Showing posts with label sports. Show all posts

 


Chennai super Kings அணியின் கிரிக்கெட் வீரர் துஷார் தேஷ்பாண்டே, நடிகர் அஜித்குமாருடன் நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Sugirthakumar Vijayarajah
.


40 வயதிற்கு மேற்பட்ட Legend Premier League கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லெஜன்ட் கிங்ஸ் அணி சம்பியனானது.
10 ஓவர்களில் 124 எனும் இலக்கை நிர்ணயித்த லெஜன்ட் வோரியஸ் அணியின் இலக்கை தாண்டி வெற்றி வாகை சூடியது.

குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஆரம்ப இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பிரபு மற்றும் மேகசுதன் ஆகிய இருவருக்கும் அணியை வழிநடத்திய தலைவர் தயகாரன் சிரேஸ்ட வீரர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பாராட்டுக்குரியோர்.

இச்சுற்றுப்போட்டி தொடரை ஏற்பாடு செய்து கடந்த கால நினைவுகளை நினைவூட்டியதுடன் பதவி நிலைகளுக்கு அப்பால் முன்னாள் கிரிக்கெட் நண்பர்களை சந்திக்க வாய்பேற்படுத்திய ஏற்பாட்டாளர்கள் அனுசரணையாளர்கள் ஊக்கமளித்த அத்தனை பேருக்கும் நன்றி.

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய லெஜன்ட் பிரிமிய லீக் சுற்றுத்தொடர் கடந்த மாதம் (29) ஆரம்பமாகியது.
.
ஆரம்ப நிகழ்வு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் சுப்பர் லெஜன்டஸ்; பிளாஷ் லெஜன்;டஸ்; லெஜன்ட் வோரியஸ் லெஜன்ட் ஸ்டார்ஸ் லெஜன்ட் கிங்கஸ் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வந்தன.
இறுதிப்போட்டி அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிபோட்டியில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரரும் சுப்பர் லெஜன்ட் அணி தலைவரும் நீதிபதியுமாகிய த.கருணாகரன் சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்

 


மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (89) அமெரிக்காவில் காலமானார்.


உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952, 1956ல் ஒலிம்பிக்கில் ஈழத்தமிழர் சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

 


(எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம்)


புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகம் நாடாத்திய கரப்பந்தாட்ட போட்டியில் "றை ஸ்டார் பிங்" அணியினர் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றினர்.

பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட மற்றும் சிறந்த கரப்பந்தாட்ட வீரருமான மர்ஹூம் சாலிஹ் அவர்களின் ஞாபகார்த்தமாக அக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி அண்மையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் 
பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகவும், செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான நியாஸ் ஆதம் நட்சத்திர அதிதியாகவும், றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர்களான அதிபர் கே.எல்.உபைதுல்லா, எஸ்.ரீ.வாஹிட், கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஐ.மனாப், செயலாளர் சிபான் அசீஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
  
இக்கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு "றை ஸ்டார் பிங்" மற்றும் "றை ஸ்டார் வோரியஸ்" ஆகிய அணியினர் தெரிவு செய்யப்பட்டு "றை ஸ்டார் பிங்" அணியினர் 21:15, 21:19 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டனர்.

இதன்போது நட்சத்திர அதிதியாகக் ககலந்துகொண்ட சட்டத்தரணி நியாஸ் ஆதம் வெற்றிபெற்ற "றை ஸ்டார் பிங்" அணியினருக்குரிய வெற்றிக் கிண்ணத்தினையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.


 ( வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் செட்டிபாளையம்  நியூட்டன் விளையாட்டு கழகம், கிராம ஆலயங்கள், பொது அமைப்புகளுடன்  இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச மட்ட விளையாட்டு  நிகழ்வானது பே
நேற்று முன் தினம் (2024.04.10) பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர்  உதயகுமார் சிவராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 
                    
இதன் போது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற மைதான மற்றும் குழுநிலை போட்டிகளின்  இறுதிப் போட்டி நிகழ்வுகளும் ,  வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.   

பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் களுதாவளை கெனடி  விளையாட்டு கழகம் முதலாம் இடத்தினையும் (தங்கம் - 24, வெள்ளி - 22, வெண்கலம் - 12 ) செட்டிபாளையம்    நீயூட்டன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் (தங்கம்- 12, வெள்ளி - 11, வெண்கலம் - 10) பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர் சா. அறிவழகன், செட்டிபாளைய கிராம ஆலய மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


 (வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று  (7) ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றன.
காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்ற போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணி 48 க்கு 37 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

 இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது.

 


( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவின் கயிறு இழுத்தல் போட்டிகள் காரைதீவில் இடம்பெற்றன. 

காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்ற போட்டியில், ஆண்கள் பிரிவில் காரைதீவு பிரதேச செயலக அணி வெற்றிபெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

 இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது.

பெண்கள் பிரிவில் அம்பாறை பிரதேச செயலக அணி முதலிடத்தையும் இரண்டாமிடத்தை தமன பிரதேச செயலக அணியும் பெற்றுக் கொண்டது.


( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின்  ஆரம்பப் பிரிவிற்கான வருடாந்த விளையாட்டு விழா  நேற்று (03)  புதன்கிழமை  கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..


பிரதமர் அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் யூ.சிவராஜா கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதியாக கல்முனை
வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹதுல் நஜீம் கலந்து சிறப்பித்தார்.

போட்டியில் ஆறு இல்லங்கள் போட்டியிட்டன.
1) Rose House
2) Sun Flower House
3) Shoe Flower House
4) Audurium Flower House
5) Daisy Flower House
6) Lotus Flower House

முதலிடத்தினை LotusHouse   பெற்று வெற்றிவாகை சூடியது.

 (


வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு பிரதேச செயலகம் வருடாந்தம் நடத்தி வரும் பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டியில் இவ்வாண்டுக்கான  ஒட்டுமொத்த சம்பியனாக காரைதீவு விளையாட்டு  கழகம் தெரிவு செய்யப்பட்டது.

அக் கழகம் 20 தங்கப் பதக்கங்களையும், 16 வெள்ளிப் பதக்கங்களையும், 16 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாம்பியனாக தெரிவாகி சாதனை படைத்தது.

இரண்டாம் இடத்தை ஜொலிகிங்ஸ்  விளையாட்டுக் கழகமும் மூன்றாவது இடத்தை விவேகானந்தா விளையாட்டு கழகமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிகள் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சாம்பியனாக சாதனை படைத்தமைக்காக தமது கழக உறுப்பினர்கள் அனைவருக்கும்  கழகத்தின் தலைவர் பொறியியலாளர் வி.விஜயசாந்தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 


கார்த்திகைப்பூ, ஆனையிறவு போர் நினைவுச்சின்னம்...

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்காக தமிழ்த்தேசிய பிரதிபலிப்பை வெளிப்படுதும் இல்ல அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன


#Rep/SukirathaKumar

 40+ LPL சுற்றுப்போட்டி 

 

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய லெஜன்ட் பிரிமிய லீக் சுற்றுத்தொடர் நேற்று (29) ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகின்றது.


ஆரம்ப நிகழ்வு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு  மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் சுப்பர் லெஜன்டஸ்; பிளாஷ் லெஜன்;டஸ்; லெஜன்ட் வோரியஸ் லெஜன்ட் ஸ்டார்ஸ் லெஜன்ட் கிங்கஸ் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.


முன்னாள் முன்னணி வீரர்கள் இணைந்து ஏற்பாடு செய்த போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் விளையாட்டு வீரரும் சுப்பர் அணி தலைவரும்  நீதிபதியுமாகிய த.கருணாகரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

பின்னர் அணிகளுக்கான சீருடை அறிமுகம் இடம்பெற்றது.


