Showing posts with label Entertainment. Show all posts



 சரித்திரம் படைத்தான் சபேசன்!

வாழ்த்துகள் மகனே! 


பலத்த போட்டியின் மத்தியில் இரண்டாம் நிலையினை பெற்றுக்கொண்ட நம்மண்ணின் மைந்தன் சபேசனுக்கு வாழ்த்துகள்.


உங்களால் இலங்கை தேசம் பெருமை கொள்கின்றது.  

சபேசனுக்கு ஆதரவாக இருந்து வாக்களித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

Rep/Jkjathursan/Sukirthakumar

 சரிகமப பாடல் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நம்நாட்டின் கலைஞன் சுகிர்தராஜா சபேசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (05) இடம்பெற்றன.

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் அக்கரைப்பற்று மாநகர சபை ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளிட்டவர்கள் இணைந்து வாழ்த்து தெரிவித்ததோடு சபேசனுக்கு வாக்களிக்க வேண்டும் என பதாதைகளையும் மணிக்கூட்;டு கோபுர சந்தியில் நிறுவினர்.
பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வுகளில் மாநகர சபையின் முதல்வர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபி;ள்ளை உப தலைவரும் மத்தியஸ்த சபையின் தலைவருமான ஸ்ரீ மணிவண்ணன் மற்றும் அக்கரைப்பற்று வர்த்தகர் சங்க தலைவர் மாநாகர சபை முதல்வரின் இணைப்பாளர் தாஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு சபேசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் பலரும் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் சபேசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

Zee Tamil பாடகர் சபேசனை வாழ்த்தி ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று நலன் விரும்பிகளார் அக்கரைப்பற்று மாநகரின் இன மத வேதம் இன்றி ஓர் நிகழ்வும் இரு இனத்தவரினால் கட்டவூட்கள் இரண்டு வைக்கும் நிகழ்வுி....

 



வி.சுகிர்தகுமார் 

இந்தியாவின் ZeeTamil தமிழ் தொலைக்காட்சி சரிகமப பாடல் போட்டி நிகழ்வின் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ள கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட முதல் மைந்தன் சுகிர்தராஜா சபேசனுக்கு பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.


கிழக்கு மண்ணின் அம்பாரை மாவட்டம், திருக்கோவில், விநாயகபுரம் எனும் கிராமத்தில் பிறந்து இன்று நம்நாட்டினதும், பிறந்த மண்ணினதும் பெருமையினை உலகறியச் செய்துள்ள அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு உலகளாவிய ரீதியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

1995.12.02ஆம் திகதி பிறந்த சபேசன்,  சுகிர்தராஜா ஜெயந்தி தம்பதிகளின் நான்கு பிள்ளைகளில் முதலாவது ஆண் பிள்ளை. 
முதலாம் தரம் தொடக்கம் க.பொ.த.சாதாரண தரம் வரை விநாயகபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்ட இவர் திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர் தரத்தினை இசைத்துறை இணைந்ததான கலைப்பிரிவில் பயின்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு ஆசிரியர்களதும் விரிவுரையாளர்களதும் வழிநடத்தலில் இசை நுண்கலையில் இளமானி பட்டம் பெற்றார். 

பட்டம் பெற்று பல வருடங்கள் கடந்தும் தொழில் கிடைக்கவில்லையே எனும் ஏக்கத்துடன் வாழ்ந்து வந்த சபேசன்; தாய் தந்தை குடும்பம் சகோதரர்கள் மற்றும் உறவுகளதும் வழிகாட்டலில் இசைத்துறையில்
சாதிக்க முடியும் என நம்பிக்கை கொண்டார்.

