Showing posts with label Article. Show all posts

 


காலி முகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ITC Ratnadipa (ஐடிசி ரத்னதீப) ஹோட்டல் மற்றும் அதிசொகுசு வீட்டுத் தொகுதி இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

– ITC ரத்னதீப ஹோட்டல் திறப்பு விழாவில் ஜனாதிபதி

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

 


அமெரிக்கா CEOWORLD சஞ்சிகையால், 2024 ஆம் ஆண்டில், உங்கள் வாழ்நாளில் சென்று பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகளில் #SriLanka 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 🇱🇰


 முதல் 10 நாடுகள்....

 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட 13 வருடங்களில், 99 ஆயிரத்து 375 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. 

 


மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (89) அமெரிக்காவில் காலமானார்.


உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952, 1956ல் ஒலிம்பிக்கில் ஈழத்தமிழர் சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

 


இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும்.

யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்?

இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.

 கடந்த ஏப்ரல் 14-15ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு மத்திய கிழக்கில் வசிப்பவர்களுக்கு ஒரு நீண்ட இரவாக அமைந்தது.


அன்றிரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தியது. இது உலகின் கவனத்தையே அரபு நாடுகளின் வானத்தை நோக்கித் திருப்பியது.


சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரான் துணைத் தூதரகம் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவான கருத்து நிலவுகிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் அரபு பிராந்தியத்தின் மீதுதான் உள்ளது. எனவே, இரானின் இந்தத் தாக்குதலை உலகம் முழுவதும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தது.


இந்தத் தாக்குதல்கள் அன்றிரவின் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தனது நட்பு நாடுகளின் உதவியுடன் தற்காத்துக் கொண்டது.


இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அதன் நவீன பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், சில இஸ்ரேலின் எல்லையை அடைவதற்கு முன்பே அமெரிக்கா உள்ளிட்ட பிற நட்பு நாடுகளின் உதவியுடன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


இரானின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை தற்காத்துக்கொள்ள உதவிய நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகியவை அடங்கும்.


அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்றுமே மேற்கத்திய நாடுகள். ஆனால் இரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடான ஜோர்டானும் சுட்டு வீழ்த்திய சம்பவம், பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் ஜோர்டானை விமர்சிக்கவும் செய்தனர்.


இரான் - இஸ்ரேல்: எந்த நாட்டின் ராணுவம் வலிமையானது? இரான் தாக்குதலின் பின்னணி என்ன? முழு விவரம்


பாகிஸ்தானில் சூடுபிடித்த விவாதம்

இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானில், 'ஜோர்டான்' என்ற வார்த்தை ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் ட்ரெண்ட் ஆனது.


இதுகுறித்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும், ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருமான முஷ்டாக் அகமது கான், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் படத்தைப் பகிர்ந்து எதிர்மறையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.


முஷ்டாக்கின் இந்தப் பதிவுக்கு 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்தனர்.


'ஆசாத் டிஜிட்டல்' சமூக வலைதளத்தில் அவர், "இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க ஜோர்டான் மன்னருக்கு ஒருபோதும் மனம் வரவில்லை. ஆனால் இரான் இஸ்ரேலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியபோது, அவர் உடனே இஸ்ரேலின் உதவிக்கு வந்தார். எனக்கு இது மிகவும் மோசமான நடவடிக்கையாகப் பட்டது,” என்றார்.


இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மட்டுமின்றி ஜோர்டானிலும் விமர்சிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை, அந்நாட்டின் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


ஜோர்டானில் உள்ள ஐந்தில் ஒருவரின் மூதாதையர்கள் பாலத்தீனப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் மனைவி ராணி ரானியாவும் பாலத்தீனத்தைச் சேர்ந்தவர். காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து சமீபகாலமாக அவர் குரல் எழுப்பி வருகிறார்.


