Showing posts with label Attack. Show all posts

 


தென் மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 


அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக இன்று கடமையேற்கும்


AC.Ahamed Shafir (SLAS) Sir

Ahamed Shafir Abdul Cader

அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூர்த்தி பிரிவின் சார்பில் வாழ்த்துக்கள்!

 


.(சுகிர்தகுமார்) 0777113659  


 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில் 03 பிரதேசத்தில் நேற்று(22) இரவு ஊருக்குள் புகுந்த முதலை ஒன்றை பிரதேச வாசிகள் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஊருக்குள் புகுந்த முதலை தொடர்பில் பொலிசாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்கள் அறிவித்தனர்.
குறித்த இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதலையினை பிடித்து பாதுகாப்பான முறையில் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

இதேநேரம் இவ்வாறன சம்பவங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் பல பகுதிகளில் இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

அருகில் குளக்கரைகள் உள்ளமையினால் அங்கிருக்கும் முதலைகள் ஊரை நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா.
இதற்கு சரியான நடவடிக்கையினை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத்தருமாறு  பிரதேச மக்கள் தெரிவித்தனர்.....


 நூருல் ஹுதா உமர்


இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அம்பாறை பிராந்திய செய்தியாளரும் , "டுடே சிலோன்" ஊடக வலையமைப்பின் பிரதம செய்தி ஆசிரியருமான எஸ்.எம். இஸட். சித்தீக் நேற்று இரவு 07.15 மணி அளவில் இனம் தெரியாத சிலரினால்  தாக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரியவரும் விடயமானது ; குறித்த செய்தியாளருக்கு சொந்தமான இறக்காமத்தில் காணப்படும் "தாய்மடி" எனும் ஓய்வகத்திற்கு முன்பாக  மறைந்திருந்து இனந்தெரியாதோர் தாக்கிய போதும்  தலைக்கவசம் அணிந்திருந்ததனால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சித்திக், குறித்த "தாய்மடி" எனும் எனது ஓய்வகத்திற்கு அருகாமையிலும் அதனை அண்டியுள்ள இருள் நிறைந்த பகுதிகளில் இரவு வேளைகளில் மறைந்திருந்து மதுபானம் மற்றும் ஏனைய  போதை வஸ்துக்களை பயன்படுத்தி வருவதனால் இவற்றைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டேன். குறித்த இடத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக சிலர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது  அவர்களுக்கு முன் எச்சரிக்கையாக இவற்றை நிறுத்தாவிட்டால் பொலிசாரிடம் தங்களை முறைப்பாடு செய்வேன் என கூறியிருந்தேன்.

அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓய்வகத்தின் வளாகத்தில்  காணப்பட்ட மேசைகள் உடைக்கப்பட்டு விடுதியின் கூரைகளும் உடைக்கப்பட்டிருந்ததோடு வானொலிப் பெட்டியும் களவாடப்பட்டு இருந்தது. அதன் பின்னரே நேற்று இரவு குழுவாக வந்த மூவர் என் மீது தாக்குதல் நடத்தினர். எனக்கு கொலை அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான  தாக்குதல்கள் கண்டிக்கத்தக்க விடயமாகும். குறித்த நபர்களை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலிசாரின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். இது தொடர்பில் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.
 


 (வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில்  திருக்கோவில், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி மற்றும் உகன ஆகிய ஐந்து பிரதேசங்களில் தலா 5 பாடசாலைகளில் மாணவர் கற்கை வள நிலையங்கள்  திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

SWOAD நிறுவனத்தினால் GCERF மற்றும் கெல்விற்றாஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற EMPOWER செயற்திட்டத்தின் கீழ் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக மாணவர்கள் மீளெழும் திறனை கட்டியெழுப்பும் நோக்கில்  இது நடைமுறைப் படுத்தப்படுகிறது. 
இங்கு கணினி ,பிறின்ரர், தளபாடங்கள், நவீன மாணவர் கதிரைகள், புத்தகங்கள், அலுமாரி முதலான பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 சுவாட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் க.பிறேமலதனின் வழிகாட்டலில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட  கோரக்களப்பு சக்தி வித்தியாலயத்தில் மாணவர்கள் கற்கை வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வானது பாடசாலை அதிபர் வி.விமலேஸ்வரன்  தலைமையில்  நடாத்தப்பட்டது.

 இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கெல்விற்றாஸ் நிறுவனத்தின் EMPOWER செயற்திட்டத்திற்கு கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற ரி.ரமேஸ் , மற்றும் கெல்விற்றாஸ் EMPOWER செயற்திட்டத்திற்கு நிதி உத்தியோகத்தர் சசிகலா  ,திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்,  பிரதி கல்விப்பணிப்பாளர் .ரி.கங்காதரன் , கோட்டக்கல்வி அதிகாரி.எஸ்.ரவீந்திரன்  ,பிரதி அதிபர் தி.தியாகராஜா,சுவாட் நிறுவனத்தின் தலைவி.திருமதி கஜேந்தினி சுவேந்திரன் , சுவாட் நிறுவனத்தின் திட்ட கள உத்தியோகத்தர்களானஎஸ்.ஆனந்தராசா , செல்வி.தீச்சிக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 மற்றும் திட்டத்தில் இணைந்து கொண்ட ஆசியரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும் மாணவர் கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

 


இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.

1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார்.

குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார்.

பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார் 


மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் அம்பாறை அரசாங்க அதிபரை பணிப்பு !


மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் ஜனாதிபதிக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் முன்னுரிமை அளித்து, இந்த விஷயத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி செயலகம் அம்பாறை அரசாங்க அதிபரை எழுத்துமூலம் பணித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமருக்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் சீ.ஏ. சுனித் லோச்சணவுக்கும் அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாகி பாவிக்க முடியாத நிலைக்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. உடனடியாக மாற்று இடத்தில் புதிய ஜனாஸா மையவாடியை அமைக்கவேண்டிய தேவை உள்ளதால் உடனடியாக புதிய காணியொன்றை இதற்காக பெறவேண்டியுள்ளது. இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து புதிய காணியொன்றை வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், காணியமைச்சர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை அரசாங்க அதிபர், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு  மாளிகைக்காடு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் கடந்த மாதம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

மேற்படி அரச முக்கியஸ்தர்களுக்கு முன்வைத்த கோரிக்கையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராம மக்களின் ஜனாஸா மையவாடி கடலரிப்பில் முழுமையாக சேதமாகியுள்ளதுடன், ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்ட போன வரலாறுகளும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் விதமாகவே ஜனாதிபதி செயலகம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த பணிப்பை விடுத்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயம் துரித கெதியில் முன்னெடுக்கும் என நம்பப்படுகிறது.


 உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன.

இந்தப் போட்டியில் இதில் ஆர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த பிரான்ஸை 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி 3ஆவது முறையாக உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

போட்டியின் 23ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெசி அழகான கோலாக மாற்றினார்.

ஆர்ஜென்டினாவின் மரியா 36ஆவது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் பெற்று முதல் பாதியிலேயே ஆர்ஜென்டினா ஆதிக்கம் பெற்றது.

பின்னர் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappé 80 மற்றும் 81ஆவது நிமிடங்களில் அபாரமான இரு கோல்களைப் பெற்று மீண்டும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார்.

இறுதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல்களைப் பெற்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இதில், ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெசி 108ஆவது நிமிடத்தில் அபாரமாக கோல் ஒன்றைப் பெற்றதோடு,பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 118ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலமாக கோல் ஒன்றைப் பெற்று மீண்டும் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

இதனையடுத்து, போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதற்காக இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஆர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த பிரான்ஸை 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் வீழ்த்தியமை விசேட அம்சமாகும்.

இறுதியாக ஆர்ஜென்டினா அணி 1978 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக இருக்கும் பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காக 2001ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 


பால் உற்பத்தியை பெருக்குதல், பால் உற்பத்தி தொடர்பான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துதல் தொடர்பாக அனைத்து நாடுகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 


ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் இரவோடிரவாக முறைப்பாடு செய்ய தயாராகியுள்ள சட்டத்தரணிகள், கள விஜயம் செய்துள்ளனர்.


ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் திசரே பெரேராவையும் 'காலு' என்று அழைத்ததாக சமூகவலைத்தளத்தில் கடந்த வார இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணிகளின் முன்னாள் கேப்டனும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்அணியின் வீரருமான டேரன் சமி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு தெரிவித்துள்ளது.

 திங்கள்கிழமையன்று 'காலு' என்று தன்னை அழைத்த அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டேரன் சமி இன்ஸ்டாகிராம் வீடியோவில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சமூகவலைதளவாசிகள் சிலர் இஷாந்த் சர்மாவின் பழைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை எடுத்து சர்ச்சையை பெரிதாக்கி உள்ளனர்.

அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் இஷாந்த் சர்மா சர்ச்சைக்குரிய அந்தச் சொல்லை டேரன் சமிக்குப் பதிலாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.

இஷாந்த் சர்மாவின் பதிவுபடத்தின் காப்புரிமைISHANT / INSTAGRAM

2014-ல் இஷாந்த் சர்மா வெளியிட்ட அந்தப் பதிவில், "நான், புவி, காலு, மற்றும் சன் ரைசர்ஸ்" என்று குறிப்பிட்டு பகிர்ந்த புகைப்படத்தில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், இடையே நிற்கும் டேரன் சமியை 'காலு' என்று குறிப்பிட்டுள்ளார்.

இஷாந்த் சர்மாவின் பழைய பதிவை இப்போது சிலர் பகிர்ந்துள்ளதால், இந்த பிரச்னை மேலும் பெரிதாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டிற்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் (Mrs.World) இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி மகுடத்தை வென்றுள்ளார்.

