Showing posts with label Elephant Attack. Show all posts


 

( வி.ரி.சகாதேவராஜா)

அண்மையில் வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலை மாணவனாக தெரிவாகிய  சம்மாந்துறை வலயத்தின் அதிகஷ்ர பிரதேச பாடசாலையான மல்வத்தை-02 புதுநகர் அ.த.க. பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸை, அப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்எல்எம்.ஹனீபா வீடு தேடிச்சென்று பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந் நெகிழ்வான சம்பவம் நேற்று (9) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கடந்த பரீட்சையில் கனீஸ் அதி கூடிய 180 புள்ளிகளைப் பெற்று மகத்தான சாதனை படைத்தமை தெரிந்ததே.

இந் நிகழ்வில் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் வீ.வாசீத் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் அ.அஹமட் சபீர், பாடசாலை அதிபர் ஆர்.ஜெயசிங்கம், கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ.பிரதீபன்,ஐ.செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளரின் நேரில் சென்று பாராட்டிய இம் முன்மாதிரியான நிகழ்வைப் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

புதுநகர் பாடசாலையில் இந்த முறை 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 வீத மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.



( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவ பீடத்தின்  ஆணிவேராக திகழ்ந்த மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் மருத்துவ உலகில் ஒரு சரித்திரம். இன்று அந்த பெருமகானுக்கு சிலை நிறுவியதில் எமது பல்கலைக்கழகம் பெருமை அடைகின்றது.
 
இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவபீட முன்னோடியுமான மறைந்த  பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும்  சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதியின் அலுவலகம் மற்றும் கலந்துரையாடல் மண்டபமும் நேற்று  (1) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன. அந்த விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக ஆயிரம் இருக்கைகள் கொண்ட பிரமாண்டமான ஒன்றுகூடல் மண்டபத்தின் முன்னால் நிறுவப்பட்ட பேராசிரியர் வரகுணத்தின் அழகான வெண்ணிற பளிங்கு திருவருவச்சிலையை  உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார் .

இந்த விழா கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையிலே சிறப்பாக நடைபெற்றது. 

அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட உபவேந்தர் பேராசிரியர்  பிரதீபன் மேலும் பேசுகையில் ..

பேராதனை பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் மருத்துவக்கல்வியை அறிமுகம் செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர் வரகுணம் அவர்கள்,  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வேந்தராக இருந்த காலத்தில் (2004-2009) இந்த சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தை நிறுவுவதில் ஆணிவேராக திகழ்ந்தார் .
அவர் ஒரு சரித்திரம். அவர் ஒரு கொடை வள்ளல். கிழக்கின் பேராளுமைகளுள் ஒருவரான பேராசிரியர் வரகுணம் அவர்களுக்கு எமது பல்கலைக்கழகம் சிலை நிறுவியதில் பெருமை அடைகின்றோம் . என்றார்.


அங்கு பேராசிரியர் பற்றி மருத்துக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டாக்டர் என்.ரோஷினி,  பல்கலைக்கழக முன்னாள் கவுன்சில் உறுப்பினரும், கல்விப் பணிப்பாளருமான எஸ். எஸ். மனோகரன், பேராசிரியரின் மனைவி திருமதி.வரகுணம், சிலையை அன்பளிப்பு செய்த காரைதீவு அருளானந்தம் சமூக சேவை நிறுவனத்தின் இணைப்பாளராக கலந்து கொண்ட ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி சகாதேவராஜா  ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

அங்கு வித்தகர் வி.ரி. சகாதேவராஜா உரையாற்றுகையில்..

சுனாமியால் காரைதீவு வைத்தியசாலை முற்றாக கபளீகரம் செய்யப்பட்ட பொழுது அதனை மீண்டும் அமைக்க உரிய காணியில்லாமல் திண்டாடி இருந்தது.
அப்பொழுது பல கோடி ரூபாய் பெறுமதியான தனது சொந்தக்காணியை காரைதீவு மக்களுக்காக இலவசமாக வழங்கியவர் பேராசிரியர் வரகுணம் அவர்கள். அவரை என்றும் காரைதீவு மக்கள் நினைவு கூறுகின்றார்கள். அதன் ஒரு சிறு நன்றிக்கடனே இந்த சிலை. இதனை கனடாவில் வாழும் சிறந்த சமூக செயற்பாட்டாளர் டாக்டர் அருளானந்தம் வரதராஜன் அவர்கள் முன்வந்து அவரது தாய் தகப்பன் பேரில் அமைக்கப்பட்ட  அருளானந்தம் சமூக சேவை நிறுவனத்தினால்  வழங்கி வைத்தமை பாராட்டுக்குரியது. அதேவேளை அந்த சிலையை காரைதீவின் மைந்தன் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர்  பேராசிரியர் பிரதீபன் திறந்து வைத்தமை மேலும் பெருமையை அளிக்கின்றது. இறையருளால் இதனை இணைத்த பீடாதிபதி பேராசிரியர் சதானந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். என்றார்.