தூஸ்ஸாங் ல்யூவெர்த்யூர்: பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்து புரட்சி செய்த 'கருப்பு நெப்போலியன்'

14 ஏப்ரல் 2024

சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?


படக்குறிப்பு,ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா

ஜோர்டான், இரான் நிலைப்பாடுகள் என்ன?

இந்த விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜோர்டான் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக’ கூறப்பட்டிருக்கிறது.


அந்த அறிக்கையின்படி, “சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஜோர்டானின் வான்வெளிக்குள் வந்தன. அவை எங்கள் மக்களுக்கும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றைத் தடுத்து நிறுத்தினோம். அவற்றின் சிதிலமடைந்த பாகங்கள் ஜோர்டானின் பல இடங்களில் விழுந்தன, ஆனால் அவை யாரையும் காயப்படுத்தவில்லை.”


மேலும், “ஜோர்டானையும், அதன் குடிமக்களையும், அதன் வான்வெளியையும் பாதுகாக்க எதிர்காலத்தில் எந்தவொரு நாடு நடத்தும் தாக்குதலையும் ஜோர்டான் தடுக்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் தாக்குதலின் போது ஜோர்டான் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாங்கள் கண்காணித்து வருவதாக தாக்குதலை நடத்திய இரானின் புரட்சிகர காவலர்கள் கூறியுள்ளனர்.


ஜோர்டான் தொடர்ந்து தலையிட்டால், அந்நாடு இரானின் அடுத்த இலக்காக இருக்கலாம். ஆனால் இரானின் உள்துறை அமைச்சர் நாசர் கனானி ஒரு செய்தியாளர் சந்திப்பில், "இந்தத் தாக்குதலை இடைநிறுத்தியதில் ஜோர்டானின் பங்கு பற்றி நான் பேச முடியாது, அது ராணுவ விவகாரம்," என்று கூறினார்.


“ஜோர்டானுடனான எங்கள் உறவுகள் நட்பு ரீதியானவை. கடந்த சில மாதங்களாக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடந்தன,” என்றார்.


சமீபத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளமான 'டவர் 22' மீது இராக் போராளிக் குழுவான ‘அல்-மக்மூதா இஸ்லாமியா’வால் ட்ரோன்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.


ஜோர்டான் வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. 1990களில் இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா முன்னெடுத்த ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டபோது இஸ்ரேலுடனான அதன் உறவுகள் மேம்பட்டன.


பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்


ஜோர்டானின் வரலாறு

இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜோர்டானின் அம்மான் பகுதியில் விழுந்த இரானிய ஏவுகணையின் சிதைவுகள்

புவியியல் ரீதியாக, ஜோர்டான் மத்திய கிழக்கில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. சௌதி அரேபியா, இராக் மற்றும் சிரியாவை தவிர, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது ஜோர்டான். பாலத்தீனப் பகுதிகள் மற்றும் சிரியாவை சேர்ந்த ஏராளமானோர் ஜோர்டானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


ஜோர்டானில் முடியாட்சி உள்ளது. தற்போது இரண்டாம் அப்துல்லா ஜோர்டான் மன்னராக உள்ளார். 1946இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஹாஷிமைட் வம்சம் (அல் ஹாஷிமூன்) ஜோர்டானை ஆட்சி செய்து வருகிறது.


மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹாஷ்மி குடும்பத்தின் வரலாறு மற்றும் வம்சாவளி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோர்டான் மன்னரின் பரம்பரை இஸ்லாத்தைத் தோற்றுவித்த முகமது நபியின் வழித்தோன்றலாக வந்தது.


இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு, இந்தப் பகுதி 400 ஆண்டுகளாக உஸ்மானியா சுல்தான்களால் (உஸ்மானிய பேரரசு) ஆளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் முதல் உலகப் போரின் போது நட்பு நாடுகளுக்கு எதிராகப் போராட முடிவு செய்தது. இந்த முடிவின் மூலம், மெக்காவின் அப்போதைய அமீர் (உள்ளூர் ஆட்சியாளர்) ஷெரீப் ஹுசைன் பின் அலி, ஒட்டோமான் சுல்தானகத்திடம் இருந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பைப் பெற்றார்.


