Showing posts with label Central. Show all posts

 


ஹாலிஎல எஸ்டேட் வீட்டின் கூரையில் சுமார் 50 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை விழுந்தது. அது கரைந்து தரையில் எடுக்கப்பட்ட போது 5 கிலோ துண்டு இருந்தது.

மேற்கூரை பலத்த சேதமடைந்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
#இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் கூறுகையில், இது எல்காவில் மிகவும் அரிதான நிலை.


 Photographic credit  goes /Yannik Tissera

இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் புகைப்படக் கலைஞர் யானிக் திசேரா (Yannik Tissera) 12 விலங்கு இனங்களை இணைத்து புகைப்படம் எடுத்துள்ளார், ஒவ்வொன்றும் ஜனவரியில் மூன்று வாரங்களில் வெவ்வேறு நாட்களில் trap camera வைத்து பதிவு செய்யப்பட்டது

 


கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்தார்

 


மண்சரிவு காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் அந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 




இலங்கைகு, இந்திய அரசாங்கத்தினால், மேலும் பத்தாயிரம்  வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது என்பதாக மலையகம் 200 என்ற விழாவில் கலந்து கொண்ட  இந்திய மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன்  இன்று தெரிவித்துள்ளார்.

 


இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி 


கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

 


கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் வெலிமடை - கொழும்பு பேருந்தில் பயணித்தவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட  கிழக்கு  ஆளுநர் செந்தில் தொண்டமான்! !



கவரகல தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்த வீடுகளை இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.


அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கிய கூரைத்தகடுகளை அம்மக்களுக்கு உடனடியாக வழங்குமாறும், தீயினால் சேதமடைந்த வீடுகளின் பழுதுபார்க்கும் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருமாறும் தோட்ட நிர்வாகத்திற்கு அவர் பணிப்புரையும் விடுத்தார்.

 


உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து – சாரதி பலி

 


பூண்டுலோயா - துனுகேதெனிய பகுதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

 


தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்துர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டது. 


சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு நீதிபதி இன்று தளத்திற்கு விஜயம் செய்தனர்


 ஹந்தானை மலையில் ஏற வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி தாக்கியதில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் காயமடைந்ததாகவும், அவர்களை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் ஹந்தானை மலையில் ஏற  வந்துள்ளதாகவும் ஏனைய மாணவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



🔴பேராதெனிய பல்கலைக்கழகத்தை பார்வையிட வந்துள்ள மக்கள் கூட்டம் , தற்போதைய நிலை


80 வருடங்களை பூர்த்தி செய்வதையொட்டி பேராதெனிய பல்கலைக்கழகம் இன்று முதல் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது



நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள லெமனன் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று (16.06.2023) மாலை 04 மணியளவில் இடம் பெற்றுள்ள இந்த அனர்த்தத்தில் மரான்கொட மஸ்தெக எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பி.எம்.சி.ருக்ஷானா (வயது 21) மற்றும் கே.நிலந்த (வயது 42) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா வெடமன் வீதி இலக்கம் 7/2 என்ற முகவரியில் வசிக்கும் ரஞ்சித் பிரியந்த வீரசிங்க என்பவர் தனது விட்டுக்கு பின் பகுதியில் மண்மேடு ஒன்றை அகற்றி அங்கு விடுதி ஒன்றை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளார்.


இதன்போது விடுதி அமைக்கும் பகுதியில் 25 அடி உயரமான பாதுகாப்பு மதில் ஒன்றை அமைக்க

மண்மேடை அகற்றும் பணியில் ஒன்பது பேர் பணியாற்றி வந்துள்ளனர்.


இந்த நிலையில் அகற்றப்பட்ட மண்மேடு சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது சரிந்து விழுந்து குறித்த இருவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர்.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


அதேநேரத்தில் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


ஆ.ரமேஸ்.


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி கலாசார மேம்பாட்டுத் தாபனத்தினால் (எக்டோ) ஆரம்பிக்கப்பட்டு  இயங்கி வரும் எக்டோ நூலகத்தின்  20 ஆம்  ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை நூலகத்தில்  அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளுதல்,  வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் நூல்களை சேகரித்தல்  போன்ற நோக்கத்திற்காக  27.05.2023 தொடக்கம் 04.06.2023 வரை “எக்டோ நூலக வாரம் - 2023” எனும் தொனிப்பொருளில் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (27) எக்டோ நூலகத்தின் கேட்போர் கூடத்தில் தாபனத்தின் தலைவர் எஸ்.எல்.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி அவர்களும் விஷேட அதிதிகளாக  கல்முனை கமு/கமு/ அல்-

பஹ்ரியா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அதிபர் எம்.எஸ்.எம். பைசால், கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லீம் வித்யாலய அதிபர் ஏ.ஜி.எம். றிசாத், கல்முனை கமு/கமு/ அஷ்-ஷுஹரா வித்யாலய அதிபர் எம்.எச். எஸ்.ஆர். மஜீதியா,  கல்முனை கமு/கமு/ அல்-மிஸ்பாஹ் மகா வித்யாலய பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ் மற்றும்  கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நூலக அங்கத்தவர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


 புத்தகங்களை சேகரிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.


இந்நிகழ்வில்  கல்முனை கமு/கமு/ அஷ்-ஷுஹரா வித்யாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா, அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியின் பழைய மாணவி பாத்திமா நஸ்கத் ஆகியோரால் ஒரு தொகுதி நூல்கள் எக்டோ நூலகத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேலும், இத்தாபனம் மற்றும்  நூலகத்தின் வளர்ச்சியில் சிரேஷ்ட  ஆலோசகர்களாக இருந்து வழிநடாத்திய பேராசிரியர் மர்ஹூம் ஏ.எல்.எம். அப்துல் கபூர், முன்னாள் அதிபர் மர்ஹூம் எம்.வை.எம். எச். காரியப்பர் ஆகியோரை நினைவு கூறும் முகமாக இந்நிகழ்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் 104 வருட நிறைவையொட்டி, 1998 ம் ஆண்டு கல்வி பொது தராதர சா.த பரீட்சைக்கு தோற்றிய மற்றும் 2001 ம் ஆண்டு கல்வி பொது தராதர உ .த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களால் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள மாபெரும் மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி தற்போது நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மைதானத்தில்  நடைபெற்றுக் கொண்டுள்ளது. 



 


அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு....

மத்திய மாகாண, கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட டெல்டா கிழக்கு தமிழ் வித்தியாலயத்துக்கு குடிநீர் வசதி இன்மையால் ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
குடிநீருக்கும், இதர தேவைகளுக்கும் நீரை பெறுவதற்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே, தமது பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைக்கு குடிநீர் வசதியை பெற்றுக்கொடுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள ஜீவன் தொண்டமானிடம் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.