இதன் பின்னராக போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.

திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானம் மற்றும் பனங்காடு அக்னி விளையாட்டு மைதானம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானம் ஆகிய மைதானங்களில் 29 30 31 ஆம் திகதி இடம்பெறுகின்ற போட்டிகளின் இறுதிப்போட்டி அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


10 ஓவர்களை கொண்ட 11 பேர் பங்கும் பற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வுகளில் 60 இற்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளதுடன் முன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் சிறந்த செயற்பாடாகவும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக போட்டிகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.


இத்தொடரின் போட்டி நிகழ்வுகள் இன்று பனங்காடு அக்னி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


போட்டிகளுக்கு அக்கரைப்பற்று நாதன்ஸ் மற்றும் அக்கரைப்பற்று மிஸ்டர் பிறைம் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கிவருகின்றனர்.


#WWT 

வாழ்த்துக்கள்!

இலங்கையில் நடைபெறும் மும்முனைச் #Cricket சுற்றுத்தொடரில் இங்கிலாந்து பெண்கள் (19) அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட #அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளராக கலந்து கொள்கின்றார்.

 


சி.எஸ்.கே அணியின் பயிற்சி முகாமில் 17 வயதேயான யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மாணவன் குகதாஸ் மதுலன் இணைந்திருருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியின் போட்டியின் போது மலிங்கவின் பந்துவீச்


சு பாணியில் சிறப்பாக பந்துவீசி தரமான யோர்க்கர் ஒன்றை வீசினார் குகதாஸ் மதுலன். இந்த வீடியோ ட்ரண்டாகிய நிலையில், சி.எஸ்.கே அணி நிர்வாகம் உடனடியாக அவரை அணுகி, சென்னைக்கு அழைத்துள்ளது.

 

 சென்னையில் டோனி தங்கியிருக்கும் அறைக்கு அருகிலேயே குகதாஸ் மதுலனுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இவரின் பந்துவீச்சு பாணியை டோனி பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், சி.எஸ்.கே அணியின் நெட் பவுலராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக அடுத்த சீசனில் மலிங்க ஸ்டைலில் இரட்டை தாக்குதலை சி.எஸ்.கே அணி செய்யும் என்று பார்க்கப்படுகிறது.

 

 



முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன வாகன விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தா காயம் சேர்க்கப்பட்டார்.


திரப்பனே பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு பிரதேச மட்ட எல்லேப் போட்டிகளில் பெண்களுக்கான போட்டிகளில் காரைதீவு விளையாட்டு கழகம் சம்பியனாகவும் காரைதீவு ஜொலிக்கின்ஷ் விளையாட்டு கழகம் Runner up ஆகவும் தெரிவானது.

இப் போட்டி காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 ஆண்களுக்கான எல்லே போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் சம்பியனாகவும் காரைதீவு ஜொலிக்கிங்ஷ் விளையாட்டுக்கழகம் Runner up ஆகவும் காரைதீவு ரிமைண்டர் விளையாட்டு கழகம் மூன்றாம் இடமும் பெற்றது.


 நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், (Staff Cricket Tournament 2023) உபவேந்தர் கிண்ணத்துக்காக 10 அணிகளாக பிரிந்து தொடராக இடம்பெற்ற சுற்றுப்போட்டிகளில் விளையாடி இறுதி சுற்றுக்கு பிரயோக விஞ்ஞான பீட “பல்கன்ஸ்” அணியும் தொழில்நுட்பவியல் பீட அணியும் தெரிவாகியிருந்தனர்.

