Showing posts with label Exhibition. Show all posts



 (வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் குறிப்பாக திருகோணமலை நகரில் நடுக்கடலில் அமையப்பெற்ற சோபர்ஸ் தீவு சுற்றுலாவிகளை சுண்டி இழுத்து வருகின்றது.

திருகோணமலையில் நிலாவெளி, பளிங்கு கடற்கரை, கன்னியா வெந்நீர் ஊற்று, திருக்கோணேஸ்வரர் ஆலயம் என்று பல சுற்றுலா தளங்கள்  இருக்கின்றன .

அதில் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டில் திருமலை நகரில் உள்ள கடலில் நடுவே உள்ள சோபஸ் தீவு முக்கிய இடம் பிடிக்கின்றது . முன்பு இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. 

அண்மை காலமாக அங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாவிகள் கடல் படகு பயணத்தை மேற்கொண்டு அந்த தீவுக்கு சென்று வருகின்றார்கள் .
இவ்வாரம் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 91 /92 புலன அணியினர் அங்கு  நேரடியாக சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கடற்பரப்பில் மொத்தமாக 12 தீவுகள் இருக்கின்றன. அதில் மிகப் பெரிய தீவு இந்த சோபர்ஸ் தீவாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக உள்ள ஒரு பெரும் தீவு .இந்த சோபர்ஸ் தீவு 175 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. 
பிரிட்டிஷ் நாட்டு இளம் வீரர் 1672ல் இங்கு உயிர்த்தியாகம்  செய்தவர் .அவரது பெயர் இந்தத்தீவுக்கு இடப்பட்டிருக்கிறது.

 கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில் இந்த தீவு அமைந்துள்ளது. 
இங்கு ராணுவ தளவாடங்கள்  களஞ்சிய அறை கல்லறைகள் பாரிய  போர் தளபாடங்கள்  அமைந்துள்ளன.

அங்கு ஒல்லாந்தர் போத்துக்கீசர் ஆங்கிலேயர் காலத்து ராணுவ தளங்கள் இன்றும் பழமை குன்றாமல் பேணப்பட்டு வருகின்றது .
சிறந்த உணவகம் அங்கே காணப்படுகின்றது. சுற்றுலாவிகள் சுவையான உணவுகளை இங்கு பெறலாம்.அங்கு மலை உச்சியில்  ஏறி நின்று பார்க்கின்ற பொழுது முழு திருமலை நகரத்தையும் பார்க்கலாம் .

20 அடி உயரமான ஏணியில் ஏறி அழகான காட்சிகளை காண்பது இங்கு ஒரு விசேட அம்சமாகும். 

இவ்வாண்டில் இதுவரை இலங்கைக்கு 18 லட்சத்து 78 ஆயிரம் சுற்றுலாவிகள் வருகை தந்திருக்கின்றார்கள்
. நாடெங்கும் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் . இங்கும் தினமும் வருகை தருகின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை இலங்கை மின்சார சபைக்கு நிரந்தரமாக அல் மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள அரச காணியினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் (29) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா  தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் ஒருங்கிணப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் உதுமாலெப்பை,கவி.கோடிஸ்வரன், எம்.எஸ் அப்துல் வாசீத்,சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர்,ஏ.எம்.எம் நெளசாத்,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,கணக்காளர் எ.எஸ்.எல் சர்தார் மிர்ஸா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இலங்கை மின்சார சபைக்கு நிரந்தரமாக அல் மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள அரச நிலத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது அத்தோடு சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள்,புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கும் வீதி பிரச்சினைகள்,வீதி மின் விளக்கு சார்ந்த பிரச்சினைகள்,சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், அல் அமீர் பாடசாலையில் உள்ளக அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள்,வீரமுனை இந்துமயான பிரச்சினைக்கான தீர்வு,சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பெளதீக மற்றும் உள்ளக சார்ந்த பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்,விவசாய காணி சம்மந்தமான பிரச்சினைகள்,நீர்ப்பாசன  பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும்.தீர்வுகளும்,  கலந்தாலோசிக்கப்பட்டு  முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதோடு இன்னும் பல முடிவுகளும் எடுக்கப்பட்டன குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 


