Showing posts with label Technology. Show all posts


 தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக, அதன் முன்னெடுப்புகளை நன்கறிந்த ஆதாரங்கள் வாயிலாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலேயே பிக்ஸல் ஸ்மார்ட்போன் உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன், தானே சொந்தமாக ட்ரோன்களை தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் நிறுவ கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சீனாவுக்கும், மேற்குலகிற்கும் இடையே நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் தங்களது விநியோக சங்கிலியை சீனாவுக்கு வெளியே விரிவுபடுத்த எண்ணும் சர்வதேச நிறுவனங்களின் முக்கிய மற்றும் முதன்மை தேர்வாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கடந்த ஆண்டு பிக்ஸல் மொபைல் உற்பத்தியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் பிக்ஸல் 8 மொபைல் போன்களை தயாரிக்கப் போவதாக திட்டங்கள் உள்ளதாக கூகுள் அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கடந்த ஆண்டு தனது வலைத்தளத்தில், “பிக்ஸல் ஸ்மார்ட்போன்களுக்கான முதன்மையான சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. எனவே எங்களது சிறந்த அதிநவீன ஸ்மார்ட்போன்களை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தது.

“ஆல்பாபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுள், தனது புதிய அதிநவீன பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும். இந்த ஆண்டுக்குள் உற்பத்தி தொடங்கும்” என்று வெள்ளிக்கிழமையன்று பிபிசிக்கு கிடைத்த தகவல் கூறுகிறது.

கூகுள் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய இரு நிறுவனங்களும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அந்த தகவல் கூறுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கானின் இரண்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னைக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சமீபத்தில் கூகுள் நிறுவன அதிகாரிகள் - தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க உள்ளனர். அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடத்தயார்-  TikTok நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Chew Shou Zi


 சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 108க்கு 62 என்ற வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


 தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம்!


நூருல் ஹுதா உமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (TIKA) நிறுவன நிதி உதவியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையானது அதிநவீன 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை நிறுவுவதற்குத் தேவையான அதிநவீன 3D பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை  துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (Turkish Cooperation and Coordination Agency - TIKA) நிறுவனத்திடமிருந்து வைபவரீதியாக பெற்றுக்கொண்டது.  

இந்தக் கையளிப்பு நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தொழில்நுட்ப பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். மஜீத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஆர். கே. றிபாய் காரியப்பர், சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் துறை தலைவருமான கே.எம். றிப்தி உட்பட  பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் TIKA இன் பிரதிநிதிகளான செவ்கி மெர்ட் பாரிஸ், ஜெய்னெப் பைராக் மற்றும் ஓயா துதுன்சு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பௌதீக பரிமாற்றத்தைக் குறித்தது மட்டுமன்றி, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதை அடையாளப்படுத்துகிறது என்று உபவேந்தர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் இந்த நன்கொடையானது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைகளில் மாற்றியமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார். அத்தோடு பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க கதிரவ அமைப்பினை (Solar System)  நிறுவுவதில் TIKA வின் ஆதரவை கோரினார், அக்கோரிக்கைக்கு பதிலளித்த TIKA நிர்வாகிகள், தம்மாலான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என்று உறுதி பகர்ந்தனர்.

 


(வி.ரி. சகாதேவராஜா)


ஈ.கல்வி அமைப்பின் செயற்பாடுகள் பட்டிருப்பு வலயத்தில்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கென e- kalvi Charity Fund Inc அமைப்பின் செயலாளர் இளங்கோ வினாசித்தம்பி        பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்கு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அவர் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையை மையமாகக் கொண்டு இயங்கும் e- kalvi யின் zoom வகுப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வானது பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர்  எஸ்.சிறீதரன் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் e- kalvi அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும்  ஹோலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் அதிபருமான அருட்சகோதரி சிறிய புஸ்பமும் இணைந்திருந்தார்.

 வலயத்தின் அதிபர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறீதரன், ஈ- கல்வி அமைப்பின் செயலாளரால் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து கல்வி உத்தியோகத்தர்களுடன் செயற்கை நுண்ணறிவின் ( AI) வளர்ச்சிக்கு துணை செய்யும் ஆர்டுயீனோ ( Arduino) பற்றி கல்வித் திணைக்களத்துடன் இணைந்து எவ்வாறு ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும் என ஆராயப்பட்டது. மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி வழிநடாத்த  தொழில்நுட்பம் எவ்வளவு அவசியம் எனவும் கலந்துரையாடப்பட்டது.