35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார்

அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவர் மகுடத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கம்யூனிஸ தத்துவங்களை உருவாக்கிய பொருளாதார மாமேதை கார்ல் மார்க்சிஸின் 201-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித இனம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, இந்த மாற்றங்களுக்கு எப்படி மனித உழைப்பு காரணமாக இருக்கிறது என்ற ஆழமான ஆய்வுகளை முன்வைத்தவர் மார்க்ஸ். உழைப்பினால் கிடைக்கும் பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும்போது வேறுபாடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் அகலும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தியவர் கார்ல் மார்க்ஸ். மேலும், 
1818-ம் ஆண்டு இதே நாளில் ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸ், தனது இறுதி மூச்சு வரை பொது உடைமை கொள்கையையே வலியுறுத்தி வந்தார். உழைப்பு, உழைப்பு சுரண்டலை ஆராய்ந்து அவர் எழுதிய மூலதனம் எனும் நூல் உலக பொருளாதார நிலையை விவரிக்கும். உலகத்தில் உள்ள அனைத்து  தொழிலாளர்களும் ஒன்றிணைந்து புரட்சி செய்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உருவாக்குவதே கார்ல் மார்க்ஸின் கனவு.
வார விடுமுறையை அனுபவிக்க விரும்புவீர்களா? பொது சாலைகளில் வண்டி ஓட்டுவதையும் பொது நூலகங்களை பயன்படுத்துவதையும் விரும்புவீர்களா?
அநீதி, ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர விரும்புபவர்களில் நீங்களும் ஒருவரா?
அப்படியானால், கார்ல் மார்க்ஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க நீங்கள் விரும்புவீர்கள். ஏனெனில் இந்த மாற்றங்களை அவர் கொண்டு வந்தார்.
20 ஆம் நூற்றாண்டின் வரலாறு குறித்து மேலோட்டமான அறிவு கொண்டவர்களுக்கும் கூட மார்க்சிஸ்ட் புரட்சிகர அரசியலுக்கு கடமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
அவரது எண்ணங்கள் சமூக மாற்றங்களைத் தூண்டும் விதமாக கருதப்பட்டு, ஏற்கப்பட்டன. அதில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்ல் மார்க்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அவரது கோட்பாடுகள், சுதந்திரம் இல்லா மற்றும் மாபெரும் படுகொலைகள் இல்லா சர்வாதிபத்தியத்துடன் தொடர்பு கொண்டதாயிற்று. மார்க்ஸ் கொள்கைகள் பிரிவினை வாதம் கொண்டதாக தொடர்ந்து கருதப்படுவது வியப்பிற்குரியதல்ல.
ஆனால், மார்க்ஸ்சின் மற்றொரு மனிதாபிமான முகம் மற்றும் அவரது எண்ணங்கள் இந்த உலகத்தை சிறப்பாக மாற்ற பங்களித்துள்ளது.
மார்க்ஸ் சில விஷயங்களை சரியாகக் கொண்டிருந்தார்: அதி பணக்காரர்கள் கொண்ட சிறு குழுவினர் உலகின் பொருளாதாரத்தை மேலாதிக்கம் செய்ய வரும், முதலாளித்துவ முறை எளிதில் பற்றிக்கொள்ளக்கூடியது, பொருளாதார நெருக்கடியால் நம்மில் பாதிபேரைக் கொல்லக்கூடியது, தொழில்மயமாக்கல் மனித உறவுகளை மாற்றும்.
இப்படி இருந்தும் கார்ல் மார்க்ஸ் நமக்கு எதுவும் செய்யவில்லை என்று எண்ணுகின்றீர்களா? அவர் 21ம் நூற்றாண்டிற்கு என்ன செய்தார் என்பதை அறிந்து கொள்ள வாசியுங்கள்.
கார்ல் மார்க்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
1.அவர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பினார், வேலைக்கு அல்ல.
இது பெரும்பாலானோர் விடுக்கும் அறிக்கை. 1848ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை தயார் செய்துகொண்டிருந்த நேரம் குழந்தை தொழிலாளர் என்பது நியதியாக இருந்தது. இன்றும் பத்தில் ஒரு குழந்தை உலகில் குழந்தை தொழிலாளராக இருக்கிறது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணக்கு சொல்கிறது (2016). தொழிற்சாலைகளில் இருந்து பள்ளிக்கு இந்த அளவு குழந்தைகள் செல்லத் தொடங்கியதற்கு மார்க்ஸ்சிற்கு அந்த குழந்தைகள் கடமைப்பட்டுள்ளன.
மாபெரும் பொருளாதார நிபுணர்கள்: அவர்கள் எண்ணங்கள் இன்று நமக்கு உதவுவது எப்படி என்ற நூலாசிரியர் லிண்டா யுவே கூறுகிறார், " மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஆகியோரின் 1848ன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து அம்சங்களில் ஒன்று, அனைத்து குழந்தைகளுக்கும் பொதுப்பள்ளிகளில் இலவசக் கல்வி, தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பது என்பதாகும்."