பிரிட்டன் உட்பட மற்ற கூட்டணி சக்திகளின் உதவியுடன், 1916இல் அரபு கிளர்ச்சிக்குப் பிறகு மெக்கா ஒட்டோமான் சுல்தானகத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது.


கடந்த 1917இல், ஆங்கிலோ-அரபு ராணுவம் பாலத்தீனத்தை உள்ளடக்கிய பகுதியைக் கைப்பற்றியது. 1921ஆம் ஆண்டில், பாலத்தீனம் அந்தப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு 'டிரான்ஸ் ஜோர்டான்' பகுதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஆட்சி அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஜோர்டானின் முதல் மன்னரானார்.


மெக்காவின் எமிர் ஷெரீப் ஹுசைன் பின் அலியை சர்ச்சைக்குரிய பால்ஃபோர் பிரகடனத்தில் கையொப்பமிட வைக்க பிரிட்டன் பலமுறை முயன்றது. அதற்குப் பதிலாகப் பெரிய தொகையைக் கொடுக்கவும் முயன்றது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் கூட்டணி நாடுகள் சார்பில் சௌதி குடும்பத்தினருடன் ஒப்பந்தம் ஏற்பட்டது.


பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி வழக்குகளில் அம்பேத்கர் முன்வைத்த வாதங்கள் என்ன தெரியுமா?


இஸ்ரேல்-ஜோர்டான் உறவுகள்இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,

படக்குறிப்பு,ஜோர்டான் கொடி

பால்ஃபோர் பிரகடனம், யூதர்களுக்காகத் தனி நாட்டை நிறுவ பிரிட்டன் கொண்டு வந்த ஒரு சர்ச்சைக்குரிய திட்டம். 1946 வரை, அந்தப் பகுதி பிரிட்டனின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து ஆளப்பட்டது. ஆனால் 1946இல் அது ஜோர்டானின் ஹாஷிமைட் அரசு என்ற பெயரில் ஒரு சுதந்திர நாடாக மாறியது.


கடந்த 1948 மற்றும் 1973க்கு இடையில், ஜோர்டான் இஸ்ரேலுடன் நான்கு போர்களை நடத்தியது. 1948இல் நடந்த முதல் அரபு-இஸ்ரேல் போர், 1967இல் நடந்த போர், 1967 முதல் 1970 வரை நடந்த போர், 1973இல் நடந்த போர் ஆகியவை இதில் அடங்கும்.


அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 1994ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கவில்லை.


ஜோர்டானின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, ஜோர்டானின் கொடியின் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது. இந்தக் கொடி ஒட்டோமான் சுல்தானகத்திற்கு எதிரான அரபு கிளர்ச்சியின் கொடியால் உந்தப்பட்டது.


இது மூன்று வெவ்வேறு வண்ணப் பட்டைகள் மற்றும் ஒரு சிவப்பு முக்கோணத்தைக் கொண்டுள்ளது. இந்தக் கொடியில் ஏழு புள்ளிகள் கொண்ட நட்சத்திரமும் உள்ளது.


இந்த நட்சத்திரத்தின் ஒவ்வொரு விளிம்பும் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் முதல் சூராவான 'அல்-ஃபாத்திஹா'வின் ஏழு வசனங்களைக் குறிக்கிறது. இந்தக் கொடியை பாலத்தீனக் கொடியில் இருந்து வேறுபடுத்துவது இந்த நட்சத்திரம்தா


 இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக 195 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று சாதனை படைத்துள்ளார்.

