Showing posts with label Janaaza. Show all posts




 #ஜனாஸா_அறிவித்தல்! 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் (Planning) பிரதிக் கல்விப் பணிப்பாளர் சகோதரி J.தாஜுன்னிஷா அவர்கள் இன்று மாலை இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


தனது வறுமையிலும் கல்வியால் உயர்ந்து SLEAS அதிகாரியாக தனது பயணத்தை ஆரம்பித்த சில வருடங்களிலேயே இந்த இளம் வயதில் இவ்வுலகை விட்டும் பிரிந்து விட்டார் என்கின்ற செய்தியை மனம் ஏற்க மறுக்கின்றது. 

ஓட்டமாவடி - மாஞ்சோலை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஷாவின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (20) சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.
ஒரு ஆண் குழந்தையின் தாயான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஷா மரணிக்கும் போது அவருக்கு வயது 35 ஆகும்.
இருத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த போதும் தனது கடமையினை திறன்பட மேற்கொண்ட ஒரு சிறந்த அதிகாரியாக அவர் காணப்பட்டார்.

எமது சமூகப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு பெண்மணி.இன்றைய அவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகவே பார்க்கிறோம்.


அன்னாரது கணவர் சகோதரர் மைசான் மற்றும் அவரது குழந்தை ஆகியோருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது மறுமை வாழ்வு ஈடேற்றம் உள்ளாதாக அமைய வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.



 சம்மாந்துறையைச் சேர்ந்தசட்டத்தரணியும், பிரசித்த நொத்தாரிசுமான *A.M.M.பிர்னாஸ்* அவர்களின் தந்தையும் *திருமணப் பதிவாளரும் சம்மாந்துறை தப்லீகுல் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஹசனார் மௌலவி* நேற்று சனிக்கிழமை காலமானார்.


 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை ளுகர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.



 


நிந்தவூரைச் சேர்ந்த மூத்த இலக்கியவாதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான முத்துமீரான் இன்று வயது மூப்பின் காரணமாக 83 வது வயதில் காலமானார்.

நிந்தவூர், பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலை இலக்கிய ஆளுமை எஸ். முத்துமீரான்.

இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பல்துறைப் படைப்பாளி


1957ல் தனது 16 வது வயதில் இலங்கை வானொலியில் நாடக ஆசிரியராக கலையுலகப்  பிரவேசம் பெற்றவர், 


 ஐந்து சிறுகதை நூல்கள்,ஆறு நாட்டாரியல் தொகுப்பு,ஆய்வு நூல்கள், மூன்று கவிதை நூல்கள் ,இரண்டு உருவகைக் கதை நூல்கள்,ஒரு நாடகத் தொகுப்பு என்பவை உள்ளடங்கலாக 20

 நூல்களை   இன்று வரை இலக்கிய உலகத்திற்குத் தந்திருப்பவர்,


தன்னை ஒரு கிராமத்தான்,நாட்டுப்புறத்தான் என்று சொல்லிக்  கொள்வதிலே பெருமைப்பட்டுக் கொள்ளும் முத்துமீரான் கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பட்டதாரியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமாவார்.


அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான கலை இலக்கியப் பரிச்சயமுடைய இவர்,


ஈழத்துப் படைப்பாளர்களில்  தனித்துவ  அடையாளம் பெற்றிருப்பவர்..அன்றாடம்  நாம் காணும் காட்சிகள், பழகும் மாந்தர்கள் நமது வாழ்வு என்பவற்றை தனது படைப்புகளில் கச்சிதமாகக் கொண்டு வருபவர்,


கிராமிய மண் வளம்,பேச்சுமொழி என்பவற்றை அப்பி வருபவை அவரின் படைப்புக்கள்..நமது பண்பாட்டுக் கோலங்களை அவரின் சிறுகதைகள், கவிதைகள்,நாடகங்கள்,என்பவற்றில் நாம் தரிசிக்கலாம்.  அவரின் படைப்புகள் யதார்த்தத்திற்கு  மிக நெருக்கமானவை.