 மேலும் தரம் 5, 10, 11  மாணவர்களின் zoom வகுப்புகள், மாதிரிப் பரீட்சை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

e kalvi யானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள், விரிவுரையாளர்களினால் அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டு இலங்கையில் அதிகஷ்ட பிரதேச, வளங்கள் குறைந்த பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கைகொடுத்து வரும் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


 (எம்.என்.எம்.அப்ராஸ்)


தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தினால் பேராதனை பல்கலைக்கழக புவியியற்துறை மாணவர்களுக்கு கரையோர ஆய்வுகளில் புவிவெளியுருவவியலில் ட்ரோன் தொழில்நுட்ப பிரயோகம் தொடர்பான கலந்துரையாடலும்,களப்பயிற்சியும் தென்கிழக்குப்பல்கலைக்கழக புவியியற் துறைத்தலைவர் விரிவுரையாளர் கே.நிஜாமிர் தலைமையில்,பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் அவர்களின் ஒருங்கிணைப்பில்
(28)சனிக்கிழமையன்று நடைபெற்றது.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரபீக்கா அமீர்தீன் ஆரம்ப உரையாற்றியதோடு,பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.ராசிக் அவர்கள் கலந்துரையாடலின் நோக்கம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும் பேராசிரியர் முதிக சுமனஜித் பெரேரா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்த ஜெயகுமார பேராதனை பல்கலைக்கழக புவியியற்துறை இறுதிவருட விஷேட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் விரிவுரையாற்றிய தென்கிழக்கு பல் கலைக்கழக புவியியற்துறைத்தலைவர் கே.நிஜாமிர் இலங்கையின் தென்கிழக்கு பிராந்திய பகுதியில் கடலரிப்பு மற்றும் அவற்றிக்கான காரணங்களை விளக்கியதோடு அவை தொடர்பான ஆய்வுகளின் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பிரயோகம்,வினைத்திறன் மற்றும் ஆய்வு விஞ்ஞானத்தன்மை தொடர்பாகவும் விளக்கினார்.மேலும் மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்ப வெளிக்கள பயிற்சியளிக்கப்பட்டதோடு தென்கிழக்கு கரையோரபிரதேசங்களில் களப்பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.


நூருல் ஹுதா உமர்

மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில்  மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்துடன் இனைந்து   (31.08.2023) அன்று காலை முதல் மாலை வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு திறன் சம்மந்தமான செயலமர்வு மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின்   கல்முனை காரியாலயத்தில்   நடைபெற்றது.
 
மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டதோடு ,கல்வி நிறுவனத்தின் முகாமையாளர் எஸ். முஹம்மட் சப்னாஸ்,  கல்வி நிறுவனத்தில் கடமையாற்றும்  உதவி முகாமையாளர்கள் மற்றும்  மனித மேம்பாட்டு அமைப்பின் பொது முகாமையாளர் டப்லியூ. ஷவ்தப் உசைம் உற்பட உயர்பீட உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.

மேலும் இச் செயலமர்வில் வளவாளராக கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர்களாக கடைமையாற்றும் எ. எம். எம். தாரிக், எஸ். சரிஸ்ஸா, அஹமட்  அவர்கள்   கலந்து கொண்டு  இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு திறன் சம்மந்தமாக  விரிவுரையாற்றினார்.


 


நூருல் ஹுதா உமர். 


மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனம் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் முழுநாள் தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு சம்மாந்துறை அல் - மர்ஜான் தேசிய பாடசாலை எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. 
 
மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்-மர்ஜான் வித்தியாலய அதிபர் எச்.எம். அன்வர் அலி, மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம், மெட்ரோ பொலிட்டன் கல்முனை காரியாலய ஒருங்கிணைப்பாளர் சீனத் ஹானியா , முகாமையாளர் முஹம்மட் சப்னாஸ், கல்வி நிறுவன உதவி முகாமையாளர்கள் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர். 

மேலும் இச் செயலமர்வில் வளவாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அகமட் சிப்லி, கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால கல்வியின் நுட்பங்கள் பற்றி விரிவுரையாற்றினார். 

அன்று மாலை இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அகமட் சிப்லி, உட்பட பலரும் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

 


தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன் (Drone) தொழினுட்ப பயிற்சி


நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ்.

அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன் (Drone) தொழினுட்பத்தின் பிரயோகம் தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் பயிற்சியளித்தல் நிகழ்வு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளரின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் புவியற்துறைத்தலைவர் கே.நிஜாமீர் தலைமையில்  கலை,கலாசார பீட கேட்போர் கூடத்தில் வியாழனன்று (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்ப வைபவத்திற்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமிஸ் அபூபக்கர் கலந்து கொண்டதோடு கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், புவியிற்துறை பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல்.பௌசுல் அமீர் மற்றும் பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களில் பணிபுரியம் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.பெற்றதுடன் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் பெளசுல் அமீர் ஆகியோரினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக விளக்கவுரைகளும் நடைபெற்றதுடன்  தொடர்ந்தும் உத்தியோகக்கர்களுக்கு ட்ரோன் மற்றும் அதன் பிரயோகம் தொடர்பாக விரிவுரையும் செயற்பாட்டு பயிற்சியும் புவியியற்துறை தலைவரினால் நடாத்தப்பட்டது. சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில்  Automobile NVQ Level 4 மற்றும் Automobile Diploma கற்கை நெறிக்கான Accreditation அங்கிகாரம் TVEC யால் இன்று வழங்கப்பட்டுள்ளது.  இதற்காக உழைத்த முன்னால் VP, Mechanical Engineer Mr. A.அம்ஸா  அவர்களுக்கும்,துறைத்தலைவர் சா.ரவீந்திரன் அவர்களுக்கும் நன்றிகள்,வாழ்த்துக்கள்.  மகிழ்ச்சிக் கடலில் மாணவர்கள்

 


வாட்ஸ்அப் செயலியில் வீடியோ மெசேஜ் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. மெசேஜ் டைப் செய்ய முடியாதவர்களுக்கு, ஆடியோ மெசேஜ்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டு வந்தது. புதிய அப்டேட் மூலம் இனி ஆடியோ மெசேஜை கடந்து வீடியோ மெசேஜ்களையும் அனுப்ப முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் புதிய அம்சங்களை வாட்ஸ்அப் விரைந்து வெளியிட்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக எடிட் பட்டன், சாட் லாக், ப்ரோஃபைல் படத்தை சிலருக்கு மட்டும் மறைத்து வைக்கும் வசதி, மல்டி-போன் சப்போர்ட் உள்ளிட்டவை விரைந்து வெளியிடப்பட்டன.
 ட்விட்டரை வாங்க உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க் விருப்பம் தெரிவித்து இன்றுடன் கிட்டத்தட்ட ஓராண்டாகிறது.


அது இந்த வேலையில் என்னுடைய முதல் நாள். என்னுடைய தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை.


அந்த நாள் முதலே ட்விட்டர் நிறுவனம் மூடப்பட்டு விடுமா என்று என்னிடம் எத்தனை முறை கேட்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது நடக்காது என்றே நான் எப்போதும் சொல்லி வந்தேன்.


ஆனால், இப்போது சில காரணங்களால் அதனை அவ்வளவு நிச்சயமாக கூற முடியாது.


பிலாவல் பூட்டோவின் கோவா பயணம் - 12 வருடங்களுக்கு பிறகு பிறகு இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்


ட்விட்டரின் புதிய அவதாரம்

முற்றிலும் புதிய ட்விட்டரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி ட்விட்டரில் ப்ளூ டிக் என்பது அந்த கணக்கு குறிப்பிட்ட நபருடைய உண்மையான கணக்கு என்பதற்கானதாக இருக்கப் போவதில்லை. அவை எல்லாமே மாதச் சந்தா செலுத்தப்படுபவை.


பணம் செலுத்தப்படும் போது குறிப்பிட்ட கணக்கை சரிபார்க்கும் நடைமுறை இருந்தாலும், பெரும் அந்தஸ்துடைய தனி நபர்கள், நிறுவனங்களின் பெயரில் போலி கணக்குகள் பணம் செலுத்தி ப்ளூ டிக் வைத்திருப்பதை காண முடிகிறது.


இம்மாத தொடக்கத்தில் தனிநபர் நிதி நிபுணர் மார்ட்டின் லீவிஸ் தன்னுடைய பெயரில் ப்ளூ டிக் கொண்ட ஒரு கணக்கில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுக்கு கிரிப்டோகரன்சி விளம்பரப்படுத்தப்பட்டதைக் கண்டு அதிரச்சியடைந்தார். ஏனெனில், அது அவரது உண்மையான கணக்கு அல்ல என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.


