Showing posts with label Courts. Show all posts

 


சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு: கல்முனைக்கான தடை நீடிப்பு!


மாளிகைக்காடு செய்தியாளர்

உயர் நீதிமன்றில் இன்று (04) எடுத்துக் கொள்ளப்பட்ட சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வழக்கு  விசாரணை மீண்டும் எதிர்வரும் 24.02.2025  வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதுவரை கல்முனை மாநகர சபைக்கான தேர்தலுக்கு  இடைக்காலத் தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் மனுதாரர்களான முன்னாள் பிரதேச செயலாளரும் இலங்கையின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஏ.எல்.எம் சலீம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் அஸீம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்து குறிப்பிட்டத்தக்கது.

 


*நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது  வழக்குப்பதிவு இலங்கை இராணுவ தளபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பியவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்ட அவதூறு சம்பந்தமான வீடியோக்களை உடனடியாக நீக்குமாறு நிபந்தனையுடன் கூடிய கட்டளையை விதித்தது*


இலங்கை இராணுவ தளபதி விககும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்ட தரணி எம் கே எம் பர்ஸான் ஊடாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் தாக்கல் செய்த மனுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி இவ்வாறான அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும் என எடுத்துக்காட்டினார் இதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டு இருந்த சாலிய ரணவக்க அவரது இரண்டு வலைத்தளங்கள் மற்றும் YouTube தளம் போன்றவற்றிற்கு அந்த வீடியோக்களை உடனடியாக அகற்றுமாறு நிப்பந்தடையுடன் கூடிய கட்டளையை விதித்தார்.

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்  விஜயதாச ராஜபக்ஷ, பதில் பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு தடை விதித்து கடுவெல மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 


தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு பொது உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (14) மறுத்துள்ளது. அத்தகைய வழிகாட்டுதலைக் கோரும் பொது நல வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 


சாய்ந்தமருது மத்ரசா மாணவரின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட CCTV காட்சிகளை, அழித்தல் செய்ததாகச் சொல்லப்படும்  சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 29ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதிவான் நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் அவர்கள் இன்றைய தினம் கட்டளை பிறப்பித்தார்.

 


பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் உள்ள சில ஷரத்துகள் சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது; அல்லது SC பரிந்துரைத்த திருத்தங்கள் இணைக்கப்பட்டால், மசோதாவை எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும்

 


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

 



மாளிகைக்காடு நிருபர்

 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமான வழக்கு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இந்த வழக்கில் மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் அவரது சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகி வாதாடி வருகின்றனர். இவர்கள் இடைக்கால தீர்வாக கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க செய்ய வேண்டும் என்பது உட்பட இன்னும் மூன்று நிவாரணங்களை கோரியுள்ளனர்.


இது தொடர்பிலான இடையீட்டு தீர்வொன்று கடந்த மேமாதம் 23ம் திகதி கட்டளையாக பிறப்பிக்கப்பட இருந்த நிலையில் மே முதலாம் வாரமளவில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் அவர்களும் இணைந்து தங்களை இடையீட்டு மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளுமாறு நீதிமன்றத்தை கோரி இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் இடையீட்டு தீர்வொன்றை வழங்க கூடாது என்று இடையீட்டு மனுதாரர்களும், இடையீட்டு தீர்வை வழங்க கோரி சுமந்திரன் தரப்பினரும் வாதிட்டு பின்னர் தமது பக்க நியாயங்களை எழுத்து மூல சமர்ப்பிப்புக்களாகவும் செய்திருந்தனர்.


இருதரப்பு சமர்ப்பனங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் இம்மாதம் 15ம் திகதி இடைக்கால கட்டளையை பிறப்பிக்க இருந்த நிலையில் இன்று (24) வரை ஒத்திவைத்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் கௌரவ பந்துல கருணாரத்ன அவர்கள் தனது தீர்மானத்தை மன்றுக்கு அறிவித்தார். அவரது அறிவிப்பில் கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் இடையீட்டு தீர்வை கோரிய மனுவையும் அதற்கு எதிரான மனுவையும், வாதங்களையும் பரிசீலித்து ஆராய்ந்த பின்னர் இந்த இடையீட்டு நிவாரணத்தை நிராகரிப்பதாகவும் அந்த தீர்வை வழங்க முடியாது என்றும் மன்றுக்கு அறிவித்திருந்தார். இதனடிப்படையில் சுமந்திரன், கலையரசன் தரப்பினர் நீதிமன்றத்தை கேட்டிருந்த இடைக்கால தீர்வை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