விழாவில், சிலையை செய்த சிற்பி  சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள்  நிறுவக விரிவுரையாளர் எம்.சிறிகாந்தன்  பாராட்டிக் கௌரிவிக்கப்பட்டார்.

மறைந்த பேராசிரியர் வரகுணத்தின் சிலையுடன் கூடிய நினைவுச் சின்னத்தை அவர் அங்கு கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி வைத்தார். 

பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகீரதனும் கலந்து கொண்ட இவ்விழாவில்  
சிரேஸ்ட உதவிப் பதிவாளர் எம் .சதீஷ் நன்றியுரையாற்றினார்.

விழாவில் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியலாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

 


பாறுக் ஷிஹான்


தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டி (Career Guidance Unit) பிரிவின் ஏற்பாட்டில், உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் அனுமதியுடன், தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாட்   வழிகாட்டலிலும், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிப்லி எவ்.எச்.ஏ.   நெறிப்படுத்தலிலும், “இந்தியாவில் உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்த சிறப்பு செயலமர்வு இன்று  பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் Swami Vivekananda Cultural Centre (ICCR) பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குரன் தத்தா கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பயனுள்ள உரையை வழங்கினார்.

தனது உரையில் அவர், இலங்கைக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்து, தேயிலைத் தொழிலின் வளர்ச்சி, பன்முக கலாச்சார ஒற்றுமை போன்றவற்றை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

மேலும்,“India is the second-largest education hub in the world after the United States. We have nearly 1,200 universities comprising central universities, state universities and private universities. In addition, there are more than 50,000 affiliated colleges across the country. Every year ICCR offers around 5,000 fully funded scholarships to foreign students. Out of this, 200 scholarships are exclusively allocated to Sri Lankan students covering undergraduate, postgraduate and PhD studies,” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், இந்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நடைமுறை, விண்ணப்பிக்கும் முறை, A2A Portal வழியாக ஆவணங்களை சமர்ப்பிக்கும் செயல்முறை உள்ளிட்டவை பற்றி விரிவாக விளக்கினார்.

 “விமான டிக்கெட், தங்குமிடம், கல்விக் கட்டணம், மாதாந்திர உதவித்தொகை என அனைத்தையும் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மாணவர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது” என வலியுறுத்தினார். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், IITs, IIMs, Indian Institute of Science போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை எடுத்துக்காட்டினார்.
மாணவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஒஸ்மானியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் அரபி, பாரசீக, இஸ்லாமியக் கல்வி துறைகள் தனித்துவமாக இயங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“India is very colorful, very multicultural, and at the same time, an IT hub of the world. With more than 22 officially recognized languages and nearly 19,500 dialects, India stands as one of the most diverse nations in the world,” என இந்தியாவின் பல்வகை தன்மையை வலியுறுத்தினார்.

இந்த செயலமர்வில், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி ஏ.எம். றாசிக், விரிவுரையாளர் எம்.எஸ். சனூமி, தொழில் வழிகாட்டி பிரிவின் ஆலோசகர் எல்.ரீ.எம். இயாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பெருமளவிலான மாணவர்கள் பங்கேற்றனர்.
செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்வி–பதில் அமர்வில் கலந்து கொண்டு, இந்திய உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த தெளிவான புரிதலை பெற்றனர்.

 


நூருல் ஹுதா உமர்


கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான்  மற்றும் முஹம்மத் ஆஷிக் ஆகியோர்களால் தங்களின் சபை அமர்வில்  கிடைக்கப் பெறுகின்ற மாதாந்த கொடுப்பனவை கல்வி நிலையத்திற்கு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக (10) சம்மாந்துறையில் இயங்கி வரும்  மிரர் கல்வி நிலையத்திற்கு வழங்கி வைத்தனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது கல்வி மேம்பாட்டிற்காக சம்பளத்தை ஒதுக்குவதாக உறுதியளித்திருந்த இவர்கள், அந்த உறுதியை இன்று நடைமுறைப்படுத்தினர். வழங்கப்பட்ட நிதியை கல்வி நிலையத்தின் பெளதீக  வசதிகளை மேம்படுத்தவும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் இந் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  கல்வி நிலைய பொறுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து எங்களின் அதிகார காலத்தில் கிடைக்கும் பிரதேச சபை கொடுப்பனவுகளை கல்வி மேம்பாட்டுக்காக கையளிக்க உள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் இதன்போது கருத்து தெரிவித்தார்.

