நீதித்துறை அதிகாரிகளால், சமர்ப்பிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடுப்பு கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டாம்!
நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஊதியம் இல்லாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடுப்பு கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீதித்துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் சேவை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னதாக விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், தொடர்புடைய சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழு இந்த தீர்மானம் தொடர்பாக அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.