Showing posts with label Western. Show all posts


 தொழில்துறை அபிவிருத்திக்காக நேரடியாகப் பங்களிப்பு செய்யும் அரச நிறுவனங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை, ''சமூக சக்தி'' தேசிய செயற்பாட்டுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் விசேட செயலமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) நடைபெற்றது.


இந்தத் செயலமர்வில், அரச நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளுக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை இனங்காண்பது மற்றும் அந்தத் தகவல்களை ஒரு தரவுக் கட்டமைப்பில் உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


அதேபோன்று, அந்தத் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அந்தந்த நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் தன்மை மற்றும் அளவுகோல்களைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.


தொழில்துறை அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புடைய திட்டங்களுக்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்கள் குறித்தும், செயலமர்வில் கலந்துகொண்ட அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.


மேலும், இந்த வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் "சமூக சக்தி" தேசிய செயற்பாடு ஆகியன தனித்தனியாக அல்லது கூட்டாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை அடையாளம் காண்பது குறித்தும், அந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவை இரட்டிப்பாவதைத் தடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.


ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, இந்தச் செயலமர்வின் வளவாளர்களான கெலும் ஜயவீர, மாதவ முதுகுடஆரச்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், "சமூக சக்தி" செயலக அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


 


கனமழை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.


குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தாம் விலகத் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இதனை குறிப்பிட்டுள்ளார்.


அதில், ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக பணியாற்றுவதற்கான கூடுதல் பொறுப்புகள் மற்றும் தமது குடும்ப கடமைகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் உள்ள அதிகரித்து வரும் சவால்களைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதியினால் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் வரையில் தாம் ஆளுநராக கடமையாற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளது. 


எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் வகையிலும், தமது சர்வதேசத் தொடர்புகள் மற்றும் வலையமைப்புகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கவும், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக தற்போதைய தன்னார்வ பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஹனீஃப் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

 


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அஞ்சல் வசதிகளுக்கான புதிய முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. 


இங்கு ரூ. 20 மற்றும் ரூ. 70 பெறுமதியான புதிய முத்திரைகள் வெளியிடப்பட்டன.


இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் இந்த முத்திரைகள் வெளியிடப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட அஞ்சல் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர ஆகியோரும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, அஞ்சல்மா அதிபர்

எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார, பிரதி தபால்மா அதிபர் (செயற்பாடு) எச்.எம்.பிரேமச்சந்திர ஹேரத், முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் எல்.ஜி.என்.த சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் நாளை மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இதற்காக கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


 


இன்றுமுதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை வாகனங்களுக்கு பெற்றோல் பெறுவோர் கியூ ஆர் முறைமையை பயன்படுத்தத் தேவையில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


 


எரிசக்தி நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டாரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்குப் எரிபொருட்களைப் பெறுவதில் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.


எனவே, கடந்த காலங்களில் மின்சாரத்தைச் சேமிக்க பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பு வழங்கியது போன்றே, இந்தப் புத்தாண்டு காலத்திலும் பொறுப்புணர்வுடன் செயற்படவும்;.


குறிப்பாக இரவு 6 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத் தேவை மிக அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் தேவையற்ற மின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவும்.


விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும், சூரிய சக்தி மூலம் பகல்வேளையில் அதிக மின்சாரம் கிடைப்பதாலும், சமையல், துணி துவைத்தல் போன்ற பணிகளைப் பகல் நேரத்திலேயே முடித்துக் கொள்ளுமாறு இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.



 வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை பதவி விலக்குமாறு கோரிய ஆர்ப்பாட்டமொன்று பாராளுமன்ற நுழைவு பகுதியான பொல்துவ சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.


இந்த போராட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு பகுதியான பொல்துவ சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



 வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை பதவி விலக்குமாறு கோரிய ஆர்ப்பாட்டமொன்று பாராளுமன்ற நுழைவு பகுதியான பொல்துவ சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.


இந்த போராட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு பகுதியான பொல்துவ சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



 பொல்கஹவெல பங்களாவத்த பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.


வனவிலங்குகளிடமிருந்து நிலத்தைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியிலிருந்து மின் பாய்ந்தமையினாலேயே இவ் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 


குறித்த நிலத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் இன்று (06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.


எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம்.


இந்த முறைமையினால் ஊழியர்கள் கடுமையாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.


எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6ம% இலாபத்தைப் பெற்றுக்கொள்கின்றன.


எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது தடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், முன்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த விடயங்களை முன்னிறுத்தி இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.



 புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நாளை மறுதினம் (08) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.


இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர் - நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளம் நிர்வாக அலுவலகங்களாகவும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


இலங்கை விமானப் படையின் உழைப்புப் பங்களிப்புடன் இந்த பேருந்து நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.


 


நகரங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25% இனால் அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.


இதையடுத்து, நாளை (28) முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.