♦புத்தகக் காட்சி எங்கே நடக்கிறது? ♦எப்படி வருவது?
5 ஆவது அக்கரைப்பற்று புத்தகக் காட்சி இன்று கோலாகலமாக ஆரம்பிக்கிறது.
மாலை 4.00 மணிக்கு தொடக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
நீதிபதி பயாஸ் றஸாக் கௌரவ அதிதியாகவும், சமுத்ர புத்தகசாலையின் பணிப்பாளர் திருமதி சமுத்ரிகா டி சில்வா விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இன்று ஜூன் 10 ஆம் திகதி செவ்வாய் தொடக்கம் ஜூன் 15 ஞாயிறு வரை, 6 நாட்களாக இது நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
தினமும் காலை 10.00 மணி முதல், இரவு 10.00 மணிவரை புத்தக விற்பனை நடக்கும்.
♦இடம்: நீர்ப் பூங்கா (Water Park)
அக்கரைப்பற்று பிரதான வீதியில் (Main Street) அரச அலுவலகங்கள் பல உள்ள இடத்திற்கு அருகிலேயே இது அமைந்துள்ளது.
✨Water Board, Telecom, DS Office, Zonal Director of Education (ZDE) Office ஆகியவற்றிற்கு அருகாமையில்...
✨Cargills Food City இற்கு முன்பாக...
பிரதான வீதியில் வந்திறங்கினால் நடை தூரம்.
அழகிய இயற்கைச் சூழல்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
✨நண்பர்கள், உறவினர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
✨வாசிப்பை வளர்ப்போம். புத்தகக் கலாச்சாரத்தைத் தூண்டுவோம்
✨நண்பர்களே புத்தகக் காட்சி பற்றி எழுதுங்கள்.
✨இது தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து உதவுங்கள்.
மிக்க அன்பும் நன்றியும்.
சிராஜ் மஷ்ஹூர்,
பிரதான ஏற்பாட்டாளர்,
அக்கரைப்பற்று புத்தகக் காட்சி,
10.06.2025

 


இசைஞானி இளையராஜாவின் புதல்வி பவதாரிணி காலமானதை அடுத்து சூரியனின் ஊடக அனுசரணையில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

 (சுகிர்தகுமார்) 0777113659 



 அம்பாரை மாவட்டம் விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையிலான மாபெரும் பட்டத்திருவிழா வரலாற்றில் முதல் தடவையாக மிக பிரமாண்டமான முறையில் நேற்று (15) மாலை விநாயகபுரம் கடற்கரை முற்ற வெளியில் இடம்பெற்றது.
வலம்புரியோன் அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் தலைமையில் விநாயபகபுரம் முத்துலெட்சுமி நகையகத்தின் உரிமையாளர் சி.சஞ்ஜீவனின் முழுதான அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் குருமார்கள் மற்றும் வங்கி முகாமையாளர்கள் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பட்டம் விடும் போட்டி ஆண்களுக்கான கயிறுழுத்தல் பெண்களுக்கான சங்கீதக்கதிரை மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் இன்னிசை நிகழ்ச்சியும் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.
பட்டத்திருவிழா கலந்து கொண்ட அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இதில் அதிகளாவனவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு; வண்ணமயம் மிக்க வித்தியாசமான பட்டங்களை வானில் பறக்கவிட்டதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
இதேநேரம் இன்னிசை நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில் உள்ளுர் வெளியூர் கலைஞர்களும் பங்கேற்று பல பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்சிப்படுத்தினர்.
கயிறு இழுத்தல் போட்டி மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கான போட்டிகளும் இடம்பெற்றது.
பட்டம் விடும் போட்டியில் கலந்து கொண்ட முதலிடம் பெற்றவருக்கு 30ஆயிரமும் இரண்டாம் இடம் பெற்றவருக்கு 20ஆயிரமும் மூன்றாம் இடம்பெற்றவருக்கு 10 ஆயிரமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் 7 ஆறுதல் பரிசில்களும் ஏனைய போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக நிகழ்விற்கு பூரண அனுசரணை வழங்கிய சஞ்சீவன் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இன்னும் சிலர் பாராட்டப்பட்டனர்.  

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.