ஏற்பு மற்றும் தொடரவும்

காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது


ட்விட்டரில் இன்றைய நிலையில் பயனர்களால் தேர்வு செய்யப்படும் நபர்களைக் காட்டிலும் பணம் செலுத்தும் நபரே அந்த தளம் முழுவதும் தெரியவரக் கூடிய நபராக இருக்கிறார்.


அதனால், இனி வரும் நாட்களில் நம்மிடம் வந்து சேரும் புதிய ட்விட்டர் கணக்குகள் உண்மையில் யாருடையவை என்பதை நாம் காண விருக்கிறோம்.


ஈலோன் மஸ்க் கூறிய 'அனைவருக்கும் சம வாய்ப்பு' இதுதானா?

ஈலோன் மஸ்க் வசமாகும் முன்பு, ட்விட்டரில் யார்யார் முக்கியமானவர்கள் என்பதை தீர்மானிக்கும் முறை சரியானதாக இல்லை என்று அவர் கூறியிருந்தார். அவரது கூற்று ஓரளவு சரியாகவும் இருந்தது.


இன்று அவரது நேரடி மேற்பார்வையின் கீழ் சிலருக்கு மட்டும் ப்ளூ டிக் சரிபார்ப்பு இலவசமாக வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. புலனாய்வு தளமான பெல்லிங்கேட் நிறுவனர் தன்னுடைய நிறுவனமும் அவ்வாறு சரிபார்ப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று என்னிடம் உறுதி செய்தார்.


ட்விட்டரின் மாத சந்தா திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டீபன் கிங், லெப்ரான் ஜேம்ஸ், வில்லியம்ஸ் ஷாட்னர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் தாமே பணம் செலுத்தி இருப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.


ஏற்பு மற்றும் தொடரவும்

காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

வர்த்தகத்தைப் பொருத்தவரை, சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் மட்டுமே விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும், இல்லாவிட்டால் மாதத்திற்கு 1,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.


டிஜிட்டல் விளம்பர வருவாயைப் பொருத்தவரை, பெருநிறுவனங்களைக் காட்டிலும் சிறிய, தொடர்ச்சியாக விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் கூட்டுத்தொகையே அதிகம் என்று நமக்கு தெரியவருகிறது.


தன்னை பேச்சுரிமைக்கான காவலராக பறைசாற்றிக் கொள்ளும் ஈலோன் மஸ்க் தலைமையிலான ட்விட்டர், அதனை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குகிறதா என்பதை மேற்கூறியவை கேள்விக்குள்ளாக்குகின்றன.


ரொனால்டோ, பியான்ஸேவின் 'ப்ளூ டிக்' நீக்கம்

மக்கள் பொதுவாக சமூகத்தை விட்டு விலகியிருக்க விரும்ப மாட்டார்கள். ட்விட்டர் மிகச்சிறியதாக, குழப்பமான ஒன்றாக இருந்தாலும் சமூகத்தில் செல்வாக்கும் செலுத்தும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.


அது மிகவும் மோசமாக நடத்தப்படுகிறது. மற்ற தளங்களைப் போலவே அதன் நிதியும் இக்கட்டான நிலையில் இருந்தது. துஷ்பிரயோகம் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அது போராடியது.கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம்


ஈலோன் மஸ்க் பெரும் பணக்காரர் என்பதுடன், ஏராளமான பின்தொடர்வோரையும் கொண்ட ஒரு புத்திசாலியான தொழிலதிபர்.


ட்விட்டரில் அவர் செய்த மாற்றங்களின் விளைவாக ட்வீட் செய்வதை நிறுத்திய செய்தி நிறுவனங்களில் கனடியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் மற்றும் NPR ஆகியவை முக்கியமானவை. பாடகர் எல்டன் ஜான், நகைச்சுவை நடிகர் ஸ்டீபன் ஃப்ரை மற்றும் மாடல் ஜிகி ஹடிட் போன்ற பிரபலங்கள் ட்விட்டரை மஸ்க் கையகப்படுத்திய பிறகு ட்விட்டரை விட்டு வெளியேறி விட்டனர்.


ட்விட்டர் நிறுவனம், ஏற்கனவே அறிவித்தபடி, மாதச் சந்தா செலுத்தாத பிரபலங்களின் கணக்கில் இருந்த சரிபார்ப்பு அடையாளக் குறியான ப்ளூ டிக்கை நீக்கும் நடவடிக்கையை கடந்த வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.


