Showing posts with label science. Show all posts


 தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள இலங்கை U19 அணியில் இணைய உள்ளார். சனத் ஜெயசூர்ய -லெஜண்டுடன் மேலும் இரண்டு U19 சிறுவர்கள் பயணம் செய்வார்கள்

 


( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சத்திர சிகிச்சைக்கான
மருத்துவ முதுமாணி(MD in Surgery) பரீட்சையில் சித்திபெற்று சத்திர சிகிச்சை நிபுணர்களாக பட்டப் பின் பட்டம் பெற்றுள்ளனர்.

காரைதீவு .1 விபுலானந்த வீதியில் வதியும் வைத்திய அதிகாரி டாக்டர் நடேசன் அகிலன் மற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் நடேசன் பகீரதன் ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள் இருவர், ஒரே வேளையில் இம் மருத்துவ முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் பல வைத்தியர்கள் உருவாகிய போதிலும் வரலாற்றில் முதல் தடவையாக சகோதரர் இருவர் முதல் தடவையாக சத்திர சிகிச்சை நிபுணர்களாக தெரிவாகி இருப்பது வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும்.

கடந்த  2023-03-01ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டம் வழங்கப்பட்டது.

தற்சமயம், வைத்திய கலாநிதி டாக்டர் நடேசன் பகீரதன் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், அவரது சகோதரர் வைத்திய அதிகாரி டாக்டர் நடேசன் அகிலன் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையிலும் பணியாற்றி வருகின்றனர்.

வைத்திய கலாநிதி நடேசன் அகிலன் 2006ம் ஆண்டு க.பொ.த. உயர்தர உயிரியல்  பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக தெரிவாகி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

சாதனை படைத்த மேற்படி இரு சகோதரர்களின் மற்றும் ஒரு சகோதரன் பொறியியலாளராகவும், ஒரு சகோதரி மிருகபரிபாலன வைத்திய அதிகாரியாகவும், மற்றுமொரு சகோதரி பிரபல பல் வைத்திய அதிகாரி டாக்டர் த.உமாசங்கரின் மனைவியுமாவார்.


பாறுக் ஷிஹான்(
ෆාරුක් සිහාන්)


இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை(1) இரவு இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தனது கருத்தில்

இந்த வருடம் மூன்றாவது மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூடவுள்ளது.கடந்த அரசாங்கத்தில் இப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இங்கு ஏங்பாடு செய்யப்பட்டிருந்தன.ஆனால் தற்போதைய புதிய அரசாங்கம் இப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாம்  சகல தமிழ் தரப்பினரும் தற்போது  இணைந்து ஒரு முன்மொழிவினை இப்பேரவையில் முன்வைக்கவே விரும்புகின்றோம்.இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.சில் அரசியல் தரப்பினர் அரசியல் இலாபங்களுக்காக இவ்விடயத்தில் செயற்பட முயல்கின்றனர்.இந்த பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளன.இதில் 24 நாடுகளின் ஆதரவினை நாம் பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை நகர்த்த முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் காலஅவகாசம் கேட்டுள்ளதாக கருத்துக்கள் வெளிவந்தன.இவை முற்றுமுழுதான பொய்கள் ஆகும்.இப்பொய்களை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம்.