தனது தந்தை வழிவந்த கலைத்துறையின் நாட்டத்தால் இசைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட சபேசன் சிறுவயது முதலே ஆசிரியர்களது பயிற்சியினால் பாடும் திறமையினை பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக பாடசாலை கலைநிகழ்வுகள் ஆலயங்களின் உற்சவங்கள் பொது நிகழ்வுகளில் பாடி பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டார். இதேநேரம் தனது தந்தை பாடகராக இருந்த அக்கரைப்பற்று ஜெயாலயா இசைக்குழுவிலும் ஆரம்பகாலத்தில் பாடி பின்னர் கிழக்கில் புகழ்பூத்த இசைக்குழுக்களிலும் பாடி தனது திறமையினை மேலும் வளப்படுத்தினார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் சக்தி தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட சக்தி சூப்பர் ஸ்டார் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தினை பெற்று பெற்றோருக்கும் பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்தார். இதன் பின்னராக இசைத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய சபேசன் பல இறுவெட்டுகளிலும் பாடி புகழ் சேர்த்ததுடன் இந்தியாவில் உருவாக்கம் பெற்ற உலகப்பொது மறையான திருக்குறள் ஒலிப்பதிவிலும் தனது குரலால் குறள் ஒன்றை பாடி பதிவு செய்தார்.

இவரது இசைத்திறமை கண்டு கிழக்கு தொடக்கம் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள இசைக்குழுக்களும் சபேசனை பாட அழைத்தது. சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய இவரது புகழ் தேசிய ரீதியில் பரவியதுடன் அரசும் பல்வேறு அமைப்புக்களும் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தது.
தனது சொந்த விடாமுயற்சியும் பயிற்சியும் காரணமாக சரிகமப சீசன் 4 இல் முதல் முறையாக கலந்து கொண்டபோதும் பாடகர்களை தெரிவு செய்யும் சுற்றில் வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை. குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு இசைத்துறையில் உள்ள நண்பர்களது வழிகாட்டுதலுடன் முயற்சியை தொடர்ந்தார்.

இதன் பயனாக யாருக்கும் சொல்லாமல் இந்தியா சென்று
 மீண்டும் சரிகமப சீசன் 5 இல் நுழைந்து தெரிவானபோது தனது உள்ளக்குமுறலை அழுகையாக வெளிப்படுத்தினார். அப்போது அவரை பலரும் விமர்சனம் செய்தனர். தனது தாய் நாட்டிற்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் வன்மத்தை கொட்டித்தீர்த்தனர். அப்போது கூட சபேசன் சளைக்கவில்லை. தன்மீது பாய்ந்த அம்புகளை எல்லாம் துறைத்தெறிந்து தனது இசைப்பயணத்தின் இலக்கை நோக்கி பயணித்தார்.

 இந்திய மண்ணின் ஜீ தமிழ் தொலைக்காட்சியின்  வாய்ப்பு, நடுவர்களதும் நிகழ்ச்சித்தொகுப்பாளரதும் ஆலோசனை , பயிற்றுவிப்பாளர்களது சிறந்த பயிற்சி,  அவரது இடைவிடாத முயற்சி, சக போட்டியாளர்களது அன்பு, 
இன மத பேதம் கடந்த இலங்கையிலும், இந்திய மண்ணிலும் உலகவாழ் மக்கள் அத்தனைபேரினதும் அரவணைப்பு இதற்கும் மேலாக பெற்றோர்களது ஆசிர்வாதம் இறையருள் ஆகியவற்றுடன் இன்று இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டு சர்வதேசத்தில் வாழும் அத்தனை மக்களையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார்.
அதுபோல் இறுதிச்சுற்றிலும் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டு நாட்டிற்கும் வீட்டிற்கும் புகழ் சேர்ப்பார் எனும் பெரு நம்பிக்கையோடு அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பெருவரவேற்பளித்து  அவரது வெற்றியை கொண்டாடி மகிழ.

இதேநேரம் சபேசனுக்குரிய களத்தை சரியான நேரத்தில் அமைத்து கொடுத்த ஆதரவை வழங்கிவரும் இந்திய தமிழ் நாட்டு மண்ணிற்கும்,  ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கும்,  சரிகமப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், இலங்கை மக்கள் சார்பில் நன்றி செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  


 


சிறந்த நடிகர், நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஷாருக் கான் மற்றும் ராணி முகர்ஜீ  


ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை பெற்றார். ஜவான் படத்துக்காக ஷாருக் கான் விருது பெற்ற நிலையில் Mrs. Chatterjee vs Norway படத்துக்காக ராணி முகர்ஜீ சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.  