அதன்படி ஆயிரக்கணக்கான கணக்குகளில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பியான்ஸே ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.ட்விட்டரில் கணக்கு சரிபார்ப்புக்கு பணம் செலுத்த மாட்டோம் என்று கூறும் பிபிசி, ஒரு செய்தி நிறுவனமாக சரிபார்ப்பதில் ஏற்கெனவே "தங்க" நிற டிக்கை இழந்துவிட்டது. பிபிசி நியூஸ் ட்விட்டர் கணக்கு என்னைப் போன்ற தனிப்பட்ட பத்திரிகையாளர்களைப் பின்தொடரத் தொடங்கியது, நம்பகத்தன்மைக்கு எதிரானதாக உள்ளது.


ப்ளூ டிக்கை இழந்ததால் ஏராளமானோர் மகிழ்ந்துள்ளனர்.


"புளூ டிக்கை இழந்ததை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சி," என்று எனது நண்பர் ஒருவர் வியாழக்கிழமை குழு ஒன்றில் பதிவிட்டார். மற்றவர்கள் "டிக்ட் ஆஃப்" என்று கேலி செய்தார்கள்.


பலரைப் போலவே நானும், ஒரு வேலை மற்றும் சமூகத் தளம் என்ற அடிப்படையில் ட்விட்டர் எடுக்கும் புதிய திசையை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன்.


ட்விட்டர் நிறுவனரின் புதிய தளம் 'ப்ளூஸ்கை'

ட்விட்டரை உருவாக்கிய ஜாக் டோர்சி, ப்ளூஸ்கை என்ற புதிய தளத்தை தொடங்குகிறார். அதன் வடிவமைப்பு கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது.


ட்விட்டருக்கு ஈலான் மஸ்க் முடிவுரை?


இது மிகவும் சிறியது, அழைப்பின் பேரில் மட்டுமே இணைய முடியும். ஆனால் இது ஒரு பெரிய உற்சாகத்தை உருவாக்குகிறது. ஏனெனில் இது எதிர்காலத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. அதாவது மற்ற தளங்களுடன் அது இணக்கமானது. நானும் அதில் இருக்கிறேன். தற்போது நாம் அனைவரும் ஒரு விருந்துக்கு வந்து, அலங்காரத்தை ரசிப்பது போல் உணர்கிறேன்.


ஆனால் ஒரு புதிய, சிறிய ஆனால் செல்வாக்கு மிக்க இடத்திற்கான வாசல் இருக்கலாம்.


அது புளூஸ்கையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ட்விட்டரை விற்றதிலிருந்து ஒரு வணிகத்தை நடத்துவது பற்றி ஒன்றிரண்டு விஷயங்களை டோர்சி கற்றுக் கொண்டார் என்று நம்புவோம்.


 டிவிட்டரை நடத்துவது “வலி மிகுந்த பணி” அது “ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வை போன்றது” என பிபிசிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார் ஈலோன் மஸ்க்.

பெரும் பணம் படைத்த தொழிலதிபரான எலான் மஸ்க் தகுந்த நபர் கிடைத்தால் டிவிட்டரை தான் விற்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணல் டிவிட்டரின் தலைமையகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிகப்படியான நபர்களை பணியிலிருந்து நீக்கியது, போலி செய்திகள், ஈலோன் மஸ்கின் பணி வழக்கங்கள் குறித்து இந்த நேர்காணலில் பேசப்பட்டது.

அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஈலோன் மஸ்க், கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறார்.

டிவிட்டரை வாங்கியது குறித்து வருந்துகிறீர்களா என எலான் மஸ்கிடம் கேட்டதற்கு, “இது ஏதோ ஒரு பார்ட்டிக்கு செல்வது போல அல்ல. அந்த வலி மிக அதிகம்.” என தெரிவித்தார்.

டிவிட்டரை நிர்வகிப்பது குறித்து கேட்டதற்கு, “அது சலிப்பாக இல்லை. அது ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வு” என தெரிவித்தார்.

“கடந்த பல மாதங்களாக அழுத்தம் நிறைந்துள்ளது” என்று தெரிவித்தாலும் நிறுவனத்தை வாங்கியது சரியான முடிவு என்றே தான் நினைப்பதாக மஸ்க் தெரிவித்தார்.