இப்பேரவையின் விடயங்கள் குறித்து அறிக்கை விடும் சிலருக்கு இப்பேரவை எவ்வாறு இயங்குகின்றது என கூட  தெரியாமல்  உள்ளது. அண்மையில் ஒரு சிலர் சர்வதேச நீதிமன்ற விசாரணையை இவ்விடயத்தில் கோருகின்றனர்.அவ்வாறு இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதென்றால் இன்னுமொரு நாடு பிரேரணையை முன்வைக்க வேண்டும்.யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்தும் இனி ஒரு நாடு வந்து பிரேரணை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் நம்பவில்லை.இதை சிலர் குறுகிய இலாப அரசியலுக்காக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் புதிய அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து நாம் இப்பேரவையினை பயன்படுத்த முடியும்.11 வருடங்களாக எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறக்காது இவ்விடயத்தில் அக்கறை செலுத்த  வேண்டும்.நீதி கிடைக்கும் வரை நாம் போராட வேண்டும்.இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முஸ்லீம் நாடுக்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கையை இப்பேரவையின் நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற இலங்கை அரசாங்கம் முஸ்லீம் நாடுகளின் ஆதரவினை பெற இஸ்லாமிய மதகுருக்களை அங்கு அழைத்து சென்றிருந்துடன் ஆதரவு கோரிக்கையை முன்வைத்திருந்தது.இதனால் இஸ்லாமிய நாடுகளும் அதன் போது ஆதரவாக வாக்களித்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கத்தை காப்பாற்ற வாக்களித்திருந்தனர்.ஆனால் இன்று அச்சமூகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெறுகிறது.அதாவது நல்லடக்கம் செய்யும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.இதனால் இலங்கையில் இடம்பெறுகின்ற மனத உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று செர வேண்டும்.2013  ஆண்டு திகண அளுத்கம வில் தொடங்கி தற்போது ஜனாசா வரை இடம்பெற்று வருகின்ற மனித உரிமை  மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும்.மனித உரிமை என்பது அனைத்து சமூகத்திற்கும் பொதுவானது.இவ்வாறான மோசமான நிலையில் இந்நாடு இருக்கின்ற போது தமிழ் பேசும் மக்களில் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து இன்று 20 திருத்த சட்டத்திற்கு வாக்களித்துள்ளனர்.எதற்காக வாக்களித்தார்கள் என்பது பலருக்கு இன்றும் தெளிவில்லை.கடந்த காலத்தில் வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய நிலையில் கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 60 கோடி ரூபா வேலைத்திட்டம் செய்யப்பட்டது.

தற்போது அரசாங்கத்திற்கு வாக்களித்த சிறுபான்மை தரப்பினருக்கு என்ன கிடைத்தது.அந்த முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமையான ஜனாசா எரிப்பதை நிறுத்த முடியாத நீங்கள் அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்தும் பலனில்லை எவ்வாறு  மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்க போகின்றீர்கள்.இஸ்லாமிய மக்கள் மறு உலகில் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வுலகில் சிறப்பாக வாழ விரும்புகின்றனர்.இவ்வுலகில் அவர்கள் 4 கடமைகளை செய்ய வேண்டும்.இதையாவது  செய்ய விடாமல் இருக்கின்ற நிலையில் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு வாக்களித்தோ அல்லது ஆதரவு தெரிவித்தோ எந்த பலனோ மக்களுக்கு கிடைக்க போவதில்லை.இதனை நீங்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.என்ன கொங்கிறீட் பாதை போட்டாலும் அதனூடாக  ஜனாசாக்களை கொண்டு செல்ல முடியவில்லை எனின் அர்த்தமில்லை.இதனால் அம்மக்கள் விரைவில் நீங்கள் செய்த தவறுகளுக்கு பாடம் படிப்பிற்பார்கள் என்பதை விரும்புகின்றேன் என்றார். 

