அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனையில் இருந்து வந்த சொகுசு பஸ்யுடன் அக்கரைப்பற்றில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரான ஆரியவதி கலபதி அவர்களுடைய மகன் விபத்துச் சம்பவம் ஒன்றில் சிக்கி கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) இயற்கை எய்தியுள்ளார்.
வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை குறுக்கே கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனுடன் தாய், தந்தை முச்சக்கரவண்டியில் சம்பவ தினமான இரவு 7 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன்பக்க விளக்கு பழுதடைந்துள்ளதையடுத்து பாலத்தில் நிறுத்திவிட்டு அதனை சிறுவனின் தந்தை சரி செய்துகொண்ட நிலையில் தாய் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்பக்கமாக சென்று கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் வீதியின் குறுக்கே கடந்து தாயாரிடம் செல்ல முற்பட்டபோது வாகரையை நோக்கி பயணித்த வேன் ஒன்று சிறுவனை மோதியதையடுத்து படுகாயமடைந்த சிறுவனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வேன் சாரதியை கைது செய்ததுடன் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்ஹிலால் பாடசாலை முன்பாக இன்று (14) காலை இடம்பெற்றது.
இதன் போது குறித்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சம்மாந்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் 41 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ஆப்தீன் நௌசாத் என்பவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது போக்குவரத்து பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காத்தான்குடி, பிரதான வீதி மீரா பாலிகா தேசிய பாடசாலை முன்பாக நேற்றிரவு (13) 10.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி டீன் வீதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனையிறவில் காலை வேளை கோர விபத்து!
ஆனையிறவு சோதனை சாவடியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணமானார்.
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் பயணித்த,இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காலி- பாசிகுடா .பஸ் வண்டி அக்கரைப்பற்று,நீதிமன்ற வளாகத்தின் முன்பாக பயணித்துக் கொண்டு இருந்தது. அக்கரைப்பற்று கிழக்கு வீதியில் இருந்து பொத்துவில் வீதிக்கு மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சாரதி கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் மோதுண்டார் . அரசு பேருந்துக்கு முன் பக்கத்தில் சிறிது சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.
மோட்டார் வண்டியினைச் செலுத்தியவர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (24) மாலை 5 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.
மன்னாரில் இருந்து சென்ற தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கு இடையில் உள்ள ரயில்வே கடவைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன் (வயது-35) என்ற இளம் குடும்பஸ்தர் என தெரிய வருகிறது.
சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 50 பேருக்கு காயம்
கடுவளை ரனால பகுதியில் இன்று மதியம் இரு தனியாருக்கு சொந்தமான பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸே பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பஸ்ஸிடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
அம்பாரை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழகம் முன்பாக பிரதான வீதியில் நேற்று இரவு 07.45 மணியளவில் கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மோட்டார் வாகனத்தில் வந்த நபர் குடிப்பதிலிருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கங்குவேலி - புளியடிச்சோலை பாலத்திற்கு அருகே இன்று (16) அதிகாலை பஸ் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ்ஸில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதாகவும் எவருக்கும் எந்த ஆபத்தும் இல்லை எனவும் தெரியவருகின்றது.
மட்டக்களப்பு தாளங்குடா பகுதியில் அதிசொகுசு கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொத்துவிலில் இருந்து வந்து கொண்டிருந்த போது தாளங்குடா பிரதான வீதியில் வைத்து இன்று அதிகாலை 2.25 மணியளவில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் சம்பவம் தெரிய வருகையில் விபத்துக்குள்ளான காரில் மூன்று நபர்கள் வந்து கொண்டிருந்த வேளை சாரதியின் தூக்க கலக்கமே இவ்விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
வாகன சாரதி சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் பயணியர் ஆதார வைத்திய சாலையிலும் மற்றும் ஒரு நபர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
வாழைச்சேனையில் ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 3 மீனவர்கள் உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர் மீட்பு ஒருவர் காணாமல் போயுள்ளார்--
வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இயந்திர படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதிலிருந்த் தப்பி கடலில் தத்தளித்த 3 மீனவர்களை இன்று வெள்ளிக்கிழமை (17) மாலையில் உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர் மீட்டகப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை நிந்தவூர்; 9 ம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார் இபிறாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கடந்த 12 ம் திகதி கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ஆழ்கடலில் படகு உடைந்து நீரிழ் மூழ்கியதையடுத்து அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதன் போது கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினார் மீனவர்கள் கடலில் தத்தளிப்பதை இன்று வெள்ளிக்கிழமை மாலை கண்டதையடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாக மீட்டனர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இதில் உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஏனைய இருவரையும் மீட்கப்பட்ட சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு இரவு கடற்படையினர் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனா
கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து மட்டக்களப்பு பகுதியில்
கோர விபத்து!
கல்முனையிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செங்கலடிப் பிரதேசத்தில், அரச முறைப் பேருந்து, மின்மாற்றியை முத்தமிட்டது. மின் தடைப்பட்டது