Showing posts with label judgment. Show all posts

 



(பாறுக் ஷிஹான்)

கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத  வைத்தியசாலைகளுக்கான   வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆந் திகதி வரை   தடை உத்தரவினை  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் பிறப்பித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன  விடயத்தை  தடுத்து நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரீட் மனு  மீதான விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன்  முன்னிலையில் திங்கட்கிழமை  (17) மறு  விசாரணைக்காக  அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும்   நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான வைத்தியர்   சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் கிழக்கு மாகாண  பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர்  ஜெ. லியாகத் அலி உட்பட 14 பேர் கொண்ட   பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரிணிகளின் வாதப் பிரதிவாதங்களை அடுத்து இரு தரப்பினரின் எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்யுமாறும் பணிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பவர் மாதம் 8 ஆந் திகதி குறித்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் தொடர்பில் மீண்டும் நீடிக்கப்பட்ட   தடை  உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


2012 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக தங்காலை உயர் நீதிமன்றத்தால் "ஜூலம்பிட்டி அமரே" என்று பிரபலமாக அறியப்படும் ஜி.ஜி. அமரசிங்கவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (அக். 7) உறுதி செய்தது.


தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி அமரசிங்க தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிபதிகள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து, அதன் மூலம் மரண தண்டனையை உறுதி செய்தது.

தன்னை நிரபராதி என்று கூறி விடுவிக்கக் கோரி அமரசிங்க தனது சட்ட ஆலோசகர் மூலம் மேல்முறையீடு செய்திருந்தார், ஆனால் உச்ச நீதிமன்றம் அதை முழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

2012 ஆம் ஆண்டு கட்டுவன பகுதியில் நடந்த மக்கள் விடுதலை பெரமுன (ஜே.வி.பி) கூட்டத்தின் போது இரண்டு நபர்களை சுட்டுக் கொன்று மற்றொருவரை கடுமையாக காயப்படுத்தியதற்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

தங்கலை உயர் நீதிமன்றத்தில் அமரசிங்க மற்றும் பிறருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 


#Ismial_UvaizurRahman

மேல் நீதிமன்றின் புதிய நீதிபதிகள் 18 பேர், இன்று மாலை பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். குறித்த நீதிபதிகளுக்கான சேவையாற்றும் நீதிமன்றங்களும்  இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.


திருகோணமலை - மட்டக்களப்பு குடியியல் மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றியாழ் அவர்களும், 


கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ ஜூட்சன் அவர்களும், 


யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றிஸ்வி அவர்களும், 


மட்டக்களப்பு - கல்முனை குடியியல் மேல் நீதிமன்ற  நீதிபதியாக கௌரவ கஜநிதிபாலன் அவர்களும்,


வவுனியா  மேல்நீதிமன்ற  நீதிபதியாக கௌரவ ஆனந்தராஜா (வலன்) அவர்களும்,நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

 

நீதித்துறை இடமாற்றங்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று. நாடாளுமன்றில்  தெரிவித்தார்.

அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாளும் நீதிபதிகள் குறிவைக்கப்படுவதாக அவர் கூறினார்.

 இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்தார், ராஜபக்சேவை பாசாங்குத்தனம் என்று குற்றம் சாட்டினார்.

 


சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 


இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த இரு மனுக்களும் இன்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

வழக்குத் தாக்கல் செய்தவர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விபரத்தை எடுத்துரைப்பார். 

சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரண்டு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-



வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்பவர் சட்டவிரோதமாக ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


குறித்த வழக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது,பிரதிவாதியான டபிள்யூ. எம். அதுல திலகரத்னவும் அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் இருந்தார். 

அவர் தொடர்ந்த மற்றொரு வழக்கு முடிவுக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி சார்பாக ஆஜரான மூத்த சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, தனது கட்சிக்காரரான பிரதிவாதி டபிள்யூ.எம். அதுல திலகரத்ன சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதாக திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த நேரத்தில் பிரதிவாதியான அதுல திலகரத்னவும் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்படுவதாகவதாக சட்டத்தரணி குறிப்பிட்டார். 

சட்டத்தரணி பேசிக் கொண்டிருக்கும்போது, ​​பிரதிவாதியான அதுல திலகரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் இருந்த திறந்த நீதிமன்ற அறையில் கையை உயர்த்தி, தான் நீதிமன்றத்தில் இருப்பதாக நீதவானிடம் தெரிவித்தார். 

பிரதிவாதியான அதுல திலகரத்னவின் சட்டத்தரணி சுரங்க மொஹோட்டி, தனது கட்சிக்காரர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள HC/69/2018 வழக்கிலிருந்து சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதால் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இருப்பினும், பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்தார். 

பிரதிவாதியின் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, வெசாக் பௌர்ணமி தினத்தன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பட்டியலில் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரியின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.


 மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் 15.11.2023 இன்று உத்தரவு பிறப்பித்தது.


17-10-2022 திகதிய அமைச்சரவை தீர்மானத்தை எதிர்த்து 176 ஆலோசகர் விசேட வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

 


-றிப்தி அலி-


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

 

இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.

இந்த நீக்கலுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

 

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அக்கட்சியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது. 

 

-றிப்தி அலி-


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.