(க.கிஷாந்தன்)
எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால்  ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
அட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக 18.07.2018 அன்று மதியம் 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எரிபொருள் மற்றும் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும், தேவையற்ற வரிகள் நீக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதன் போது முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் எரிபொருள் சூத்திரம் எனும் அடிப்படையில் எந்தவொரு காரணமும் இன்றி திடீரென எரிபொருளின் விலையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், இதனால் சாதாரண மக்களது வாழ்க்கைச் செலவீனம் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியான நிலையில் குறித்த மாணவன் இந்த பெறுபேற்றை பெற்றுள்ளான்.
இவ்விடயம் குறித்து அ.அபிநந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எனது தாய் ஆசிரியர், தந்தை மருந்தாளர் எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் நான் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன்.
இந்நிலையில் உயிரியல், விஞ்ஞான துறையில் தொடர்ந்து கல்வி கற்பதற்கு விரும்புகிறேன். அது தவறினால் நோய்கள் பற்றிய ஆய்வுதுறையில் கல்வியை கற்க விரும்புகிறேன். அதேபோல் எனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள் என எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆராய அனுப்பிய ஜுனோ விண்கலன் வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
சுமார் 100 கோடி அமெரிக்க டாலர் செலவுக்குப்பின் இந்த விண்கலன் ஐந்தாண்டுகள் பயணித்து அங்கே சென்றுள்ளது.
2011 ஆம் ஆண்டு வியாழனை நோக்கி ஜூபிடரை நோக்கி பயணிக்கத்துவங்கிய ஜூனோ விண்கலன், சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனின் ஈர்ப்பு சக்தி மண்டலத்தால் பிடிக்கப்பட ஏதுவாக, தனது இயந்திரத்தை 35 நிமிடங்கள் வரை இயக்கி, தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது.
அதைத் தொடர்ந்து அது வியாழனின் ஈர்ப்புசக்தியால் ஈர்க்கப்பட்டு, அதன் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.
சுமார் 800 மிலியன் கிலோமீட்டர் தொலைவில் இந்த சாதனை நடந்ததைக் காட்டும் ஒலி சமிக்ஞைகளை ஜூனோ பூமிக்கு அனுப்பியபோது, நாசா விஞ்ஞானிகள் பெரும் ஆரவாரம் செய்தனர்.
ஜூனோ விண்கலன் வியாழன் கிரகத்தை அடுத்த ஒன்றரை ஆண்டு சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனது பணி முடிந்த பின்னர் அது வியாழன் கிரகத்தின் வான் சூழலில் குதித்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.

'கொடூரமான பல் வைத்தியர்' என்ற பட்டப்பெயர் கொண்ட, நெதர்லாந்து பிரஜை ஒருவர், நோயாளிகளின் வாய்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸில் எட்டாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
வலியை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்ததாகவும், நோயாளிகளின் காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக தேவையற்ற பல் பிடுங்கும் சிகிச்சைகளை நடத்தியதாகவும் ஜேகபஸ் வான் நியோரப் என்ற அந்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பல்வரிசைக்கு கம்பி கட்டச் சென்ற பெண்ணொருவருக்கு 8 பற்களை அவர் பிடுங்கியிருக்கிறார்.
அவர் பணியாற்றிய கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் அவர் மீது வழக்கை தொடர்ந்திருந்தனர்.

கண்டம் தாண்டும் ஏவுகணையை செலுத்தும் ராக்கெட்டை சோதித்துள்ளது வடகொரியா


கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உந்தும் ராக்கட் ஒன்றை தாம் வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அணுகுண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தும் வல்லமை தமக்கு உள்ளதை இச்சோதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது என வடகொரியா மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைவர் கிம் ஜாங் உண்ணின் நேரடிக் கண்காணிப்பில் இந்த ராக்கெட் சோதிக்கப்பட்டதாக வடகொரிய ஊடகம் அறிவித்துள்ளது.
அணுகுண்டு சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வடகொரியா இப்போது இந்தப் புதிய ராக்கெட்டை சோதனை செய்துளது.
வடகொரியாவின் இந்தச் செயல் ஐக்கிய நாடுகள் சபை அதன் மீது இன்னொரு சுற்று பொருளாதார தடைகள் விதிக்கத் தூண்டக் கூடும் என பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
வடகொரியா சவடால் பேச்சுக்களையும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கோரியுள்ளது.

கடந்த நான்கைந்து ஆண்டுகளில் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக தானம் செய்திருப்பதாக நீதிமன்றம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் தரப்பு வழக்கறிஞர் லஷான் டயஸ் நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்களில் 6 பேரின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டுள்ளதை மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கடந்த வாரம் நீதிமன்றில் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்இ இந்த ஆறு பேரும் இலங்கையில் தமது சிறுநீரகங்களை அன்பளிப்பு செய்ததாக கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நவலோகா மற்றும் லங்கா ஹாஸ்பிட்டல் ஆகிய தனியார் மருத்துவமனைகளில் சந்தேக நபர்கள் தமது சிறுநீரகங்களை வழங்கியதாக தெரிவித்த சட்டத்தரணி, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவிற்கு அமைவாகவே அவர்கள் இதனை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
கடந்த 2014இல் இவர்கள் சிறுநீரகங்களை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்கள் என்றும் அண்மைய சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்புகள் இல்லை என்றும் சட்டத்தரணி லக்ஷான் டயஸ் மேலும் கூறியிருக்கிறார்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