 


சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக எதிர்வரும்

ஐந்து வருடங்களுக்கு பணியாற்றுவதற்காக கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


பிரெஞ்சுத் திடல்தட வீரர் Anouk Garnier என்பவர் 100 மீட்டர் உயரத்திலுள்ள ஈபில் கோபுரத்தின் இரண்டாம் தளத்தை வெறும் 18 நிமிடத்தில் கயிற்றில் ஏறி சென்றடைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

 


இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு ‘ஈத் அல்-பித்ர்’ (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுக்கிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன.


ஆனால், உலகளவில் முக்கியமான இது போன்ற ஒரு நிகழ்வு எப்போது நிகழும் என்பது முடிவுசெய்யப்படுவது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது.


இது ஏன் என்று, பிபிசி செய்தியாளர்களான அஹ்மென் கவாஜா மற்றும் அமீர் ரவாஷ் இந்தக் கட்டுரையில் விளக்குகின்றனர்.


இஸ்லாத்தில் சந்திரனின் முக்கியத்துவம்

ரமலான் மாதம் முடிவடையும் நேரத்தில், உலகிலுள்ள 190 கோடி இஸ்லாமியர்களில் பலர் வானம் மேகமூட்டமின்றி இருக்கவேண்டும் என்று வேண்டியபடி இருப்பார்கள். காரணம், ரமலான் விருந்து துவங்குவதற்கான சமிக்ஞையைக் காணவேண்டி.


ரமலான் துவங்குவதைப் போலவே, இதுவும் பிறையைக் காண்பதிலிருந்து துவங்குகிறது.


இஸ்லாம், நிலவின் கட்டங்களின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறது. ரமலான் அதன் ஒன்பதாவது மாதத்தில் துவங்குகிறது.


ஒவ்வொரு ஆண்டும், சந்திர நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் முந்தைய சூரிய ஆண்டில் நடந்ததற்கு 11 நாட்களுக்கு முன்பு நடைபெறும்.


சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவது இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானது. இதுதான் அவர்கள் ரமலானை எப்போது கொண்டாடுகிறார்கள் என்பதை முடிவு செய்கிறது.


இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கிறார்கள், விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கிறார்கள்.


காஸாவில் 'துயரமான' ரமலான்: போரில் தாயையும் தந்தையையும் இழந்த குழந்தைகள் பெருநாளைக் கொண்டாட முடியாமல் தவிப்பு

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சூரிய கிரகணத்தின் போது ராட்சத ஆமைகள் உற்சாகமாக இனச் சேர்க்கையில் ஈடுபடுவது ஏன்?


இஸ்லாத்தின் முக்கியமன மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன


இஸ்லாமிய மாதங்கள் சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்திருந்தால், பருவங்கள் அனைவருக்கும் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதனால், உலகின் சில பகுதிகளில் வாழும் மக்கள் கோடையில் ரமலானைக் கொண்டாடுவார்கள், அங்கு பகல் நேரம் நீண்டதாக இருக்கும். மற்ற பகுதிகளில் குளிர்காலமாக இருக்கும், எனவே பகல் குறுகியவையாக இருக்கும்.


ஆனால், சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவதன் மூலம், ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் ரமலானை கடைபிடிக்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்வின் 33 வருடங்களில் நீண்ட நோன்பு நாட்கள், குறுகிய நோன்பு நாட்கள் ஆகிய அனைத்தையும் அனுபவிக்கிறார்கள்.

ஈத் அல்-பித்ர் பண்டிகை பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் வருகிறது.


ஆனால் இஸ்லாத்தில், இந்நாள் உண்மையில் எப்போது வருகிறது என்ற விவாதம் உள்ளது.


பிறையின் தோற்றத்தை அறிவிக்க, சிலர் பாரம்பரியமன சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வானியல் அவதானிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் உண்மையில் பிறை நிலவு வானில் காணப்பட்ட பின்னரே புதிய மாதத்தைக் குறிக்கின்றனர்.


இது பொதுவாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களால் செய்யப்படுகிறது, தனிநபர்களால் அல்ல.



இந்த ஆண்டு ஈத் பண்டிகை எப்போது?

