Showing posts with label Culture. Show all posts

 



வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் திருத்தல தீர்தோற்சவம் இன்று( 12) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக மாணிக்க கங்கையில் இடம்பெற்ற போது....

 


Rep/J.Refayathulla

மஷ்ஹூர் ஆய்வு நூலகத் திறப்பு விழாவும் மௌலவி நினைவுப் பேருரையும் நினைவுப் பகிர்வும் இன்று மாலை 4:30 முதல் 7:30 வரை அக்கரைப்பற்று அந்நூர்  கலாசார மண்டபத்தில், இடம்பெற்றது.


மஷ்ஹூர் ஆராய்ச்சி நூலகம் (Mashoor Research Library- MRL) நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ், விரிவுரையாளர் இப்றாலெப்பை, ஏ.ஆர்.ஏ.பிஷ்றுல் ஹாபி ஆகியோர் இதனைத் திறந்து வைத்தனர்.
ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நூலகமாக இது அமைந்திருக்கும். முன் அனுமதி பெற்று, நூலகத்திற்கு நேரில் வந்து நூல்களை வாசிக்க (Reference only) முடியும். இதில் நூல்களை இரவல் பெறும் வசதிகள் (Lending Facilities) இருக்காது என்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படிப்படியாக அரிய நூல்கள் பல இங்கு சேகரிக்கப்படும். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் வெளிவந்திருக்கும் அனைத்து நூல்களையும் சேகரிக்கும் திட்டத்தை முதலில் செயற்படுத்தவுள்ளோம்.

 

காரைதீவு தவிசாளரை சந்தித்த மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் - பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த சபை !


மாளிகைக்காடு செய்தியாளர் 


மாளிகைக்காடு பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய மாளிகைக்காடு மக்களின் சார்பில் மாளிகைக்காடு தலைமை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களுக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது. 


மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. பௌசர் தலைமையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனை சந்தித்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் மாளிகைக்காடு மையவாடி புனரமைப்பு, மின்விளக்கு பொருத்துதல் மற்றும் திருத்துதல், திண்மக்கழிவு முகாமைத்துவம், சமூக நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது காரைதீவு பிரதேச சபை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. 


இந்த சந்திப்பில் காரைதீவு பிரதேச சபை உபதவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும், முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம். ஜாஹீர், பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஆலோசகர் எம்.ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், முன்னாள் உப தலைவர் யூ.எல். செய்னுலாப்தீன், நம்பிக்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.


 அக்கரைப்பற்று ஐநா மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் அவர்களின் 3  வெளியீட்டு விழாவில்.......



 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டிய வீதியுலா( பெரஹரா) தினமும் மனோரம்மியமான சூழலில் களைகட்டிய வருகிறது. எதிர்வரும் 10 ஆம் திகதி இறுதி  பெரும் வீதியுலா (மகா பெரஹரா) நடைபெறவுள்ளது.  இங்கு நேற்று இரவு நடைபெற்ற சில கலை அம்சங்களை காணலாம்.


 


( வி.ரி. சகாதேவராஜா)

வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பின்தங்கிய வேத்துச்சேனை கிராம மக்களுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் டாக்டர் இ.சிறிநாத் ஆகியோர் களத்தில் நின்று கலந்துரையாடினர்.


குறித்த சந்திப்பில் வேத்துச்சேனை கிராமத்தில் எதிர்கொள்ளப்படும்  பல விடயங்கள் தொடர்பாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசன் வைத்தியர் இ.ஶ்ரீநாத் ஆகியோர் நேற்று முன்தினம் மக்களிடம் நேரடியாக  கேட்டறிந்தார்கள்.


 இதில் சில விடயங்களை பூர்த்திசெய்வதற்குரிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்கள்.


சில பிரச்சனைகளை அந்த இடத்தில் தீர்த்து வைத்தனர்.


 


( வி.ரி. சகாதேவராஜா)


 வரலாற்று பிரசித்தி பெற்ற 
திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  நேற்று  (30)திங்கட்கிழமை   திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவமானது எதிர்வரும் 2025.07.07கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2025.07.26ம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.

இக்காலபகுதியில் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நலன்புரி சேவைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அணைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ், திருக்கோவில் பிரதேச சபை  தவிசாளர் சு.சசிகுமார் ,பதில் உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர்,திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.,திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்கள்,திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்,கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  எஸ்.சுயகுமார், மற்றும் திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய நிருவாகசபை உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

 


( வி.ரி. சகாதேவராஜா)


வரலாற்றுச் சிறப்பு மிக்க  கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரிய

கோவிலில் வருடமொருமுறை ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம். இன்று (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


 அங்கு பாரம்பரிய

நிகழ்வுகளான யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்செடி கொடிகள் மாணிக்கங்கையூடாக

சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.


