Showing posts with label Exhibition Sri lanka. Show all posts

 


பாறுக் ஷிஹான்


பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள்  சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும்   ஒரு அங்கமாக முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி(M.W.R.A.F.)  டயக்கோனியா அணுசரனையில் இடம்பெற்ற தையல் பயிற்சி முதற்கட்ட நிறைவும் கண்காட்சி மற்றும் விற்பனையும் கல்முனை மருதமுனை காரியாலயத்தில் இன்று(23)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் 3 மாதங்களாக இடம்பெற்ற பயிற்சி நெறியில் வாழ்வாதாரம் மேம்படுத்தல் உதவி வழங்கப்பட்ட பெண்களின் உற்பத்தி பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திருமதி யு.எல் ஹபீலா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வு அதிதிகளாக சிரேஸ்ட சட்டத்தரணியும் கல்முனை காதி நீதிபதியுமான எம்.டபிள்யு.ஆர்.ஏ.எப். இன் சட்ட ஆலோசகருமான எப்.எம்.ஏ அன்சார் மௌலானா விரிவுரையாளரும் மருதமுனை ஜம்மியதுல் உலமா சபை தலைவருமான அமீருள் அன்சார் மௌலானா (நளீமி) மற்றும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளுக்கான இணைப்பாளர் ஐ.எல்.எம் இர்பான்  பயிற்சி ஆசிரியை ஜெமினா பர்வீன்   உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி ஏற்பாடு செய்திருந்த புகைப்பட கண்காட்சியில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணத்தின் அழகியல் பிரிவுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் சுந்தரம் ஸ்ரீதரன் கலந்து சிறப்பித்தார்.


இப் புகைப்பட கண்காட்சி 
 கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம். அமீன் ஹிதாயா மீராலெவ்வை இணை பாடத்திற்கு  பொறுப்பான உதவி அதிபர் ஏ.எம்.எஸ். இர்பானா ஆகியோர் தலைமையில் நேற்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கௌரவ அதிதியாக  சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் அழகியல் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். அப்துல் முனாப் கலந்து சிறப்பித்தார். மேலும் கல்லூரியின் ஆசிரியர்களான எஸ்.எல்.எம். குத்தூஸ் வி.ரி.  ரிஸ்வானா எம்.ஐ. றிப்கா ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.


இதில் இறக்காமம் பிரதேசத்தை ஒட்டிய  காட்சிகளாக 200 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது மாணவர்களின் திறன்களை வெளிக்காட்டி இருந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயமாகும் என்று பணிப்பாளர் சிறிதரன் தெரிவித்தார்.


 (வி.ரி. சகாதேவராஜா)


 சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய சுற்றுமதிலில் வரையப்பட்ட அழகான சுவரோவியங்கள் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் பொன் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இத்திறப்புவிழாவில் பிரதம அதிதியான
 சம்மாந்துறை  வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்.
.

 கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் ஆசிரிய ஆலோசகர் பி.வி.குணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .

ஜேர்மனியில் வாழும் அன்னமலையைச் சேர்ந்த கொடையாளி சித்திரசேனன் விஜிகரனின் ஏற்பாட்டில் வரையப்பட்ட இச் சுவர்ஓவியங்கள் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது.

ஜேர்மனியிலிருந்து வந்த கொடையாளி விஜிகரன் தம்பதியினர் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 

 


நூருல் ஹுதா உமர்

அகில இலங்கை ரீதியான கிளி மூக்கு சேவல்களுக்கான கண்காட்சி கிழக்கு மாகாணம் காத்தான்குடியில் மிக விமர்சையாக (05.03.2023) காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்றது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இவ் கிளி மூக்கு சேவல்களுக்கான கண்காட்சி 60 சேவல்களும் 45 வளர்ப்பாளர்களுடன் சிறப்பாக இடம்பெற்றது. இக் கண்காட்சிக்கு கலந்து கொள்வதற்காக இலங்கையில் அனைத்து பகுதிகளிலிருந்தும் கிளி மூக்கு கோழி வளர்ப்பாளர்கள் தத்தமது கிளிமூக்கு சேவல்களுடன் வருகை தந்திருந்தனர்.

இவை தென்னிந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட போதிலும் தற்போது பல நாடுகளில் அழகிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றது இது மனிதர்களுடன் பாசத்தோடும் தனது வீட்டின் ஒரு அங்கமாக மாறிவிட்டதாக வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதே போன்ற பல கண்காட்சிகள் இந்தியாவில் போன்ற நாடுகளில் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இதுவே இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இடம்பெறுகின்ற கிளி மூக்கு சேவல்களுக்கான கண்காட்சி எனவும் சர்வதேச தரத்திலான கிளிமூக்கு சேவல்கள் எம் நாட்டிலும் இருக்கின்றது என்பதை சர்வதேசத்திற்கு பறைசாற்றும் பொருட்டும், தற்போது இலங்கையில் இருந்து கிளிமூக்கு கோழிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இவ் கண்காட்சி மூலம் வெளிநாடுகளிலுள்ள வளர்ப்பாளர்கள் இலங்கையில் நல்ல தரத்திலான கிளிமூக்கு கோழிகள் இருப்பது என்பதை அறிந்து  கேள்விகளும், ஏற்றுமதிகளும் அதிகரிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வளர்ப்பாளர்  கருத்து தெரிவிக்கும் போது இனம், மதம், மொழிக்கு அப்பால்  "Parrot Beak" என்ற ஒற்றைச் சொல்லுக்குள் இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உள்ளோம் மற்றும் இவ்வளவு நாட்களும் தொலைபேசிகளில் உரையாடிக் கொண்டிருந்த நாம் இன்று இக் கண்காட்சி மூலம் ஒன்று கூடியதை இட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இதுவே எமக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதுகிறோம் என்றார்.

இதுபோல இன்னும் பல கண்காட்சிகளை நடத்த வேண்டும் என்றும் இத்துறைக்கு புதியவர்களை உள்வாங்க வேண்டும் என்றும்  இத்துறையில் மிக நீண்ட காலம் நீடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும் இதற்கு ஏற்பாடு செய்த ஏற்பாடு குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறான கோழி வகைகளை தனது வாழ்நாளில் இப்போது தான் பார்ப்பதாகவும் தமக்கும் இவ்வாறான கோழிகளை வளர்ப்பதற்கு ஆர்வங்கள் இருப்பதாகவும் இது சிறந்த பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய ஒரு தொழில் முயற்சியாகவும் நாம் கருதுவதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பதாகவும் இது சிறந்த பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய ஒரு தொழில் முயற்சியாகவும் நாம் கருதுவதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.