Showing posts with label Toture. Show all posts



 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ளுதல் என்பது தொடர்பான கருத்தரங்கு அதிபர் ஏ. ஜீ.எம். றிஷாத் அவர்களின் தலைமையில் 2025.08.19ம் திகதி  நடைபெற்றது.

உலக வங்கியின்"Gem project"திட்டத்தின் கீழ்  நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு வளவாளராக,  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆங்கில பாட இணைப்பாளர் திரு. ஏ.எல்.எம். ஆரிப் அவர்கள் கலந்து கொண்டார்.

தற்காலத்தில் மாணவர்கள் எவ்வாறு நவீன முறையிலான கற்றல்களுக்கு முகம் கொடுக்க வேண்டும், அவற்றிற்கு பயன் படுத்தக்கூடிய மென்பொருள் செயலிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் போன்றவைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விளக்கங்களையும் செயன்முறை மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் , மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் 

 


பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் இன்று (15) காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹாலி எல உடுவர பகுதியைச் சேர்ந்த குழுவொன்றை ஏற்றிச் சென்ற தனியார் யாத்திரை பேருந்து, கண்டி நோக்கிச் சென்றபோது, துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர்களில் பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.