அதே நேரம் வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க எதிர்வரும் 2024.01.17ம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் அவர்களும் இணைந்து கடைசி நேரத்தில் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக கல்முனை மாநகர முஸ்லிம்களுக்கு ஏற்பட இருந்த இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், பொது அமைப்புக்களின் பிரதானிகளும் கருத்து வெளியிட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


தங்களின் சம்பளத்திற்கு புதிய வரிகளை விதிக்க வேண்டாம் என நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி நீதித்துறை அதிகாரிகள் சங்கங்கள் தாக்கல் செய்த மூன்று மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த மனுக்கள் இன்று (05) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.


உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட மனுதாரர்கள், முன்பு செலுத்தும் வரி என அழைக்கப்படும் அட்வான்ஸ் தனிநபர் வருமான வரி (APIT) நீதித்துறை உறுப்பினர்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைக் கோரியிருந்தனர்.


இலங்கை நீதித்துறை சேவை சங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகிய மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன


அளத்தல், நிறுத்தல் உபகரணங்களை அனுமதிப்ப பத்திரங்களை நீட்டிப்புச் செய்யாத, 21 பேருக்கு அபராதம் அக்கரைப்பற்று நீதிமன்றினால் விதிக்கபட்டது. அக்கரைப்பற்று நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட  வர்த்தக  நிலையங்களில், தராசு, மீற்றர் அளவுகோல் போன்றவற்றுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காதோருக்கு எதிராக நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த குற்றவாளிகளுக்கு ரூபா 2000 தண்டப் பணமாக விதிக்கப்பட்டதுடன், அவர்களது உபகரணங்கள் சிலவும் விடுவிக்கப்பட்டன

 


நூருல் ஹுதா உமர்


முன்னாள் அமைச்சரும், மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் 23 வது நினைவு தினம் எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி சாய்ந்தமருதில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. அது தொடர்பாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களினதும் மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் அம்பாறை மாவட்டம் பூராக நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கல்முனையில் இது சம்பந்தமான கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் தலைமையில் கல்முனை காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டமானி ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். சி எம் பைசல் காசிம், முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள்,  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

 


கௌரவ ஓய்வு பெற்ற வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திரு இராமச்சந்திரன் அவர்கள் 07-01-2023ம் திகதி சனிக்கிழமை காலமானார்.  முல்லைத்தீவு நீதமன்றிலும், வவுனியா மேல் நீதிமன்றிலும் கடமையாற்றியவர் அவர். அவர் எந்த உத்தியோகத்தரையும் சினந்து, கடிந்து பேசியது கிடையாது, எவருக்கும் உதவி செய்யும் மனம் கொண்ட உன்னதமான ஒருவர் ஆவார்


அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


 FAROOK SIHAN


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மாற்றம்?


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  விவகாரம் தொடர்பில்  கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை   மீண்டும் எதிர்வரும் ஜனவரி  மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இது குறித்த வழக்கு   கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு கடந்த  திங்கட்கிழமை (5)  வந்தபோதே  இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதன்படி வழக்கானது   விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை  பிரதிவாதி  சார்பாக ஆஜரான   சட்டத்தரணிகள் கடந்த தவணையின் போது குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி  விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். 


இதற்கமைய குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி மன்றிற்கு தெரிவித்தார்.


மேலும் குறித்த விசாரணையின்   போது மன்றில்  பிரதான பரிசோதகரின் கைது  தொடர்பில் ஆட்சேபனை   முன்வைத்ததுடன் பிரதி வாதியான பொலிஸ் பரிசோதகரை குறித்த வழக்கில் இருந்து பிணையில் விடுதலை செய்யுமாறு விண்ணப்பங்களை முன்வைத்திருந்தனர்.