 


பாறுக் ஷிஹான்)


அம்பாறை மாவட்டம் கல்முனை   பிராந்தியத்தில்    விசேட   போக்குவரத்து பொலிஸாரின்   திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை   இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது   பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை  மற்றும்  கடற்கரை வீதி  போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனையில்  மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது   தலைக்கவசம் அணியாது செல்வது     ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது   அதிவேகமாக செல்வது  மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
 

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நெறிப்படுத்தலில்  அம்பாரை மாவட்ட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில்  இடம்பெற்றது.இதன் போது     கல்முனை  சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது   பொலிஸ் நிலைய    பொலிஸார்   இணைந்து  முக்கிய சந்திகள்  பிரதான  புற நகர வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொண்டனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  93   பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

நூருல் ஹுதா உமர்


இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக கடந்த 13.07.2025 ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட பீ- நிலையறி பரீட்சை யில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) இலிருந்து தோற்றி 150 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களைப் பாராட்டி மேலும் ஊக்கமூட்டும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது.  

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் அவர்களும் கெளரவ அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் பாடசாலை EPSI ஒருங்கிணைப்பாளருமான எஸ்.எம்.எம். அன்ஸார் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான திருமதி குறைஷியா ராபி, றின்ஷா பர்வின் மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87.


கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.


ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. அடுத்த ஆண்டில் 'இல்லறமே நல்லறம்' என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. விரைவிலேயே கதாநாயகி வேடமேற்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.


தமிழில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் ஒரே காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். தமிழ் திரைப்படங்களில் இவரது முகபாவம் மூலம், வெளிக்காட்டும் நடிப்பு திறமைக்காக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி.


தமிழில் நடிகர் சூர்யா, வடிவேலுவுடன் இணைந்து ஆதவன் என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

 நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்?

இந்தியா - இங்கிலாந்து, கில், லோகேஷ் ராகுல், பந்த், லார்ட்ஸ் 

கேப்டன்சியில் சறுக்கிய கில்: கடினமான களத்தில் கடைசி நாளில் இந்தியா 135 ரன் எடுக்க முடியுமா?

எம்.எஸ்.விஸ்வநாதன், கோலிவுட், தமிழ் சினிமா, இசையமைப்பாளர், விஸ்வநாதன் - ராமமூர்த்தி

எம்எஸ் விஸ்வநாதனின் மறக்க முடியாத பாடல்களும் கண்ணதாசனுடனான சுவாரஸ்ய தருணங்களும்

சரோஜா தேவி மரணம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள்  

சரோஜா தேவி காலமானார்: ஒரே காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிக்கு நாயகியாக அசத்திய 'கன்னடத்து பைங்கிளி'

End of அதிகம் படிக்கப்பட்டது

திரைப்படத்துறையினராலும், ரசிகர்களாலும், 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரசுவதி' போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் மாநில அரசு விருதுகளையும் வென்றவர் சரோஜா தேவி.


சரோஜா தேவியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி

சரோஜா தேவி முன்னாள் முதல்வரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் வலம் வந்த எம்.ஜி.ஆருடன் சேர்ந்து 26 படங்களில் நடித்துள்ளார்.


சிவாஜி கணேசனுடன் சேர்ந்து 22 படங்களிலும் ஜெமினி கணேசனுடன் இணைந்து 17 படங்களிலும் நடித்துள்ளார் சரோஜா தேவி.


1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி அன்று அவர் கர்நாடகாவில் பிறந்தவர் அவர். அவருடைய இயற்பெயர் ராதாதேவி கவுடா. அவர் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955-ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தார். அவர் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.


ராஜிவ் கொலை வழக்கு கதையில் நடித்தது எப்படி? - நடிகர் பகவதி பெருமாள் பேட்டி

13 ஜூலை 2025

'பறந்து போ' விமர்சனம்: இயக்குநர் ராம் பாணியா அல்லது மிர்ச்சி சிவா ஸ்டைலா?

