Showing posts with label Crime. Show all posts

 


காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக  மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


#TrincoMedia 

மதுவெறியர்களின் கவனயீனத்தால் அப்பாவி இளைஞன் உயிரிழப்பு! 


#திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்து இன்று (17) மாலை இடம் பெற்றுள்ளது.


இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக மூவருடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அம்மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.


இவ்விபத்தில் திருகோணமலை- கோனேசபுரி ஆறாம் கட்டையைப் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.


அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் 21, 30, 39 வயது உடையவர்கள் எனவும் தெரிவித்தனர். 


உயிரிழந்தவருடன் பயணித்த இளைஞர் உட்பட மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவருமாக மொத்தமாக நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்றிரவு (15) வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீவைத்துள்ளதுடன் வீட்டின் வெளியே இருந்த வாழை மரங்களையும் வெட்டி வீசியுள்ளனர்.
வீட்டில் யாருமற்ற நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இன்று (16) காலை வீட்டை பார்வையிட சென்றபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளதை உரிமையாளர் அறிந்துள்ளார்.
சம்பவத்தினால் வீட்டின் அலுமாரியில் இருந்த பெறுமதியான ஆடைகள் மற்றும் காணி உறுதி, ஆலயம் ஒன்றின் ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் ஆலயம் ஒன்றின் பொருளாளராக இருப்பதுடன் அவரது  மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் தனியாக வசித்து வருகின்றார்.
இருப்பினும் அவர் சில நாட்களில் இரவு வேளைகளில் தனது மகளின் வீட்டில் தங்கிவருதும் வழமை. அதுபோன்றே நேற்றிரவும் மகளது வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேநேரம் குறித்த வீட்டின் உரிமையாளர் பொருளாளராக செயற்பட்டுவரும் ஆலயம் ஒன்றின் ஒலிபெருக்கி சாதனங்களும் அன்மையில் திருடப்பட்டுள்ளமை அறிய முடிகின்றது.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் அக்கரைப்பற்று பொலிசாரிடம் தகவல் வழங்கிய நிலையில் பொலிசாரும் வீட்டினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 நானே கொலை செய்தேன் !

--------------------------------------------------

தந்தை வாக்கு மூலம்..



பெரிய நீலாவணை - பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியில் இரு ஜனாஸாக்கள் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் சகோதரனும் சகோதரியும் ஆவர். இருவரும் மாற்றுத்திரனாளிகள். சகோதரனின் வயது 30. சகோதரியின் வயது 18. 


தந்தையே - தனது மேற்படி இரு பிள்ளைகளின் கழுத்தை துண்டித்துள்ளார். அவரும் - (தந்தை ) தனது கழுத்தை துண்டித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நானே - எனது பிள்ளைகள் இருவரையும் கொலை செய்தேன். எனது மனைவி ஒரு வருடத்துக்கு முன்னர் மரணித்து விட்டார். எனது மூத்த இரு ஆண் மகன்களும் வெளிநாட்டில் தொழில் புரிகின்றனர். இதனால் ஏற்பட்ட விரக்தியே இந்த நிலைக்கு காரணம் என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

 


எல்பிட்டி - பிட்டிகல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.   


 யாழ் கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது!

காங்கேசன்துறை, நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி அத்துமீறி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 22 பேர் கைது, 3 விசைப்படகுகளும் கடற்படையால் பறிமுதல்.

 


அநுராதபுரம் - மிஹிந்தலை – ரம்பேவ பகுதியில் மூன்று பேரை மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கெப் ரக வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூன்று பேர் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.

 


கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய பேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும், அவர் தான் படிக்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கணவன் – மனைவிக்கு இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ சென்றே இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.


கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் தந்தையால் மகனை சரியான முறையில் வழி நடத்த முடியவில்லை என்பதனாலேயே உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார் என தந்தை குறிப்பிட்டுள்ளார்.


மகள் அந்த இளைஞனை அனுப்பிவிடுமாறும் கூறிய போதிலும் உதவி செய்யும் நோக்கில் தங்க வைத்திருந்ததாக அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.


கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.



சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய பேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும், அவர் தான் படிக்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை, கணவன் – மனைவிக்கு இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ சென்றே இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.



கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் தந்தையால் மகனை சரியான முறையில் வழி நடத்த முடியவில்லை என்பதனாலேயே உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார் என தந்தை குறிப்பிட்டுள்ளார்.