ஆலய நிலமே நிருவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அக் கொத்துக்களை யானைகள் உதவியுடன் பாரம்பரிய வேடுவகுலமக்கள் சகிதம் பந்தல் மேய்ந்தார்கள்.


 



இத்தாலி நாட்டிலிருந்து வான் மார்க்கம் மூலமாக இலங்கைக்கு வந்து துவிச்சக்கர வண்டி மூலமாக அல்-அக்ஸா பள்ளிவாயலை பார்வையிட வந்த இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள்.

 


நூருல் ஹுதா உமர்


கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைய இஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி 1447 இணை சிறப்பிக்கும் வகையில் கல்முனை  கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலத்தின் முஹர்ரம் விழா ஹிஜ்ரி 1447 பிறை 1 அன்று வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது.

பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி. ஏ.அஸ்மா மலீக் அவர்களும் விசேட அதிதியாக கல்முனை கல்வி வலய இஸ்லாம் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் மௌலவி றிபாய்தீன் அவர்களும் கலந்து கொண்டதுடன், பாடசாலையின் இஸ்லாம் பாட ஆசிரியர் மௌலவி எம்.ஏ.எம். அறூஸ் அவர்களால் முஹர்ரம் சிந்தனை சொற்பொழிவாற்றப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் முஹர்ரம் ஹிஜ்ரி 1447 இனை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கிராஅத் போட்டி நடத்தப்பட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய முஹர்ரம் 01 ஹிஜ்ரி 1447 இணை சிறப்பிக்கும் வகையில் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌஸான் அவர்களின் எண்ணக்கருவில் இஸ்லாமிய கலண்டர் ஒன்றை மாணவர்கள் தினம் தினம் அவதானிக்கும் வகையில் காட்சிப்படுத்தி திரை நீக்கம் செய்யப்பட்டது விசேட அம்சமாகும்.

மேலும் இந்நிகழ்வில் மேற்பார்வைக் கடமைக்காக சமூகமளித்த மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலீக், மாகாண கல்வி அமைச்சின் யுனிசெப் இணைப்பாளர் நிஹால், பாடசாலை EPSI இணைப்பாளர் மௌலவி ஜஹாங்கீர், ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் அன்சார், பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.




 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இரண்டாம் நாள் பெரஹரா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்ற போது...




 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா  கொடியேற்றம் நேற்று (26) வியாழக்கிழமை மாலை பால்குடி பாவா பள்ளிவாசலில் இடம் பெற்ற போது ..


படங்கள். வி.ரி.சகாதேவராஜா



 ( வி.ரி. சகாதேவராஜா)

புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன .
என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான  திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார்.

காரைதீவு சுவாமி விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகளுக்கான பரதநாட்டிய கருத்தரங்கு காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .


குறித்த பரதநாட்டிய கருத்தரங்கு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்ற ஆலோசகர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் மணிமண்டபத்தில் நடைபெற்றது .

பரதநாட்டிய வளவாளர் நாட்டியச் செல்வன் சங்கரப்பிள்ளை பிரியாசரவணன் மற்றும் பணிமன்ற தலைவர் எஸ்.சுரநுதன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிருத்தியாலய நடனவளவாளரும் யாழ் பல்கலைக்கழக நடனத்துறை மாணவியுமான செல்வி ஜெயகோபன் தக்ஷாளினியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் சசி தேவி உரையாற்றுகையில்..

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியிலும் அந்த நாட்டு மொழியிலும் கற்பிக்க வேண்டிய சூழல் வளவாளர்களுக்கு இருக்கின்றது. பிள்ளைகள் தமிழ் மொழியில் கற்பதில் சிரமப்படுகிறார்கள்.
இதனால் அங்கு கலைகளை கற்பிப்பதில் சங்கடங்கள் ஏற்படுகின்றன. அதனால் கலைகள் அழிந்து போகுமோ என்ற அச்சமும் இருக்கின்றது. இங்கு சுவாமிகள் பிறந்த மண்ணிலே இத்துணை சிறப்பாக நீங்கள் இயங்கி வருவது பாராட்டுக்குரியது. என்றார் .

பரத நாட்டிய கருத்தரங்கு நான்கு மணி நேரம் நடைபெற்றது .அதன் பின்பு சசிதேவி மற்றும்  பிரியசரவணன் ஆகியோர் பணிமன்றத்தால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி பாராட்டப்பட்டார்கள். நடன வளவாளர் திருமதி ஷர்மினி சுதாகரனும் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வை திருமதி வினோதினி ஜெயராஜி தொகுத்து வழங்கினார்.