ஏனைய எழுத்தாளர்களிடமிருந்து முத்துமீரானை வேறுபடுத்திக் காட்டுவது,அவருடைய நாட்டாரியல்  செயற்பாடுகள்தான்.

எஸ். முத்துமீரான்.

  .கிழக்கிலங்கை முஸ்லிம்களின்       கிராமியக் கவியமுதம்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய் மொழிக் கதைகள்

கிழக்கிலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பூர்வீகமும் – வாழ்வும் வாழ்வாதாரங்களும் என்ற


நாட்டாரியல் ஆய்வுகள் மூலம்  தமிழ் நாட்டிலும் பிரபலம் பெற்றிருக்கிறார். அங்கு ,இவருடைய நூல்கள் பல்கலைக் கழகங்களில் உஷாத் துணை நூல்களாகப் பயன்படுகின்றன. தமிழ்நாட்டிலும் பேராசிரியர்கள், கவிஞர்களோடு நட்புறவைப் பேணி வருகின்றார்.  இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றார்- மாநாட்டு  நிகழ்ச்சிகளில் தலைமை ஏற்கின்றார்.


இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் கூட  அவருடைய நாட்டாரியல் ஈடுபாட்டை நிரூபிக்கும்.


கக்கக் கனிய,என்னடா குலமும்் கோத்திரமும்,முதியன் கண்டு தயிரு,சட்டத்துர கொதறத்த என்னெண்டு செல்ற,பேத்த மீன் போன்ற சிறுகதைத் தலைப்புகள் அவரின் நாட்டாரியல் பிரக்ஞையை  தெளிவுபடுத்தும்.


 ஊடக வசதிகள் குறைந்திருந்த   அந்தக் காலத்தில்,  முத்துமீரானின் வானொலி நாடகங்கள்  கிராமியப் பேச்சுமொழிக்காகவும், தொனிக்கும் கிராமிய வாழ்வியலுக்காகவும் நேயர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததை  திறனாய்வாளர்கள் எடுத்துக் காட்டுவர்.


கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தி்ன் நிந்தவூர் மண்ணின் மைந்தனான முத்துமீரான்,கலை இலக்கியப் பணிக்காக  பரிசுகள் பட்டங்கள் என்று  நிறையவே பெற்றிருக்கின்றார்.


கலாபூஷண விருது,


கலாசார அமைச்சின் இலக்கிய வேந்தன் விருது


கொடகே சாஹித்ய  வாழ்நாள் சாதனையாளர் விருது 


வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் நூல்களுக்கான சாஹித்ய விருது


என்பன அவற்றுள் சில. 


மண்வளச் சொற்கள், கிராமியம் குறித்துப் பேசுபவர்கள் முத்து மீரானைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாதவாறு  இலக்கிய உலகில் சாதனைகளைப் புரிந்திருப்பவர்,.


மண்ணும் மக்களும் கொண்டாடத் தக்க மூத்த கலைஞர் முத்துமீரான் மறைவை ஒட்டி www.ceylon24.com .


இலங்கை வானொலி அறிவிப்பாரும், தயாரிப்பாளருமான,கொழும்பை பிறப்பிடமாக கொண்ட மஹ்ரூப் மொஹிதீன் கலாமானர்..

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.





காத்தான்குடி ஜாமியத்துல்  பலாஹ்  அரபுக் கல்லூரியில் முதற்கால பகுதிகளில் ஹாபிழ் பட்டம் பெற்ற காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின்  உறுப்பினர் பாலமுனையைச் சேர்ந்த பி PTM. அலியார்  ஹாபிழ் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னார் இலங்கையின் பல பாகங்களில் நிர்வகிக்கப்படும் அல்குர்ஆன் மனன பீடங்களின் உஸ்தாதாக இருந்து 100க்கும் மேற்பட்ட அல்குர்ஆனை சுமந்த ஹாபிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.