''குழந்தைகளின் உரிமைக்காக முதலில் குரல் கொடுத்தது மார்க்ஸ், எங்கல்ஸ் அல்ல. ஆனால், மார்க்சியம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிளம்பிய குரலுக்கு வலுசேர்த்தது. அந்த காலகட்டத்தில் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இளம் குழந்தைகள் தொழிற்சாலைகளில் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை." என்கிறார் யுவே.
கார்ல் மார்க்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
2.உங்களுக்கு ஓய்வு நேரம் வேண்டும் என்றார். மேலும் அந்த ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியதும் நீங்கள் தான் என்றார்.
இப்போது நீங்கள் நாளொன்றுக்கு 24 மணி நேரம் வேலைசெய்ய வேண்டியதில்லை வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டியதில்லை என்ற மகிழ்ச்சியை அனுபவிக்கிறீர்களா? மதிய உணவு இடைவேளை வேண்டுமா?. வயதானதும் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற விரும்புகிறீர்களா?
உங்கள் விடை இதில் ஏதேனும் ஒன்றிற்கு ஆம் என்றால், நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது மார்க்ஸ் அவர்களுக்குத்தான்.
லண்டன் பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் மைக் சேவேஜ் கூறுகிறார், "நீண்ட மணி நேரம் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டால், உங்கள் நேரம் உங்களுடையது அல்ல. உங்கள் சொந்த உயிருக்கு நீங்கள் இனிமேலும் பொறுப்பு இல்லை."
முதலாளித்துவ சமுதாயத்தில் எப்படி வாழ்வது என்பதைப்பற்றி மார்க்ஸ் எழுதியுள்ளார். பெரும்பாலானோர் தங்களிடம் உள்ள ஒரே ஒரு விஷயத்தை-தங்கள் உழைப்பை- பணத்திற்காக விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்ஸைப் பொறுத்தவரையில் இது பெரும்பாலும் சமச்சீரற்ற பரிவர்த்தனை. இது சுரண்டலுக்கு வழிவகுக்கும், அந்நியமயமாதலுக்கும் வழிவகுக்கும். அடிப்படை மனிதகுலத்துடன் தொடர்பு அறுந்து போன உணர்வை ஏற்படுத்தும்.
தன் சக தொழிலாளர்களுக்கு மார்க்ஸ் மேலும் உரிமைகள் வேண்டும் என்று பாடுபட்டார். தொழிலாளர்கள் சுயேச்சையாக இருக்கவேண்டும், படைப்பாற்றலுடன் இருக்கவேண்டும் இவற்றுக்கும் மேலாக தங்கள் சொந்த நேரத்திற்கு உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
"அடிப்படையில், நாம் வாழும் வாழ்வு நாம் செய்யும் வேலையின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படாததாக இருக்கவேண்டும் என்ற மார்க்ஸ் கூறுகிறார். ஓரளவு சுயாட்சி கொண்ட வாழ்க்கை, நாம் எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய நிலை இருக்க வேண்டும். இப்போதெல்லாம் இந்த கருத்துகள் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளக்கூடிய லட்சியங்களாகி உள்ளன." என்கிறார் சேவேஜ்.
"மார்க்ஸ் பிரபலமான கருத்து ஒன்றை வைத்திருந்தார், காலையில் வேட்டையாடி, மதியம் மீன் பிடித்து, மாலையில் கால்நடைகளை மேய்த்து, இரவில் உணவுக்குப்பின் திறனாய வேண்டும்." விடுதலை, மீட்பு மற்றும் அந்நியப்படுத்தலுக்கு எதிராக சண்டையிடுதல்." என்றும் அவர் கூறுகிறார்.
கார்ல் மார்க்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
3உங்களுக்கு பணியில் மனநிறைவு வேண்டும் என்று அவர் விரும்பினார்.
உங்கள் வேலையில் உங்களுக்கு மிகுந்த ஆனந்தம் எப்போது கிடைக்கும் என்றால், "தாங்கள் செய்த பணியில் தங்களைக் காணும் சூழல் ஏற்படும் போது தான்."
வேலை நமக்கு படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும், நம்மைப்பற்றிய நல்ல விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய மனித நேயமோ, நம்முடைய புலனறிவோ அல்லது திறனோ இவற்றை வெளிப்படுத்தும் விஷயமாக இருக்க வேண்டும்.
உங்கள் வேலை அவலமானதாக இருந்தால், உங்கள் உணர்வுத்திறனை பயன்படுத்தாத ஒன்றாக இருந்தால், நீங்கள் வெறுப்படைந்து மனமுறிவு கொள்வீர்கள். அந்நியப்படுத்தவும் செய்யலாம். இவை சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள இதமாக பேசக்கூடிய எழுச்சியூட்டும் சொற்பொழிவாளர்கள் பேசும் சமீபத்திய வார்த்தைகள் அல்ல. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனின் வார்த்தைகள்.
அவர் 1844 வெளியான பொருளாதாரம் மற்றும் தத்துவ ஏடுகள் என்ற தனது முந்தைய புத்தகத்தில் மார்க்ஸ் நலன் சார்ந்த பணி மனநிறைவு குறித்து சிந்தித்த முதலாவது சிந்தனையாளர்களில் ஒருவர். நாம் அதிக நேரம் வேலையில் செலவிடுகிறோம். எனவே நாம் அந்த வேலையின் மூலம் சிறிது மகிழ்ச்சியை பெறவேண்டும் என்று அவர் காரணம்சொல்கிறார்.