சந்திரனைப் பார்த்து ஈத் பண்டிகையை நிர்ணயம் செய்பவர்கள், அவர்கள் உலகில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, ஏப்ரல் 9 (செவ்வாய்), ஏப்ரல் 10 (புதன்கிழமை), ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) ஈத் பண்டிகை அமையும்.


சந்திரனின் முதல் பிறை உண்மையில் இரவு வானத்தில் எப்போது தெரியும் என்பதைப் பொறுத்து, சந்திர மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பதால், இதைச் சரிபார்க்க ஈத் முன் இரவு வரை இஸ்லாமியர்கள் காத்திருக்க வேண்டும்.


வானில் பிறையைப் பார்ப்பவர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வானத்தை நோட்டமிடத் துவங்குவார்கள். அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் மாதத்தின் 29-வது நாளில் இந்த பிறையைத் தேடுவார்கள்.


அவர்கள் பிறையைக் கண்டால், மறுநாள் ஈத் கொண்டாட்டங்கள் நடக்கும்.


இல்லையென்றால், 30 நாள் மாதத்தை நிறைவு செய்ய இன்னும் ஒரு நாள் நோன்பு இருக்கவேண்டும்.


பிரிட்டனின் ‘HM Nautical Almanac’ அலுவலகத்தின்படி, ஈத் பண்டிகை, ஏப்ரல் 10 புதன்கிழமை அன்று அமைகிறது.



படக்குறிப்பு,

பிறையின் தோற்றத்தை அறிவிக்க, சிலர் பாரம்பரியமன சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வானியல் அவதானிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்


இஸ்லாமிய நாடுகள் ஈத் பண்டிகையை எப்படி முடிவு செய்கின்றன?

ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அமையும்.


உதாரணமாக, சௌதி அரேபியாவில் உள்ள அதிகாரிகள் - இஸ்லாத்தின் பிறப்பிடமாக இருந்த சுன்னி ஆதிக்கம் செலுத்தும் நாடு - பார்வையால் சந்திரனைக் கவனிக்கும் பொதுமக்களின் சாட்சியங்களைப் பொறுத்து ரமலான் தொடக்கத்தையும் முடிவையும் அறிவிக்கிறது.


பல நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள்.


ஆனால், ஷியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், சந்திரனைக் கண் பார்வையால் அவதானிப்பதைச் சார்ந்து இருக்கும் அரசாங்க அறிவிப்பைப் பின்பற்றுகிறது.


பெரும்பான்மையான ஷியா முஸ்லிம்கள் மற்றும் சுன்னி சிறுபான்மையினரைக் கொண்ட இராக், இந்த இரண்டு முறைகளின் கலவையைப் பின்பற்றுகிறது. அங்கு ஷியா மக்கள் செல்வாக்குமிக்க மதகுரு கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானியின் அறிவிப்பைப் பின்பற்றுகிறார்கள். சுன்னி சிறுபான்மையினர் அவர்களின் சொந்த மதகுருக்களைப் பின்பற்றுகிறார்கள்.


அதிகாரப்பூர்வமாக மதச்சார்பற்ற நாடான துருக்கி, ரமலான் தொடக்கத்தையும் முடிவையும் தீர்மானிக்க வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்துகிறது.


ஐரோப்பாவில், பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த சமூகங்களின் தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.



ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அமையும்


தமிழ்நாட்டில் என்ன குழப்பம்?

தமிழ்நாட்டில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில அமைப்புகள் நேற்று (செவ்வாய், ஏப்ரல் 9) பிறை தென்படதாக அறிவித்து, இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) ஈத் பெருநாளை அறிவித்துக் கொண்டாடிவருகின்றன. இது தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்புக்கு எதிராக இருப்பதாகப் பேசப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர் அப்துல் கரீம் இதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.