5 ஜூலை 2025

சரோஜா தேவி மரணம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள்  பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,சரோஜா தேவி

திரையுலகினர் இரங்கல்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். "சரோஜா தேவி அம்மா, அனைத்து காலத்திலும் மிகச்சிறந்த நடிகையாவார். தென்னிந்தியாவில் வேறெந்த நடிகைக்கும் கிடைக்காத பேருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர். அன்புக்குரியவர் அவர். அவருடன் நல்ல நட்பில் இருந்தேன். அவரை பார்க்காமல் என்னுடைய பெங்களூரு பயணம் நிறைவுறாது. சென்னைக்கு அவர் வரும்போதெல்லாம் என்னிடம் பேசுவார். அவரின் இழப்பை நிச்சயமாக உணருவேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?

13 ஜூலை 2025

50 ஆண்டுக்குப் பின் மீண்டும் திரையில் 'ஷோலே' - பழைய கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது ஏன்?

29 ஜூன் 2025

சரோஜா தேவி மரணம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள் 

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகை சிம்ரன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், "ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெருமையான ஒரு நிகழ்வு ஒன்று மிகவும் விலைமதிப்பற்றதாக உணர வைக்கிறது. என்னுடைய மரியாதையையும் பிரார்த்தனைகளையும் உரித்தாக்குகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.


சரோஜா தேவி மரணம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள்  பட மூலாதாரம்,@SimranbaggaOffc/X

இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது*

 


(நூருல் ஹுதா உமர்)


சம்மாந்துறை கல்வி வலய மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபராக முன்னாள் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும், பல்வேறு பாடசாலைகளின் அதிபராகவும் கடமையாற்றி அனுபவம் கொண்ட அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த வீ.எம். ஸம்ஸம் இன்று (16) பொறுப்பேற்றார்.

இப்பாடசாலையின் அதிபராக 12 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்த மௌலவி வை.பி.ஏ. சுல்தான் புதிய அதிபரிடம் பாடசாலையின் பொறுப்புக்களை கையளித்தார்.

நாவிதன்வெளி கோட்டக்கல்வி அதிகாரியும், சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை பிரதி கல்வி பணிப்பாளருமான பீ. பரமதயாளன் அவர்களின் முன்னிலையில் தமது பொறுப்புக்களை கையேற்ற புதிய அதிபர் தாம் இந்த பாடசாலையை மேலும் கல்வி ரீதியாகவும், ஏனைய இணைப்பாடவிதான ரீதியாகவும் முன்னேற்ற முழுமையாக பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை ஆசிரிய ஆலோசகர் ஏ.எச்.எம். சவாஹிர், சவளக்கடை வீரத்திடல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஏ.எம்.முனாஸிர், நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலய அதிபர் சீ.எம். நஜீப், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், அல்- கரீம் பௌண்டஷன் தலைவர் சீ.எம். ஹலீம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், புதிய அதிபரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


அக்பைரைப்பற்று புத்தக திருவிழா இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு நிலைப் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கடந்த 5 வருடங்களாக இடம்பெறும் இப் புத்தகத் திருவிழாவின் ஏற்பாட்டாளர் Pages புத்தகசாலை செயல் இயக்குனர் சிராஜ் மசூர் என்பது குறிப்பிடத்தக்கது.





நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீட முதுகலைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  இரண்டு நாட்களைக் கொண்ட “Digital Inequality and Social Stratification” எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு; 2025.05.20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் கல்கிஸையில் அமைந்துள்ள கல்வி திட்ட நிலையத்தில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் முதுகலைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல்  ஆகியோரது இணை தலைமைத்துவத்தில் இடம்பெற்றது.

அங்குரார்ப்பண நிகழ்வின் தொடக்கத்தில்,கலாநிதி எம். றிஸ்வான் (Secretary, Two-Days Multidisciplinary International Conference 2025 வரவேற்புரை நிகழ்த்தினார். இதையடுத்து இந்தியாவின் சென்னை குருநானக் கல்லூரியின் சமூகவியல் துறை உதவி பேராசிரியர் கலாநிதி வேணட் ராஜதுரை  துவக்க உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து, மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் நகரில் உள்ள சௌத் பீல்டு கல்லூரியின் முதல்வர் கலாநிதி  அனுராதா ராய் கௌரவ அதிதி உரை நிகழ்த்தினார்.