அமைதியான நடையும் முகத்தில் புன் சிரிப்பும் எளிமையான வாழ்வும் அவரது உயர்வுக்கு காரணமாக அமைந்தது


 அவர்களது சகல பாவங்களையும் மன்னித்து கிருபை செய்து வல்ல அல்லாஹ் சுவனபதியை நசீபாக்குவானாக


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 


 மர்ஹூம்  அல்ஹாபிழ் PTM. அலியார் அவர்களின் ஜனாஸா தொழுகை 22.06.2024 சனிக்கிழமை காலை 08.00am க்கு பாலமுனை நடுவோடை மீரா ஜும்மா பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


தலைவர்/ செயலாளர்

ஆலோசனைக்கும் வழிகாட்டல் குமார ஆலீம்கள் அழைப்பு காத்

 

#Rep/NT.Mashoor.
மரண அறிவித்தல்.


ஹாதீ ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்பவர் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.

انا لله وانا اليه راجعون


இவருடைய மரணம் மக்கா கிங் அப்துல் அஸீஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.


அறஃபா மினாவில் நிறைவேற்றப்பட வேண்டிய ஹஜ் கடமைகளை பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக ஹஜ்ஜுடைய தவாஃபுக்காக வேண்டி மக்கா திரும்பிய நிலையிலே இவருடைய திடீர் மரணம் சம்பவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஹஜ் கடமைகளின் இடைநடுவே காலமான அன்னாரை வல்ல நாயன் ஷுஹதாக்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!

ஆமீன்.

கிரிகதெனிய, மாவனல்ல சுலைமா சமி இக்பால்  காலமானார். இவர் மூத்த இலக்கியவாதியும் மௌலவியுமான மர்ஹும் சமி அவர்களின் புதல்வியும்,மௌலவி இக்பால் அவர்களின் மனைவியும், தென் கிழக்கு பல்கலையின் முன்னாள் பட்டதாரியான சம்மாந்துறையில் வசித்து வரும் இன்சிரா அவர்களது தாயும் ஆவார்

சுலைமா ஏ.சமி, இக்பால் களுத்துறை, தர்காநகரைப் பிறப்பிடமாகவும் மாவனல்லை கிரிகதெனியவை வசிப்பிடமாகவும் கொண்டவர்


 எழுத்தாளர். இவரது தந்தை அப்புதுல் சமி.; தாய் உம்மு தமீமா. களுத்துறை தர்கா நகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் கற்றார். இதே பாடசாலையில் ஆசிரியராகவும் கடமைபுரிந்துள்ளார். பதினோராவது வயதில் துணுக்கொன்றை தினகரன் பத்திரிகைக்கு எழுதி அது வெளிவரவே அதைத்தொடர்ந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். சிறுகதை, நாவல் ஆகியத்துறைகளில் ஈடுபாடுகொண்டவர். 

இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியின் பிரதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரின் ஆக்கம் ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமி சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

 எழுத்துத்துறையை அங்கீகரிக்கும் முகமாக மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சுமார் எழுபத்தைந்துக்கு மேல் பரிசுகளும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார். வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988), திசைமாறிய தீர்மானங்கள் (2003), உண்டியல் (2018) ஆகிய சிறுகதைத்தொகுதிகளையும் ஊற்றை மறந்த நதிகள் (சமூக நாவல் 2009), நந்தவனப் பூக்கள் (சிறுவர் இலக்கியம் 2015) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் சுலைமா ஏ.சமி. இவரின் ஆறு நூல்களில் நந்தவனப் பூக்கள் சிறுவர் இலக்கிய நூலை கல்வி அமைச்சு பாடசாலை நூலகப் புத்தகமாக அங்கீகரித்துள்ளமை விசேட அம்சமாகும்.

விருதுகள்

2008ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் இவரது ”ஊற்றை மறந்த நதிகள்” நாவலுக்கு சிறப்புப்பரிசு கிடைத்தது. 2002ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலக்கிய பங்களிப்புக்கான விருது. அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் 2008ஆம் ஆண்டு கலாஜோதி பட்டமும் விருதும். 2014ஆம் ஆண்டு அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனத்தால் காவிய பிரதீப பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். 



