நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்ததாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் , நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.
அவரது பதவி விலகலை, நீதி சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை, அடுத்து , நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு விஜயம் செய்த நிலையில், நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பன மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதவான், நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவினால், மல்லாகம் மேலதிக நீதிபதிக்கு எதிரக நேற்றைய தினம் 23.9.2025 அன்று விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இதனடிப்படையில், மல்லாகம் மேலதிக நீதவான் இராஜினாமாச் செய்ததாகக தெரியவருகின்றது.
யாழ் மாவட்ட சிறப்பு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட சிறப்பு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்து சிக்கல்கள், அவற்றிற்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சாலை மேம்பாட்டு தேவைகள், சில பகுதிகளில் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், தீவுக் குடியிருப்பாளர்களுக்கான கடல்சார் போக்குவரத்து பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணத்துடன் நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் பொதுப் போக்குவரத்து, வணிகப் போக்குவரத்து மற்றும் சந்தைச் சார்ந்த போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் என்.ஏ. வேதநாயகன், மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றக் குழுத் தலைவர் ச. சிறிதரன், மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (09) 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் தீவு பகுதியில் 2ஆவது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்று வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.
(வி.சுகிர்தகுமார்)
- மன்னார் நிருபர் லெம்பட்-
வீதியில் நேற்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில், குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
இதன்போது, குறித்த டிப்பர் வாகனத்தில் 4 பேர் பயணித்திருந்தனர்.
சம்பவத்தில் பெரியமடு பகுதியைச் சேர்ந்த கே.சத்திய பிரபாகரன் (வயது-31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது.
அதன்படி, வாகன சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் காயமடைந்த மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு சகோதரர்களில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-மன்னார் நிருபர் லெம்பட்-
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் இன்று காலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பரை பொலிஸார் வழிமறித்தனர். பொலிஸாரின் கட்டளையை மீறி டிப்பர் பயணித்த நிலையில் டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்னொருவர் காயமடைந்தார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்
ஓய்வுநிலை நீதிபதி இளஞ்செழியனுக்கான பிரியாவிடை சனிக்கிழமையன்று வுவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் வவுனியா - ஈரப்பெரியகும் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக ஏ - 9 பிரதான வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து நீதிபதி மா.இளஞ்செழியன் வரவேற்கப்பட்டதுடன், அவரது 27 வருட நீதித்துறை சேவையைப் பாராட்டிய வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் ஆகியோர் கௌரவிப்புக்களையும் வழங்கினர்.
நீதித்துறையில் 27 வருடத்தைப் பூர்த்தி செய்த நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அரசின் இழுத்தடிப்புகளாலும், காலதாமங்களாலும் அவர் ஓய்வுநிலைக்குச் செல்கின்றார். இருப்பினும் அந்தப் பதவி நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.