(க.கிஷாந்தன்)

தோட்ட கிராமபுர வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்புக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் துரித கதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல ஆகியோரின் பணிப்புரையின் கீழ் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு முழு பொறப்புகளும் வழங்கப்பட்டு தோட்ட பாதைகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்க அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய டயகம கிழக்கு தோட்டத்திற்கான பாலங்கள் இரண்டு புனரமைக்கப்பட்டு 28.02.2016 அன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் விண்கல் தாக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி வட்டத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் அது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், அக்கல்லூரியின் பேருந்து ஓட்டுநரான காமராஜ் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த அந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு அளிக்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பலியான காமராஜின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அவரது குடும்பத்துக்கு தமது அனுதாபத்தையும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அசாதாரணமான வகையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் காயமடைந்த மற்ற மூவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அந்த குறிப்பிட்ட தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில், மர்மப் பொருள் ஒன்று வானிலிருந்து விழுந்தது என்றும், அது அதிகமான சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும், அதன் காணரமாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்ததாகவும், பிபிசி தமிழோசையிடம் பேசிய அக்கல்லூரியில் பணிப்புரிந்து வரும் அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த விபத்தில் தான் பேருந்து ஓட்டுனர் காமராஜ் உள்ளிட்டோர் காயமடைந்து, அவசரமாக மருத்துவமைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் வழியிலேயே பலத்த காயமடைந்திருந்த ஓட்டுனர் காமராஜின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த வாரம் செவ்வாய்கிழமை, ஜனவரி 26 ஆம் தேதியன்று, இதே போன்றொதொரு சம்பவம் அதே வேலூர் மாவட்டத்தின் ஆலங்காயம் பேரூராட்சி அருகே நடைபெற்றதாகவும், அச்சம்பவத்தினால், நெற்பயிர் வயல் ஒன்றில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உருவாகியிருந்தது என்றும் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அகமதாபாத் இயற்பியல் ஆய்வு கூடத்தின், வான் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

எச்சில் மூலம் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்.
டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான நுளம்புகளின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.

தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.

இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ நுளம்புகளால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல்தொடர்புகள் மூலமாகவும் ஸிக்கா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் 1000 இற்கும் அதிகமான குழந்தைகள் ஸிக்கா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள ஸிக்கா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான “WHO” கவலை தெரிவித்துள்ளது.

ஸிக்கா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40 இலட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், நுளம்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் ஸிக்கா நோய் செல்லக்கூடும். அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஸிக்கா நோய் வேகமாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்திலும் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸிக்காவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் உடலுறவு வைத்துகொண்டதன் மூலம் தற்போது இங்குள்ள ஒரு ஆணுக்கும் ஸிக்கா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளான ஹோன்டுராஸ் மற்றும் நிகாரகுவா நாடுகளில் தலா ஒரு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து ஹோன்டுராஸ் நாட்டில் 3,200 பேருக்கும், நிகாரகுவாவில் 29 பேருக்கும் இந்நோய் தொற்று பரவியுள்ளது, தெரியவந்துள்ளது.

நியூயோர்க் நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸிக்கா தாக்கம் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் வெப்ப பிரதேசமாக கருதப்படும் புளோரிடா மாநிலத்தில் ஸிக்கா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

அங்குள்ள தட்பவெப்ப நிலை ஸிக்கா வைரஸை பரப்பும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக சாதகமாக அமைந்துள்ளதால், புளோரிடா மாநிலம் முழுவதும் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் ரிக் ஸ்காட் அறிவித்துள்ளார்.

