Showing posts with label Weather. Show all posts


 இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி:


நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நேற்றும் இன்றும் காணப்பட்ட மழையுடனான காலநிலை இன்றுடன் முடிவடைந்து, பெரும்பாலும் நாளை முதல் அதாவது 20ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு சீரான கால நிலை பெரும்பாலும் நிலவும்.


அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதியளவில் சிங்கப்பூர், மலேசியா பிராந்தியங்களில் இருந்து அந்தமான் தீவு பகுதிக்கு வருகின்ற மேலும் ஒரு புதிய காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து, எதிர்வரும் 28, 29, 30ஆம் திகதியளவில் இலங்கையின் தெற்காக மாலைதீவு நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதன் காரணத்தினால் எதிர்வரும் 28, 29, 3030ஆம் திகதி அளவில் மீண்டும் இலங்கைக்கு மழை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது. 


வரும் நாட்களில் இது தொடர்பாக மேலதிக தகவல்களை உங்களுக்கு வழங்குகின்றேன்.


(வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதனையும் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்)


-கே.சூரியகுமாரன்

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி)

 


நாட்டில் உள்ள பிரதான நகரங்களுக்கு இன்று (19) பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                        


அனுராதபுரம் - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.


மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்.


கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை.


காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.


யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்.


கண்டி - பிரதானமாக சீரான வானிலை.


நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை.


இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை.


திருகோணமலை - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.


மன்னார் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

 


தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.


காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வருவதால், தமிழகத்தில் கன மழை மற்றும் சில இடங்களில் மிக கன மழையும் பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.


காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. டிசம்பர் 3ம் தேதிவாக்கில் இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வுத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இலங்கை கடல் பகுதியிலும் இதே நேரத்தில் மற்றொரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு நாள் தாமதாக புயலாக மாறுகிறது.


ஞாயிற்றுகிழமை புயலாக மாறி டிசம்பர் 4ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் புயலாக நிலவக் கூடும். சென்னை-மசூலிப்பட்டினம் அருகே 4ம் தேதி மாலை இது கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், வட தமிழக கடலோரத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வுங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


இன்றையதினம் (01) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.


மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 


தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் – கீழக்கரை கடலில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இராமநாதபுரத்தில் கீழக்கரையில் உள்ள ஜெட்டி பாலம், மீனவர் குப்பம், பாரதிநகர் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மாற்றமடைந்து பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று (11) கடலில் பல விதமான அரிய வகை மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன.

இதனால் கீழக்கரை பகுதியில் உள்ள மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்

அத்துடன், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி தமது அச்சத்தை நீக்கவேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த பகுதி மன்னாரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடக்கு, கிழக்குமற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் குறிப்பாகமாலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (03ஆம் திகதி) மாரவில, நாரம்மல, மாவத்தகம, கிராந்துருக்கோட்டை மற்றும் மண்டூர் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையானகடற்பரப்புகளிலும்காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கடல் நிலை: காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையானகடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும்அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

- Kayal

 


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

அதன்பிரகாரம், இன்று (31ஆம் திகதி) மறிச்சுக்கட்டி, தந்திரிமலை, மதவாச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

- Kayal

 



மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல்மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலைமாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

இன்று பாலம்பிட்டி, ஓமந்தை மற்றும் ஈரமடு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

_- Kayal

 


நாட்டின் பல பாகங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

பொரளை கின்ஸி வீதி, நொரிஸ் கெனல் வீதி ,கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி ஆகிய பகுதிகள் வெள்ளநீரில் முழழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம்  அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்  களனி கங்கை  நில்வளா கங்கை, ,கிங்கங்கை, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த   பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எசசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 


நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயாகம மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றர் வரை கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை 1 மணி வரையான 16.5 மணித்தியால காலப்பகுதிக்குள் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பகுதியில் 215.5 மி.மீ மழை வீழ்ச்சியும், ஹொரண பகுதியில் 170.5 மி.மீ மழை வீழ்ச்சியும், பாலிந்தநுவர பகுதியில் 129 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


(க.கிஷாந்தன்)

 

வானிலை சீற்றத்தினால் கடந்த சில தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நுவரெலியா - டயகம பிரதேசத்தில் 24.05.2021 அன்று முதல் பெய்த கடும் மழை காரணமாக டயகம பிரதேசத்திலிருந்து வரும் ஆகர ஆறு பெருக்கம் எடுத்ததனால் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, திஸ்பனை, ஆகரகந்தை, நாகசேனை, லிந்துலை போன்ற ஆற்றோர பிரதேசங்கள் நீரினால் மூழ்கியுள்ளது.

 

இதனால் இப்பிரதேசங்களில் விவசாய காணிகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஆற்று நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடதக்கது.

 


வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


இந்த பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


பலத்த மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


நாடு முழுவதும் வட கீழ் பருவப்பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக அதிகரிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, காலி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.


வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நேற்று முதல் மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்று (20) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி, பதியத்தலாவ பகுதியில் பதிவாகியுள்ளது.


பதியத்தலாவ பகுதியில் 126 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்)

 

மலைநாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரோல் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

 

மேற்படி தோட்டத்தில் ஒரு வீடு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இப்பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.

 

மலைநாட்டில் இன்று காலைவேளையில் கன மழை பெய்யாத போதிலும், அடுத்துவரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்






 புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், விழிப்புடன் செயற்படுமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயர்வடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



 

கடந்த 24 மணித்தியாலங்களில் 77.5 மில்லிமீட்டர் அதிகூடிய மழைவீழ்ச்சி தெரணியகல பகுதியில் பதிவாகியுள்ளது.


ஹங்வெல்ல பகுதியில் 75 மில்லிமீட்டரும் எஹலியகொட பகுதியில் 68 மில்லிமீட்டரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, மண்சரிவு அபாயம் காரணமாக பதுரலியவில் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வௌியேறி வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.



 

20 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் தற்காலிகமாக கொஸ்குலன – கங்காராம விகாரையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




நாடு முழுவதும் காற்றின் வேகமானத மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம் என்பதாக எதிர்வு கூறப்படுகின்றது.

- நாளை முற்பகல் 9.00 மணி வரை நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 70கி.மீ. ஆக காணப்படும்

நாட்டின் தென் ​மேல் பகுதியில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும். * மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
#Weather

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.