Showing posts with label Health. Show all posts

 


பாறுக் ஷிஹான்-

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் இன்று(18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கு ஒன்றிற்காக குறித்த அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் தன்னிடம் இலஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் கடந்த மாதம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

 

குறித்த முறைப்பாட்டிற்கமைய இன்று மாறுவேடத்தில் மருதமுனை பகுதியில் இயங்கி வந்த காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில் அதிகாரிகள் காத்திருந்துள்ளனர்.

 

இதன்போது முறைப்பாட்டினை வழங்கிய அப்பெண்  ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியிடம் சென்று குறித்த இலஞ்ச பணத்தை தருவதாக கூறி ரூபா 300 யை நீதிபதியின் மனைவியிடம் வழங்கியுள்ளார்.

 

 இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள்   நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்ததுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

 

 

 

 பாறுக் ஷிஹான்-

 


மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்றுநோய் உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சனையாக இருக்கின்றது என வைத்தியரும், புற்றுநோய் தடுப்பு சங்க தலைவரும் மட்டு மாநகர சபை உறுப்பினருமான பேராசிரியர் கருணாகரன் தெரிவித்தார். 


மட்டக்களப்பில் வாய் புற்றுநோயை தடுக்கும் திட்டத்தின் கீழ் பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பரிசோதனை செய்யும் நடமாடும் வைத்திய முகாம் மட்டு பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் தலைமையில் மட்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (05) இடம்பெற்றது. 

இதன்போது அங்கு கலந்துகொண்ட வைத்தியர் கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார், 

மாவட்டத்தில் வாகன சாரதிகள் நடத்துனர்கள் வெற்றிலை, பாக்கு புகையிலை, புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகியுள்ளனர். 

அவை இல்லாமல் அவர்களது தொழிலை செய்ய முடியாது உள்ளனர். இது எந்தளவுக்கு வாய் புற்றுநோயை கொண்டுவரும் என்பது எங்களுக்கு தெரியும் இது பெரும் சமூதாய பிரச்சனையாக இருக்கின்றது. 

எனவே முதலில் இந்த வாகன சாரதிகள் நடத்துனர்களை முதலில் பரிசோதித்து புற்று நோயை இனம் கண்டு வெற்றிலை, பாக்கு, புகையிலை , புகைத்தல்களை பாவிப்பதால் ஏற்படும் புற்றுநோய் தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டல்களை தெளிவுபடுத்துவதன் மூலம் இதனை தடுக்கமுடியும். 

இந்த வெற்றிலை, பாக்கு புகையிலை, பாவிப்பவர்கள் அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனால் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-


#MaathavenReports.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் குழு, கழிவு முகாமைத்துவம் தொடர்பாக,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கள  விஜயம் மேற்கொண்டிருந்தனர்.குறித்த விஜயத்தில், Dr.SLM .ஹபீஸ் (MOH) Dr. சிவசுப்ரமணியம் (AMOH) ஆகியோருடன், தாதிய உத்தியோகத்தர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr.Rajaab,Dr.அகிலன் ஆகியோருடன் கருத்தாடலிலும் ஈடுபட்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.