நீங்கள் படைத்தவற்றில் அழகை எதிர்பார்ப்பது அல்லது நீங்கள் உற்பத்தி செய்வதில் பெருமிதத்தை அனுபவிப்பது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய வகையில் பணியில் மனநிறைவுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார்.
முதலாளித்துவம் தனது வேகத்திற்கான தேடலில், அதிகரிக்கும் உற்பத்தியில் மற்றும் லாபம் ஆகியவை காரணமாக வேலையை மிகவும் நிபுணத்துவம் வாய்ந்ததாக ஆக்கியுள்ளது.
நாள் முழுவதும் ஒரு ஸ்க்ரூவில் மூன்று திருகுகள் மட்டும் இழைக்கவேண்டும், அதுவும் ஒரு நாளைக்கு முடிவே இல்லாமல் பல ஆயிரம் முறை செய்யவேண்டுமானால் உங்களால் அதில் மகிழ்ச்சியைக் காண்பது கடினம்.
கார்ல் மார்க்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
4.மக்களை மாற்றத்திற்கான காரணியாக வேண்டும் என்று அவர் விரும்பினார்.
உங்கள் சமுதாயத்தில் ஏதேனும் தவறு இருந்தது என்றால், நீங்கள் ஏதேனும் அநீதி, அநியாயம் அல்லது சமத்துவம் இல்லாதிருப்பதை உணர்ந்தால், நீங்கள் பிரச்சினை எழுப்பி, மக்களை திரட்டி நீங்கள் போராடி மாற்றத்திற்காக பாடுபடவேண்டும.
19ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில், புதிய முதலாளித்துவ சமுதாயம், அதிகாரமற்ற ஊழியரை, உறுதியான மற்றும் நகர்த்த முடியாத கல்லாகப் பார்த்திருக்கலாம்.
ஆனால் கார்ல் மார்க்ஸ் மாற்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார், மற்றவர்களையும் அதைக் கடைபிடிக்க உற்சாகப்படுத்தினார். இந்த எண்ணத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பல நாடுகளில் சமுதாய பழுது நீக்கலுக்கு பெரும் வழிவகுத்தது. இன அடக்குமுறைக்கு எதிராக, ஓரினச்சேர்க்கைக்கு விரோதமாக, வகுப்புவாரி ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.
லண்டனில் மார்க்சியம் திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவரான லூயிஸ் நீல்சன் கூறுகையில், "ஒரு சமுதாயத்தை மாற்ற உங்களுக்கு புரட்சி தேவை; நாம் சமுதாயத்தை மேம்படுத்த ஆர்ப்பாட்டம் செய்கிறோம். இதன் மூலம்தான் சாமான்ய மக்களுக்கு தேசிய சுகாதாரத்திட்டம் மற்றும் நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்யும் உரிமையை பெற முடிந்தது."
மார்க்ஸ் பெரும்பாலும் தத்துவஞானியாக பார்க்கப்படுகிறார். ஆனால் நீல்சன் அதை ஏற்க மறுக்கிறார். "அவர் ஏதோ தத்துவம் செய்யவே பாடுபட்டார் என்றும் கோட்பாடுகளை இயற்றவே முயன்றார் என்றும் பிரமையை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் மார்க்ஸ் தன் வாழ் நாளில் செய்தது என்ன என்று பார்த்தால், அவர் ஒரு கொள்கையாளராக இருந்தார். அவர் சர்வதேச தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தினார். அவர் போராடும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
"அவரது கோஷமான "உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்பது ஆயுதம் தூக்க விடுத்த அழைப்பு. நாம் மேம்படுத்துவதற்காக போராடவேண்டும் என்ற பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதே மார்க்சின் உண்மையான கொடையாக இருந்தது. அது மார்க்சிஸ்ட் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தது. போராடுபவர்கள் அனைவரும் தங்களை மார்க்சிஸ்டுகள் என்று கூறிக்கொள்கிறார்களா இல்லையா என்பது வேறு கேள்வி." என்கிறார் அவர்.
பெண்கள் தேர்தலில் எப்படி வென்றார்கள்? என்கிறார் நீல்சன்.
நாடாளுமன்றத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் மீது இரக்கப்பட்டு இந்த உரிமையை தரவில்லை, பெண்கள் திரண்டு போராடினார்கள். நாம் வார இறுதி விடுமுறையை எப்படி பெற்றோம்? எப்படியெனில், தொழிற்சங்கங்கள் இதற்காக போராட்டத்தில் குதித்தன. சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்த நாம் எப்படி ஒவ்வொன்றிலும் வெற்றிபெற்றோம்?
மார்க்ஸ் சமுதாய மாற்றத்திற்காக போராடும் என்ஜினாக செயல்பட்டார். பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் தலைவர் குவின்டின் ஹாக் 1943ல் கூறினார், "நாம் அவர்களுக்கு சீர்திருத்தத்தை கொடுக்க வேண்டும் அல்லது அவர்கள் நமக்கு புரட்சியை வழங்குவார்கள்."
கார்ல் மார்க்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
5.அரசு பற்றி எச்சரித்தார், பெரிய தொழில்கள் மிகவும் வசதியாக மாறிவருகிறது என்றார். மேலும் ஊடகங்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
அரசுகளுக்கும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
கூகுள் சீனாவுக்கு பின்கதவு சாவியைக் கொடுத்தது குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