 


பாறுக் ஷிஹான்


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக  அலுவலக கலாசார அதிகார சபை கூட்டத்தில்  இலங்கை நடிகை மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளரான பல்துறை ஆளுமையாளர் செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம்  நிர்வாக குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தப் புதிய பொறுப்பினைப் பெற்றது குறித்து அவர் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்ததோடு, மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைத்துள்ளார்.

அவரின் முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:
இலக்கணமும் இலக்கியத் திறனாய்வும் தொடர்பான பயிற்சிகள்,சிறுகதை, நாவல் எழுத்து மற்றும் புத்தக வெளியீடு குறித்து நடைமுறை பயிற்சிகள், பாகவதம் மற்றும் பகவத்கீதையின் ஆன்மிகக் கருத்துகளை எளிமையாக கற்பித்தல்,ஆன்மீகம், ஹரிகதை மற்றும் ஊக்கமளிக்கும் சொற்பொழிவு பயிற்சிகள்
இவை அனைத்தும் மாணவர்களின் விழிப்புணர்வையும், விழுமியத்தையும் வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் தெரிவித்ததாவது

"பாடசாலைகள் அல்லது சமூகங்களின் சிறிய மாணவ குழுக்களை அமைத்துக் கொடுத்தால், இத்தகைய பயிற்சி பட்டறைகள் மற்றும் செயலமர்வுகளை முழு உறுதியுடன் வழங்க தயார்."

சமூக நலனுக்காகவும்  மாணவர் முன்னேற்றத்திற்காகவும்  கலையும் ஆன்மீகமும் ஒன்றாகச் செறிந்து இயங்கும் இந்த முயற்சிக்கு அவர் அனைவரின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் நாடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 



தம்பிலுவில் களூதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி  உத்தர மஹோட்ச கொடியோற்றதுடன் ஆரம்பம்....!!!


ஜே.கே.யதுர்ஷன் ...


கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வங்க கடலோரம் ஆறுகளும் மரங்களூம் வயல் வெளிகளூம் சூழ் அழகிய கிராமமாம் தம்பிலுவில் கிராமத்தில் ஆற்றங்கரை யோரம் கிராம எல்லையில் தனிக்கோவில் கொண்டு வீற்றிருந்து நாடிவரும் தேடிவரும் அடியவர்களூக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகனாம் தம்பிலுவில் களூதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆணி உத்தர மஹோற்சவ கொடியோற்ற திருவிழா நேற்றைய 2025/06/23தினம் பஞ்ச பூதங்களின் ஆசிவாதத்துடன் மேளதாளங்கள் முழங்க விண்னைபிளக்கும் பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிக சிறப்பாக ஆரம்பமாகிய 15து நாட்கள் திரூவிழா கோலம் பூண்டூ 2025/07/01 வீதி உலா இடம்பெற்று  2025/07/02 திகதி தீர்த்த உட்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.....


ஆலய பூசை நிகழ்வுகள் யாவும் உட்சவ கால பிரதம குரு கலா பூசனம் சைவப்புலவர்,சைவ சித்தாண்ட பண்டிதர் சோதிடர் சிவஸ்ரீ.க.லோகநாதன் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் ஆலய நிகழ்வுகள் யாவும் ஆலய தலைவர் வ.பவாநந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது....



 ( வாகூரவெட்டையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)

இவ் வருடம் கதிர்காமத்துக்கான கானகப்பாதையில் செல்வோருக்கு வீரைப்பழம் பாலைப்பழம்  என்பன சொரிந்து கிடக்கின்றன .

கானகப்பாதையில் பயணிக்கும் பாதயாத்ரீகர்கள் தேவையான அளவிற்கு அவற்றை பறித்து உண்டு சுவைத்தவண்ணம் பயணிக்கிறார்கள் .

காடு பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்களில்  காட்சியளிக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த நறுங்கனிகளை சுவைத்து மகிழ்ந்து பயணிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது.

வீரை (Drypetes sepiaria) என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் ஓர் மரம். குறுங்காடுகளிலும் மழைக்காடுகளிலும் காணப்படும் இதன் செந்நிறப்பழங்கள் உண்ணக்கூடியவை. இந்த மர உள்ளமைப்பு உறுதியும் நார்த்தன்மையும் கொண்டிருப்பதால் உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கும், விறகுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வீரை புத்ராஞ்சிவாசியே குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய மரமாகும்.

 



(வி.ரி. சகாதேவராஜா)


சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித  அந்தோனியார் ஆலய 68வது  வருடாந்த திருவிழா  நேற்று நடைபெற்றது.