 


*ஜனாஸா அறிவித்தல்*


*2024/6/5*


அக்கரைப்பற்று 10

டீன்ஸ் வீதியில் வசித்துவரும் சித்தி பஸீறா வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


ஹாசிம் (மீன் வியாபாரி மார்கெட் அக்கரைப்பற்று) ன் அன்பு மனைவியும் 


ஹாபிழ் சித்தீக் மௌலவி 

(தலைவர் ஜம்மியத்துல் உலமா சபை அக்கரைப்பற்று)

றிம்ஸான்

பௌமி (மர ஆலை )

ஆகியோரின் அன்பு தாயாரும்


ஜிப்ரி (Rtd எக்கவுண்டன்)

பரீட் (டெய்லர்)

றபீக்

சித்தி பரீதா

றகுமா

சல்மா

உசைமா

நபீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


வீடு:- யூனியன் வீதியும் டீன்ஸ் வீதியும் சந்திப்பில்


மேலதிக விபரங்களுக்கு 776555183 ஹமீட் அலி (IPHS)


 பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் தாயார் பிரிடா ஜயசூரிய காலமானார்.


இவர் தனது 80வது வயதில் அவரின் தனது சொந்த ஊரான மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.


இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அமெரிக்கா சென்றிருந்தபோது தனது தாயார் காலமானா செய்தியை அறிந்த நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


 


அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அமைத்தவர் அலி ரசா அவர்களின் உம்மம்மா இன்று காலமானார்.

*ஜனாஸா அறிவித்தல்*


2/6/2024


அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியில் வசித்துவரும் மரியம் வீவி வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


இவர் மரணித்த உதுமாலெப்பை (கிளாக்கர்) இன் அன்பு மனைவியும்


கலீல் ஆசிரியர் (அமெரிக்கா)

முக்தார் (மார்கெட் அக்கரைப்பற்று)

அக்கீம் ஓய்வு பெற்ற ஆசிரியர்

சபறுல்லாஹ்

அமினுதீன் (மார்கெட் அக்கரைப்பற்று)

நௌஷாட் ( MR CLARK SERVICE)

ஆகியோரின் அன்பு தாயாரும்


இஸ்ஸதீன் (பெயிண்ட் கடை) இன் மாமியாரும்


அலி றஷா (சட்டத்தரணி) உம்மம்மாவும் ஆவார்கள் 


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்

 

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் பயின்று "தப்லீகி" எனும் கண்ணியமிக்க "மௌலவி"பட்டமும் பெற்றவரும்,

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும்,

சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலையில் ஆசிரியத் தொழில் புரிந்தவரும்,

சாய்ந்தமருது-01 பத்தாஹ் பள்ளிவாசலில் சுமார் 27 வருடங்கள் பேஸ்இமாமாக கடமையாற்றிக் கொண்டிருந்த



கண்ணியமிக்க,அல்ஹாஜ் ஆதம்பாவா முஹம்மது அன்ஷார் மௌலவி ஆசிரியர் அவர்கள் இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


யாஅல்லாஹ்,

அன்னார் செய்த பாவம்,குற்றம் குறைகளை மன்னித் கொண்டு சிறப்பான மண்ணுலக வைக்கையை ஏற்படுத்திக் கொடுக்க துஆச் செய்கிறேன்.

 


வாழைச்சேனை சிறுவன் ஷைபுல்லாஹ் (வயது 16) வபாத்


வாழைச்சேனை ஹைராத் வீதியைச் சேர்ந்த ஷைபுல்லாஹ் (வயது 16) எனும் சிறுவன் இன்றிரவு (30) 1 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை (24) மயங்கிய நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.


மரணமடைந்த சிறுவன் மௌலவி ஏ.கே.நௌபலீன் ஸலாமி அவர்களின் சகோதரர்  வாழைச்சேனை ஹைராத் வீதியைச் சேர்ந்த கபீர் (ஆசிப்) என்பவரின் மகனாவார்.

 


கிழக்கின் மரபுக் கவிதையின் முன்னோடி  காரைதீவைச் சேர்ந்த கலாபூஷணம் கவிச்செல்வர் பொன்.சிவானந்தன்

(ஓய்வு நிலை அதிபர்)
தனது 83 வது வயதில் நேற்று  (24) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (26) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்னார் இலக்கிய உலகில் 38 வருடகாலம் இலங்கியவர்.1996 இல்  "சிவானந்தன் கவிதைகள்" என்ற கவிதைத் தொகுதியை எழுதி வெளியிட்டவர். இவர் மதுரகவிமணி கவிமுத்து என்ற பட்டங்களையும் பெற்றவராவார்.