மேலும் டிவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்த எலான் மஸ்க், அதிகப்படியான வேலை பளுவால் சில நேரங்களில் தான் அலுவலகத்தில் தூங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக தெரிவித்தார். “நூலகத்தில் நான் தூங்குவதற்கு என்று ஒரு இடம் உண்டு அங்கு யாரும் செல்ல மாட்டார்கள்.” என்றார்.

சில நேரங்களில் சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை பதிவிடுவது குறித்து கேட்டதற்கு, “நான் அதிகாலை 3க்கு பிறகு டிவீட் செய்யக்கூடாது என நினைக்கிறேன்” என்றார்.

பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து கேட்டதற்கு, “பொதுவாக பிபிசி, அரசு ஊடகம் என சொல்வதை விரும்புவதில்லை என்பது எனக்கு தெரியும்” என்றார்

இந்த வாரத் தொடக்கத்தில், பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை சரி செய்ய வேண்டும்” என பிபிசி டிவிட்டரிடம் கேட்டுக் கொண்டது.

“பிபிசி எப்போதும் சுதந்திரமாக செயல்படும். பிரிட்டன் மக்கள் செலுத்தும் அனுமதி கட்டணத்திலிருந்தே பிபிசிக்கு நிதி வருகிறது.” என பிபிசி தெரிவித்திருந்தது.

பிபிசியின் அடையாளத்தில் “வெளிப்படையான நிதி” என டிவிட்டர் மாற்ற முயன்றதாக தெரிவித்த ஈலோன் மஸ்க் “நாங்கள் முடிந்தவரை துள்ளியமாக இருக்க விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

“எனக்கு பிபிசியின் மீது மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்த மஸ்க், இந்த நேர்காணல் சில கேள்விகளை கேட்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் வித்தியாசமாக செய்யும் சில விஷயங்கள் குறித்து கருத்துகளை பெறுவதற்கு இது உதவியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 


ஃபயர்போல்ட் நிறுவனத்தின் புதிய ராக் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபயர்போல்ட் கொலைட் மாடலை தொடர்ந்து ஒரே வாரத்தில் ஃபயர்போல்ட் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். 

புதிய ஃபயர்போல்ட் ராக் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவிலான ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், மெட்டாலிக் கேசிங், ஏராளமான வசதிகளை வழங்கும் கிரவுன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள 260 எம்ஏஹெச் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் ஹெல்த் சூட், ஹார்ட் ரேட் டிராக்கர், SpO2 டிராக்கர் மற்றும் ஸ்லீப் சைக்கிள் மாணிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. நூருல் ஹுதா உமர்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இன்று (26) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் களஞ்சியசாலையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெமீல் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டரை்.

இலவச அரிசி விநியோகம் இன்று சாய்ந்தமருது - 01 ஆம், 05 ஆம் பிரிவு  மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய பிரிவுகளுக்கு தொடராக அரிசி விநியோகம் வழங்கப்படும் என பிரதேச செயலாளர் ஆஷிக் இதன்போது தெரிவித்தார்.


 


வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஐபோனில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதியை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களின் வாய்ஸ் நோட்-களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இந்த அம்சம் தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.5.77 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் வாய்ஸ் நோட்-ஐ ஸ்டேட்டஸ் ஆக வைக்க செய்கிறது. புதிய அம்சத்தை பெற ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து, அப்டேட் செய்ய வேண்டும். செயலியை அப்டேட் செய்ததும் இந்த வசதி வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். 


நூறுல் ஹுதா உமர்


இந்த ஆண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்களை (Junior inventor of the year (JIY) 2022) தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) கூட்ட மண்டபத்தில் Institution of Engineers, Sri Lanka (IESL) Eastern Chapter அமைப்பின் தவிசாளர் தென்கிழக்கு பல்கலைகழக பொறியியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை மாவட்ட உதவி பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.வினோதன் கலந்து கொண்டு புதிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார். 

நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களைச்  சேர்ந்த 32 மாணவர்கள் தங்களது புத்தாக்கங்களை காண்பித்து அவைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் குறித்த ஆக்கங்களை எவ்வாறு உருவாக்கினார்கள்; என்ற தகவல்களையும், அதற்கு பின்புலமாக அமைந்த காரணிகள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.

இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமைகளை பாராட்டிய அமைப்பின் மத்தியஸ்த குழுவினர் குறித்த புத்தாக்கங்களை மேலும் மெருகூட்டகூடிய ஆலோசனைகளையும் வழங்கினர். கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் Institution of Engineers, Sri Lanka (IESL) அமைப்பினால் 12 தொடக்கம்  19 வரையான வயதுடைய இளைஞர்களின் ஆற்றல் மற்றும் புத்தாக்கதிறனை மேம்படுத்தும் முகமாக இடம்பெற்றுவரும் இவ்வாறான நிகழ்வுகள் புதிய கண்டுபிடிப்பாளர்களை இனம்காட்டி வருகின்றன.

நிகழ்வின்போது பொறியியலாளர்களான எம்.ஐ.நஸீர், எம்.எம்.எம்.ஏ. பாயிக், ஏ.எம்.ஹய்க்கல், ஏ.பிரிந்தான், கலாநிதி எம்.என்.அஜ்மல் ஹினாஸ், ஏ.ஜி.சாமில் சப்றி, ஐ.எல்.எம்.சப்ரி,எம்.எப்.எம் இஸ்க்கி, இசட்.ஏ.எம். அஸ்மிர், எம்.எஸ்.எம்.நவாஸ், எம்.கஜினி  உள்ளிட்ட அமைப்பின் பொறியியலாளர்கள் பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இன்றைய தினத்தில் பங்குகொண்ட மாணவர்களின் ஆக்கங்களில் தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஹெச்டிசி டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது. அலுவல் பணிகளை மேற்கொள்வது, படிப்படி என பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பலரும் டேப்லெட்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இந்த டிரெண்ட் காரணமாக டேப்லெட் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், ஹெச்டிசி A102 பெயரில் புதிய டேப்லெட் அறிமுகமாக இருக்கிறது. 


கூகுள் SMS சான்றளிக்கும் தளத்தில் புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஹெச்டிசி டேப்லெட் தற்போது டெஸ்டிங் கட்டத்தில் உள்ளது. மேலும் இது பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் மிட்-ரேன்ஜ் அல்லது பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன போக்கோ X5 GT - வெளியீடு எப்போ தெரியுமா? இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹெச்டிசி A102 மாடலில் 4ஜி வைபை வசதி, 11.0 இன்ச் 2K டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், Arm கார்டெக்ஸ் A75 மற்றும் Arm கார்டெக்ஸ் A55 கோர்கள் முறையே 2GHz மற்றும் 1.8GHz இயங்குகின்றன. இத்துடன் 20MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் ஃபேஸ் டிடெக்ஷன் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் வசதி, ஆண்டராய்டு 12, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் 8000 எம்ஏஹெச் பேட்டரி, ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை வசதி, யுஎஸ்பி டைப் சி 3.0 போர்ட், OTG சப்போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு மற்றும் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஏற்ற பட்ஜெட் பிரிவில் புதிய டேப்லெட் வாங்க நினைப்போருக்கு ஏற்ற மாடலாக இது இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்டிசி A102 மாடல் முதற்கட்டமாக ஆப்ரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.


 


(வி.சுகிர்தகுமார்) 0777113659   


  அரசினால் வழங்கப்படும் நலன்புரி நன்மைகள், கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை தெரிவுசெய்வதற்கான முன் மாதிரி கள ஆய்வு தேசிய ரீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று 7 கீழ் 1 பிரிவில் முன் மாதிரி கள ஆய்வு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தலுக்கமைய உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட முன் மாதிரி கள ஆய்வு வேலைத்திட்டத்தை  பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் நெறிப்படுத்தினார்.

அரசினால் வழங்கப்படும் நன்மைகள், கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை தெரிவு செய்வதற்குரிய ஒழுங்கமைப்பட்ட முறையான கணிணி மூலமாக சேகரிப்பட்ட தகவல்கள் இதுவரையில் இல்லாத நிலையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக அரசினால் கையடக்கத் தொலைபேசி ஊடாக பயன்படுத்தக்கூடிய புதிய செயலி (APP) ஒன்றும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் களப்பயிற்சியும் செயலியின் பரீட்ச்சார்த்த பரிசீலனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

  இச் செயலியை பயன்படுத்தி ஒவ்வொரு பயனாளிகள் வீடுகளுக்கும் அனுமதியளிக்கட்ட உத்தியோகத்தர்கள் சென்று தகவல்களை சேகரித்து பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இக்கள ஆய்வு ஆரம்ப நிகழ்வில் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூக சேவைகள் உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலகத்தின் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.