பேஸ்புக் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வாக்காளர்கள் விருப்பங்களை மாற்றக்கூடிய முறைமையை கட்டமைக்கும் நிறுவனத்திற்கு வெளியிட்டது குறித்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஏற்கனவே இதுபோன்ற எதிர்ப்புகளை 19ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டனர்.
ஆம் அவர்கள் அன்றைக்கு சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ஈடுபடவில்லை. ஆனால் போனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பேராசிரியரும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருமான வலேரியா வீஸ் கூறுகையில், ''அவர்கள் இருவரும் இதன் அபாயங்களை முதல் முறையாக இனங்கண்டு ஆய்ந்து விளக்கியவர்கள்'' என்கிறார்.
மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ், அரசுகளுக்கும், வங்கிகளுக்கும், வர்த்தகத்துறைக்கும் காலனிமயமாக்கலுக்கு பிரதான காரணியாக திகழ்ந்த ஒத்துழைப்பு வலையங்கள் குறித்து மிகவும் கவனமாக ஆராய்ந்தனர். ஆனால் அவர்கள் இதை 15ம் நூற்றாண்டிலேயே இது பற்றி சொன்னார்கள்" என்றார் வேக் வீஸ்.
ஆனால் அவர்கள் நிறைவாக என்ன சொன்னார்கள்? ஒரு நடைமுறை, அது கண்டிக்கத்தக்கதோ இல்லையோ? வர்த்தகத்திற்கும் அரசுக்கும் நல்லதாக நிரூபணம் ஆனது. உதாரணத்திற்கு அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை மேலும் விரிவு படுத்தும், சட்டம் இயற்றுவதும் அதற்கு ஆதரவாக அமையும், என்கிறார் வேக் வீஸ்.
மார்க்ஸ் அதிகார வர்க்கம் மற்றும் ஊடகம் குறித்து தெரிவித்த கூரான கருத்துகள் 21 ஆம் நூற்றாண்டிலும் புதிதான கருத்து போல பார்க்க வைக்கிறது.
"ஊடகங்கள் மக்களிடையே கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்த முக்கியமானது என்பதை உணர்ந்தார். இன்று நாம் போலிச்செய்தி பற்றியும், ஊடகங்கள் அலறுவது பற்றியும் பேசுகிறோம். ஆனால் மார்க்ஸ் என்றைக்கோ இதுபற்றி கருத்து தெரிவித்து விட்டார்" என்கிறார் வேக் வீஸ்.
அந்த காலகட்டத்தில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளை பகுப்பாய்ந்த அவர், இந்த கருத்தினை எட்டினார்: சிறு குற்றங்கள், மற்றும் ஏழை மக்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் மிகைப்படுத்தப்பட்டு அளவுக்கு அதிகமாக செய்தியாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் செல்வாக்கானர்கள் புரியும் குற்றங்கள், அரசியல் மோசடிகள் குறைவாக தெரிவிக்கப்படுகின்றன" என்கிறார் வேக் வீஸ்.
சமுதாயத்தை உடைக்க தேவையான பயனுள்ள வாகனம் ஊடகம்.
கார்ல் மார்க்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"ஆங்கிலேயர்களிடம் இருந்து வேலையை அயர்லாந்து மக்கள் திருடுகின்றனர் என்று சொல்வது, கருப்பர்களுக்கம் வெள்ளையின மக்களுக்கும் இடையே மோதலை தூண்டிவிடுவது, பெண்களுக்கு எதிராக ஆண்களை தூண்டிவிடுவது, உள்ளூர் மக்களை வந்தேறிகளுக்கு எதிராக தூண்டிவிடுவது, ஏழை மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு இருந்தபோது, அதிகார வர்க்கத்தினர் எந்த தடையும் இன்றி தப்பினர்." என்கிறார் வேக் வீஸ்.
இன்னொரு விஷயம், முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்னரே மார்க்சியம் தோன்றியது.
இந்த தகவல் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால்இதையும் பாருங்கள். இந்த உலகம் முதலாளித்துவம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் மார்க்சியம் பற்றி ஏற்கனவே வாசித்துவிட்டது.
யூவே சொல்கிறார், முதலாளித்துவம் என்ற சொல் பொருளாதாரத்தின் தந்தை என்று கருதப்படும் ஆடம் ஸ்மித் என்பவரால் இயற்றப்பட்டதில்லை. அவர் சந்தையில் உள்ள "கண்ணுக்கு தெரியாத கை" என்ற சொல்லைத்தான் அவர் பயன்படுத்தினார். ஆனால் 1854வில் வெளிவந்த நாவல் ஒன்றில் வில்லியம் மேக்பீஸ் தாக்கரே என்பவர் இதனைக் குறிப்பிட்டு இருந்தார்.
"முதலாளித்துவம் என்ற சொல்லை, தாக்கரே முதலீட்டின் சொந்தக்காரர் என்பதை குறிக்கும் விதமாக குறிப்பிட்டு இருந்தார்." என்கிறார் யூவே
"எனவே முதலாளித்துவம் என்ற சொல்லை பொருளாதாரத்தில் பயன்படுத்தியவர் கார்ல் மார்க்ஸ், அவர் தனது 1867 ஆம் ஆண்டு இயற்றிய கேப்பிட்டல் (டாஸ் கேப்பிட்டல்) என்ற நூலில் இதனை பயன்படுத்தியிருந்தார். அதன் பின்னர் மார்க்சியம் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் முதலாளித்துவம் என்ற சொல் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியது."

சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. 

அப்பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குழு ஒன்றினால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் மருந்து வகைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன் ஐ.எஸ் அமைப்பின் இலாஞ்சனையுடனான கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை அடுத்து, அம்பாறை பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

மட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி நபர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு தீக்கிரை

(பழுலுல்லாஹ் பர்ஹான்) 

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி நபர்களுக்கு சொந்தமான இரண்டு மீன்பிடி படகு 21 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மேற்படி படகுகளில் ஒரு படகின் முன்பகுதி அதிகம் சேதமடைந்துள்ளதாகவும் மற்றைய படகு  சிறிதாக சேதமடைந்துள்ளதாகவும் இதனை சரி செய்வதற்கு சுமார் 20 இலட்சம் ரூபா தேவைப்படும் எனவும் குறித்த செயலில் ஈடுபட்டவர்களை பொலிசார் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி நட்ட ஈடுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த படகு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும்  படகு உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொச்சிக்கடை - ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்த வெடிகுண்டு பாதுகாப்பு தரப்பினரால் தகர்க்கப்பட்டது.

குறித்த வானுக்குள், 4 சமையல் எரிவாயுச் சிலிண்டர்களை இணைத்துப் பொருத்தப்பட்டிருந்த இந்தக் குண்டு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயழிலக்கும் பிரிவால் செயலிழக்கப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த குண்டில் நூல் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும் அந்த நூலின் மறு நுனியில், ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாணயத்தாளைக் காண்பவர்கள், அதனை எடுக்க முற்படும்போது, ​வெடிகுண்டு வெடிக்கும் வகையிலேயே சூட்சுமமான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு ​தகர்க்கச் செய்யப்பட்டதாகவும் இதன்போது, பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்புத் துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.