மகள் அந்த இளைஞனை அனுப்பிவிடுமாறும் கூறிய போதிலும் உதவி செய்யும் நோக்கில் தங்க வைத்திருந்ததாக அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

 


வெடுக்குநாறியில் சிலருக்கு காயம்!

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் அவலக்குரல்! சிவராத்திரி வழிபாட்டுக்காக கூடியிருந்தோர் மீது பொலிசார் தாக்குதல்! பெண்கள் மீதும் தாக்குதல்! குடிநீர் எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு! ஆலய பொருட்களை உதைத்து தள்ளி அடாவடி!

படுகாயமடைந்த சிலர் வவுனியா மருத்துவமனையில் அனுமதி

 
கனடாவில் கொல்லப்பட்ட ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர்.


குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


விடயமறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை விரைவாக அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.


குறித்த வீட்டிலிருந்து தாயும் அவரது நான்கு பிள்ளைகளும். அந்த குடும்பத்துடன் வசித்து வந்த ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க என்ற பெண்ணும் அவரது ஏழு வயதுடைய மகனும், நான்கு வயதுடைய மகளும், இரண்டு வயதுடைய மகளும், இரண்டு மாத குழந்தையும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதுடைய காமினி அமரகோன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 


சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி கொலைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இது பயங்கரமான வன்முறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 


இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்தில், அசிட் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இரத்தினபுரி நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்த அசிட் தாக்குதலில் 5 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.


இரத்தினபுரி சமன் தேவாலய பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி காரொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து தொடர்பான வழக்கிற்காக பிரசன்னமான பிரதான சந்தேகநபரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தாக்குதலில் சந்தேகநபர், சந்தேகநபரின் மனைவி, நண்பர் ஒருவர் மற்றும் அருகிலிருந்தத மேலும் இருவர் அசிட் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.


வாகன விபத்தில் உயிரிழந்த நபரின் தந்தையே, அசிட் தாக்குதல் நடத்தியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும்






அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில், அண்மையில் விளையாட்டுப் போட்டி  இடம் பெற்றது. அன்றைய தினம் விளையாட்டுக்களை, கண்டு களிக்க வந்த, பழைய மாணவர்கள் சிலர் குறித்த கல்லுரி  மாணவர்கள் சிலரை, கத்தியைக் கொண்டு தாக்கி இருந்ததோடு அங்குள்ள கேட் மற்றும் கண்ணாடி போன்றவற்றிற்கும் சேதம விளைவித்திருந்தார்கள்.

குறிப்பிட்ட இந்த சந்தேகம் அவர்கள் ஒன்பது பேரில் மூன்று பேர் இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் குறித்த மூவரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கம் அளிக்குமாறு அக்கரைப்பற்று நீதிபதி ஏ.சி ரிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் சார்பில், 

சட்டத்தரணிகள் சமீம், ஜனிர் ரிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்

 


காத்தான்குடியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் முப்பதிற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது


அக்கரைப்பற்று- கல்முனை வீதியில், உணவுப் பாதுகாப்புச்  சட்ட விதிமுறைகளை மீறி, மனித நுகர்வுக்கு உதவாத உணவுகளை வைத்திருந்தவருக்கு  அக்கரைப்பற்ற நீதிமன் கௌரவ நீதிபதி  A.C. றிஸ்வான் அவரகளால்,அபராதமாக ரூபா 30 000.00  விதிக்கப்பட்டது. 

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட, குறித்த உணவக உரிமையாளர்கு எதிராக, பொதுச் சுகாதாரப் பரிநோதகர்களால், 3 குற்றச்சாட்டக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

 


பொது நலன் வழக்கு செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவாக்கு சட்டத்தரணி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


நாகானந்த கொடிதுவாக்குவின் பெயரை சட்டத்தரணியாக மாற்றியமைத்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொடிதுவாக்கு தொழில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரியந்த ஜயவர்தன, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாகாநந்த கொடிதுவாக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் சற்று முன் காலமானார்.


சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சற்றுமுன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




தாய் மடி தேடி, தாயகம் நோக்கி புறப்பட்டார் சாந்தன்.


உயிரற்ற உடலாக சிறப்பு முகாமில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றார் சாந்தன். 


உயிரோடு வந்தவனை உயிரற்ற பிணமாக தாயகம் அனுப்புகிறது தமிழகம்.


நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது...

 


குருநாகலை போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு பிரிவு மூடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஐவரடங்கிய நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 


வாழைச்சேனை – கூழாவடிச்சேனை பகுதியில் நேற்றிரவு கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.