ஷுப்மன் கில் இரட்டை சதம், ஜடேஜா அரைசதம், 2வது இன்னிங்ஸில் ராகுலின் அரைசதம், கில்லின் 2வது சதம், ரிஷப்பந்த் அரைசதம், ஜடேஜாவின் 2வது அரைசதம் என பேட்டிங்கில் முடிந்தவரை பங்களிப்பு செய்தனர்.
பந்துவீச்சில் பும்ரா இல்லாத நிலையில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது உண்மையில் பாராட்டுக்குரியது. முதல் இன்னிங்ஸில் சிராஜ் எடுத்த இங்கிலாந்து மண்ணில் முதல் 5 விக்கெட், ஆகாஷ் தீப்பின் 4 விக்கெட். 2வது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் எடுத்த முதல் 6 விக்கெட், சிராஜ், வாஷிங்டன் விக்கெட் ஆகியவை வெற்றிக்கு துணையாக இருந்தன.
39 ஆண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த சாதனை
இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, ஷுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட், இந்தியா வெற்றிபட மூலாதாரம்,Getty Images
அதிலும் ஆகாஷ் தீப் வெற்றிக்கான திருப்புமுனையை இரு இன்னிங்ஸிலும் வழங்கினார் என்பதை மறுக்க இயலாது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் பெற்றார்.
1986ம் ஆண்டு இதே பிர்மிங்ஹாம் மைதானத்தில் சேத்தன் சர்மா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்குப்பின் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார்.
அன்று காபா, இன்று பிர்மிங்ஹாம்
2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் முதல்முறையாக இந்திய அணி வரலாற்று பெற்றி பெற ஷுப்மன் கில், ரிஷப் பந்த், சிராஜ் ஆகிய 3 பேரும் முக்கிய காரணமாக இருந்தனர். இன்று எட்ஜ்பாஸ்டனில் புதிய சரித்திரத்தை எழுதவும் இந்த 3 வீரர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப்பின் முதல்முறை 6 விக்கெட், ஒட்டுமொத்த 10 விக்கெட் முக்கியமாக இருந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 2வது போட்டியிலேயே அந்நிய மண்ணில் கில் வெற்றி தேடித்தந்துள்ளார். இதில் கேப்டன் கில்லின் பேட்டிங் பங்களிப்பு இரு டெஸ்ட் போட்டிகளிலும் மகத்தானது. முதல் போட்டியில் சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், சதம் என 430 ரன்கள் குவித்து முழுமையான உழைப்பை வழங்கினார்.
அதேபோல ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், 2வது இன்னிங்ஸில் விரைவாக அடித்த அரைசதம், சிராஜ் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மண்ணில் எடுத்த 6 விக்கெட், 2வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் என 7 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் சரித்திரம் படைக்க உதவினர்.
பிர்மிங்ஹாமில் புதிய வரலாறு
பிர்மிங்ஹாமில் இதுவரை 8 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் பிர்மிங்ஹாமில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது.
நூறாண்டுகளாக பிர்மிங்ஹாமில் கிரிக்கெட் விளையாடியும் முதல் வெற்றிக்காக தவம் கிடந்த நிலையில் நூறாண்டுகளுக்குப்பின் கிடைத்த முதல் வரலாற்று வெற்றி, கொண்டாடப்பட வேண்டிய வெற்றியாகும். இந்த நாள் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக அமைந்திருக்கிறது.
சீனியர்கள் இல்லாமல் சாதனை
இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளதுபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது
இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இளம் வீரர்கள் வரலாற்று வெற்றி தேடித்தந்துள்ளனர்.
இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்குள் இருக்கும் இளம் வீரர்கள், 50 டெஸ்ட் போட்டியில்கூட ஆடாத அனுபவம் குறைந்தவர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் வென்றது உண்மையில் வரலாற்று வெற்றியாகும், கில் கேப்டன்ஷிப் ஏற்று கிடைக்கும் முதல் வெற்றியாகும்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இங்கிலாந்துக்கு மரணஅடி
பாஸ் பால் உத்தியைக் கையாண்டு விளையாடியது முதல், இங்கிலாந்து அணி டிரா என்றாலே என்ன என்று கேள்வி கேட்கும் விதத்தில் ஆடியது. 23 டெஸ்ட்களில் 15 போட்டிகளை வென்றிருந்தது, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், பாஸ் பால் ஆட்டத்தை ஆடும் முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இளம் இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
டாஸ் வென்று முதல் டெஸ்டில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்த டெஸ்டிலும் 2வதுமுறையாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஸ்டோக்ஸின் முடிவு தவறானது, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பாது என்பதை இளம் இந்திய அணி நிரூபித்துள்ளது.
சமநிலையில் தொடர்
இதன் மூலம் சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி வரலாற்று சிறப்பு மிகுந்த லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.