அவர், பொதுவாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் பிறையைப் பொறுத்தே அமையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, என்றார். “அதுவும், பிறை வானில் இருந்தால்மட்டும் போதாது, அது கண்ணுக்குத் தெரியவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது,” என்றார்.


“இதன் அடிப்படையில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமிழ்நாட்டை 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20-25 கிளைகள் உள்ளன. இவற்றில் பிறை வானில் தெரிவதைக் கண்காணிக்கக் குழுக்கள் உள்ளன. மாநில நிர்வாகிகள் இடையேயும் பிறை கண்காணிப்புக் குழு உள்ளது. இது ரமலான் மாதம் மட்டுமல்ல. அனைத்து மாதங்களும் நடைபெறுகிறது,” என்றார்.


மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தலைமை காஜி, கடந்த காலங்களில் அவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பிறையைப் பார்த்ததாகச் சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் பிறை தெரிந்ததாகச் சொல்லப்பட்டால் அதை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் நபிகள் சொன்ன வழிமுறைப்படி அவர்கள் இல்லை. அதனால் பிறை விஷயத்தில் அவர்களை நம்புவதில்லை,” என்றார்.


“அதனால் தான் நாங்கள் தனியாகக் குழுக்கள் அமைத்து பிறையைக் கண்காணிக்கிறோம். அதனடிப்படையில் கோவையிலும் கன்னியாகுமரியிலும் பிறை பார்த்ததாகச் சொல்லப்பட்டது. எங்கள் நிர்வாகிகள் சென்று அதனை உறுதிப்படுத்தி அறிவித்து இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) பெருநாள் கொண்டாடினோம்,” என்றார்.


முன்னதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் வெளியிட்ட அறிக்கையில், செவ்வாய்க்கிழமை இரவில் பிறை தெரியாததால், வியாழக்கிழமையன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.


 


அலுவலகத்தில் அல்லது எந்த இடத்திலாவது நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் புகைத்தலுக்கு நிகரானது.  30 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது எழுந்து நடமாட வேண்டியது அவசியம் - மருத்துவர்கள் எச்சரிக்கை

 


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் நினைவு கூறப்படுகிறது.எமது ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு சுகாதார தினம் நினைவு கூறப்படுகிறது

 


உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் வின்சென்ட் பெரஸ் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 114 என்று கூறப்படுகிறது

 



இறைவன் விரும்பும் இன்மலர் எது?
இவ் வினாவுக்கு விடையளிக்கிறது விபுலானந்த அடிகளார் எழுதிய "ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று" என்ற  கவிதை.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 132 ஆவது ஜனனதினம் இன்று (


சுவாமி விபுலானந்தர் கிழக்கில் காரைதீவில்  மார்ச் 27, 1892 இல் அவதரித்தார். இப் பூவுலகில் 55 ஆண்டுகள் வாழ்ந்து  ஜுலை 19, 1947இல் மறைந்தார்.

அவர் இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை என பல துறைகளில் இயங்கியவர்.

 இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூல் என்ற இசைவரலாற்று நூலும், மதங்க சூளாமணி என்ற நாடக ஆய்வு நூலும் இவருடைய முக்கியமான படைப்புகள்.

 முதன்மையாக தமிழிசை வரலாற்றில் மூலநூல்களில் ஒன்று என கருதப்படும் யாழ்நூல் இயற்றியவர் என அறியப்படுகிறார்.

ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று எது ?
இதோ கவிதையும் விளக்கமும்.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

விளக்கம்.
வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

விளக்கம்.
மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

விளக்கம்.
பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது.

சிந்தித்து இம்மகான்கள் ஆற்றிய மனிதநேயத்துடன்கூடிய சமய சமூக பணிகளுக்கு ஒரு யுகம் போதாது. 

வாழ்க விபுலானந்தன் புகழ்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா,
ஆலோசகர் , முன்னாள் தலைவர். சுவாமி விபுலானந்த பணி ஞாபகார்த்த மன்றம்,
காரைதீவு.

 


உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.