குறிப்பாக, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட், மியாமி-டாடே, டம்பா பிராந்தியத்தில் உள்ள ஹில்ஸ்பரோ, தென்மேற்கில் உள்ள லீ கவுன்ட்டி மற்றும் சான்ட்டாரோஸா கவுன்ட்டியில் கொசுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை பணியாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புயலைப்போல இந்த நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸிக்கா வைரஸ் பரவுவதையடுத்து சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்திய ஐந்தாவது மாநிலம் புளோரிடா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸிக்கா நோய்த்தொற்று உள்ளவர்களின் எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாக இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என பிரேசில் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதேபோல், அமெரிக்காவில் ஸிக்கா பாதித்த நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் பயணிகளுக்கான புதிய மருத்துவ எச்சரிக்கையை அமெரிக்க சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ளது.

ஸீகா வைரஸ் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதை இன்று முதல் பொரல்லை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கவுள்ளது.

அதற்காக தேவைப்படும் இரசாயனப் பொருட்கள் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்
ஸீகா வைரஸ் தொற்று பரவியுள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுற்றாலாப் பயணிகள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நேற்றைய தினம் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மூத்த மரங்களைக் காட்டிலும் அதிகமான கரியமிலவாயுவை இளம் மரங்கள் காற்றுவெளியில் இருந்து அகற்றுகிறது என்று புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது.
பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் லத்தீன அமெரிக்க வெப்பமண்டலக் காடுகளில் ஆய்வு செய்த நெதர்லாந்து விஞ்ஞானிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
காலாகாலமாக மனிதனின் கைபடாமல் இருந்துவரும் காடுகளை விட பதினோரு மடங்கு அதிகமான கரியமிலவாயுவை இக்காடுகள் உள்வாங்கிக்கொள்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
மனிதப் பயன்பாட்டுக்காக மரங்கள் வெட்டப்பட்ட காடுகளை மீண்டும் மரங்கள் வளரச் செய்வது என்பது புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு இதுவரை நினைத்துவந்ததை விட மிகவும் அவசியம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
ஆய்வின் முடிவுகள் தி நேச்சர் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.


புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

நம்மைப் பாதிக்கும் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களை போதிய விழிப்புணர்வு இருந்தால் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில் 47% புற்றுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர் நோய்த்தாக்கத்திற்கு உள்ளான குறுகிய காலத்திலேயே உயிரிழக்கின்றனர்.

புற்றுநோய் குறித்த அலட்சியப்போக்கு தொடருமானால் 2030ஆம் ஆண்டளவில் வளர்ந்துவரும் நாடுகளில் புற்றுநோய்த்தாக்கம் 81% ஆக அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பாவனை காரணமாகவே 22% புற்றுநோய்கள் மனிதரைத் தாக்குகின்றன. புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கணையம் மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் போன்ற உடற்பாகங்களில் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.

இதனால் புகையிலை பாவனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பிட்டளவான புற்றுநோய்களை முன்கூட்டியே அறிந்துகொண்டால், சத்திரசிகிச்சைகள், ரேடியோதெரப்பி அல்லது ஹீமோதெரப்பி மூலம் குணப்படுத்திவிட முடியும் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது.

இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக ”எம்மால் முடியும், என்னால் முடியும்” எனும் வாசகம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் போதுமானளவு இருக்குமாயின் 30% புற்றுநோய்களை குணப்படுத்திவிட முடியும்.

ஆரம்ப அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

தவிர, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் வழங்குங்கள், பரிதாபம் தேவையற்றது.