இன்று (2024.03.07) மிகவும் வி1றுவிறுப்பான நிலையில் இடம்பெற்ற 10 ஓவர்களைக் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரயோக விஞ்ஞான பீட அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய . தொழில்நுட்பவியல் பீட அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை பெற்றது. இதன் அடிப்படையில் 70 மேலதிக ஓட்டங்களைப் பெற்று பிரயோக விஞ்ஞான பீட அணி 2023 கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி பிரிவின் பதில் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.எல். அப்துல் றவூப் அவர்களது தலைமையில் பிரயோக விஞ்ஞான பீட உடற்கல்வி போதனாசிரியர் ஐ.எம். கடாபி அவர்களது நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பதில் உபவேந்தரும் பொறியியல் பீட பீடாதியுமான பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாகவும் சுற்றுப்போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாகவும் பிரயோக விஞ்ஞான பீட அணியின் முன்னணி நாயகன் எஸ். ரொசாந் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வின்போது பீடாதிபதிகளான கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களும் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களும் தென்கிழக்கு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் நிறைவேற்றுதர உத்தியோகத்தர்கள் உடற்கல்வி பிரிவின் உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.


மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழக 15 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற "லெஜெண்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம்-2024" மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தையும், 50 ஆயிரம் பண பரிசையும் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம் தனதாக்கி கொண்டது.

கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக்கழக நிர்வாகியும், கல்முனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.அஷீம் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எம். ஜமால்தீன் தலைமையில் இரு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்குபற்றி இறுதியாட்டத்திற்கு அக்கரைப்பற்று டீன் ஸ்டார் விளையாட்டுக்கழகமும், அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகமும் தெரிவானது. இதில் இரண்டாம் இடத்தை தனதாக்கிய அக்கரைப்பற்று டீன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினருக்கு 25 ஆயிரம் பணப்பரிசும், கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதி நாள் நிகழ்வில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளரும், கிழக்கின் கேடயம் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பீ.எம். றியாத், பிர்லியண்ட் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எஸ்.எம்.பழீல், கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக்கழக உப தலைவர் எம்.ஏ. கரீம், அனுசரணையாளர்கள், கழக வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர்


கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் மூன்றாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடரின் இறுதிப்போட்டிகள் கடந்த 04.03.2024ம் திகதி திங்கட்கிழமை ஓட்டமாவடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இச்சுற்றுத்தொடரின் ஆரம்பப்போட்டிகள் கடந்த 26.02.2024ம் தொடங்கி இரு நாட்கள் லீக் போட்டிகளும் தொடர்ந்து 3வது நாள் காலிறுதி ஆட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்கள் கடந்த 04ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஐ.எம்.றிஸ்வி மற்றும் செயலாளர் ஏ.எல்.எம்.சதாம் ஆகியோரின் தலைமையில் உப தலைவர் எம்.ஐ.எம்.றமீஸ் மற்றும் கழக நிருவாகிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இவ்விறுதிப்போட்டிகளில் செம்மணோடை சாட்டோ அணியினரும் மீராவோடை இளம்பிறை அணியினரும் பங்குபற்றியதோடு இதில் அதிதிகளாக  முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.எம் ஏ. ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உருப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான், அஷ்ஷெய்ஹ் ஹாரூன்(ஸஹ்வி), அல்ஹாஜ் நியாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் அரையிறுதிகளை வென்ற மீராவோடை இளம் பிறை மற்றும் செம்மண்ணோடை சாட்டோ ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்று மீராவோடை இளம்பிறை அணி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

குறித்த சுற்றுத்தொடரில் 32க்கும் மேற்பட்ட பிரதேசத்தின் முன்னணிக்கழகங்களின் கிரிக்கெட் அணிகள் பங்கு கொண்டிருந்தன.

வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக்கின்னம் மற்றும் பணப்பரிசினை சட்டத்தரணி ஹபீப் றிபான் மற்றும் அகீல் அவசர உதவிச் சேவை பனிப்பாளர் நியாஸ் ஹாஜியார் தே டைம் ரெவல்ஸ் பணிப்பாளர் ஐ. எம்  றிகாஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இச்சுற்றுத்தொடரை வெற்றிகரமாக கொண்டு நடாத்துவதில் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அணியின் செயலாளர் பலரது பாராட்டையும் பெற்றிருந்தார்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.