#ShahrukhKhan #RaniMukerji #NationalAwards

 


தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் ஆவார். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.


சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா படப்பிடிப்புதளத்தில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றவர் அவர் உடல் நிலை மோசமானது.



இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46 ஆகும். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்


ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இறுதி சடங்குகள் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது



 ரஜினிகாந்த்தின் பல திரைப்படங்களில் அவருக்கு இருந்த அரசியல் ஆர்வம் வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், விஜய்யின் திரைப்படங்களில் அவை வெகு அரிதாகவே வெளிப்பட்டிருக்கின்றன. அப்படி வெளியான சில திரைப்படங்கள் குறித்த பட்டியல் இது.

விஜய் 1984லிருந்து குழந்தை நட்சத்திரமாகவும் 1992லிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்தது உட்பட இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் விஜய், கதாநாயகனாக நடித்திருக்கும் 69வது படம் 'ஜனநாயகன்'.

இத்தனை படங்களில் விஜய் தனது அரசியல் வருகைக்கான விருப்பத்தையோ, நேரடியாக அரசியலையோ பேசி நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இருந்தபோதும், சில இடங்களில் அரசியலுக்கு வருவது குறித்தும் , சமூகம் பற்றி தனது பார்வை என்ன என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

தமிழன் (2002)

'தமிழன்' படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பார் விஜய்.

பட மூலாதாரம்,YouTube

படக்குறிப்பு,'தமிழன்' படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பார் விஜய்.

எஸ்.ஏ. சந்திரசேகரின் கதையை வைத்து புதுமுக இயக்குநரான மஜீத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இந்தப் படத்தில் வழக்கறிஞர் சூர்யா என்ற பாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார்.

ஆரம்பத்தில் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் விஜய், ஒரு கட்டத்தில் சகோதரியின் அறிவுரையால் பொறுப்பானவராக மாறுவார். முதலில் இந்தியாவின் கடனை அடைக்க தன் பங்காக 4 ஆயிரம் ரூபாயை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு, எல்லோரும் அதைப் போலச் செய்ய வேண்டுமெனக் கூறுவார்.

இதற்குப் பிறகு, இலவச சட்ட உதவி மையம் துவங்கி, நகராட்சி பிரச்னை, பேருந்துகளில் ஏற்படும் பிரச்னை, கள்ளச்சாராய பிரச்னை போன்றவற்றை சட்ட ரீதியாக தீர்த்துவைப்பார்.

இந்தப் படத்தில், "நான் யாருக்கும் எதிரியாக இருக்க விரும்பலைங்க.. மக்களுக்கு நண்பனாக இருக்கனும்னுதான் ஆசைப்படுறேன்", "எந்தக் கட்சிக்காரன் மேடை போட்டாலும் கைதட்டி, விசிலடிச்சு கேட்கிறோம். எவனாவது அவங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டிருந்தா, இந்த மேடைகள் குறைந்திருக்கும். இதற்குக் காரணம் மக்களின் அறியாமைதான்", "தமிழன் ஜெயிப்பான்" என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

படத்தின் இறுதியில் குடியரசுத் தலைவரே அவரைப் பாராட்டுவது போல படம் நிறைவடையும்.

தலைவா (2013)

'தலைவா' படத்தின் தலைப்புக்குக் கீழே Time to Lead என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

பட மூலாதாரம்,YouTube

படக்குறிப்பு,'தலைவா' படத்தின் தலைப்புக்குக் கீழே Time to Lead என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

ஏ.எல். விஜய் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே Time to Lead என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்தில் மும்பையின் 'டான்' ஆன தனது தனது தந்தை இறந்த பிறகு அவரது இடத்தை 'தலைவா' என்ற பட்டத்துடன் ஏற்றுக்கொள்வார் விஜய்.

இதற்குப் பிறகு மும்பையில் அமைதி திரும்பச் செய்ய, முயற்சிகளை மேற்கொள்வார்.

ஆனால், இந்தப் படத்தின் தலைப்பின் கீழே Time to Lead என்ற வாசகம் இருந்ததை அப்போதைய ஆளும் கட்சி ரசிக்கவில்லை.