இலங்கையில் இருந்து மற்ற பல நாடுகளுக்கு கருவிழிப்படலம் அனுப்பி வைக்கப்படுகிறது
கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும்.
உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கண்ணின் கருவிழியின் மேல் கண்ணின் முன்புறமாக அமைந்துள்ள கண்ணின் இந்த கருவிழிப்படலம் ஒருவர் மரணம் அடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டால் அதை தேவைப்படும் ஒருவருக்கு பொருத்தி அவருக்கு பார்வையைக் கொடுக்க முடியும். ஒருவர் இறந்த பிறகும் கூட அவரது உடலில் இருந்து ஆறுமணி நேரம் கழித்தும்கூட இந்த கருவிழிப்படலம் அகற்றப்பட முடியும்.
கருவிழிப்படலம் தானமாக கிடைத்ததால் பார்வை திரும்பப்பெற்ற பரமன் மஹாலிங்கம்
உடலின் மற்ற உறுப்புகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றிப் பொருத்தும்போது அந்த உறுப்பை கொடையாக பெறுபவரின் உடல் புதிதாக பொருத்தப்பட்ட உடலுறுப்பை நிராகரிக்கும் ஆபத்து இந்த கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு.
அதைவிட முக்கியமாக, பெரும்பாலான நாடுகளில் ஒரு நாளைக்கு இயற்கையாக இறப்பவர்களின் கருவிழிகள் அகற்றப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டால் மிகச்சில தினங்களுக்குள்ளேயே கருவிழிப்படல பாதிப்பால் கண்பார்வை இழந்தவர்கள் அனைவருக்குமே கண்பார்வையை மீண்டும் கொடுத்துவிட முடியும் என்பதும் இதன் தனிச்சிறப்பு.
ஆனாலும் இந்த கருவிழிப்படலங்களுக்கு உலக அளவில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அந்த நாட்டுக்குத் தேவையான கருவிழிப்படலங்கள் தாராளமாக கிடைப்பது மட்டுமல்ல, அவை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடு இலங்கை. கருவிழி மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.
இலங்கையில், இறப்பவர்களின் கண்களை தானமாக வழங்க ஏற்பாடுகளை செய்வதற்கான பல காரணங்களில் அப்படி செய்வதன் மூலம் மறுபிறவியில் தமக்கு சிறப்பான பார்வை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் முக்கிய பங்காற்றுகிறது.
தனது புத்தமத நம்பிக்கை கண்தானம் செய்ய ஊக்குவிப்பதாகக் கூறுகிறார் விஷ்வானி பசாதி என்ற மாணவி
இந்த பிறவியில் நாம் கண்களை தானமாக வழங்கினால், மறுபிறவியில் தெளிவான பார்வையுடனான வாழ்க்கை கிடைக்கும் என்று தான் நம்புவதாக, கொழும்பு அரச மருத்துவமனை கண் வங்கியில், மரணத்தின் பின்னர் தனது கண்களை தானமாக வழங்க வந்திருந்தவர்களில் ஒருவரான, விஷ்வானி பசாதி என்ற மாணவி பிபிசியிடம் தெரிவித்தார்.
தான் பௌத்த மதத்தை சேர்ந்தவர் எனவும், தனது மதத்தில் தாம் இதனை உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார். இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.
விஷ்வாணி போன்றவர்களின் கருவிழிப்படல தானத்தால் பயன் பெற்றவர்களில் ஒருவர் பரமன் மாஹாலிங்கம். விபத்து ஒன்றில் தனது வலது கண் பார்வையை இழந்த பரமன் மாஹாலிங்கம், இனி தனது வாழ்க்கையை ஒரு கண்ணுடனேயே கழிக்க வேண்டும் என தான் மனமுடைந்திருந்ததாகவும், ஆனால் தற்போது கொடையாளி ஒருவரின் கார்னியாவை கொண்டு தனக்கு மேற்கொள்ளப்பட்ட மாற்று அறுவை சிகிச்சையின் பின்னர், தனக்கு தற்போது அந்தக் கண் நன்றாக தெரிவதாகவும், மகிழ்ச்சியுடன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இலங்கையில், 5 பேரில் ஒருவர் தமது கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலத்தை தானமாக வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை கண்தானச் சங்கம் தெரிவித்துள்ளது.
1961ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இலங்கை கண்தானச் சங்கம் இலங்கையில் கண்தானத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது
இந்த அறக்கட்டளை நிறுவனம், 1961 ஆம் ஆண்டில் ஹட்சன் சில்வா என்ற இளம் மருத்துவரால் தொடங்கப்பட்டது.
தமது கருவிழிப்படலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்ற வேட்கை, இலங்கையில் அதற்கான தேவையை தீர்த்துள்ளதுடன், மீதமானவை ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2014 இல், இலங்கையிலிருந்து சீனாவிற்கு 1000 கருவிழிப்படலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு 850, தாய்லாந்திற்கு 25, மற்றும் ஜப்பானுக்கு 50 உம் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்.
கருவிழிப்படல பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்புக்கு இலங்கையில் முழுமையான தீர்வு சாத்தியமாகியுள்ளது
மிகவும் எளிமையாக உறுப்பு மாற்று சிகிச்சை செய்யக் கூடிய திசுக்களில், கார்னியா எனப்படும் கருவிழிப்படலமும் ஒன்றாகும்.
பிரித்தெடுக்கப்பட்ட கருவிழிப்படலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டால் தேவைப்படும் நோயாளிக்கு, நான்கு வாரங்களுக்குள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட வேண்டும்.