ஆய்வரங்கத்தின் Conference Chair மற்றும் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்கள் தன்னுடைய உரையில், சமூகத்திலுள்ள டிஜிட்டல் பாகுபாடு, கல்வி மற்றும் தொழில்நுட்பத்திற்கான சம வாய்ப்பின்மை ஆகியவை தொடர்ந்து சமூக அடுக்கமைப்பை உருவாக்கும் மிகப்பெரிய காரணிகளாக உள்ளன எனக் கூறினார். இத்தகைய சிக்கல்களை அணுகுவதற்காக பல்துறை ஆய்வுகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, நிகழ்வின் பிரதம அதிதியாக  கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் டாக்டர் யு.எல். அப்துல் மஜீத், Zoom தொழில்நுட்பத்தின் மூலம் இணைந்து கொண்டு உரையாற்றினார்அவரது  உரையில், இவ்வாய்வரங்கைப் போல பன்னாட்டு ஆய்வரங்கங்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் global research dialogue உருவாக்குவதற்கான தளமாக  செயல்படுகிறது எனக் கூறினார். மேலும், கல்வி மற்றும் ஆராய்ச்சியின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.

அடுத்து, இந்நிகழ்வின் புவியியல் துறையின்  தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கே. நிஜாமிர்  பிரதான  பேச்சாளரை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Professor of War and Society மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியரான பேராசிரியர் (டாக்டர்) எம்மானுவேல் ஹெச்.பி.எம். கிரெய்க் (Prof. (Dr.) Emmanuel H.P.M. Kreike), Digital Divide மற்றும் அதன் காரணமாக ஏற்படும் Social Stratification குறித்தும், இந்தப் பிரச்சினைகள் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் எதிரொலிப்பதாகவும் , சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணியில் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு, பல்துறை சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனுடன் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அம்சமாக அமைந்தது. இந்த மாநாட்டில் இலங்கையின் பல முக்கியமான பல்கலைக்கழகங்களான கொழும்புப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். மேலும், இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு சர்வதேச கல்வி நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் இணைந்து பங்குபெற்றனர்.

ஆய்வரங்கிற்காக 110 க்கும் மேற்பட்ட சுருக்கக் கட்டுரைகள் (abstracts) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை, சமூக அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற பல துறைகளை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

 


பாறுக் ஷிஹான்


அறுவடை இடம்பெறும் நிலையில்  மூன்று இடங்களில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக  ஊருக்குள்  நுழையும்  முயற்சி  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்த சம்மாந்துறை பிரதேச சபையின்   தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்  இன்று மாலை  வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுடன் குறித்த இடத்திற்கு சென்று  பார்வையிட்டார்.

இதன்போது விவசாயிகளையும்  வயல் நிலங்களையும்  ஊர்மக்களையும்    பாதுகாப்பதற்கு முடியுமான  நடவடிக்கைகளை  மேற்கொண்டு யானைகளை காட்டுப்பகுதிக்குள் அனுப்பபுவதற்கு ஒத்துழைக்குமாறு  கேட்டுக் கொண்டார்.

இதே வேளை சம்மாந்துறை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை(24)  அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை அறிந்த சம்மாந்துறை பிரதேச சபை  தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்   வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் தௌபீக்கை  தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு பிரதேசத்தில் யனைகளினால் பலர் மரணம் அடைந்துள்ளதுடன்  பொதுமக்களின் உடமைகளையும் நாளாந்தம் சேதப்படுத்துவதையும்  தெளிவுபடுத்தினார்.

அதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில்   இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை   தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா,  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரசாந்த,  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் எம்.சீ.எம்.றியாஸ்,   வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களான ஜெகதீஸ்,  சுரேஸ்குமார் , சிசிரகாமினி , கித்சிறி மெமன் ,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கும்  விவசாயிகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் குறித்த ஒரு யானையை இனங்கண்டுள்ளதாகவும் , அதனை வனவிலங்கு சரணாலயத்திற்கு இன்று ஏற்றி செல்லுவதற்கான நடைவடிக்கை எடுப்பதாகவும்,  விவசாய நடவடிக்கை முடியும் வரை யானைகளை வனவிலங்கு பாதுகாப்பு செயலணியும்  சிவில் பாதுகாப்பு படையும் இணைந்து விவசாயிகளின் பாதுகாப்பை வயல் நிலப் பகுதிகளில் உறுதிப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. அதனுடன் நீண்டகால பாதுகாப்பு திட்டதினையும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.