 

இதனையடுத்து மீண்டும்   நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால்  எதிர்வரும் ஜனவரி   மாதம் 18 ஆம் திகதிக்கு  குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அத்துடன் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக  கல்முனை - சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில்  பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை  தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


  சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்  அம்பாறை பொலிஸ்  உப கராஜின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


கிளைபோசேட் பூச்சிகொல்லி மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வலிதற்றதாக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே உட்பட சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பூச்சிகொல்லிகள் பதிவாளர், விவசாயம் அமைச்சர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .

கிளைபோசேட் பூச்சி கொல்லிக்கு 2017 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தற்போது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளைபோசேட்டின் பயன்பாடு நீர்நிலைகள், மண், தாவரம், மீன்கள், பறவைகள் உட்பட மனிதர்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிப்பதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளைபோசேட் மீதான தடையை நீக்குவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்று தீர்ப்பளிக்குமாறும் தடையை நீக்குவதற்கான உத்தரவை இரத்துச் செய்யுமாறும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்ற நடவடிக்கைகள், வழக்கம் போல இடம்பெறும் என்பதாக நீதிச் சேவை ஆணைக்குழு - அறிவித்துள்ளது.

நீதிமன்ற ஊழியர்கள் சுழற்ச்சி முறையில் பணிபுரியவுள்ளர்கள்.



 




பாறுக் ஷிஹான்


வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்டிருந்த பொறியியலாளர் என். கேதீஸனின் நியமனத்தினை ஆட்சேபித்து பொறியியலாளர் எம்.எம். றியாஸினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மீளாய்வு வழக்கானது இன்று (17) ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது கௌரவ நீதியரசர்கள் குறிப்பிட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை திருகோணமலை மாவட்ட பிரதம பொறியியலாளராக செயற்பட கேதீஸனுக்கு இடைக்கால தடை விதித்துக் கட்டளையிட்டனர்.

பொறியியலாளர் றியாஸ் சார்பாக சட்டத்தரணி பாத்திமா பெனாஸிரின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியாவுடன் சட்டத்தரணிகளான திலினி விதானகமகே மற்றும் ஏ.எல்.ஆஸாத் ஆகியோர் மன்றில் தோன்றினர். 

குறித்த வழக்கின் விசாரணையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி யு.எல்.  அலி சக்கியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட கட்டளையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கென்பது குறிப்பிடத்தக்கது.


 பாறுக் ஷிஹான்


திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க சென்ற பெப்ரவரி மாதம் 02ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸ் அவர்கள் கடமையேற்க விடாது பல குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் திருகோணமலை திரு ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சென்ற  மார்ச் மாதம் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். குறிப்பிட்ட வழக்கில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸன் றுஷ்தி, முஹைமின் காலித் மற்றும் ஸாதிர் அஹமட் ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணம் செய்திருந்தனர்.


அதன் தொடர்ச்சியாக வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இம்மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டத்தரணிகளான முபஸ்லீன் மற்றும் றிஸ்வான் ஆகியோர் வாதிதரப்பில் ஆஜராகி இருந்தனர். ஏலவே மன்றின் நீதிபதியவர்கள் குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் செய்ய சமர்ப்பணத்தை ஏற்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார். இவ்வழக்கானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.


குறிப்பிட்ட இவ்வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரி நீதிமன்று குற்றவாளியாகக் காணூமிடத்து இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள் 162,183,184,486 அடிப்படையில் சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


ஷண்முஹா ஹபாயா விவகாரத்தில் ஆரம்பம் தொட்டு குரல்கள் இயக்கம் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றது.

 


முன்னாள் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலியினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D நவாஸ் விலகியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று (10) இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக மனு மீதான பரிசீலனையிலிருந்து விலகுவதாக நீதியரசர் A.H.M.D நவாஸ் இன்று (10) அறிவித்ததை தொடர்ந்து, மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலி கடந்த மார்ச் 9 ஆம் திகதி ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தடுத்துவைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.


மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இருதயபுரத்தை சேர்ந்த 21 வயதான சந்திரன் விதுஷன் என்பவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த போது உயிரிழந்தார்.


அதிக போதைப்பொருள் பாவனையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


எனினும், பொலிஸாரின் தாக்குதல் காரணமாக சந்திரன் விதுஷன் உயிரிழந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவரின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.