  புனித  அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது   பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

கடந்த 6 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடும்  இடம் பெற்றது.
 நேற்றைய திருவிழா திருப்பலியினை அருட்தந்தை பிலிப் றஞ்சகுமா (O.M.I)அருட்தந்தை அடிகளார் தலைமைதாங்க  பங்குத்தந்தை சுலக்சன் அடிகளாரும் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்திருந்தார்கள்.

திருப்பலி நிறைவில்  புனித  அந்தோனியார் திருச்சுருப பவனியானது ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டதுடன்  புனித அந்தோனியார் புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன் புனித அந்தோனியார் திருச்சுருப ஆசீரை  பங்குத்தந்தை அருட்பணி  சுலக்சன்அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்தார்.

அத்தோடு பங்குத்தந்தை அவர்களினாலும்,   திருவிழா சிறப்பாக அமைய சகல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்ததோடு, திருவிழா வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...



( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை  உற்சவம் எதிர்வரும் யூலை மாதம் 07ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருக்கின்றது என்று ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் யூலை மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை சமுத்திரத்தில் நடைபெறும். அன்றைய தினம் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன் செலுத்தும் முக்கியமான கிரியை அங்கு நடைபெறுவது வழமையாகும்.

இதேவேளை, திருவிழா தொடர்பான  அதிகாரசபைக்கூட்டம்  ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் ஆலய முன்றலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் பூஜை உபயகாரர்கள் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பூர்வாங்க பல முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

அதேவேளை எதிர்வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சாயத்து கூட்டமும் இளைஞர் தொண்டர் அணிக்கான கூட்டமும் இடம்பெறவிருக்கிறது.
 
இந்தவருடத்திற்கான ஆடிஅமாவாசை உற்சவம் ஜூலை மாதம் 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  அதே  மாதம் 24ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.மறுநாள் 25 ஆம் தேதி பூங்காவனத்திருவிழா வள்ளி திருமணமும் நடைபெறும்.

 தொடர்ந்து மறுநாள் 26 ஆம் தேதி வயிரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில்   ஆலயகுரு சிவஸ்ரீ நீதி. அங்குச நாதக்குருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெறவுள்ளது என்று ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.


 .சுகிர்தகுமார் 0777113659   


கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர கலந்து கொண்டு காட்டுவழிப்பாதையினை இன்று அதிகாலை (20) திறந்து வைத்தார்.
நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர சி.ஜெகராஜன் லாகுகல பிரதேச செயலாளர் நவனீதராஜா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க யாத்திரிகர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP க.கு.சீதாராம குருக்கள் நடாத்தி வைத்ததன் பிற்பாடு காட்டுவழிப்பாதை திறப்பு கழகு மலை பத்துப்பாடி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இன்று 20ஆம் திகதி திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜுலை 04 ஆம் திகதி மூடப்படுகின்றது.
இதேநேரம் இவ்வருடம் சுமார் 50000 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் இன்று சுமார் 2000 ஆயிரம் பக்தர்கள் காட்டு வழிப்பாதையின் ஊடாக யாத்திரையினை தொடர்ந்தனர்.
பொலித்தீன் பாவனை மற்றும் சிறிய தண்ணீர்போத்தல்களை கொண்டு செல்வதை தடை செய்துள்ளதாகவும் கருத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர் தொடக்கம் முதியவர்கள் வரை ஆண்;கள் பெண்கள் என அனைவரும் கலாசார ஆடையுடன் மாத்திரம் யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



 வி.சுகிர்தகுமார்                   



அம்பாரை மாவட்டம் பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் முன்முகப்பிற்கான சாலகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஆலய தலைவர் பா.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற பனங்காட்டை சேர்ந்த தொழிலதிபர் பா.குமுதராஜ் நிதியுதவில் 4 மில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள சாலகோபுரத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வின் பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு வித்தியாசகாரர் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.
பூமி பூஜைகள் நடைபெற்றதுடன் முதல் கல்லினை பனங்காட்டை சேர்ந்த தொழிலதிபர் பா.குமுதராஜ் நாட்டி வைத்தார்.
தொடர்ந்து ஆலய குரு உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
சால கோபுரமானது 23 அடி உயரத்துடன் 20 அடி அகலமாக நிர்மானிக்கப்படவுள்ளது.
 பாசுபதேசுவரர் ஆலயம் அமைக்கப்பட்டு பல நூறு வருடங்களை கடந்த நிலையில் ஆலயத்திற்கான சாலகோபுரம் அமைக்க வேண்டும் என பலரது எண்ணத்தில் இருந்தபோதிலும் அதற்குரிய காலம் கைகூடியமை தொடர்பில் ஆலய நிருவாகமும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.