மண்டூரைப் பிறப்பிடமாகவும் காரைதீவை வாழ்விடமாகவும் கொண்ட பொன் சிவானந்தன்  காரைதீவு பிரதேச செயலக சாஹித்ய விழாவில் விபுலமாமணி பட்டத்தையும் பெற்றவராவார்.

 


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிகழ்ச்சிப் பிரிவின் முக்கிய பொறுப்பாளரும்,காத்தான்குடி ஜாபிர் டெக்ஸ் உரிமையாளரும்,

நாடறிந்த இலக்கியவாதியுமான MI.ஜாபிர் (என் ஆத்மா) அவர்களின் தாயார் இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

உலக அன்னையர் தினத்தில் Zahirians90 உம் ஓர் அன்னையை இழந்துள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை காத்தான்குடியில் நடைபெறும்.

இத்தாயின் மஹ்பிறத்துக்காக பிரார்த்திப்போமாக.




அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் கரீம் கியாஸ் என்பவர் இன்று வபாத்தாஹியுள்ளார்.


*انا لله وانا اليه راجعون*


அன்னார்..


✓மர்ஹும் அப்துல் கரீம் GS (மறைகாம் விதானை)

 ✓ குழந்தையும்மா (பாத்திமா)

ஆகியோரின் மகனும்


✓மர்ஹும் நஜிமுதீன் (DS)

✓ சிறாஜ் (ADR)

✓ நியாஸ் (ACN)

✓ சல்மா

✓ நைமா 

✓ ஜரீனா   

என்பவர்களின் சாகோதருமாவார்


மற்றும்..

✓ உபைத்துள்ளா Lecture 

✓சலீம் GS 

✓மர்ஹும் ஹுசைன் TA

ஆகியோரின் மச்சானும் ஆவார் 


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

 




அக்கரைப்பற்று யூனியன் வீதியில் வசித்துவரும் மக்கீன் மாஸ்டர் வபாத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


றபா ஆசிரியர்

றமீஸா டீச்சர்

றூஸா

ஜீனா டீச்சரின் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்


றிபாய் (ஓய்வு பெற்ற AO

ஹாறூன் ஆசிரியர்

மர்ஹும் ஹாசிம் (MBS)

ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


வீடு:- அஸ்ஸாஹிறா பாடசாலைக்கு முன்


அக்கரைப்பற்று 2 

ஜும்மா பட்டினப் பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த 

MPCS வீதியில் வசித்து வருபவருமான

ஓய்வு பெற்ற ஆசிரியர்

 *உதுமாலெப்பை*

  (AO வின் மருமகன்) 

வபாத்தானார்.


இன்னாலில்லாஹிவஹின்னாஇலைஹிராஜிஹூன்


இவர்

 *உஸ்ரி* 


 *அறூபா* 

 ஆசிரியை (Muslim Central college)


 *ஹுதா ஆசிரியை* (As siraj Maha vidyalayam )


ஆகியோரின் அன்புத் தந்தையும்,


மர்ஹும் 

 *அப்துல்_கபூர்* (ஆசிரியர்)


 *ஆதம்லெவ்வை (Ret Post Master)* 

 *மர்யம்வீவி ரீச்சர்* 

(Munawwara Junior College )

ஆகியோரின் அன்பு சகோதரரும்,


 *தாஹிர் (GS)* 

 *பாரூக்லோயர்* 

ஆகியோர்களின் மச்சானும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


2024.05.04


Taqwa Emergency Services 

Akkaraipattu 

07 42 42 18 18

 


#ஈழவேந்தன் (91) கனடாவில் காலமானார். 


கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் தமிழீழ மண்மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார்.


இறுதிவரை தமிழ்த்தேசியத்திற்காக உறுதியாக குரல் கொடுத்தார். 


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.