இந்தப் பிரச்னையை அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் எடுத்துச் செல்ல படக்குழு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

முதலில் ஆகஸ்ட் 9ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பல திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டு தமிழ்நாடு, புதுச்சேரி தவிர பிற இடங்களில் படம் வெளியானது.

இதற்குப் பிறகு, விஜய் தன் தரப்பை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இந்தப் படம் வெளியானது. தலைப்புக்குக் கீழே இருந்த Time to Lead என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியானது.

ஆனால், இதற்கு முன்பே படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதால், பட வசூல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கத்தி (2014)

 2 ஜி ஊழலை வெளிப்படையாக குறிப்பிட்டு வசனம் பேசியிருந்தார் விஜய்.

பட மூலாதாரம்,YouTube

படக்குறிப்பு,2 ஜி ஊழலை வெளிப்படையாக குறிப்பிட்டு வசனம் பேசியிருந்தார் விஜய்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் கத்தி. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜீவானந்தம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் பொதுவுடமைத் தத்துவம், முதலாளித்துவத்தின் தீமை, விவசாயிகள் பிரச்னை, குடிநீர் பிரச்னை போன்ற பல விஷயங்களைப் பேசியிருந்தார் முருகதாஸ்.

'காத்துல ஊழல் பண்ற ஊருயா' என 2 ஜி ஊழலை வெளிப்படையாக குறிப்பிட்டு வசனம் ஒன்றையும் பேசியிருந்தார் விஜய். இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

மெர்சல் (2017)

மருத்துவத் துறையை லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தைச் சொன்ன படம் இது.

பட மூலாதாரம்,Zee Tamil

படக்குறிப்பு,மருத்துவத் துறையை லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தைச் சொன்ன படம் இது.

விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.

மருத்துவத் துறையை லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தைச் சொன்ன படம்தான் இது. ஆனால், இதில் பல இடங்களில் வெளிப்படையாகவே அரசியல் பேசப்பட்டது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் விமர்சிப்பது போன்ற காட்சிகளுக்கு பா.ஜ.க. கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் எச். ராஜா, விஜய்யின் மதத்தைக் குறிப்பிட்டு அவரை விமர்சிக்க ஆரம்பித்தார்.

படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சி, "உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்" என்ற எம்.ஜி.ஆர். பாடலுடன் இருந்தது கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த "ஆளப்போறான் தமிழன்" பாடலும் வெகுவாக கவனிக்கப்பட்டது.

சர்க்கார் (2018)

இந்தப் படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சுந்தர ராமசாமி வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

பட மூலாதாரம்,YouTube

படக்குறிப்பு,இந்தப் படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சுந்தர ராமசாமி வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான இந்தப் படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சுந்தர ராமசாமி வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

தேர்தலின்போது வாக்களிக்கச் செல்பவர், தனது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.

இதற்குப் பிறகு சுந்தரின் முயற்சிகளால் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்படுகிறது. இதனால், முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்ட மாசிலாமணியின் எதிரியாகிறார் சுந்தர். ஆகவே தானும் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்கிறார்.

பிரசார காலகட்டத்தில் பல பிரச்னைகளை சந்திக்கிறார். மொத்த தேர்தல் அமைப்புமே மாற வேண்டுமென உணர்கிறார். தேர்தலில் சுந்தரும் அவரது ஆதரவாளர்களும் வெற்றிபெறுகிறார்கள். இருந்தபோதும் தான் முதலமைச்சராகாமல், நேர்மையான ஒரு அதிகாரியை முதலமைச்சராகத் தேர்வுசெய்கிறார் சுந்தர் என படம் முடிவுக்கு வரும்.



 இந்திய திரைத்துறையின் பெருமை, பன்முகத் திறமை கொண்ட கலைஞன் கமல்ஹாசன், தனது சிறப்பான சினிமா பயணத்தின் 66ஆம் ஆண்டை எட்டியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1



 


மும்பையில் படமாக்கப்பட்ட ‘கிங்’திரைப்படத்தின் சண்டைக்காட்சியின்போது ஷாருக்கானுக்கு ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் உடனடியாக சிகிச்சைகளுக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.