ஸீகா வைரஸ் பரவலை உலகமட்ட சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள போதிலும், ரியோ நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை ரத்துச் செய்வதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்று பிரஸில் கூறியுள்ளது.
கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஏற்பட்ட பிறவிக்குறைபாட்டுக்கு காரணமாகியுள்ளது.
முன்னர் நம்பப்பட்டதைதை விட இது மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஸீகாவை உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் பரிசீலனை
ஸீகா கிருமி பரவிவரும் நிகழ்வை ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடியாக அறிவிப்பது பற்றி விவாதிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் கூடவுள்ளது.
பிரசிலில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு மோசமான பிறவிக் கோளாறுகளுடன் பிள்ளைகள் பிறப்பதோடு ஸீகா கிருமி பரவல் தொடர்புபடுத்தப்படும் நிலையில், இக்கிருமி வேகமாகப் பரவி வருவதாகவும், அமெரிக்க கண்ட நாடுகளில் நாற்பது லட்சம் பேசுக்கு இந்த கிருமி பரவலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் சென்ற வாரம் எச்சரித்திருந்தது.
உலகளாவிய சுகாதார நெருக்கடியாக பிரகடனம் செய்யப்பட்டால், அது பணம், வளங்கள், அறிவியல் நிபுணத்துவம் போன்றவற்றை ஒன்றுதிரட்டவும், புதிய ஆய்வுகளைத் தொடங்கி தடுப்பு மருந்து ஒன்றை வேகமாக கண்டுபிடிக்கவும் உதவும்.
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா பரவியபோது அதனை ஒரு சுகாதார நெருக்கடியாக அறிவிக்க தாமதம் செய்ததாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய ஸிக்கா வைரசின் தாக்குதலுக்கு தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2,000 கர்ப்பிணிகள் இலக்காயிருப்பதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகள் உட்பட இதுவரை 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஸிக்கா வைரஸ் பாதிப்பு உள்ளது.
இந்த நாடுகளில் 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 15 இலட்சம் பேர் உள்ளனர்.
இந்நிலையில், கொலம்பியாவில் 20,297 பேருக்கு ஸிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதில் 2,116 பேர் கர்ப்பிணிகள் என்றும் அந்நாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸிக்கா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்புகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பல உள்நாட்டுப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவிலேயே உலகளவில் அதிகமான தாய்மார் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றனர் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனிலேயே மிகக் குறைந்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதாக ஆய்வு கூறுகிறது
ருவாண்டாவில் அதிகபட்சமாக 85% பெண்கள் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளை பிரிட்டனிலேயே மிகக் குறைந்த அளவில் தாய்பால் புகட்டும் பழக்கம் உள்ளதாவும் அந்த ஆய்வு கூறுகிறது.

பிரிட்டனிலுள்ள பெண்களில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதம் வரை தாய்ப்பால் புகட்டுபவர்களாக இருக்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தாய்ப்பால் கொடுக்கும் அளவை அதிகரிப்பதன் மூலம் உலகளவில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகளின் மரணம் தடுக்கபடலாம் என லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகள் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவது மட்டுமன்றி, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையும் என மேலும் அவர்கள் கூறுகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.